Showing posts with label கடமைகள். Show all posts
Showing posts with label கடமைகள். Show all posts

Wednesday, December 28, 2011

இஸ்லாம் சொல்லும் திருமணம் என்றால் என்ன


திருமணம் என்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும்பாலும் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படுவது திருமணத்திற்கு பிறகு தான். எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவர் திருந்தி சீரான வாழ்க்கைப்பாதையில் பயணிக்கத் தொடங்குவது மனைவி என்ற உறவு கிடைத்த பிறகு தான்.
அத்தனை சிறப்புடைய திருமணம் பற்றியும், திருமணம் என்றால் என்ன, கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? இஸ்லாம் திருமணம் குறித்து சொல்லும் நடைமுறைகளை சுருக்கமாக பார்க்கலாம்.

இஸ்லாம் சொல்லும் திருமணம் என்றால் என்ன?
பொதுவாக திருமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் உள்ளம், உடலால் இணைந்து வாழ ஏற்படுத்தப்பட்ட ஒரு சடங்கு என்று தான் நாம் அறிந்து வைத்திருக்கும். ஆனால், இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது இரு தரப்பினரின் சம்பந்தத்துடன் செய்யப்படும் ஒரு கண்ணியத்திற்குரிய வாழ்வியல் ஒப்பந்தம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் முஸ்லீம்களுக்கான தனி திருமணச்சட்டங்கள் இருக்கின்றன. அது முஸ்லீம்களின் நடைமுறைகளில் என்றும் தலையிட்டதில்லை. மதச்சார்பின்மையை இதன் மூலமும் இந்தியா நிரூபிக்கிறது.
இஸ்லாமிய திருமணத்திற்கு மணமக்கள் சம்மதம், இரு வீட்டார் ஒப்புதல், சாட்சிகள், ஜமாத்தார்கள் எனப்படும் ஊர் பொதுமக்கள் மிக மிக அவசியம். குறிப்பாக பெண் தரப்பில் பெண்ணின் தந்தை, சகோதரர்கள் அல்லது அதற்கு சமமான பாதுகாவலர்களின் ஒப்புதல் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் இல்லாத திருமணம் செல்லாது. இந்த முறை மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கைவிடும் சில காவாலிகளிலிடமிருந்து பெண்ணிணம் காப்பாற்றப்படுகிறது.
திருமணத்தின் போது மணமக்கள் இருவரின் சம்மதம் வாய்மொழியாக கேட்கப்பட்டு, அது பதிவுசெய்யப்பட்டு கையெழுத்தும் வாங்கப்படுகிறது. பொதுவாக இஸ்லாத்தில் காதல் (!!) மணமென்பது மிகவும் குறைவு. காரணம், காதல் என்ற பெயரில் காம களியாட்டங்கள் நிகழ்த்தி, அதன் விளைவாக கர்ப்பமாக்கி அந்த பெண்ணை கைவிடுவது என்பது சகஜமான ஒன்று. ஆனால், இஸ்லாம் காதலுக்கு எதிரியில்லை. உடல் உணர்ச்சியை அடிப்படையாக கொண்டு கொள்ளப்படும் அன்பை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
உதாரணத்திற்கு பருவமடைந்த ஒரு பெண் வேற்று ஆணை தனிமையை சந்திக்கக்கூடாது. அப்படி சந்திக்கும் போது அங்கு 3 பேர் இருப்பார்கள். 1. ஆண் 2. பெண். 3. அவர்களை தவறு செய்ய வைத்து வழி கெடுக்க தூண்டும் ஷைத்தான். ஒரு பெண்ணை மணக்க தேர்ந்தெடுக்கும் போது இஸ்லாம் சொல்லித்தரும் வழி. 1. இறைவனின் மார்க்கத்தில் சிறந்தவள் 2. ஒழுக்கத்தில் சிறந்தவள் 3. குடும்ப பாரம்பரியத்தில் சிறந்தவள் 4. கல்வியில் சிறந்தவள் 5. அழகில் சிறந்தவள், 6. செல்வத்தில் சிறந்தவள். இஸ்லாம் பணத்திற்கு கடைசி இடத்தை கொடுக்கிறது. தனக்கான இணையை தேர்ந்தெடுக்கவும், நிராகரிக்கவும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

இஸ்லாத்தில் எத்தனை திருமணம் செய்யலாம்..?
இஸ்லாத்தின் சட்டப்படி ஒரு ஆண் 4 திருமணம் வரை செய்யலாம். உடனே புருவமுயர்த்தி இதென்ன அநியாயம் என்காதீர்கள். பொறுமை..!! இந்த கட்டளை இறைவனிடமிருந்து வந்த காலகட்டம் என்ன தெரியுமா? அறியாமையும், விஞ்ஞானமும் இல்லாத காலகட்டம். போர், கொள்ளை நோய் என்று மனித உயிர்கள் மாய்ந்த நேரம். அதில் குறிப்பாக போர்களில் ஆண்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ வழியில்லாமல் வறுமையால் பீடிக்கப்பட்டு விபசாரத்தொழிலுக்கு தள்ளப்படும் நிலை நிலவியது. அப்போது ஏற்பட்டது தான் இந்த சட்டம்.
அது மட்டுமல்ல, ஒரு ஆண் மணமடைந்து அவன் மனைவியோடு திருப்தியில்லாத பட்சத்தில் அவளை பிரிந்தால் காலம் முழுக்க அவன் தனிமையிலும், உடல் ஆசை இல்லாமலும் வாழ முடியுமா..? நிச்சயம் முடியாது. அவனும் விபசாரியைத் தேடி தான் போவான். உலக மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உலகில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை கூடுதல். இது இயற்கை. இந்த நிலை காலம், செல்ல செல்ல பெண்ணுக்கு கணவன் கிடைக்காத நிலையை உண்டாக்கும். இல்லறத்திற்கு வழி இல்லாத பெண்கள் பிழைக்க அவர்களும் விபசாரம் செய்ய வாய்ப்பு உண்டு. இப்படி எல்லாவற்றுக்கும் தீர்வாக இருப்பது தான் பலதார மணம்.
சரி.. அப்படியானால் ஆண் இஷ்டப்பட்டபடி 4 பெண்களை மணக்கலாமா..? அதான் நடக்காது. அதற்கென்று மிக கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன. அதில் முதல் நிபந்தனை என்னவென்றால் முதல் மனைவியின் மனப்பூர்வ சம்மதம் வேண்டும். இப்போது சொல்லுங்கள். கிடைக்குமா..? ஆனால், அந்த காலத்தில் கிடைத்தது. அரேபியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்தார்கள். எப்படி சாத்தியம் தெரியுமா..? திருமணம் பற்றி இஸ்லாம் சொன்னதை கடை பிடித்தார்கள்.
இஸ்லாம் சொல்கிறது, யார் ஒருவர் ஒன்று மேற்பட்ட திருமணம் செய்யப்போகிறாரோ, அவர் தங்கள் மனைவிகளுக்குள் எல்லா வகையிலும் நியாயமாக சமமாக அவர்களை நடத்த வேண்டும். அதை செயல்படுத்த இயலாதவர்களுக்கு அது அனுமதி இல்லை. அதே போல் நடந்தார்கள், திருமணமும் செய்தார்கள். இல்லையென்றால் ஒரு மனைவியை வைத்துக்கொண்டே இத்தனை அல்லல்படும் நாம், இன்னொரு திருமணத்தை நினைப்பது எளிதா..?
பெண்கள் தன் கணவனை இன்னொரு திருமணம் செய்ய சம்மதிக்க பல காரணம் இருந்தன. கணவனின் சமமாக நடத்தும் குணம், அவன் மீது கொண்டு அதீத அன்பு, குழந்தையின்மை, நோய், முதுமை அல்லது இயலாமை காரணமாக இருந்தது. இந்த கடைசி 3 பிரச்சினைகள் இருந்தால் நாம் எடுக்கும் நடவடிக்கை விவாகரத்தாக இருக்கும். அதன் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு அவனும் தன் நிம்மதி இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு இஸ்லாம் சொன்னதை விட சரியான தீர்வு வேறு எதுவும் உண்டா..?
ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம்பெண்கள் செய்யக்கூடாதா?
இதென்ன அநியாயம்..? ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம், பெண்கள் செய்யக்கூடாதா? என்ற கேள்வி வரும். அதற்கும் இஸ்லாத்தில் பதில் உண்டு. இஸ்லாத்தில் ஆண் பெண் உடற்கூறுகளை வைத்து சில விஷயங்களை நன்மைக்காக கற்பிக்கிறதே தவிர உறவில், உரிமையில், நடத்தப்படுவதில் இரு பாலாரும் சமமே. இன்னும் சொல்லப்போனால், இஸ்லாம் பெண்களை மிகவும் மேன்மைப்படுத்துகிறது.
ஆண்களைப் போலவே பெண்களும் இன்னொரு ஆணை மணம் செய்ய உரிமை உண்டு. ஆனால், நிபந்தனை இன்னொருவனுக்கு மனைவியாக இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு கணவன் கொடுமையால் விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள் தாராளமாக மறுமணம் செய்யலாம். அப்படி திருமணம் செய்பவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நபிகள். அவர் ஒரு விதவையைத்தான் மணம் புரிந்தார். அது ஏன் பெண்ணுக்கு இந்த நிபந்தனை என்று கேட்கலாம். இஸ்லாம் காரணகாரியமில்லாமல் எதையும் சொல்வதில்லை.
உதாரணத்திற்கு மனிதனுக்கு தாய், தந்தை உறவும், அவர்கள் மூலம் கிடைக்கும் கௌரவம், மரியாதை, சொத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. ஒரு அனாதைக்கு, தவறான வழியில் பிறந்த குழந்தைக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் மரியாதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்கள் மூலம் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகள் எல்லோருக்கும் அவன் ஒருவன் தந்தை என்பது மிகவும் தெளிவாக தெரியும். அதன் மூலம் உரிமையும், சொத்துக்களும் எல்லோருக்கும் சமமாக பங்கிட முடியும். இதுவே, ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவன்கள் இருந்து அவளுக்கு பல குழந்தைகள் இருந்தால் எந்த கணவனுக்கு பிறந்த குழந்தை என்று அவர்களை இனம் காண முடியுமா..?
கணவன்கள் ஒருவொருக்கொருவர் விலகிசெல்ல வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல, இதனால் பல வழிகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நியாயமான முடிவும் எடுக்க முடியாது. இது சம்பந்தமாக இஸ்லாம் சமூகத்தின் சொல்லும் வழியான விளக்கம். விஞ்ஞானத்தின் வழியாக இஸ்லாம் சொல்லும் விளக்கம் என்ன..?
ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பதை இஸ்லாம் தடை செய்வதின் விஞ்ஞான நோக்கத்தை காண்போம். அறிவியல் கண்டுபிடிப்பின் படி எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கான ஊற்றுக்கண்ணாக இருப்பது முறைகேடான உறவு என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது மனைவி அல்லாது இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்ளுதல். அந்த பெண்ணும் இன்னும் பல ஆணுடன் உறவு வைத்திருப்பாள் என்பது சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிலை பாலியல் நோயை ஏற்படுத்தும் பட்சத்தில் பலரிடம் உறவு கொள்ளும் விபசாரிக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களிடம் உறவு கொள்ளும் மனைவிக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. அவர்கள் செய்வது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் கூட நடைமுறையில் ஒத்துவராத விஷயமிது. காரணம், அவர்கள் உடல் ரீதியாகவே அப்படிப்பட்ட நிலையை பெற்றுள்ளார்கள்.
அது மட்டுமல்ல, அவனே அவனுக்கென்று கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி சின்னவீடு வைத்துக்கொள்ளும் இந்த உலகத்தில் ஒன்று மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஒரு மனைவியின் மீது மற்ற கணவர்களுக்கு அன்பும், காதலும், ஈடுபாடும் இருக்காது. அவன் மனைவியை விடுத்து பிற பெண்களிடம் உறவு கொண்டு அவன் பாலியல் நோயை பெற்று அதை அவன் மனைவிக்கு கொடுத்து, அவள் மற்ற கணவர்களுக்கு கொடுத்து, மற்ற கணவர்கள் உறவு கொள்ளும் மற்ற பெண்களுக்கு கொடுத்து இந்த நோய் பரவி உலகமே பாலியல் நோயால் பீடிக்கப்படும்.
ஆனால், ஒரே கணவரிடம் உறவு கொள்ளும் பெண்களுக்கு இந்த அபாயம் இல்லை. அதுமட்டுமல்லாமல், ஒரே ஒரு மனைவி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கே உரிய அதிகாரம், ஆளுமை குணம் கணவர்களுக்குள் போட்டி பொறாமையை ஏற்படுத்தி, பிரச்சினையை பெரிதாக்கி அதனால் ஏற்படும் விளைவு மிக மோசமானதாக இருக்கும்.
இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..? 
சரி.. அப்படியானால் இதன் மூலம் இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..?
நிச்சயம் இல்லை. ஒரு பிரச்சினையின் தீர்வாக விவாகரத்து, அதனால் பெண்ணின் வாழ்க்கை இழப்பு, விபசாரம், நோய் என்று போகாமல் சுமுகமாக, சுகமாக வாழ இஸ்லாம் சொல்லித்தரும் வழி இது. இஸ்லாத்தில் இந்ததபல தார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து இவ்வளவு விமர்சிக்கப்படுகிறதே..
நீங்களே சொல்லுங்கள். இந்தியாவின் மக்கள் தொகை தொகையில் எல்லா மதத்தினரின் சதவீதத்தில் பல தார மணம் செய்த முஸ்லீம்களின் சதவீதம் எவ்வளவு..? மற்ற மதத்தினரைவிட குறைவாக இருப்பார்கள். காரணம், கடுமையான நிபந்தனைகளும், வழி முறைகளும். அது மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. அதற்கான மன பலம், உடல்பலம், பொருள் பலம் அவசியம் வேண்டும்.
நமக்கு ஒரு மனைவியுடன் வாழ்க்கை தள்ளுவதற்கே நாக்கு தள்ளுகிறது..!! நம் முதல்வருக்கு 2 மனைவிகள். ஆனால், அவர் முஸ்லீம் இல்லை. அவரை சமுதாயம் ஒதுக்கவில்லை. அவர்களுக்குள் பிரச்சினையும் இல்லை.
எனக்கு ஒரே ஒரு மனைவி தான். என்னால் பலதார மணத்தை என் விஷயத்தில் ஏற்கமுடியாது. ஏனென்றால் அதற்கான காரணகாரியங்கள் எங்கள் இருவருக்கும் இல்லாததால் அதன் அவசியம் இல்லை. அவசியம் உள்ளவர்கள் தீர்விற்காக அதை செய்வதில் தவறில்லை. அது வழிகெட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்தது.
கடைசியாக, பலதார மணத்தின் அவசியத்தை நிர்ணயிப்பவை நம் மதமல்ல. அவற்றை சம்பந்தப்பட்டவர்களின் தேவை, புரிதல், அனுசரித்தல், பகிர்தல் ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன.

Thursday, October 27, 2011

குடும்ப வாழ்வை ஒழுங்குர அமைத்தது இஸ்லாம்

அபூ நாஹிதா லுபானா [ தவறுக்கும், உண்மைக்கும், சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்துணரும் ஆற்றல் என்னிடம் இருந்தது. எனினும் இஸ்லாமைப்பற்றி, அது உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், நான் அதை ஏற்று பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம்தான் என்ற நோக்கில் சிந்திக்க முன்வரவில்லை. ஏனெனில் இஸ்லாத்தைப்பற்றி அது ஒரு யுத்த மார்க்கம். கடினத்தை விரும்பும் மார்க்கம் எனவும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் கொலை, கொள்ளை, அநியாயம் போன்றவைகளை ஆதரிக்கும் பயங்கரவாதிகள் எனவும் தான் விளங்கி இருந்தேன். எதிர்பாராத விதமாக கண்ணியமான இஸ்லாமியக் குடும்பத்துடன் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறை, இல்லற வாழ்க்கையில் அமைந்திருந்த ஒழுக்க முறைகள், குழந்தைகளை பராமறிப்பது, அவர்கள்மீது அன்பு செலுத்துவது போன்றவைகளைப் பார்த்து அப்படியே அசந்து போனேன்.
கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அன்பு காட்டி வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கடமையை உணர்ந்து வாழ்கிறார்கள். கணவன் மனைவி, ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் பணிகளை கண்ணியத்துடன் செய்து கொள்கிறார்கள். இந்நிலை அமெரிக்காவின் பெரும்பாலானக் குடும்பத்தில் காணப்படுவதில்லை.
இஸ்லாத்தில் பெண்களுக்கென தனிப்பட்ட சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, பட்டென்று கிடைத்த பதில்; ‘பர்தா அணிவது! ]
அமெரிக்காவின் டாக்டர் பட்டம் பெற்ற இளம்வயதுப் பெண் ஒருவர் குர்ஆன் மஜீதை குறை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆராயத்தலைப்பட்டார். தனது ஆராய்ச்சியில் அதில் குறை கண்டுபிடிப்பதற்காக பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். ஆனால், குறை காண விழைந்த அந்த இளம் டாக்டரை திருக்குர்ஆன் தன் வசம் இழுத்துக் கொண்டது.

ஆம்! அப்பெண்ணின் சிந்தனையில் வெகுநாட்களாக எழுந்துவந்த பல கேள்விகளுக்கு அந்த அருள்வேதத்தில் தெளிவான, திருப்தியான பதிலை பெற்றுக்கொண்டார். அதற்குப் பின் தாமதிப்பதற்கு அந்த இளம் டாக்டருக்கு எதுவும் தடையாக இல்லை. உடனே இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பெயரை மரியா என்று சூட்டிக்கொண்டார்.
அந்த இருபத்தைந்து வயது இளம் பெண்டாக்டர் தனது நிலையைப்பற்றி தானே ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில்;
அமெரிக்காவில் கலிவலாண்ட் என்னும் பகுதியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். உயிரியல் கல்வியில் பட்டம் பெற்றேன். அதன்பின் மெடிகல் கல்லூரியில் சேர்ந்து அங்கு மேற்படிப்புக்கான முயற்சியியை செய்து வருகிறேன். எனினும் நான் பின்பற்றும் கோட்பாடுகளில் எனக்கு அமைதி ஏற்படவில்லை. மறைமுகமாக ஒரு விஷயம் என்னை தொந்தரவு செய்து வந்தது.
கிறிஸ்தவ மதத்தின் திரியோதனக் கொள்கையின் அடிப்படைப்பற்றி எனது உள்ளத்தில் பலவிதமான கேள்விக்கணைகள் எழுந்த வண்ணமாகவே இருந்தன. இதைவிடவும் கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட், ஆர்தொடக்ஸ் போன்ற பிரிவுகளாக கிறிஸ்தவத்த்தில் பல கொள்கைகள் ஏன் ஏற்பட்டது? அவையவைகளுக்கு தனித் தனிப்பட்ட கொள்கைகள் ஏன் உருவாகியுள்ளது? என்ற வினாக்கள் எழுந்து கொண்டிருந்தது. ஆனால், எனது நம்பிக்கை ஒரே இறைவன் மீது இருந்தது.
தவறுக்கும், உண்மைக்கும், சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்துணரும் ஆற்றல் என்னிடம் இருந்தது. எனினும் இஸ்லாமைப்பற்றி, அது உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், நான் அதை ஏற்று பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம்தான் என்ற நோக்கில் சிந்திக்க முன்வரவில்லை. ஏனெனில் இஸ்லாத்தைப்பற்றி அது ஒரு யுத்த மார்க்கம். கடினத்தை விரும்பும் மார்க்கம் எனவும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் கொலை, கொள்ளை, அநியாயம் போன்றவைகளை ஆதரிக்கும் பயங்கரவாதிகள் எனவும் தான் விளங்கி இருந்தேன்.
நான் பல்கலைக்கழகத்தில் நுழைந்தபின், குர்ஆனை குறைகாணும் நோக்கத்துடன் இது சத்திய வேதமா? அல்லது அசத்தியமானதா? என்பதை அறிந்து கொள்வதற்காக தலைப்பட்டேன். பக்கங்களைப் புறட்டப்புறட்ட, உள்ளே செல்லச்செல்ல ஆச்சரியமான உற்சாகம் என்னுள் ஏற்படுவதை உணர்ந்தேன்.
இஸ்லாத்தின் கொள்கைகள் மிகவும் தெளிவானதாக, மிகவும் பிரகாசமானதாக, பரிசுத்தமானதாக இருப்பதைக் கண்டேன். அதிலுள்ள இறைக்கொள்கையும் அப்பழுக்கற்றதாக வணங்குவதற்கு தகுதியானவன் ஒரேயொரு இறைவன் தான் என்று உள்ளது. இந்த ஆராய்ச்சிக்குப்பிறகு என்னுள் அமைதியும், நிம்மதியும் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியாது. மேலும் என் உள்ளத்தின் ஆழத்தில் இதுவரை எந்தெந்த கேள்விகள் எழுந்து கொண்டிருந்ததோ அவைகள் அத்தனைக்கும் குர்ஆனில் தெளிவான பதிலைப் பெற்றுக்கொண்டேன்.
அதன்பின் பரிசுத்த குர்ஆனையும், மற்ற இஸ்லாமிய நூல்களையும் ஆராய்வதை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இஸ்லாத்தைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்காக எனது ஆராய்ச்சியை அதில் ஈடுபடுத்தினேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின், அவர்களது தோழர்களான ஸஹாபாக்களின் வரலாறுகளை ஆராய்ந்தேன்.

இஸ்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மென்மையின் சிகரமாம் பெண்ணினத்திற்கு என்ன ஒரு உயர்வான அந்தஸ்தையும், உரிமைகளையும் கொடுத்திருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். நான் வாழும் அமெரிக்காவில்கூட சிலபல ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் பெண்ணினத்தை மதிப்பது, சமஉரிமை தருவது என்ற பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
அதன்பின் எனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தும் வகையில் கணவன் மனைவிக்கு நடுவில் குடும்ப வாழ்க்கைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். அதற்கு நிகராக அமெரிக்காவில் நடைபெற்றுவரும் குடும்ப வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க நாடினேன்.
எதிர்பாராத விதமாக கண்ணியமான இஸ்லாமியக் குடும்பத்துடன் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கை முறை, இல்லற வாழ்க்கையில் அமைந்திருந்த ஒழுக்க முறைகள், குழந்தைகளை பராமறிப்பது, அவர்கள்மீது அன்பு செலுத்துவது போன்றவைகளைப் பார்த்து அப்படியே அசந்து போனேன்.
கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் அன்பு காட்டி வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கடமையை உணர்ந்து வாழ்கிறார்கள். கணவன் மனைவி, ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் பணிகளை கண்ணியத்துடன் செய்து கொள்கிறார்கள். இந்நிலை அமெரிக்காவின் பெரும்பாலானக் குடும்பத்தில் காணப்படுவதில்லை.
இஸ்லாத்தில் பெண்களுக்கென தனிப்பட்ட சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, பட்டென்று கிடைத்த பதில்; ‘பர்தா அணிவது! ஏனெனில், எனக்கு முழுமையான நம்பிக்கையும் பரிபூரணமான அமைதியாகவும் இருக்கிறது. பெண்கள் தங்கள் மேனி முழுவதையும் மறைத்து இருக்க வேண்டுமென்பது ஆண்களைவிட குறைந்தவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக இது அவர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், கண்ணியமாக வாழவும் செய்கிறது.
இவ்வாறே இஸ்லாம் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு குறிப்பிட்ட காலம் வரை ஜீவனாம்சம் அளிக்கிறது. அந்த காலம் வரை (முன்னால்) கணவரின் இல்லத்தில் இருப்பதற்கும் அனுமதி வழங்குகிறது. இதைப்போன்ற சலுகை அமெரிக்காவிலும் செயல் படுத்தப்பட்டால், அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீடிழந்து தெருத்தெருவாக அலைந்து திரியும் நிலை ஏற்படாது.
மேலும் இஸ்லாம், பெண்களின் அடிப்படை உரிமைகளையும் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. உதாரணத்திற்கு கூறவேண்டுமானால், பெண் தனது கணவரின் வீட்டையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமென பணிக்கிறது. ஏனெனில் குழந்தைகளின் கல்வியிலும், அவர்களை முறைப்படி வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி காலத்தை ஒதுக்குவதன் மூலம், அவர்களிடம் நல்ல பழக்க வழக்கங்களையும், அழகிய கலாச்சாரங்களையும் ஏற்படுத்த முடியும். அவ்வாறு இல்லாத குழந்தைகள் தான்தோன்றித்தனமாக, தன் மனம்போன போக்கைக் கொண்டதாகவே வளரும். தற்போது அமெரிக்காவில் அவ்விதமான குழந்தைகளைத்தான் காணமுடிகிறது.
அமெரிக்காவில் எவ்விதம் இஸ்லாமியப் பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு;
அமெரிக்கர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய அறிவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் இஸ்லாத்தைப்பற்றி அது யுத்த மார்க்கம் எனவும், எப்போதும் சண்டைச் சச்சரவுகளை உருவாக்கும் மார்க்கம் எனவும், கொலை கொள்ளைகளைத் தூண்டும் மார்க்கம் எனவுமே எண்ணியுள்ளனர். அதனால் அவர்கள் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டத்தையுடையதாக எண்ணவே இல்லை. சமீப காலமாக இதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஆகவே, அவர்களுக்கு இஸ்லாத்தின் அனைத்து அறிமுகங்களையும் எடுத்துக்கூறி அது அற்புதமான வாழ்க்கைத் திட்டத்தைக் கொண்ட மார்க்கம் என்பதை விளக்கி அவர்களின் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டிய கடமை நம்மவர்களுக்கு இருக்கிறது. மேலும் முஸ்லிம்களும் அனைத்து செயல்பாடுகளையும் இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து வாழ்ந்து காட்டுவதும் கடமையாகும் என்றார்.
நன்றி: ரஹ்மத் மாத இதழ்

Monday, October 24, 2011

சுன்னத் தொழுகைகள்

அஸ்ஸலாமு அலைக்கும்.
இஸ்லாம் மார்க்கத்தின் கடமையான அமல்களில் தொழுகை முதன்மையானது. கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றிட வேண்டும். கடமையான தொழுகைகளை எந்தெந்த நேரத்தில் தொழுதிட வேண்டும் என்கிற விபரங்களை முந்தைய பதிவில் கண்டோம். பார்க்க: எந்த நேரத்தில் என்ன தொழுகை?

கடமையான தொழுகைக்கு முன்னரும் பின்னரும் சில உபரியானத் தொழுகைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். இந்த உபரியான தொழுகைகளை ''சுன்னத்'' தொழுகை என்று கூறுவோம். சுன்னத்தான தொழுகை என்று அலட்சியப்படுத்தாமல் உபரியான தொழுகைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால், கடமையான தொழுகைக்கு ஈடான நன்மைகள், அல்லாஹ் நாடினால் சுன்னத்தான தொழுகைக்கும் கிடைக்கும்! சுன்னத்தான தொழுகை கடமையான தொழுகைக்குப் பகரமாகச் சமன் செய்யப்படும் என்பதை அறியத்தரும் நபிமொழி:  
நான் மதீனாவுக்குச் சென்றபோது, "இறைவா! எனக்கு நல்ல தோழரை எளிதில் கிடைக்கச் செய்வாயாக!" என்று பிரார்த்தனை செய்தேன். அபூஹுரைரா (ரலி) அவர்களின் நட்பைப் பெற்றேன். நல்ல நட்பை வழங்குமாறு அல்லாஹ்விடம் நான் கேட்டதை அவரிடம் தெரிவித்தேன். நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைக் கூறுங்கள். அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கலாம் என்று கேட்டுக்கொண்டேன்.

அதற்கு,''மறுமை நாளில் ஒரு மனிதனின் செயல்களில் தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சரியாக இருந்தால் அவன் வெற்றியும் ஈடேற்றமும் அடைவான். அது சீர்கெட்டிருந்தால் அவன் இழப்பும் துன்பமும் அடைவான். அவனது கடமைகளில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் 'எனது அடியானிடம் ஏதேனும் உபரியான தொழுகைகள் உண்டா எனப் பாருங்கள்' என்று அல்லாஹ் கூறுவான். கடமைகளில் ஏற்பட்ட குறைவு, அவற்றின்  மூலம் நிறைவு செய்யப்படும். ஏனைய எல்லா வணக்கங்களும் இவ்வாறே அமையும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

- அறிவிப்பவர் ஹுரைஸ் (ரஹ்) (நூல்கள் - திர்மிதீ 378, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்).
மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களில் குறைவு ஏற்பட்டால் அவை உபரியான அமல்களைக் கொண்டு நிறைவு செய்யப்படும். எனவே, சுன்னத்தான அமல்களால் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.

கடமையான தொழுகைக்கு முன், பின் சுன்னத்தான தொழுகைகள்

"ஒரு நாளின் இரவிலும் பகலிலும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுபவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற, நான் செவியேற்றிருக்கிறேன்.
- அறிவிப்பவர் உம்முஹபீபா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1198, 1199, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ).

லுஹருக்கு முன் நான்கு ரக்அத்கள்; லுஹ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்கள். மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள். ஆகிய சுன்னத்தான பன்னிரெண்டு ரக்அத்களை யார் தொடர்ந்து தொழுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் ஓர் இல்லத்தைக் கட்டுகிறான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் உம்மு ஹபீபா (ரலி) (நூல்கள் - திர்மிதீ 379, இப்னுமாஜா).
அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் அறிவிக்கும்
இதே ஹதீஸ் நஸயீ நூலின் பதிவில், "அஸருக்கு முன் இரண்டு ரக்அத்கள்" என்று கூடுதலாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. "இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்" என்பது இடம்றெவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனது வீட்டில் லுஹ்ரு(டைய ஃபர்ளு)க்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு(ஃபர்ளு)த் தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். மக்களுக்கு மஃக்ரிபு(ஃபர்ளு)த் தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ருத் தொழுகையும் அடங்கும். இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்; அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉம் ஸஜ்தாவும் செய்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉம் ஸஜ்தாவும் செய்வார்கள். ஃபஜ்ரு நேரம் வந்து விட்டால் (ஃபஜ்ரின் முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
- அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - முஸ்லிம் 1201).

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ரு(டைய ஃபர்ளு)க்கு முன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்களும் மஃ
க்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் (சுன்னத்) தொழுதேன். மஃக்ரிப், இஷா, ஜுமுஆ (ஆகியவற்றின் சுன்னத்) தொழுகைகளை நபி (ஸல்) அவர்களுடன் அவர்களது இல்லத்திலேயே தொழுதேன்.
- அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 937, முஸ்லிம் 1200)

மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் எனவும், ஜும்ஆத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் எனவும் பதிவாகியுள்ளது. "ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள்" என்பது இடம்பெறவில்லை.
கடமையான தொழுகைக்கு முன்-பின் சுன்னத்தான தொழுகைகள் முறையே:
  • ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள்.
  • லுஹருக்கு முன் குறைந்தது இரண்டு ரக்அத்கள்; கூடுதலாக நான்கு ரக்அத்கள். லுஹருக்குப் பின் இரண்டு ரக்ஆத்கள்.
  • அஸருக்கு முன் இரண்டு ரக்அத்கள்.
  • மஃக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
  • இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
  • ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
தொழுதுகொள்ளலாம்.

இன்னும், ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை உண்டு, விரும்பியவர் அதைத் தொழுது கொள்ளலாம். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவற்றையும் தொழுதுகொள்ளலாம்.

''ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு'' நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறி விட்டு ''விரும்பியவர்கள் தொழலாம்'' என்று மூன்றாம் முறை கூறினார்கள்.
- அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) (நூல்கள் - புகாரி 627, முஸ்லிம் 1522, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ).

நபி(ஸல்) அவர்கள், 'மஃக்ரிப்' தொழுகைக்கு முன்பாக (இரண்டு ரக்அத்கள்) தொழுங்கள்' என்றார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள்வார்கள் என்று அஞ்சி, 'இது விரும்புவோருக்குத் தான்' என்றார்கள்.
- அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) (நூல்கள் - புகாரி 7368, அபூதாவூத், அஹ்மத்)

நாங்கள் மதீனாவில் இருந்தபோது, முஅத்தின் மஃக்ரிபுத் தொழுகைக்காக பாங்குச் சொல்லிவிட்டால் மக்கள் (நபித்தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் மிகுதியான அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர்.
- அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் - முஸ்லிம் 1521)

மேலும், பள்ளிவாசலில் நுழைந்து, அமர்வதற்கு முன் பள்ளிக் காணிக்கையாக இரண்டு ரக்அத்கள் தொழும்படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். "நபி (ஸல்) அவர்கள் வெளியூர் பயணத்திலிருந்து திரும்பினால் பள்ளிவாசல் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

"உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்ததும் அமர்வதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
- அறிவிப்பவர் அபூகத்தாதா (ரலி) (நூல்கள் - புகாரி 1163, முஸ்லிம் 1166)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடையே அமர்ந்திருந்த(ஒரு)போது நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். எனவே, நானும் (தொழாமல் அந்த அவையில்) அமர்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) , "நீர் அமர்வதற்குமுன் ஏன் இரண்டு ரக்அத்கள் தொழவில்லை?" என்று என்னிடம் கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்களும் அமர்ந்திருந்தீர்கள்; மக்களும் அமர்ந்திருந்தார்கள் (எனவேதான் நானும் அமர்ந்துவிட்டேன்)" என்று பதிலளித்தேன். அதற்கு, "உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
- அறிவிப்பவர் அபூகத்தாதா (ரலி) (நூல் - முஸ்லிம் 1167)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கேனும் பயணம் சென்றால் முற்பகல் நேரத்தில்தான் (ஊர்) திரும்புவது வழக்கம். அவ்வாறு திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பிறகு பள்ளிவாசலில் அமர்வார்கள்.
- அறிவிப்பவர் கஅப் பின் மாலிக் (ரலி) (நூல் - முஸ்லிம் 1171)

இவை தவிர தினமும் இரவுத் தொழுகை பதினோரு ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்களை வித்ராகத் தொழுவார்கள்; அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் (அத்தஹியாத்துக்காக) உட்கார மாட்டார்கள்.
- அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - முஸ்லிம் 1217)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் உள்பட பதிமூன்று ரக்அத்கள் (இரவில்) தொழுவார்கள்.
- அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - முஸ்லிம் 1218)

இவை அனைத்தும் நன்மைகளை அள்ளித்தரும் சுன்னத்தான தொழுகைகள்.


Thnxs:http://www.satyamargam.com/1813

Thursday, September 22, 2011

கணவனின் கடமை

கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர்   ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி   அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
நபி  அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி  அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி   அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி  அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி  அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
நபி  அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)
நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி   அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி  வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி  அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி   கூறியுள்ளார்கள்.
நபி  அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)
இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி   அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி   அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)
நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)
இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் “உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று அறிவுரை கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.
எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
“முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர்   அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி  அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து
ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி
கொள்ளட்டும்” என நபி  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ)  நூல்: முஸ்லிம் 2915
உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே
தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)  நூல்: புகாரி 56
ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்
அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு
அணிவிப்பதும்  இருப்பதும் வீட்டில் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162
”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்
கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம்நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”
என்று நபி  அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: திர்மதி 1082

Saturday, August 13, 2011

ஜகாத் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமா... அல்லது ஒருமுறை கொடுத்தால் போதுமா... விரிவான விளக்கம் தரவும்

விளக்கம்
இந்த ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னால் முதலாவதாக ஒரு விஷயத்தை அழுத்தமாகத் தெரிவிக் கொள்கிறோம். ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பவர்கள் 'ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம்' என்று தமது தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்கும் இவர்கள் 'ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும்' என்ற தங்கள் வாதத்திற்கு நேடியான ஒரு ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டுகிறார்களா என்றால் இன்றுவரை அவர்களால் முடியவில்லை. அப்படியானால் அவர்கள் எப்படி தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் 'கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள முடியும்' என்றே தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர்கள் புரிந்துக் கொள்வதில் எவ்வளவு நியாயமிருக்கிறது என்பதை அலசப் போகிறோம்.

ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு நேரடியாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை அழுத்தமாக சொல்லிக் கொண்டு மேற்கொண்டு உள்ளே நுழைவோம்.

மறுப்பாளர்
1 - ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு வலுவான ஆதாதரங்கள் எதுவுமில்லை. இப்படி இருக்கும் போது ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை எப்படி புரிந்துக் கொள்வது? தினமும் ஐந்து வேளை தொழுங்கள் என்று கட்டளையுள்ளது. வாழ்நாளில் ஒரு முறை மட்டும் தான் ஹஜ் கடமை என்று கட்டளையுள்ளது. ரமளான் மாதத்தில் நோன்பு வையுங்கள் என்று கட்டளையுள்ளதால் ஆண்டு தோறும் ரமளானில் நோன்பு வைக்கிறோம். காலம் குறிப்பிடாமல் பொதுவாக ஒரு காரியத்தை குறிப்பிடும் போது அது ஒரு முறை மட்டும் தான் என்று பொருள்படும். ஜகாத்தும் அது போன்றுதான். காலம் எதுவும் குறிப்பிடாமல் பொதுவாக ஜகாத் கொடுங்கள் என்று வந்துள்ளதால் ஒரு பொருளுக்கு ஒருமுறைக் கொடுத்தால் போதும்.

நாம்.

ஒரு கட்டளை காலாகாலமாக எப்படி புரிந்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதை ஆய்வு செய்யாமல் வெறும் உதாரணங்கள் மூலம் தங்கள் வாதத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளார்கள். ஆண்டுதோறும் நோன்பு வைக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்த தோழர்கள், ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்த தோழர்கள் 'ஹஜ்ஜையும்' அப்படித்தான் புரிந்துக் கொள்ள வேண்டுமா.. என்ற சந்தேகத்தில் தான் நபி(ஸல்) அவர்களிடம் 'ஆண்டுதோறும் ஹஜ்ஜா' என்று கேள்வி கேட்கிறார்கள். நபி(ஸல்) ஹஜ் மற்றதை போன்றதல்ல. அது ஒருமுறைதான் என்று விளக்கி விடுகிறார்கள்.

அன்றைய மக்களிடம் இருந்த ஒரு பழக்கம் மாற்றப்படும் போது அது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டு விடும். தெளிவாக சுட்டிக்காட்டப்படாத ஒன்று அன்றைய நடைமுறையில் எப்படி இருந்ததோ அதை தழுவியதாகவே அங்கிகரிக்கப்பட்டு விட்டது என்று பொருள். பால்யவிவாகம் ஆரம்பத்தில் அங்கீகரித்து மாற்றப்பட்டது - பலதாரமணம் அங்கீகரித்து பின்னர் வரையறை விதிக்கப்பட்டது போன்றவற்றை இதற்கு உதாரணமாக்கலாம். 'திருமணத்தை உறுதியான உடன்படிக்கை' என்று சொல்லப்படவில்லை என்றால் இன்றைக்கும் பால்ய விவாகம் கூடும் என்றுதான் நாம் விளங்கி இருப்போம். ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு இல்லாதவரை அந்த மக்கள் எப்படி புரிந்துக் கொண்டார்களோ அதுவே நிலைப் பெற்றுள்ளது என்பதுதான் அதன் பொருள். (அந்த மக்கள் அப்படித்தான் விளங்கி இருந்தார்களா என்பதை கடைசியில் விளக்குவோம்)

மறுப்பாளர்.

2 - ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்பதால் தான் செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்க மறுக்கிறார்கள். ஏற்கனவே கொடுக்காமல் இருந்து விட்டோம். பாவத்துடன் பாவம் வந்து சேரட்டும் என்று இருந்து விடுகிறார்கள். 'ஒரு முறைக் கொடுத்தால் போதும்' என்று சொல்லிப் பாருங்கள். ஒரு முறைத்தானே கொடுத்து விடலாம் என்று கொடுக்கத்துவங்கி விடுவார்கள். (முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் தர்க்க ரீதியாக எடுத்து வைக்கப்பட்ட வாதம் இது)

நாம்.

ஒரு தெளிவான ஆதாரத்தை மேலும் விளக்க - புரிய வைக்க தர்க்க ரீதியான வாதங்களை முன்னெடுக்கலாம்.

ஆனால்,

தெளிவான ஆதாரம் முன் வைக்கப்படாத ஒரு கட்டளையை விளக்ககுவதற்கு இத்தகைய தர்க்க வாதங்களை முதன்மைப்படுத்தவும் கூடாது. ஒரு வாதமாக வைக்கவும் கூடாது. ஏனெனில் ஆதாரத்தை விட ருசியான தர்க்க வாதங்களை ரசிப்பவர்கள் அதையே பின்பற்றும் நிலை உருவானால் அதன் கெடுதி (குறிப்பாக ஜகாத் விஷயத்தில்) பல பணக்காரர்களையும் கெடுக்கும், அவர்களால் பயன்பெறும் பல ஏழைகளையும் பாழ்படுத்தி விடும்.

இறைக் கட்டளைகள் என்பது இறைநம்பிக்கையாளனுக்கு உரியதாகும். ஒரு இறை நம்பிக்கையாளன் தான் கொண்ட இறை நம்பிக்கையில் எந்த அளவிற்கு உறுதியுடன் இருக்கிறான் என்பதை பொருத்தே அவனது அடிபணிதல் அமையும். வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் (அதுதான் சட்டம்) என்றாலும் ஆழமான இறை நம்பிக்கைக் கொண்டவன் அதை செயல்படுத்தியே தீருவான். ஏனெனில் இங்கு குறுகிய காலகட்டம், குறைந்துப் போகும் பொருளாதாரம் என்ற சிந்தனையெல்லாம் அவனுக்கு எட்டுவதற்கு பதிலாக 'இது இறைவனின் கட்டளை' என்ற எண்ணமே அவனிடம் மேலோங்கி நிற்கும்.

ஐந்து வேளை தொழுகை என்பது கூட (குறிப்பாக இன்றைய அவசர உலகில்) பலருக்கு சுமைதான். ஆனாலும் தவறாமல் தொழுகிறார்கள் என்றால் அவசர உலகம் - நேரமின்மை என்பதையெல்லாம் விட இது இறைக் கட்டளை என்ற எண்ணமே மற்ற எல்லாவற்றையும் மறுபுறம் ஒதுக்கித் தள்ளுகிறது.

நாத்திகர்கள் சரிகாணும் ஒரு வாதத்தை இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் முன்மொழியப்படுகிறது.

ஒரு பொருளுக்கு ஒருமுறைக் கொடுத்தால் போதும் என்று தீர்ப்பளித்து விட்டால் மட்டும் செல்வந்தர்கள் அனைவரும் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடுவார்களா..? அதற்கு யாராவது உத்திவாதம் கொடுக்க முடியுமா?

ஆண்டுதோரும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் செல்வந்தர்கள் அனைவரும் ஜகாத் கொடுக்காமல் பின்வாங்கி விடுவார்களா.. அதையாவது இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா..

இறை நம்பிக்கையை வலுபடுத்த பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் 'ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதால் தான் நிறைய பேர் ஜகாத் கொடுப்பதில்லை' என்று பேசுவது வேதனையான ஒன்றாகும்.
மறுப்பாளர்.

3 - ஜகாத் கொடுப்பதன் மூலம் ஏழ்மையை குறைப்பது - வறுமையைப் போக்குவது - கடனிலிருந்து விடுபட செய்வதுதான். வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது மூலம் ஜகாத் கொடுப்பவனையே ஒரு நேரத்தில் இவர்கள் ஜகாத் வாங்க வைத்து விடுவார்கள். கொடுத்தவற்றிற்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பதன் மூலம் அவன் பொருளாதாரம் கரைய துவங்கி கடைசியில் ஒன்றுமில்லாமல் அவன் பிறரிடம் ஜகாத்தை எதிர்பார்க்கும் சூழ்நிலைத்தான் உருவாகும். (இதே கருத்து இன்னும் விரிவாக... முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் தர்க்க ரீதியாக எடுத்து வைக்கப்படும் வாதங்களில் இதுவும் ஒன்று)
நாம்

இறைவனின் பாதையில் செலவு செய்வதால் செல்வம் குறைந்து வறுமை உண்டாகும் என்பது ஷெய்த்தான் எடுத்து வைத்து பயமுறுத்தும் வாதமாகும்.
ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை பயமுறுத்துகிறான். வெட்கக் கேடான செயல்களை செய்யும் படி ஏவுகிறான். (அல் குர்ஆன் 2: 268)
இறைவனின் பாதையில் செலவு செய்வதால் அதன் விளைவு எப்படி இருக்கும்? இறைவன் உதாரணத்துடன் விளக்குகிறான்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல் குர்ஆன் 2:261)
இறைவனின் பாதையில் தங்கள் செல்வங்களை செலவு செய்த எந்த ஒரு நபித்தோழரும் 'இதனால் எங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டது' என்ற வாதத்தை எடுத்து வைக்கவில்லை
ஏன் அவ்வளவு போவானேன்,
ஏகத்துவ பிரச்சாரம் என்று துவங்கி பின்னர் சமுதாய பணி என்று பல இயக்கம் கண்டவர்கள் வசூல் வசூல் என்று இன்றைக்கும் வசூல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். வருட வசூல் என்று கூட இல்லாமல் தேவைக்கேற்ப தினமும் கூட வசூல் செய்திருக்கிறார்கள். செல்வந்தர்கள் மட்டுமின்றி தின வருமானத்தைப் எதிர்பார்த்து வாழ்ந்தவர்கள் கூட நற்பணிகளுக்கென்று நிறைய கொடுத்துள்ளார்கள். இறைப்பணிக்காக செலவிட்ட இவர்களில் யாராவது கடனாளியாக - ஓட்டாண்டியாக ஆகி விட்டார்கள் என்று இவர்களால் சொல்ல முடியுமா..

வருடந்தோறும் இறைவன் பாதையில் செலவு செய்வதால் வறுமை வரும், கடனாளியாக வேண்டி வரும் என்று ஒரு நல்லறிஞர் சொல்வதை எந்த கோணத்தில் புரிந்துக் கொள்வதென்றே தெரியவில்லை.
மறுப்பாளர்.
4 - 'எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34) என்ற வசனம் இறக்கப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவர்கள் ்உங்கள் சிரமத்தை நான் நீக்குகிறேன்' என்று கூறி விட்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம்  உங்கள் தோழர்களுக்கு பெரும் பாரமாகத் தெரிகிறது' என்றுக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் செல்வத்தில் எஞ்சியதை தூய்மைப்படுத்தவதற்கே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கவில்லை' என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் 1417)
எஞ்சிய பொருளைத் தூய்மைப்படுத்துவற்காகவே ஜகாத் என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும் என்ற நம் கூற்றை வலுப்படுத்துகிறது.
இது தொடர்பு அறுந்த ஹதீஸ் என்று சிலர் மறுக்கிறார்கள். ஆனால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்கள் 1) நூலாசிரியர் 2) உஸ்மான் பின் அபீஷைபா 3)யஹ்யா 4)யஃலா 5) கைலான் 6) ஜஃபர் பின் இயாஸ் 7) முஜாஹித் 8) இப்னுஅப்பாஸ் 9) உமர்(ரலி) 10) நபி(ஸல்)
இந்த அறிவிப்பாளர் தொடரில் கைலான் என்பவரும் ஜஃபர் பின் இயாஸ் என்பவரும் வருகிறார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் இதை சிலர் மறுக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தித்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் கைலான் ஹஜ்ரி 132ல் மரணிக்கிறார், ஜஃபர் ஹிஜ்ரி 126ல் மரணிக்கிறார் (தர்கீபுத் தஹ்தீபு 1-139)
நாம்.
பொருளைத் தூய்மைப்படுத்துவதற்கே ஜகாத் - அதனால் ஒரு முறை கொடுத்துவிட்டால் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்பதை நிலைநாட்ட இந்த ஹதீஸை பலப்படுத்தியுள்ளார்கள். ஹதீஸ்கலையை நன்கு விளங்கிய நிலையில் தான் இந்த வாதம் எடுத்துவைக்கப்பட்டுள்ளது.
தகுந்த காரணங்களின்றி பலவீனம் என்று சொல்லப்படக் கூடிய ஹதீஸ்கள் பலவீனமுமாகாது. சந்தேகம் எழுப்பப்படும் செய்திகளை தெளிவாக உறுதிப்படுத்தாத வரை அது பலமுமாகாது. கைலான் என்பவரும் ஜஃபர் பின் இயாஸ் என்பவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் இந்த செய்தி பலவீனமாகும் என்பது ஒரு சாராரின் வாதம். இருவரும் சந்தித்துள்ளார்கள் என்று யாராவது கூறினால் அதற்குரிய முறைான சான்றை எடுத்துக் காட்டுவது அவர்களின் பொறுப்பாகும்.
மறுப்பாளர்கள் எடுத்துக் காட்டிய சான்று என்னவென்றால் 'இருவரும் சமகாலத்தில் - கூபாவில பஸராவில் (அருகருகே உள்ள ஊர்களில்) வாழ்ந்தவர்கள்' என்பதேயாகும். அறிவிப்பாளர்களின் சந்திப்பை பலப்படுத்த இது போதிய ஆதாரமல்ல என்பதை புரியாதவர்களல்ல இவர்கள். 'இன்னார் இந்த செய்தியை அறிவித்தார்' என்பதற்கும் 'இன்னார் இந்த செய்தியை "எனக்கு" அறிவித்தார் என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. "எனக்கு" என்று சொல்லும் போதுதான் அது "இருவரும் சந்தித்துள்ளார்கள்" என்பதற்கு சான்றாக அமையும். ஹதீஸ் கலையை ஆழமாக கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். மேற்கண்ட செய்தியில் இருவரும் கூபாவில் வாழ்ந்திருந்தாலும் 'எனக்கு அறிவித்தார்" என்று அவர் சொல்லவில்லை. நேரடியாக கேட்காமல் 'அவர் அறிவித்தார்' என்று வரும் போது யாரிடம் அறிவித்தாரோ அந்த நபர் இடையில் விடுபட்டுள்ளார். அவர் யார் என்று தெரியாத வரை இந்த செய்தியை ஆதாரமாக எடுக்க முடியாது. 
விடுபட்டுள்ள அவர் யார்?
உஸ்மான் பின் கத்தான் என்பவர் தான் அவர். மேற்கண்ட கைலான் ஜஃபர் பின் இயாஸ் இருவருக்கும் மத்தியில் இடம் பெறுகிறார். இந்த உஸ்மான் பின் கத்தான் என்பவர் இணைந்து அறிவிக்கும் இதே செய்தி ஹாக்கிமில் வருகிறது. ஆனால் உஸ்மான் பின் கத்தான் என்பவர் 'பலவீனமானவர்' என்பதால் அந்த செய்தி பலவீனப்பட்டு விடுகிறது. அவர்கள் எடுத்துக் காட்டும் 'பொருளைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்" என்ற அபூதாவூதுடைய செய்தியில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டுள்ளதால் இதுவும் தொடர்பறுந்த பலவீனமான செய்திதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உஸ்மான் பின் கத்தான் இடம்பெறாமல் மேற்கண்ட இருவரும் சந்தித்துள்ளார்கள் என்பதற்கு இவர்களால் ஆதாரம் கொடுக்க முடியாது என்பது தான் உண்மை.
முஸ்லிம் ஹதீஸ் கிரதத்தின் முன்னுரையில் 'இரண்டு அறிவிப்பாளர்கள் சமகாலத்தில் வாழ்ந்து சந்திக்கக் கூடிய அளவிற்கு அருகில் வாழ்ந்திருந்தால் அதுவே அவர்கள் சந்திப்பை உறுதிப்படுத்தி விடும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்கள். இது உண்மைதான். இது எப்போது உண்மைப்படும் என்றால் இரண்டு அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் வேறு அறிவிப்பாளர் இடம் பெறாமல் ஒரு செய்தி பல வழிகளில் (பல நூல்களில்) இடம் பெற்றால் மட்டும் தான் முஸ்லிம் இமாமுடைய கூற்றுப்படி அதை எடுத்துக் கொள்ள முடியும். இரண்டு அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் வேறொரு அறிவிப்பாளர் ஒரு செய்தியில் இடம் பெற்று மற்றொரு செய்தியில் அவர் விடுபட்டிருந்தால் இதுபோன்ற இடங்களை பூர்த்தி செய்வதற்காக முஸ்லிம் இமாம் தன் கருத்தை வைக்கவில்லை. எனவே 'பொருளை தூய்மைப்படுத்தத்தான் ஜகாத் என்ற அபூதாவூதில் இடம் பெறும் செய்தி தொடர்பு அறுந்ததுதான்.
மேலும் நாம்,
எந்த ஒரு பொருளும் தூய்மையோ அசுத்தமோ அடைய வாய்ப்பேயில்லை. பொருள்கள் வரும் வழியைப் பொருத்து அதற்குரிய மனிதர்கள்தான் தூய்மையோ அசுத்தமோ அடைகிறார்கள்..
ஒருவன் உழைத்து 100 ரூபாய் சம்பாதிக்கிறான் மற்றொருவன் திருடி அல்லது லஞ்சம் வாங்கி 100 ரூபாய் சம்பாதிக்கிறான் என்றால் இருவரின் கைகளில் 100 ரூபாய்கள் இருக்கும் நிலையில் ஒருவன் நல்லவனாகவும் அடுத்தவன் கெட்டவனாகவும் காட்சியளிப்பான். பொருள்கள் வரும் வழியைப் பொருத்து மனிதர்கள் தான் தூய்மையோ அசுத்தமோ அடைகிறார்களே தவிர பொருளுக்கென்று எந்த தூய்மையோ அசுத்தமோ கிடையாது.
இஸ்லாத்தின் கடமைகள் அனைத்தும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தத்தானே தவிர வேறொன்றுக்கும் இல்லை. தொழுகைப் பற்றி ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஹதீஸ்களில் 'தொழுவதன் மூலம் உங்கள் பாவங்கள் குறைகின்றன' என்ற கருத்தே வந்துள்ளன. ஒரு வக்தின் தொழுகையை தொழுதவர் மறு வக்து தொழுகையை தொழுதால் இரண்டுக்கும் இடையில் ஏற்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். ஒரு ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் மத்தியில் ஏற்பட்ட சிறுபாவங்கள் மன்னிக்கப்படும்.
ரமளானில் நோன்பு நோற்பவர் தூய்மையாவார் (அல் குர்ஆன்)
தீய எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமல் ஹஜ் செய்தவர் அன்று பிறந்த குழந்தையைப் போலாகி விடுவார் (புகாரி - முஸ்லிம்)
இப்படி வணக்கங்கள் அனைத்தும் மனிதர்களை (முஸ்லிம்களை) தூய்மைப்படுத்தவே என்பது போன்றே ஜகாத் கடமையும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தவே என்று இறைவன் கூறுகிறான்.
(நபியே) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை தூய்மைப் படுத்தி பரிசுத்தமாக்குவீராக. (அல் குர்ஆன் 9:103)
ஜகாத் கொடுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தூய்மையும் அடைய வேண்டும். இன்னும் கூடுதலாக பரிசுத்தமாக வேண்டும் என்று மிக அழுத்தமாக இறைவன் கூறியிருக்கும் போது இதற்கு மாற்றமாக 'பொருள் தூய்மைக்கு தான் ஜகாத்' என்று வாதிக்கும் துணிவு எங்கிருந்துதான் வந்ததோ....

தமீம் குலத்தை சேர்ந்த மனிதர் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வமும், பெரிய குடும்பமும், பெரும் சொத்துக்களும் இருக்கின்றன. நான் என் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என் செல்வத்தை எப்படி செலவு செய்வது என்று எனக்கு அறிவியுங்கள் என்றார். அதற்கு இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உமது செல்வத்திலிருந்து ஜகாத்தை கொடுங்கள் ஜகாத் தூய்மைப்படுத்தும் என்பதால் அது உம்மைத் தூய்மைப்படுத்தும். (அனஸ் பின் மாலிக்(ரலி) அஹ்மத் 11945)
விளக்கமா... முரணா...
(புகாரி)1404. காலித் இப்னு அஸ்லம் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒருகிராமவாசி, 'யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்கள்... என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி), 'அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக 'ஸகாத்தை' அல்லாஹ் ஆக்கிவிட்டான்' என்றனர்.
இந்த செய்தியை எடுத்துக் காட்டி குர்ஆன் வசனத்தைப் பின்னுக்குத் தள்ளி பொருள் தூய்மைக்கே ஜகாத் என்று எழுதியுள்ளார்கள். பிறகு தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக ஜகாத் பெற்று மனிதர்களைத் தூய்மைப்படுத்தும்' என்ற வசனத்தை எடுத்துக் காட்டி ஊசி புதிய ஆடையையும் கந்தல் ஆடையையும் தைக்கும் என்றெல்லாம் எழுதியுள்ளார்கள்.
ஸகாத் மனிதர்களையும் - பொருளையும் தூய்மைப்படுத்தும் என்பதுதான் அவர்களின் வாதம் என்றால் (இதை அவர்கள் அழுத்தமாகச் சொல்லவில்லை. பொருளைத்தான் தூய்மைப்படுத்தும் என்பதையே அழுத்தமாக சொல்லி வருகிறார்கள்) இதில் வரும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்பதை அவர்கள் எப்படித்தான் விளக்குவார்கள்?
நோன்பு முஸ்லிம்களை தூய்மைப்படுத்துகிறது. ஒருவருடம் வைத்து விட்டு நான் தூய்மையடைந்து விட்டேன் என்று யாரும் முடிவு செய்வதில்லை.
சில தொழுகைகளைத் தொழுது விட்டு நான் தூய்மையடைந்து விட்டேன் என்று தொழுகையிலிருந்து விடுபட்டு விட முடியுமா..?
பொருளுக்கு ஜகாத் கொடுத்து ஒரு முஸ்லிம் தூய்மையாகின்றான் என்று வைத்துக் கொள்வோம். எந்த பொருளுக்கு ஜகாத் கொடுத்தானோ அந்த பொருளை பயன்படுத்துவதன் வழியாக அவனுக்கு எந்த வித அசுத்தமும் வந்து சேராது என்று இவர்களால் துணிந்து சொல்ல முடியுமா..
மறுப்பாளர்.
ஒரு மனிதனுக்கு புதையல் கிடைக்கின்றது அதிலிருந்து  20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நபி(ஸல்) நிர்ணயித்தார்கள். (புகாரி 1499 - 2355)
போர்காலங்களில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருள்களில் ஐந்தில் ஒரு பங்கை செலுத்தி விட வேண்டும் என்றும் நபி(ஸல்) நிர்ணயித்தார்கள். புகாரி 1398, 3095, 3510, 4368, 4369, 7266, 7556)
இந்த ஹதீஸ்கள் படி குறிப்பிட்ட சதவிகிதத்தை கொடுத்து விட்டால் போதுமா.. அல்லது ஆண்டு தோறும் கொடுக்க குறிப்பிட்ட சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் என்று விளங்குவார்களா..? (எனவே ஒரு முறை கொடுத்தால் போதும்)
நாம்.
ஒரு மனிதனுக்கு 100 பவுன் தங்கம் புதையலாகக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அதற்கு 20 சதவிகிதம் அவர் ஜகாத் வழங்கி விட்டார். வழங்கிய பிறகு அந்த புதையலின் மதிப்பு அது கிடைத்த போது இருந்ததை விட கிடு கிடு வென்று உயர்ந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இப் போது உயர்ந்த அந்த மதிப்பிற்கு ஜகாத் வழங்க வேண்டுமா.. வேண்டாமா..? கூடிய அதன் மதிப்பிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்ற கருத்தை இவர்கள் முன் வைத்தால் 'புதையலுக்கு ஜகாத் கொடுத்தாகி விட்டது இனிமேல் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்கிற அவசியமில்லை' என்று புதையலுக்குரியவன் கூறினால் இவர்கள் என்ன சொல்வார்கள். அல்லது புதையலுக்கு ஜகாத் கொடுத்தாகி விட்டதால் அதன் மதிப்பு எவ்வளவு உயர்ந்தாலும் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை என்று சொல்வார்களா...
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளின் மதிப்பு உயர்ந்தால் உயர்ந்த மதிப்பை கணக்கிட்டு ஜகாத் வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் கூறினால் அதற்கு எந்த ஆதாரத்தை சமர்பிப்பார்கள்?
அப்படியானால் புதையல் சொத்தை எப்படி விளங்குவது?
எவ்வித உழைப்பும் இன்றி இனாமாக அந்த சொத்து கிடைப்பதால் கிடைத்தவுடன் 20 சதவிகிதம் அதன் மீது விதிக்கப்பட்டு விடும். பின்னர் அது அவனது சொத்தாகி பிற சொத்துக்களுடன் சேர்ந்து விடுவதால் இதர சொத்துக்கள் மீது இருக்கும் கடமை இதன் மீதும் வந்து விடும் என்று விளங்குவதுதான் சரியாகப்படுகிறது.
இப்படி விளங்கும் போது ஜகாத் கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு உயர்வதால் எந்த குறுக்கீடும் வருவதற்கு வழியில்லை.
போரில் கிடைத்தப் பொருள் என்பது இன்றைக்கு நடைமுறை சாத்தியமில்லை என்பதால் அது பற்றிய விவாதத்திற்குள் நாம் நுழைய வேண்டாம்.
ஆக, மறுப்பாளர்கள் 'ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும்' என்ற தங்கள் வாதத்திற்கு இரண்டு ஆதாரங்களை (ஆதாரங்களாக அவர்கள் கருதுபவற்றை) எடுத்து வைத்துள்ளார்கள்.
1) பொருளை தூய்மைப்படுத்தவே ஜகாத்
2) புதையல் பற்றிய ஹதீஸ். இரண்டின் நிலவரத்தையும் நாம் இங்கு விரிவாக அலசியுள்ளோம். மட்டுமின்றி தர்க்க ரீதியாக அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் எவ்வளவு தவறானவை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். இனி தொடர்சியாக கூடுதல் விபரங்களைப் பார்ப்போம்.
நடைமுறைச் சிக்கலான எந்த ஒரு சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்காது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும் - விளங்க வேண்டும். குறிப்பாக கட்டாயக் கடமையாக்கப்பட்டவற்றில் எற்த நடைமுறைச் சிக்கலும் இருக்கக் கூடாது.
ஜகாத் ஒரு முறை வழங்கினால் போதும் என்ற கருத்தில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
ஜகாத் கொடுத்த பொருளின் மதிப்பு உயரும் போது அதை எப்படிக் கையாள்வது? பத்து லட்சம் மதிப்புள்ள ஒரு காலி மனைக்கு ஒருவர் ஜகாத் கொடுத்து விட்டார். அடுத்தக் கட்டங்களில் அதன் மதிப்பு உயர்கிறது. உயர்ந்த மதிப்புக்கு ஜகாத் தேவையில்லை என்று இவர்கள் அறிவித்தால் அப்போது வேறு கேள்விகள் எழும். மதிப்பு உயரும் போது அந்த மதிப்புக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு என்றால்  அதை எப்படி நடைமுறைப்படுத்துவது?
ஏராளமான சொத்துக்குரியவர்கள் தினமும் தனது சொத்தின் மதிப்பீடு என்னவென்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா.. ஜகாத் கொடுப்பதற்கென்றே ஒவ்வொரு செல்வந்தரும் தனியாக ஒரு குழுவை தம்மிடம் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுமா... உயரும் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால்,
'ஒவ்வொரு நிமிடமும் உயரும் மதிப்புக்கா'
ஒவ்வாரு மணிநேரமும் உயரும் மதிப்புக்கா'
ஒவ்வொரு நாளும் உயரும் மதிப்புக்கா'
ஒவ்வொரு வாரமும் உயரும் மதிப்புக்கா' (இது அவர்கள் கோணத்தில் வைக்கப்படும் கேள்விகள்)
தங்கத்தின் மதிப்பு மணிக்கு ஏற்றால் போல மாறிக் கொண்டிருக்கிறது. இதை எப்படி அணுகுவார்கள்? தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுக்கும் நிலக்கரி மற்றும் பெட்ரோல் உற்பத்தி போன்றவற்றிற்கு வரும் மேலதிக வருமானத்திற்கு மணிக்கொரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளலாமா..!? பெரும் ஜவுளி உற்பத்தி ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் இங்கெல்லாம் ஒரு நாளைக்கல்ல ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கில் பணங்கள் வந்துக் குவியும். ஒரே நாளையில் பலமுறை ஜகாத்தின் நிஸாபை கடக்கக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களெல்லாம் (இவர்களின் அளவுகோல் படி) ஜகாத்தை எப்படி கணக்கிடுவது?
பங்கு சந்தையில் மணிக்கொருதரம் மதிப்பீட்டில் வித்தியாசங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள அனைவரும் தனது பங்கின் மதிப்பு உயரும் போதெல்லாம் அதற்கு மதிப்புப் போட்டு ஜகாத்தை பிரிக்க வேண்டுமா..?
இதே அடிப்படையில் நூற்றுக் கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களால் முரண்பாடற்ற பதிலை கொடுக்கவே முடியாது.
இனி ஆண்டுதோறும் என்பதின் நிலையைப் பார்ப்போம்.
ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம் என்பது அவர்களின் வாதம். வலுவான சில செய்திகளையும் அவர்கள் பலவீனப்படுத்தியுள்ளார்கள் என்பதை ஒரு புறம் நாம் வைத்து விட்டாலும் நாம் அவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகள் சில உண்டு
1) ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்ற செய்திகள் பலவீனம் என்றே வைத்துக் கொள்வோம். எதிர் ஆதாரங்கள் இல்லாத நிலையில் இந்த கருத்து சமூகத்தில் எப்படி நிலைப் பெற்றது?
2) ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்பதற்கு பலவீனமான செய்திகளாவது (அவர்கள் வாதப்படி) ஹதீஸ் நூல்களில் கிடைக்கின்றன. ஒரு பொருளுக்கு ஒரு முறைக்கொடுத்தால் போதும் என்ற ஒரு பலவீனமான செய்தியையாவது இவர்களால் காட்ட முடியுமா..?
3) ஜகாத் என்ற மிக முக்கிய கடமையை நபித் தோழர்கள் காலம் தொட்டு இன்றுவரை தவறாகவே புரிந்து செயல்படுத்தியுள்ளார்கள் என்று சொல்ல வருகிறார்களா..?
4) நபித்தோழர்களின் செயல்பாடுகளை மார்க்க ஆதாரமாக எடுக்கக் கூடாது என்பதில் நாமும் உடன்படுகிறோம். ஆனால் அது எப்போது? நபித்தோழர்களின் கருத்துக்கு மாற்றமாக ஒரு ஆதாரம் கிடைக்கும் போதுதான் நபித்தோழர்களின் கருத்தை விட ஆதாரமே முக்கியம் என்ற முடிவுக்கு நாம் வருவோம். ஜகாத் விஷயத்தில் நபித்தோழர்களின் கருத்தை பின்பற்றக் கூடாது என்றால் அவர்களின் கருத்துக்கு எதிரான ஆதாரம் எங்கே?? எங்கே??? தெளிவான ஆதாரம் இல்லாத நிலையில் நபித்தோழர்களின் கருத்தை விட எங்கள் ஆய்வே சிறந்தது என்று சொல்ல வருகிறார்களா..?
5) ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று நபி(ஸல்) சொல்லி இருந்து (அதற்கு தெளிவான சான்று இருந்து) அதற்கு மாற்றமாக ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நபித்தோழர்கள் முன் வைத்தால் தான் நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்ற வாதம் சரியாகும்.
6) ஒரு பொருளுக்கு ஒரு முறைக் கொடுத்தால் போதும் - கொடுத்தவற்றிற்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு தெளிவான சான்று இல்லாத நிலையில் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்று நபித்தோழர்கள் சொல்லியுள்ளார்கள் என்றால் நபி(ஸல்) காலத்திலும் அதுதான் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.
7) மறைந்த அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் 'ருகூஃவிற்கு பிறகு எழுந்து மீண்டும் கைகளை கட்டிக் கொள்வது சுன்னத்' என்ற ஒரு கருத்தை வெளியிட்டார்கள். அதற்கு மறுப்பெழுதிய இன்றைய ஜகாத் சர்ச்சை அறிஞர் 'காலாகாலமாக எந்த ஒரு மக்களிடமும் நடைமுறையில் இல்லாத ஒன்றை இன்று புதிதாக ஒருவர் சொல்கிறார் என்றால் இவரது கருத்தை விட காலாகாலமாக மக்களிடம் நடைமுறையில் இருப்பதே மேல்' என்று தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். ஒரு சுன்னத்தான காரியத்தை தீர்மானிப்பதற்கே இதுதான் சிறந்த அளவுகோல் என்று அவரது அறிவு ஒப்புக்கொள்கின்றதென்றால் ஒரு கடமையை தீர்மாணிப்பதற்கு மட்டும் அவரது அறிவு அவரது கருத்தை ஒப்புக் கொள்ளவில்லையா..?
நபி (ஸல்) அவர்களிடமிருந்து பாடம் படித்த நபித் தோழர்கள் ஜகாத்தை ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்றுதான் விளங்கி வைத்திருந்தார்கள். எந்த ஒரு நபித்தோழரும் ஒருபொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று சொல்லவில்லை ஏனெனில் நபி(ஸல்) அப்படி நடைமுறைப்படுத்தவில்லை. எனவே நமது மொத்த சொத்திற்கும் (நமது அத்தியாவசிய தேவைகள் போக) மீதமுள்ளதற்கு ஆண்டுதோறும் கணக்கிட்டு ஜகாத் வழங்குவதுதான் இஸ்லாமிய நடைமுறையாகும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes