Friday, July 1, 2011

வணிகர்களுக்கு எச்சரிக்கை செய்த வண்ணம்

வணிகம் : பெருமானார் (ஸல்) அவர்கள் (வணிகர்களுக்கு எச்சரிக்கை செய்த வண்ணம் ) கூறினார்கள் : உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள் . ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாத...ொழித்து விடும் . அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) நூல் : (முஸ்லிம்) விளக்கம் : வியாபாரி ஒரு பொருளைக் குறித்து இதுதான் அதற்குரிய விலை ; இப்பொருள் தரம்மிக்கது ; நாயமானது என்று சத்தியமிட்டு உத்தரவாதமளித்தால் , அப்போதைக்கு வேண்டுமானால் அவருடைய பசப்பு வார்த்தைகளில் மயங்கி மக்கள் அப்பொருளை வாங்கிவிடக்கூடும். ஆனால் உண்மை வெளிப்படும்போது எவருமே அவருடைய கடையின் பக்கம் திரும்பியே பார்க்கமாட்டார்கள். பிறகு அவருடைய வியாபாரம் மந்தமாகி இறுதியில் சீரழிந்து தான் போகும் .

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes