Showing posts with label துஆ. Show all posts
Showing posts with label துஆ. Show all posts

Wednesday, January 4, 2012

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை -துஆ

இஸ்லாமியத் திருமணம் தொடர்…
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ):-
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
… பாரகல்லாஹ_லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்…
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹ_ரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை (சுன்னத்) காரியங்களில் கெட்டது பித்அத்துக்கள் (இஸ்லாம் மார்கத்தில் நபிவழிக்கு மாற்றமாக சேர்க்கப்பட்ட அதிகமாக்கப்பட்ட புதுமையானவைகள்) பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம்: புகாரி.
நடைமுறையில் உள்ள ஸஅல்லிஃப் பைனஹ_மா போன்ற துவாவை ஒதுவது அதற்கு நபி (ஸல்) கூறாத விதத்தில் ஆமீன், ஆமீன் என்று முழுங்குவதைனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த துவா ஒதும் போது அலி, ஃபாத்திமா என்ற பெயர், வரும்போது பெண்ணுக்கு பெண்ணுடைய உறவினர் (தாலி)கருகமணி கட்டுவது போன்றவை ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும். அதை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தில் நிக்காஹ்விலோ, நிக்காஹாவிற்கு பிறகோ தன் மனைவிகளுக்கோ அல்லது தன் மகள் ஃபாத்திமாவுக்கோ (தாலி) கருகமணி கட்டவே இல்லை என்பதும், (தாலி) கருகமணி கட்டுவது அதை கணவன் இறந்த பின் அறுப்பது பின் அந்த பெண்ணை விதவை கோலத்தில் வைத்து அபசகுணமாக கருதி ஒதுக்கி வைப்பது இவையாவும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவை. இவை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.
சீறா புராணத்தை இயற்றிய உமர் புலவர் நபி (ஸல்) அவர்களுக்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பின்னர் பிறந்துள்ளவர். தனது கற்பனையினால் சில கவிதைகளை இயற்றி அதில் இப்படி அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) திருமணத்தைக் கற்பனையாகப் பாடியுள்ளார். இதை செயல்படுத்தும் நமது தமிழ் உறுது முஸ்லிம் மக்கள் நபிவழியை சுன்னத்தை செயல்படுத்தவில்லை என்பதை அறியலாம். ஆகையால் நாம் நபி வழியை கடைபிடித்தால் இம்மையில், மறுமையில் வெற்றி பெறுவோம்.
மணமக்களின் பிரார்த்தனை (துஆ):-
லயின் அதய்தனா ஸாலிஹன் லநகூனன்ன மினஷ் ஷாகிரீன்” (7:189)
எங்களிறைவா! எங்களிருவருக்கும் நீ நல்லதை (சந்ததியை) கொடுத்தால் நிச்சயமாக நாங்களிருவரும் நன்றியுடையவர்களாக இருப்போம். (அல்குர்ஆன் 7:189)
(ஆதிமனிதர் ஆதம் (அலை) அவரது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடன் கேட்ட பிரார்த்தனை)
“ரப்பீஹப்லி மின்லதுன்க துர்ரியய்யதன் தைய்யிபதன் இன்னக்க சமிஉத்துஆ”
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவிமடுப்பவன். (அல்குர்ஆன் 3:38)
(ஜக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
மணமகனின் பிரார்த்தனை (துஆ):-
ரப்பனா ஹப்லலனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யாதினா குர்ரத்த அயுனின் வ ஜஅல்னா லில் முத்தகீன இமாமா”
எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக.(அல்குர்ஆன் 25:74)
(ரஹ்மானின் நல்லடியார்கள் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று பார்க்க 25:67 முதல் 75 வசனங்கள்)
ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன்:
அல்லாஹ_ம்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி”
என்று பரகத்துக்காக துஆ செய்ய வேண்டும்.
பொருள்: இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் (ரலி) ஆதாரம்: ஹாகிம்

அழகிய துவா

அழகிய துவா

Sunday, October 9, 2011

உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா?

உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா?

உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா?

ஒரே வழி

Duva

 அழையுங்கள் நம் அல்லாஹ்வை துவா என்ற பிரார்த்தனையின் வாயிலாக! ஏனெனில் அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறிவுரை கூறுகிறான் கீழே உள்ள திருமறை திருக்குர்ஆனின் வசனத்தை சற்று பொறுமையாக கேளுங்கள்!
 என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”  (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)
 சரி பிரார்த்தனை என்பது பற்றி அல்லாஹ்வின் இறுதி இறை தூதர் நபிகள் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? இதோ ஆதாரத்துடன் விளக்குகிறேன் படியுங்கள்!
 பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்என்று உங்கள் இறைவன் கூறுகிறான் என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372
 சரி நம் துவா என்ற பிரார்த்தனைகளை எவ்வாறு கேட்பது?
 உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
 உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்
பிரார்த்தனை செய்யும் போது ”இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.
அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.  (அல்குர்ஆன் 7:56)
 துவா என்ற பிரார்த்தனையின்போது அவசரப்படக்கூடாது
நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340
 உங்கள் துவா என்ற பிரார்த்தனை விரைவாக ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்?
 உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு அல்லாஹ் அதிகமாக்குவான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150
 தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ   பிரயாணத்தின் போது…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை.  அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908
 கடமையான தொழுகைக்குப் பின்.
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
 எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்று பதிலளித்தார்கள்.  அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499
******************************************************************
******************************************************************
மிகவும் இலேசான அல்லாஹுக்கு மிகவும் விருப்பமான மீஜான் எனும் நன்மையின் தராசில் மிகவும் கனமான(நன்மையைத் தரக் கூடிய)துமான கீழ்கண்ட துவாவும் அதன் பயன்களும்
 ”தூய்மை என்பது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று துதிப்)பது, (நன்மை-தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.
 ‘சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி’ (அல்லாஹ் தூயவன்; எல்லாப்புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள்-பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு நன்மைகளைக் கொண்ட) தாகும். தொழுகை என்பது (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் என்பது சான்றாகும். பொறுமை என்பது வெளிச்சமாகும். குர்ஆன் என்பது உனக்குத் தவிர்க்க முடியாத (ஏவல்) தேவையாகும்; அல்லது எதிரான (விலக்கல்) சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மைத் தாமே விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மையே அழித்துக் கொள்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ மாலிக் அல்-அஷ்அரீ (ரலி) (நூல் – முஸ்லிம், 381)
 ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ بْنُ هِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الطُّهُورُ ‏ ‏شَطْرُ ‏ ‏الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ ‏ ‏أَوْ تَمْلَأُ ‏ ‏مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ ‏ ‏يَغْدُو ‏ ‏فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ ‏ ‏مُوبِقُهَا
 *************************
 (இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை, (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை.
 1. ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் துய்மையானவன், அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்)
 2. ”சுப்ஹானல்லாஹில் அளீம்”  (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துய்மையானவன் எனத் துதிக்கிறேன்)
 என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி, 6406, 6682, 7563. முஸ்லிம், 5224)
 (புகாரி 6682  அறிவிப்பில் ”அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும்” என்று கூடுதலான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன)
 ‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ إِشْكَابٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
 *************************
 ”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையீன் கதீர்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
 மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரிடமிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு அமையும். அவர் புரிந்த இந்த நற்செயலை விடச் சிறந்ததை வேறு எவரும் செய்திட முடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான ஒரு) நற்செயல் புரிந்தால் தவிர”
 ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்படுகின்றன, அவை கடலின் நுரைகள் போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே! என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி, 3293, 6403, 6405 முஸ்லிம், 5221)
 ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏سُمَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ ‏ ‏حِرْزًا ‏ ‏مِنْ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ أَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ وَمَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ ‏ ‏حُطَّتْ ‏ ‏خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ ‏ ‏زَبَدِ الْبَحْرِ
 *************************
”யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமை நாளில் கொண்டு வருவதில்லை. அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் – முஸ்லிம், 5222)
 ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏سُمَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ
 ”சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” என்ற திக்ரை ”யார் நூறு முறை சொல்வாரோ” என்றே  நபிவழிச் செய்திகள் அறிவிக்கின்றன! (பார்க்க: ஹை லைட்)
 ”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையீன் கதீர்” என அல்லாஹ்வை மகத்துப்படுத்தும் வார்த்தைகளை யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும் அவரிடமிருந்து நூறு தவறுகள் அழிக்கப்படும் என்றே நபிமொழியில் குறிப்பிடுப்படுகின்றன. என்னென்ன தவறுகள் என்று பட்டியலிடப்படவில்லை! குர்ஆன், சுன்னாவில் விவரித்துச் சொல்லப்படாத பாவங்களின் விபரங்களை நாம் பட்டியலிடுவது தகுதியற்றதாகும்.
 பிறருக்கு இழைக்கும் அநீதியினால் ஏற்படும் பாவங்கள், பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலே தவிர இறைவனும் அதை மன்னிப்பதில்லை என்ற இஸ்லாமின் அடிப்படையில், தனக்குத்தானே செய்துகொண்ட தீமைகள் – தவறுகள் அழிக்கப்படும் என்றே புரிந்துகொள்ள வேண்டும்! 
(நன்றி சகோதரர் முஸ்லிம்-இதுதான் இஸ்லாம் வெப்தளம்)

Friday, August 12, 2011

நாம் கேட்கக் கூடிய துஆக்கள் ஏற்கப்படாதது ஏன்

இறைநேசச் செல்வர்களில் ஒருவரான ஹஸ்ரத் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது; அல்லாஹுத் தஆலா நாயன் திருக்குர்ஆனிலே இவ்வாறு கூறுகிறான்.
“என்னை அழையுங்கள், நான் உங்களுக்கு விடையளிக்கிறேன் எனக் கூறுகிறான், நாங்கள் அவனை அழைக்கிறோம். ஆனால், அவன் எங்களின் அழைப்புகளுக்கு (துஆக்களுக்கு) விடையளிக்கவில்லையே!” அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள். உங்கள் உள்ளங்கள் பத்து விடயங்களினால் இறந்துவிட்டன என்று கூறிவிட்டு பின்வருமாறு எடுத்தியம்பினார்கள்.
1. நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்கிaர்கள், ஆனால், அவனுக்குரிய கடமைகளை உதாசீனம் செய்து நிறைவேற்றுவதில்லை.
2. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆன் ஷரீபை ஓதுகிaர்கள். அதில் கூறியுள்ளவாறு நடக்கிaர்கள், ஆனால் செயற்படுத்துவதில்லை.
3. ஷைத்தான் உங்களுடைய கடும்பகைவன் என்று வாதிக்கின்aர்கள். ஆனால், அவனைத்தான் பின்பற்றுகிaர்கள்.
4. கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பு இருக்கின்றது என்று மார்பு தட்டியவர்களாக வாதிக்கிaர்கள். ஆனால், அவர்களின் ஸ¤ன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி நடப்பதில்லை.
5. சுவர்க்கத்தை நேசிப்பதாக வாதிக்கிaர்கள். ஆனால், அதற்காக எந்த ஆயத்தமும் செய்வதில்லை.
6. நரகத்தை அஞ்சுவதாக வாதிக்கிaர்கள், ஆனால் பாவத்தை விட்டும் விலகிவிட மறுக்கிaர்கள்.
7. மரணம் எப்பொழுதாவது வந்து சேரும் என நம்பிக்கை வைத்துள்Zர்கள். ஆனால் அதற்குரிய முன்னாயத்தங்களை செய்யாமல் உலக ஆசையில் திளைத்திருக்கிaர்கள்.
8. பிறர்களின் குறைகளை துருவித்துருவி ஆராய்கிaர்கள். உங்களின் குறைகளை விட்டு விடுகிaர்கள்.
9. அல்லாஹுத் தஆலா நாயன் தந்த உணவை சாப்பிடுகிaர்கள். அவனுக்கு நன்றி கெட்டவர்களாக வாழ்கிaர்கள். உங்களில். மெளத்தானவர்களை அடக்கம் செய்கிaர்கள். ஆனால், அவர்களின் மூலமாக படிப்பினை பெறுகிaர்கள் இல்லை; என இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes