Showing posts with label இஸ்லாம் சிந்தனை. Show all posts
Showing posts with label இஸ்லாம் சிந்தனை. Show all posts

Sunday, February 3, 2013

இஸ்லாம் என்றால் என்ன?


இஸ்லாம் என்றால் என்ன

இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம் என்பது பொருளாகும். இம்மையிலும், மறுமையிலும் சந்தியாக வாழ வழிவகுக்கும் மார்க்கமே இஸ்லாம். 

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் எத்தனை? அவை எவை

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்து.

1. வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹுதஆலாவைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவனது திருத்தூதர் என்று சாட்சி கூறுதல்.

2. தினமும் ஐந்து நேரம் அல்லாஹ்வைத் தொழுதல்.

3. செல்வம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு ஏழை வரி செலுத்தல்.

4. ரமழான் மாதம் நோன்பு வைத்தல்.

5. பொருள் வசதியும், பிரயாண வசதியும், உடல் வலிமையும் உள்ளவர்கள் புனித மக்கவிற்குச் சென்று ஹஜ்ஜு என்னும் வணக்கம் புரிதல்.


ஈமான் (நம்பிக்கை வைத்தல்) என்றால் என்ன?

ஈமான் என்றால், அல்லாஹுத்தஆலா ஒருவன் என்றும், அவனது மலக்குகளைக் கொண்டும், அவனது வேதங்களைக் கொண்டும், அவனது ரசூல்மார்களைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும், நன்மையையும் தீமையும், அவனது கற்பனைப்படி நடைபெறுகின்றன என்றும் நம்பி உறுதி கொள்கிறேன் என்பதாகும். என்ற 6 விடயங்களைக் நம்பிக்கை கொள்ளுதல். 

Saturday, February 2, 2013

இந்த வாரச் சிந்தனை

ஜாபர் என்பவர் நபிகளாரின் நெருங்கிய தோழர். உறவினரும்கூட. அவர் மிகவும் ஏழை. ஜாபருக்கு ஒன்பது சகோதரிகள். அவர்களின் தந்தை ஓர்  அறப்போரில் வீரமரணம் அடைந்துவிட்டார். ஆகவே அத்தனை சகோதரிகளையும் பராமரிக்க வேண்டிய சுமை ஜாபரின் தோள்களில் விழுந்தது. வீட் டில் வறுமைதான் என்றாலும் ஜாபர் தன்மானமுள்ள இளைஞராக இருந்தார். யாரிடமும் உதவி என்று கைநீட்ட மாட்டார். இந்த இளைஞருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டுமே என்று நபிகளார் விரும்பினார். ‘‘இந்தா பணம், எடுத்துக்கொள்’’ என்று கொடுத்தால்  மிகவும் தன்மானமுள்ளவரான ஜாபர் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிடக் கூடும்; ஆகவே நபியவர்கள் ஒரு தீர்மானத்துடன் ஜாபரிடம் பேச்சு  கொடுத்தார். இருவரும் அவரவரின் ஒட்டகங்களில் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஜாபரின் ஒட்டகம் மெலிந்து போய் நடப்பதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந் ததை நபிகளார் கவனித்தார். இருவரும் பேசிக் கொண்டே பயணித்தனர்.

‘‘எப்படி இருக்கிறீர்கள் ஜாபர்?’’

‘‘இறையருளால் நலமாக இருக்கிறேன் இறைத்தூதர் அவர்களே!’’

‘‘நீங்கள் திருமணம் முடித்துவிட்டீர்கள்தானே?’’

‘‘ஆம். என்னை விட வயதில் மூத்த ஒரு விதவையைத்தான் மணமுடித்துள்ளேன்.’’

‘‘ஏன் அப்படிச் செய்தீர்கள்? நீங்கள் இளைஞர்தானே? ஒரு கன்னிப் பெண்ணாகப் பார்த்து முடித்திருக்கலாமே?’’

‘‘முடித்திருக்கலாம்தான். ஆனால், எங்களுக்குத் தாய், தந்தை இரண்டுபேரும் இல்லை. எனக்கு ஒன்பது சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களைக்  கவனித்துக் கொள்ளவும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் சற்று வயது கூடிய பெண் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு விதவையை மணமுடித்தேன்.’’ அந்தச் சகோதரனின் தியாக உள்ளத்தை நினைத்தோ என்னவோ நபிகளார் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு மீண்டும் உரையாடலைத்  தொடர்ந்தார்: ‘‘உங்களுடைய இந்த ஒட்டகத்தை எனக்கு விலைக்குத் தருவீர்களா ஜாபர்?’’

‘‘விலை எதற்கு இறைத்தூதர் அவர்களே? நீங்கள் விரும்பினால் இதை இலவசமாகவே தருகிறேன்.’’ ‘‘வேண்டாம். விலைக்குத் தருவதாக இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.’’ ‘‘சரி. நீங்களே ஒரு விலை சொல்லுங்கள்.’’ நபிகளார் மிகக் குறைவாக ஒரு தொகையைக் குறிப்பிட்டார். உடனே ஜாபர், ‘‘என்னதான் மெலிந்த ஒட்டகமாக இருந்தாலும் இவ்வளவு குறைவான  தொகைக்கு எப்படித் தரமுடியும்? நீங்கள் இதை இலவசமாகவே எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். 
நபிகளார் சிரித்துக்கொண்டே விலையை இன்னும் சற்றுக் கூட்டினார். அதுவும் குறைவே என்று ஜாபர் சொல்ல, விலையை இன்னும் அதிகப்படுத்ததி னார். இப்படியே அதிகப்படுத்தி, அதிகப்படுத்தி நல்ல கணிசமான தொகையுடன் அந்தப் பேரம் முடிந்தது. நல்ல விலைக்கு ஒட்டகத்தை விற்றுவிட் டோம் என்று ஜாபருக்குத் திருப்தி. 

விலை முடிவானதும் ஜாபர் ஒட்டகத்திலிருந்து இறங்கி அதை நபிகளாரிடம் ஒப்படைத்தபோது, நபிகளார் அவரைத் தடுத்தார். ‘‘நீங்கள் ஒட்டகத்துடன்  வீடு செல்லுங்கள். நான் பணத்தைக் கொடுத்த பிறகு ஒட்டகத்தைப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார். நபிகளார் தம் வீடு வந்ததும் தோழர் பிலாலை அழைத்து, ‘‘இந்தப் பணத்தை ஜாபரிடம் கொடுத்து விடுங்கள். அவரிடமிருந்து நான் வாங்கிய ஒட்டகத் தையும் அவருக்கே அன்பளிப்பாகத் தந்துவிட்டேன் என்றும் சொல்லிவிடுங்கள்’’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

நபிகளாரின் அற்புதமான அணுகுமுறை இது. வறுமையில் வாடும் ஓர் இளைஞரின் சுயகௌரவத்திற்குச் சற்றும் ஊறு விளைவிக்காமல், அந்தக் கு டும்பத்தின் வறுமையைப் போக்க எப்படி உதவி செய்தார் பாருங்கள்! ஏழைகளின் தன்மானம் பாதிக்கப்படாமல் இதுபோன்ற வழிமுறையை நாமும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

‘‘உங்கள் செல்வத்தை (அறவழியில்) செலவிடுங்கள். இது உங்களுக்கே சிறந்ததாகும். தம்முடைய உள்ளத்தின் கஞ்சத்தனத்தைவிட்டு யார் விலகி இருக்கிறார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்’’(குர்ஆன் 64:16).

Wednesday, January 4, 2012

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
அன்பின், சினிமா தார‌கைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு,
ப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌தி நிதித்துவ‌ப்ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்…
அது ஒரு புற‌ம் இருக்க‌ ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்க‌ நினைக்கின்றேன்.!!

முத‌ல் பார்வையிலேயே உங்க‌ளைப்ப‌ற்றி எந்த‌ வ‌கையான‌ சிந்த‌னையை அடுத்த‌வ‌ர் ம‌ன‌தில் ஏற்ப‌டுத்த‌ விரும்புகின்றீர்க‌ள்????
நீங்க‌ள் விய‌ர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காம‌ல் த‌ம் உட‌லை வைத்து ச‌ம்பாதிக்கும் ஒரு வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ர‌சிகை என்ப‌தை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ விரும்புகின்றீர்க‌ளா??
உங்க‌ளுக்கு என்ன‌ பெருமை அவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ருகின்ற‌து???
உங்க‌ளையும் அந்த‌ வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ஒருவ‌ராக‌ பிற‌ர் எண்ணிக்கொள்ள‌ அனும‌திப்பீர்களா??
சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிக்கும் நீங்க‌ள், உங்க‌ளை நீங்க‌ளும் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முனைகின்றீர்க‌ளா??
நீங்க‌ள் அடுத்தவ‌ரால் விரும்ப‌ப் ப‌ட‌வேண்டும் என்று விரும்புகின்றீர்க‌ளா??
உங்க‌ளைப்ப‌ற்றி மிகையாக‌ எடை போட்டாலும் த‌வ‌றில்லை குறைவாக‌ எடை போட‌க்கூடாது என்று நினைக்கின்றீர்க‌ளா??
உங்க‌ள் குறைக‌ளை சொல்லா விட்டாலும் ப‌ர‌வாயில்லை பிற‌ரால் புக‌ழ‌ப்ப‌ட‌ வேண்டும் என்று எண்ணுகின்றீர்க‌ளா??
அப்ப‌டியும் இல்லை என்றால் இனைய‌த்தின் மூல‌மாக ஆபாச‌மான‌ த‌ள‌ங்க‌ளுக்கு உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை அனுப்ப‌ நீங்க‌ளே வ‌ழி செய்கின்றீர்களா?
எது எப்ப‌டியோ.. face book மூல‌ம் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் வேறு த‌ள‌ங்க‌ளில் உலா வ‌ர‌ வாய்ப்புக்க‌ள் அதிக‌ம் என்ப‌து உண்மையே..
இதோ சில‌ வ‌ழிமுறைக‌ளைச்சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்க‌ள்..
1) உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை யாருக்கெல்லாம் காட்ட‌ நினைக்கின்றீர்க‌ளோ த‌னியாக‌க் காட்டிக்கொள்ளுங்க‌ள்.. பொது இட‌ங்க‌ளில் பாவித்து பெண்மையின் மென்மையை காய‌ப்ப‌டுத்தாதீர்க‌ள்…
2)பெண் என்ப‌வ‌ள் காட்சிப்பொருள‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்ந்து கொள்ள‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்..
நீங்க‌ள் காட்சிப்ப‌டுத்தும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் எதிர்கால‌த்தையே கேள்விக்குறியாக்க‌லாம் என‌வே சிந்தித்து முடிவெடுங்க‌ள்..
3) நீங்க‌ள் இஸ்லாம் கூறும் வ‌கையில் உடைய‌மைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ப‌தை நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.
ந‌வீன‌ தொழில் நுட்ப‌த்தின் மூல‌ம் எந்த‌ள‌வு ந‌ன்மை விளைகின்ற‌தோ அந்த‌ள‌வு தீமையும் ம‌னித‌ ச‌மூக‌த்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்ற‌து..
உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் நீங்க‌ள் துஷ்பிர‌யோக‌த்திற்கு உட்ப‌ட‌லாம்…
4)உங்க‌ளுக்கு உங்க‌ள் அழ‌கைக்காட்ட‌வே வேண்டும் என்றிருந்தால் இருக்க‌வே இருக்கிர‌து ப‌ல‌ வ‌ழிக‌ள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்க‌ளேன்..
1 உங்க‌ள் த‌ந்தையிட‌ம் தாயிட‌ம் காட்ட‌லாம்.
2 ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளிட‌ம் காட்ட‌லாம்
3 உங்க‌ள் க‌ற்பை ம‌ஹ‌ர் மூல‌ம் ஹ‌லால் ஆக்கிக் கொண்ட‌ உங்க‌ள் க‌ன‌வ‌ரிட‌ம் காட்ட‌லாம்
உங்க‌ளுக்கே உங்க‌ளுக்கென்று ஒரு உற‌வு (க‌ணவ‌ன்)இருக்க‌ யாருக்கோவெல்லாம் உங்க‌ள் உட‌லை, உங்க‌ள் அழ‌கைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்க‌ள்.
க‌ணவ‌னுக்காக‌ அழ‌ங்க‌ரித்து அவ‌ரை ம‌கிழ்விப்ப‌த‌ற்கே ந‌ன்மைக‌ள் கிடைக்கும் என்றிருக்க‌ பாவ‌த்தின் பால் ஏன் விரைகின்றீர்க‌ள்??.
நீங்க‌ள் த‌னித்துவ‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று விரும்பினால் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளையும், சினிமா ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளையும் த‌விர்த்து இன்னும் எத்த‌னையோ வ‌கையான ப‌ட‌ங்க‌ள் உள்ள‌ன‌ அவ‌ற்றில் ஒன்றைப் பா‌வித்துக்கொள்ளுங்க‌ள்.
இல்லையெனில் உங்க‌ள் பெய‌ரை புகைப்ப‌ட‌மாக‌ப் பாவியுங்க‌ள்.
த‌ய‌வு செய்து முஸ்லீம் பெய‌ர்க‌ளுட‌ன் + இறை நிராக‌ரிப்பாள‌ர்க‌ளின் புகைப்ப‌டங்க‌ளை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவ‌த்திற்கு க‌ள‌ங்க‌ம் விளைவிக்காதீர்க‌ள்.
இஸ்லாமிய‌ ஆடைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு (face book) துஷ்பிர‌யோக‌ம் செய்யாதீர்க‌ள்.
நீங்க‌ள் பாவிக்கும் புகைப்ப‌ட‌த்திற்கு விசுவாச‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுங்க‌ள். உதார‌ண‌மாக‌ ஹிஜாப் அணிந்த‌ பெண்ணை நீங்க‌ள் profile picture ஆக‌ப் பாவிக்கின்றீர்க‌ள்.. ஆனால் நீங்க‌ள் பாவிக்கும் செய்திக‌ளோ சினிமாவும் மார்க்க‌த்திற்கு முற‌னான‌ விட‌ய‌ங்க‌ளும் தான். இது எந்த வ‌கையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்??
உங்க‌ளால் இஸ்லாத்திற்கு எந்த‌க் கெடுத‌லும் ஏற்ப‌ட‌க்கூடாத‌ல்ல‌வா அத‌ற்காத்தான் இந்த‌ ஆலோச‌னைக‌ள்..
“உங்களால் தான் மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்கிற‌து என்ப‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்”…
இந்த‌ ஆலோச‌னைக‌ள் யார‌து ம‌ன‌தையும் புண்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை அன்புட‌ன் தெரிவித்துக் கொள்கிறோம்…
இது ஆண்களுக்கும் பொருந்தும்.
by-பெண்சாட்சி & Nasreen Fathima(

அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. அல்குர்ஆன்.

இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.
“அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது” (76:15)
“பின்னர் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (62:10)
நபி (ஸல்) அவர்களும் உழைப்பின் முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“தன்கையால் உழைத்து உண்பதை விட வேறு எந்தச் சிறந்த உணவையும் எவரும் உண்ணுவதில்லை” புகாரி
இதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர் விவசாயம் செய்தனர். இன்று சிலர் கைத்தொழில், வியாபாரம், மந்தை மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வியாபாரம், ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். ஸஹாபாக்களும் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர்.
நபி தாவூத் (அலை) கொல்லராகவும் ஆதம் (அலை) விவசாயியாகவும், நூஹ் (அலை) தச்சராகவும், இத்ரீஸ் (அலை) தையல் காரராகவும் மூஸா (அலை) இடையராகவும் இருந்துள்ளனர். – அல் ஹாகிம்
இஸ்லாம் ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாது. சுய மரியாதையுடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் உழைக்குமாறு தூண்டுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்துத் தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கை நீட்டி யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். -புகாரி, முஸ்லிம்
உழைக்காமல் சோம்பேரிகளாக பிறரிடம் கை நீட்டி யாசகம் கேட்பவர்கள் நாளை மறுமையில் முகத்தில் கறுப்புப் புள்ளிகளுடன் வருவார்கள்.
ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா” எனக் கேட்டார்கள்” ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
“நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” திர்மிதி என்று நபி (ஸல்) அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.
உமர் (ரழி) அவர்கள் உழைக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து விட்டோம் எனக் கூறிக்கொண்டு பள்ளிவாசலில் முடங்கிக் கிடந்த சிலரைக் கண்டு அவர்களை நோக்கித் தமது சாட்டையை உயர்த்தி ‘உழைக்காமல் வருமானத்தைத் தேடி வெளியேறிச் செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக் கூடாது” அல்லாஹ்வே எனக்கு ரிஸ்கை வழங்கு’ எனப் பிரார்த்தனை செய்தால் மாத்திரம் போதாது: வானம் தங்கத்தையோ வெள்ளியையோ மழையாகப் பொழியப் போவதில்லை” எனக் கூறினார். மேலும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறும் தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து வருமாறும் பணிக்கின்றது.
அதன் மூலம் இஸ்லாம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை முன்வைக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே சமூகங்களிலுள்ள வசதிபடைத்த செல்வந்தர்கள் அனைவரும் அவரவர் வாழ்நாளில் காணப்படும் சுயதொழியை ஏற்படுத்தி கொடுப்பார்களாயின் எமது நாடு வறுமையற்ற நாடாக மாறுவது சந்தேகம் இல்லை.
ஆகவே, நாமும் இஸ்லாம் கூறியபடி உழைத்து வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போமாக!
THNXS :ஏ. எம். அஸ்லம்…-

ஸஜ்தா செய்யுங்கள்!

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! என்று சொன்ன போது இப்லீஸித் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவன் மறுத்து அகந்தை பேசினான். நிராகரிப்பவர்களில் ஒருவனாக அவன் ஆனான். (அல்குர்ஆன்2:34)                                        
       இந்த வசனத்தில் கூறப்படும் செய்தி எல்லா  முஸ்லிம்களுக்கும்  தெரிந்த ஒன்றே. மலக்குகள் எனும் வானவர்கள் முதல் மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்களுக்கும்  ஸஜ்தா செய்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இந்தக் கருத்து திருகுரானிலும் இன்னும் அனேக இடங்களில் கூறப்படுகின்றது.
    15:30,37:73,7:11,17:61.18:50,20:11 ஆகிய வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வசனங்கள் பற்றி ஏகத்துவவாதிகளுக்கு இடையே ஒரு குழப்பம். இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் எனும் போது வானவர்களும் கூட இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய கடமைப்பட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் ஆதமுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்? அவ்வாறு செய்யுமாறு இறைவன் ஏன் கட்டளையிட வேண்டும்? இந்தக் கேள்விகளால் அவர்களுக்கிடையே குழப்பம்.
    ஏகத்துவத்துக்கு எதிரானவர்களுக்கோ இந்த வசனம் ஒரு வரப்பிரசாதம். ஆதம் அவர்களுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததால் பெரியவர்களுக்கு மகான்களுக்கு சாதாரணமானவர்கள் ஸஜ்தா செய்யலாம் என வாதிடுவோருக்கு இந்த வசனமும் இந்தக் கருத்திலமைந்த  ஏனைய வசனங்களும் மிகப் பெரும் சான்றுகளாகத்  தெரிகின்றன.
    இரண்டிலும் சேராதவர்களுக்கோ தடுமாற்றம்! எங்கே சாய்வது என்று தீர்மானிக்க முடியாதது அவர்களது நிலைமை. இஸ்லாத்திலேயே முரண்பாடுகள் உள்ளனவோ என்ற எண்ணத்தைக் கூட சிலர் இதனால் தங்கள் அடி மனதில் புதைத்து வைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இந்த வசனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகி விடுகின்றது.
    “ஆதம்(அலை) அவர்களுக்கு வானவர்கள் ஸஜ்தா செய்தனர்” என இங்கே கூறப்படுகின்றது. ‘ஸஜ்தா’ என்றதும் நெற்றியைத் தரையில் வைத்து பணிவது தான் நமது நினைவுக்கு வரும். ஸஜ்தா என்பதை இந்த ஒரு பொருளில் தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம் என்பது தான் இதற்குக் காரணம்.
    ‘ஸஜ்தா’ என்பதற்கு நாம் நினைக்கின்றது போல் நெற்றி தரையில் படுமாறு பணிதல், என்று அர்த்தம் இருப்பது போலவே அதற்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளன. இதற்கான சான்றுகளும் திருக்குர் ஆனிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. முதலில் ‘ஸஜ்தா’வுக்குரிய ஏனைய அர்த்தங்களை அறிந்துவிட்டு இந்த இடத்தில் எது பொருத்தமான பொருள் என்பதையும் தக்க சான்றுகளுடன் விளங்குவோம்.
   மூசா(அலை)  அவர்களின்  சமுதாயத்தை  ஒரு  நகருக்குள்  பிரவேசிக்குமாறு  இறைவன்  கூறும் போது, “ஸஜ்தா செய்தவர்களாக இந்த வாசல் வழியாக நுழையுங்கள்” என்று இறைவன் கட்டளையிட்டான். இந்தக் கட்டளை 2:58,4:154,7:161 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.
    இந்த இடத்தில் பரவலாக நாம் விளங்கி வைத்திருக்கின்றவாறு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தப் பொருளின்படி ஸஜ்தா செய்தால் உள்ளே செல்லுங்கள் என்றே இதற்கு பொருள் கொள்ள புடியும். மணிவுக்கும், அடக்கத்துக்கும் ‘ஸஜ்தா’ எனும் பதத்தை  இறைவன் இங்கே       பயன்படுத்தியிருக்கிறான். ” மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) ஸஜ்தா செய்கின்றன”. (அல்குர்ஆன் 55:6)
    இந்த வசனத்தில் மரம் செடிகள் ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் கூறுகிறான். இந்த   இடத்தில் முதலாவது அர்த்தமும் இரண்டாவது அர்த்தமும் கொள்ள முடியாது. ஏனெனில் மரம் செடிகளுக்கு நெற்றி கிடையாது அதை தரையில் வைப்பதென்பதும் கிடையாது.முதலாவது அர்த்தம் கொள்ள இந்த இடத்தில் வழியே இல்லை. இரண்டாம் அர்த்தம் செய்யவும் வழியில்லை. ஏனெனில் மரம் செடிகளிடம் பெருமையையும்,பணிவையும் கற்பனை செய்ய முடியாது,அவை எவ்வாறு இருக்க வேண்டுமென இறைவன் விதித்திருக்கின்றானோ அவ்வாறு அவை நடக்கின்றன என்பதே இதன் பொருளாக இருக்க முடியும்.அவை ஸஜ்தா செய்கின்றன என்றால் இறைவன் என்ன நோக்கத்தில் அதை படைத்துள்ளானோ அதன்படி அவை இயங்குகின்றன என்பதே  பொருள்.
  அல்லாஹ் படைத்திருப்பவைகளை அவர்கள் உற்று நோக்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும்,இடமுமாக இறைவனுக்காக ஸஜ்தா செய்தவையாக சாய்கின்றன. மேலும் அவை அல்லாஹ்வுக்கு பணிகின்றன. (அல்குர் ஆன் 16:48) வலமும் இடமுமாக பொருள்களின் நிழல்கள் சாய்வதை இங்கே இறைவன் ஸஜ்தா என்று குறிப்பிடுகிறான்.அதை தொடர்ந்து
வானங்களிலிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும், ஜீவராசிகளூம் மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 16:49)
  வானம், பூமியில் உள்ள யாவும்,சகல ஜீவராசிகளூம் இறைவனுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான்.நெற்றியை நிலத்தில் வைத்துப் பணிவது என்ற அர்த்தத்தை இங்கே இடம் பெற்ற ஸஜ்தா எனும் சொல்லுக்கு கொடுக்க முடியாது.
  பதினோரு நட்சத்திரங்களூம், சூரியனும் சந்திரனும் எனக்கு ஸஜ்தா செய்யக் கூடியவையாக நான் கனவு கண்டேன்.  (அல்குர்ஆன் 12:4)
  யூசுப் நபியவர்கள் இவ்வாறு கனவு கண்டதாக அல்லாஹ் கூறுகிறான். சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களூம் நாம் நினைக்கின்ற அர்த்தத்தில் ஸஜ்தா செய்திருக்க முடியாது. எனெனில் ஸஜ்தாவுக்குரிய உறுப்புகள் அவற்றுக்குக் கிடையாது இந்தச் சான்றுகளிலிருந்து ஸஜ்தாவுக்குப் பல பொருள்கள் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.
  அப்படியானால் இந்த இடத்தில் ஆதம் [அலை] அவர்களூக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படும் இடத்தில் ஸஜ்தாவுக்கு எந்தப் பொருள் கொள்ள வேண்டும்.தொழுகையில் நாம் செய்கின்ற இந்த ஸஜ்தாவையே அவர்கள் செய்தார்களா? அவ்வாறு பொருள் கொள்ள முடியுமா?
    நிச்சயமாக அவ்வாறு பொருள் கொள்ள முடியாது.இந்த ஸஜ்தாவை மலக்குகள் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் செய்ய மாட்டார்கள் என்று திருக்குர்ஆனே தெளிவுபடுத்தி விடுகின்றது.
  உம்முடைய இறைவனிடத்தில் இருப்பவர்கள் (வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டும் பெருமையடிப்பதில்லை.அவனைத் துதிக்கின்றனர்.மேலும் அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்.  (அல்குர்ஆன் 7:206)
    இந்த வசனத்தில் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்று இறைவன்  குறிப்பிடுகிறான். ‘யஸ்ஜுதூன லஹு’ என்பதற்கும் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது. ‘யஸ்ஜுதூன லஹு’ என்று சொன்னால் ‘அவனுக்கு ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள் என்று சொன்னால்  ‘அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள்.அதாவது வேறு எவருக்கும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள் என்பது இதன் கருத்து.
  மலக்குகள் இறைவனுக்கு ஸஜ்தா செய்வதுடன் வேறு எவருக்கும் ஸஜ்தா செய்யாமலிருப்பார்கள் என்று அவர்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர்கள் இறைவனுக்குச்  செய்யப்படும் ஸஜ்தாவை ஆதமுக்கு செய்திருக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாக விளங்கலாம் இந்த வசனத்திற்கு முரண்படாத வகையிலேயே 2:34 வசனத்தையும் நாம் விளங்க வேண்டும்.
  அப்படியானால் மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்ற அந்த வசனத்தின் பொருள் என்ன? ஆதம்  (அலை)அவர்களைப் படைக்க இறைவன் விரும்பி மலக்குகளிடம் சொன்ன போது அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள்.அவரைவிட தாங்களே உயர்ந்தவர்கள் எனவும் கூறினார்கள்.அல்குர்ஆனின் 2:30 வசனத்திலிருந்து இதை அறியலாம்.மனிதனைவிடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை தவறென்று காட்டுவதற்காக அவர்களைவிட ஆதம்(அலை) அவர்கள் தமது ஞானத்தை வெளிப்படுத்தியபின், அவருடைய உயர்வை அவருக்கு இருக்கும் சிறப்பை மலக்குகள் ஒப்புக் கொண்டனர்.
    மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்றால் ஆதம்(அலை) தங்களை விட அறிவில் சிறந்தவர் என்று அவரது உயர்வை ஒப்புக் கொண்டார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் பொருள் கொள்ளக் காரணம் அல்குர்ஆன் 7:20ம்  வசனத்தில் மலக்குகள் இறைவனைத்தவிர வேறு எவருக்கும் (சிரம்பணியும்)ஸஜ்தாவை செய்ய மாட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுவதானாலேயே.
    மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு போலி ஷைகுகள் தங்கள் முரீதுகளைக் காலடியில் விழச் செய்வதற்கும்,ஸஜ்தா செய்ய வைப்பதற்கும் இந்த வசனத்தில் எந்தச் சான்றுமே கிடையாது.
    ஸஜ்தா என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஒரு வாதத்துக்காக மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தது நாம் தொழுகையில் ஸஜ்தா செய்வது போன்றதே என்பதை எற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு சாதகமாக இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதை உணர வேண்டும். அவர்கள் செய்யும் அர்த்தம் சரி என்று வைத்துக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
   மலக்குகளும், மனிதர்களும் வெவ்வேறானவர்கள். மனிதர்களுக்கு இருப்பது போன்ற சட்டதிட்டங்கள் மலக்குகளுக்குக் கிடையாது.மலக்குகள் செயததை எல்லாம் மனிதர்களும் செய்ய முடியாது. இது முதலாவது வித்தியாசம். ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளை யிட்டதனாலேயே மலக்குகள் ஸஜ்தாச் செய்தனர். சுயமாக அவர்கள் செய்யவில்லை. ஆனால் அல்லாஹ், ஷைகுகளுக்கும், பெரியார்களுக்கும் ஸஜ்தாச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை.மாறாக அவனது திருத்தூதர் மூலமாக இதற்கு இறைவன் தடையும் விதிக்கின்றான்.
“நான் ‘ஹியாரா’ எனும் பகுதிக்குச் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்கள் தலைவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன்”. நபி(ஸல்) அவர்கள்தாம் ஸஜ்தா செய்யப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என்று (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஸஜ்தாச் செய்ய உங்களுக்கு மிகவும் தகுதி உண்டு என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் அடக்கஸ்தலத்தின் அருகே சென்றால் நீ அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று கேட்டார்கள். நான் ‘மாட்டேன்’ என்றேன். (அதே போல் உயிருடன் இருக்கும் போதும்) செய்யாதே! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்; என்று நபி(ஸல்) கூறினார்கள்”. கைஸ் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபுதாவுத், தாரிமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
     இதே கருத்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிப்பதாக இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு கூட ஸஜ்தா செய்ய அனுமதியில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
  ஆதம்(அலை) அவர்கள் மலக்குகளுக்கு கற்றுத்தரும் ஆசானாக ஆனதால் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எனவே இந்த அடிப்படையில் ஞானத்தை கற்றுத்தரும் ஷைகுகளுக்கு ஸஜ்தா செய்யலாம் என்ற இந்த ஷைகுகளில் வாதத்திற்கு இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளதை உணரலாம்.
   நபி(ஸல்) அவர்கள் தாம் அஞ்ஞானத்தில் இருந்த மக்களுக்கு சரியான ஞானத்தைப் போதித்தவர்கள். அவர்களை விட சிறப்பாக உலகில் எவருமே போதிக்க அனுமதி கேட்ட நபித்தோழருக்கு அனுமதி மறுக்கின்றார்கள்.இந்த ஷைகுமார்கள் நபி(ஸல்) அவர்களை விடவும் தங்களை உயர்ந்தவர்களாக கருதுகின்றார்கள் என்பதைத்தான் இவர்களின் போக்கு காட்டுகின்றது.
   நபி(ஸல்) அவர்கள் கைஸர், கிஸ்ரா,அலெக்ஸான்ரிய மன்னர் ஆகியோரிடம் தூதர்களை அனுப்பினார்கள். என்னை நஜ்ஜாஷி மன்னரிடம் அனுப்பினார்கள். நான் நஜ்ஜாஷி மன்னரிடம் வந்தபோது சிறிய வாசல் வழியாக குனிந்தவர்களாக மக்கள் உள்ளே செல்வதைக் கண்டேன். (அரசரைச் சந்திக்க செல்லும்) அந்த வாசல் குனிந்து செல்லும் அளவுக்கு உயரம் குறைந்ததாகவே அமைக்கப்பட்டிருந்தது.
  “நான் உள்ளே நுழையும் போது முதுகுபக்கம் திரும்பிக் குனிந்தவனாக உள்ளே சென்று நிமிர்ந்தேன். அபீஸீனிய மக்கள் இதைக் கண்டு திடுக்குற்றனர். என்னைக் கொல்ல அவர்கள் நாடினார்கள். நாங்கள் நுழைந்தது போலவே நீரும் ஏன் நுழையவில்லை? என்று என்னிடம் கேட்டனர்” நாங்கள் எங்கள் நபிக்கே இவ்வாறு (மரியாதை) செய்ய மாட்டோம். இவ்வாறு செய்வது (கூடுமென்றால்) நபி(ஸல்) அவர்களுக்கே தகுமாகும் என்று நான் கூறினேன்” என்று அம்ரு இப்னு உமய்யா அள்ளமீர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அவ்ஸத் நூலில் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது
  அரசரை நோக்கிச் செல்லும் வாசல் உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்தால் அதில் குனிந்து தான் செல்லவேண்டும். அரசருக்காக் குனிந்ததாக ஆகிவிடுமோ என்று அம்ரு அவர்கள் முதுகைக்காட்டிக் குனிந்து உள்ளே சென்று நிமிர்ந்தார் என்றால் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தவர் எவ்வாறு சுயமரியாதை மிக்கவர்களாக உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை விளங்கலாம்.
    தனி மனிதனுக்காக குனிவதும் கூட கூடாது என்றால் ஒரு மனிதரின் காலில் விழுந்து ஸஜ்தா செய்வது எப்படி அனுமதிக்கப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கே இவ்வாறு குனிந்து மரியாதை செய்யமாட்டோம் என்ற அம்ரு(ரலி) அவர்களின் கூற்றும் சிந்திக்கத்தக்கது.
  ஆக ஆதம்(அலை) அவர்களுக்கு மலக்குகள் செய்த ஸஜ்தாவுக்கு நாம் சாதாரணமாக நினைக்கும் அர்த்தம் அல்ல. அதுதான் அர்த்தம் என்று வைத்து கொண்டாலும் மனிதர்களின் கால்களில் விழவோ அவர்களுக்காக குணிந்து மரியாதை செய்யவோ நமக்கு அனுமதி இல்லை என்பதையாவது சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும். இந்த வசனத்தை கொண்டு மக்களை ஏமாற்றி அடிமைப் படுத்த நினைக்கும் முரீது வியாபாரிகளிடம் ஜாக்கிரிதையாக நாம் இருக்க வேண்டும்.

விடை கண்டுபிடயுங்கள்

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.
நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழகத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் நான் அல்லாஹ்விற்காக எந்த அமைப்பில் சேர்ந்து பணியாற்றுவது என்று இன்று வரை குழம்பி வருகிறேன். அல்லாஹ்விற்காக எனது சிந்தனைக்கு இஸ்லாமிய முறையில் விடை காண்பியுங்கள்.
இன்று வரை முஸ்லிம் அமைப்புக்கள் செய்யக்கூடிய தவறகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவைகளே என் குழப்பத்திற்கு காரணம் !!
1) முஸ்லிம்களின் பெயரால் அரசியல் இயகத்தை தொடங்கியவர்கள் முஸ்லிம்களுக்கு பயனில்லாத விதத்தில் (அடிமை)அரசியலை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்ற விஷயத்திலும், மேலும் தவ்ஹீதின்(அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற) வாசனையே இல்லாமல், இணை வைத்தல் காரியங்களிலும், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டே இஸ்லாமிய இயக்கம் செயல்பட வேண்டும் என்ற கொள்கையில்லாமலும் செயல்படுகின்ற விஷயத்திலும் இந்த இயக்கம் தவறு செய்கிறது (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்).
நிச்சயமாக, இஸ்லாத்தின் அடிப்படையே தவ்ஹீது தான், மேலும் இஸ்லாம் கண்ணியத்தை போதிக்கிறது அடிமைத்தனத்தை (அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அடிமையாக இருப்பதை) வெறுக்கின்றது.
2) நபிவழியின் பெயரால் இயக்கத்தை தொடங்கியவர்கள், நபிவழிக்கு மாற்றமான பித்அத்தை அறிந்தோ அறியாமலோ பின்பற்றும் விஷயத்தில் தவறு செய்கிறீர்கள். (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்).
நிச்சயமாக, அல்லாஹவின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இல்லாத எந்த ஒரு மார்க்க விஷயமும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்படாது மாறாக நிராகரிக்கப்படும்.
3) இஸ்லாத்தின் பெயரால் இயக்கத்தை தொடங்கியவர்கள், முஸ்லிம்களுக்கு தஃவா பணி, முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை தெளிவுபடுத்தி எடுத்துரைத்தல், சமுதாயத்தின் நீதிக்காக மறைமுகமாகவும் குரல் கொடுத்தல், சமுதாயத்திற்கு உதவுதல் போன்ற நல்ல பல பணிகளை செய்து வருகிறார்கள். (அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்).
ஆனால் மார்க்க விஷயங்களில் (COMPRIMISE) சமாதானப் பேச்சு எனும் விஷயத்தில் இந்த இயக்கம் தவறு செய்கிறது (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்). நிச்சயமாக, சத்தியம் – அசத்தியம் தெளிவாகவே உள்ளது, மார்க்க விஷயங்களில் (அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அனுமதித்தைத் தவிர) சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
4) முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக இயக்கத்தை தொடங்கியவர்கள், முஸ்லிம்களின் இவ்வுலக முன்னேற்றத்திற்காக அதிகமாக பாடுபடுகிறீர்கள் (அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்). மறுமை வெற்றிக்காகவும் பாடுபடுகிறீர்கள் (முதலினும் குறைவாக). உங்கள் கொள்கைகளும் செயல்பாடுகளும் ஒரு முஸ்லிமின் மறுமை முன்னேற்றத்தை விட இவ்வுலக முன்னேற்றமே முக்கியம் எனும் வகையில் பிற்காலத்தில் மாற்றப்பட்டுள்ளது.
முன்னர் மார்க்க விஷயங்களின் பகிரங்மாக பிரச்சாரம் செய்த நீங்கள், உங்களின் புதிய பாதைக்காக மார்க்கத்தையும் மார்க்கப்பிரச்சாரத்தையும் தளரும்படி செய்துள்ளீர்கள். இஸ்லாமிய கொள்கையில் உறுதியுள்ளவர்கள் குறைவாக இருந்தாலும் அல்லாஹ்வின் பொருத்தம் அதிலே அதிகமிருக்கும் என்பதை மறந்து எண்ணிகை தான் அரசு அதிகாரங்களை மிரளவைக்கும் என்ற அரசியல் சித்தாந்தத்தின் பால் (முஸ்லிம்களின் உரிமைகளையும் மானத்தையும் மீட்கவும் காக்கவும்) தள்ளப்பட்டுள்ளீர்கள். (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்).
நிச்சயமாக ஒரு முஸ்லிமுக்கு இம்மையும் மறுமையும் வேண்டும். ஆனால் மறுமைக்கே முன்னுரிமை, மேலும் கூட்டம் குறைவாக இருந்தாலும் சத்தியவான்களாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி அதிகமாகயிருக்கும்.
5) தவ்ஹீதின் பெயரால் இயக்கத்தை தொடங்கியவர்கள், மாஷா அல்லாஹ் – தவ்ஹீது பிராச்சாரத்தை நானறிந்தவரை முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியிலும் நன்றாக செய்கிறார்கள் (அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்).
உங்கள் இயக்கமல்லாத மற்ற இயக்கத்தினரை தரைக்குறைவாக விமர்சிக்கிறீர்கள். (இதுவே நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு).
தவறுகளை சுட்டிக்காட்டுவதில் இஸ்லாத்தில் அழகிய வழிமுறை உண்டு அதனை முற்றாக மறந்துவிட்டீர்கள்.
உங்கள் இயக்கம் சாராத தவ்ஹீதுவாதிகளும் உண்டு என்பதையும் மறந்துவிட்டீர்கள். (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்).
ஒருவர் தவறு செய்தால் அவரை திருத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைப்படி சுட்டிக்காட்டுங்கள். அவரை கேவலப்படுத்துவதற்காக அவரது தவறுகளை அவருக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள். அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி, அவனக்கு இணையேதும் வைக்காத அனைவரும் தவ்ஹீதுவாதிகள் என்பதை அன்புடன் நினைவூட்டுகிறேன்.
Thnxs:Abdul Rahman

Sunday, January 1, 2012

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?


உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ

'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Wednesday, December 28, 2011

வேண்டாமே... விவாகரத்து.


ஆம்... விஞ்ஞான வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் அதிவேக முன்னேற்றம் கண்ட மேலை நாடுகள் கூட நம் நமது நாட்டை கண்டு பொறாமைப்படக் காரணம் இந்தியாவின் தொழில் வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ அல்ல! நம் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும்தான்..
கூட்டுக்குடும்ப அமைப்பு, கணவன் மனைவி என்ற கண்ணியமான பந்தம், கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைதான் அவர்களை ஈர்த்தது.
அவர்களின் எந்திரமயமான வாழ்க்கை, நிலையற்ற குடும்ப அமைப்பு, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை... இப்படி வாழ்ந்துவந்த அவர்கள் நம் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கை முறையை இந்திய கலாச்சாரத்தைப் போல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
நம் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி, இனம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மாறுபட்டாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இன்று காலம் மாற மாற இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரீகத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர். கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டு இருக்கின்றன. பொருளாதாரத் தேவை நெருக்கடி, அவர்களின் வாழ்வை சீரழித்துக்கொண்டு இருக்கின்றது. கணவன், மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்த அவர்களின் இனிமையான வாழ்வு இன்று நீதிமன்றங்களின் வாசலில் காவல் காத்து நிற்கின்றது.
இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்துள்ளது. குடும்ப நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 15 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.
இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல.! நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்!
ஒருபக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரேஅந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் விவாகரத்து கோரி...
திருமணமாகி இரண்டு மாதமே ஆன தம்பதிகள் இன்னொரு பக்கம்.. அதுமட்டுமின்றி,
திருமணமாகி பல ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த 40, 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள்...
ஒருவரை ஒருவர் காதலித்து புரிந்து கொண்டு திருமணம் செய்துகொண்டவாகள் கூட இப்படி விவாகரத்து கோரி நீதி மன்றங்களின் வாசலில் நிற்கின்றனர்...
பத்திரிகை அடித்து மண்டபம் பிடித்து பெரும்பொருட்கள் செலவில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற திருமணங்கள் கூட இன்று விவாகரத்து கேட்டு நிற்கின்றன..
இப்படி பாரபட்சமின்றி அனைத்து வகையினரும் தங்கள் வாழ்க்கையில் இப்படிப் பட்ட முடிவு எடுக்க காரணம் என்ன..?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். அந்த சொர்க்கமான வாழ்வு இவர்களுக்கு நரகமானது ஏன்..?
இந்த நிலை பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவி வருகின்றது.
ஆண் பெண் இருவரும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் விரைவாக முன்னேறிக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம்.
அவர்கள் அதீத வளர்ச்சியின் இடையே அவர்கள் வாழ்வில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளால் அவர்களது வாழ்க்கை பெரும் வகையில் பாதிக்கப்படுவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
மண முறிவிற்கான அடிப்படைக் காரணம்
•ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர்பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்ன பிரச்சனைகளால் சிதைந்து போகும்போது ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர்.
• சிலர் ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத போது தங்கள் எண்ணப்படி விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த முடிவை எடுக்கின்றனர்.
•ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன.
•கணவன் மனைவியிடையே தாம்பத்திய உறவு சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர்.
இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது. உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகின்றன. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் ஈகோ தன்மை வந்து தங்கள் பிரச்சனையை பெரியவர்களிடம் கூட கூறாமல் தங்களுக்குள்ளேயே பிரிவு என்று ஒரு முடிவை எடுக்கின்றனர்.
முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசி சமாதானம் செய்வார்கள். மீறிப்போனால் ஊர் பெரியவர்கள் சேர்ந்து அறிவுரை கூறி சமாதானம் செய்து சேர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்பட்டால் அது குடும்பத்திற்கு இழுக்கு என்று நினைப்பார்கள். ஆனால் இன்று நிலைமையோ வேறு. இதற்கு கூட்டுக்குடும்ப சிதைவும் ஒரு காரணமாகிறது.
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தின் அந்தரங்க விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
கணவன் மனைவி குடும்பத்தாரைப் பற்றியும், மனைவி கணவன் குடும்பத்தாரைப் பற்றியும் கிண்டலோ, தரக்குறைவாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அன்பாக, அனுசரணையாக ஒருவருக் கொருவர் நடந்துகொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி ஒருநாளைக்கு நான்கு முறையாவது அன்பாக கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தழுவும்போது உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதுடன் குதூகலத்துடன் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
கணவன் மனைவி உறவு என்பது உடலுறவு மட்டும் கிடையாது. அதற்கும் மேலாக பல விஷயங்கள் உள்ளன. உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டால் இருவரும் கலந்து பேசி அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.
கணவன் மனைவியிடையே அன்பு ஒன்று மட்டுமே இருந்தால் அந்த வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பு இருக்காது. சின்னச் சின்ன ஊடலும் கூடலும் தான் வாழ்வில் ரசனை சேர்க்கும். கணவன் மனைவி இருவரிடையே கோபம் வரலாம் ஆனால் அந்த கோபம் வெறுப்பாக மாறிவிடக்கூடாது. வெறுப்பு பிரிவை உண்டாக்கிவிடும்.
அவசர கதியில் தவறான முடிவைத் தேடும் தம்பதியரே..
சற்று உங்களைச் சார்ந்தவரைகளையும் நினைத்துப் பாருங்கள்
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கும். அந்த குடும்பத்தில் பிறந்த மற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உங்கள் நடவடிக்கை ஒரு தடைக்கல்லாகக் கூட அமையலாம்..
''வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா...'' என்ற பாடல் ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.
ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவரைப் பற்றி அப்படி பொருள் சேர்த்தார் இப்படி பொருள் சேர்த்தார் என்று அவதூறாகப் பேசுவர்...
சிறப்பாக வாழ்ந்தாலே இப்படியென்றால்..
ஒருவர் வாழ்க்கை சீழிந்தால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்..
உங்கள் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்...
ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்த குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அணுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெற முடியாத அந்த குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும்... அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்....
அன்புக்கு ஏங்கும் அந்த குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூட வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நீங்களே அழிக்கலாமா?
ஒருமுறைதான் பிறக்கின்றோம். எங்கோ பிறந்து நம்முடன் வாழ்வில் சேரும் துணையை அன்பாக அரவணைத்து இந்த வாழ்க்கைக் கடலைக் கடக்கலாம் அல்லவா?

தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க 7 பண்புகள்!


அன்பிருந்தால் துன்பமில்லை. உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகிறது. பலர் ஆதரவற்றோராக தவிக்கவிடப்படுகிறார்கள். பலர் கொலை செய்யப்படுகிறார்கள். அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும்.
o யாரிடமோ நீங்கள் சதா இணைந்திருப்பதுதான் அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். துன்பமான நேரத்தில் மட்டும் ஒருவருடன் இணைந்தால் அவருக்கு நீங்கள் உதவுவதாகக் கொள்ளலாம். உதவுவதால் துன்பத்தைப் போக்கலாம். நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். மற்றவருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
o தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க 7 பண்புகள் தேவை. அன்புகாட்டுதல்,அக்கறை கொள்ளல், புரிந்து கொள்ளல், மதித்தல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளல், நம்பிக்கை வைத்தல்
போன்றவை அந்த பண்புகளாகும். ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
o அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. அன்பிலும் பல வகை இருக்கிறது. நட்பு, காதல் சார்ந்த அன்பு இருக்கிறது. என்னுடையது விட்டுத்தரமாட்டேன் என்பது வெறித்தனமான அன்பு. ஒரே பின்னணி பார்த்து வருவது செயல்பூர்வமான அன்பு. தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும்.
o அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள். மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும்.
o புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.
o பாராட்டுவதால் மனித மனம் மகிழ்வுறுகிறது. ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது. புகழ்வதெல்லாம் பாராட்டாகிவிட முடியாது. இயல்பை விளக்கி, முழுமையை அங்கீகரிப்பதே பாராட்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
o ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது தவறுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுமதித்தலை குறிப்பதல்ல. குறைகளை மன்னிப்பதாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும். நேர்மை, ஒழுக்கம், உண்மையாயிருத்தல் போன்றவை மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பண்புகளாகும்.
o கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
o நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். புரிந்து கொள்ளல், பணிவு, பொறுப்பு, உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.

வெளிநாட்டு மாப்பிள்ளைன்னா கொம்பா முளைச்சிருக்கு...?


ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக் கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும் அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!
வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் அங்கே நிம்மதியாக! இருந்து விடுகிறார்கள் ஆனால் இந்த அப்பாவிகள் இங்கே படும் பாட்டை இவர்கள் அறிகிறார்களா..?
"பாவம் இவர்கள் அறிவதில்லை" என்ற ஒரே வசனத்தில் இவர்களை தப்பவிட முடியாது, முன்பு ஒரு காலத்தில் வேண்டுமானால் இங்கு நடப்பது இவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இப்போது நிலமை அப்படி இல்லை எல்லாம் தெரிந்து இருந்தும் இவர்கள் வெளிநாட்டு மோகம் எல்லாத்தையும் மறைத்து விடுகிறது. இந்த வெளிநாட்டு மோகத்துக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருடைய வாழ்க்கையையும் பலி கொடுத்துள்ளோம்.
என் எனக்குத்தெரிந்த உறவினர் (பெண்மணி) நன்றாக படித்தவர், அழகானவர், எனக்கு தெரிந்தே ஊரில் இவரை நிறைய பேர் பெண் கேட்டு வந்தார்கள் ஆனால் என் தாத்தா கட்டிக்கொடுத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என்று பிடிவாதமாய் நின்று புரோக்கர் மூலம் வந்த ஒரு நோர்வை மாப்பிள்ளையை தெரிவுசெய்து,
அவர் குடும்பத்துக்கு கடைசி பெண் ஒரே பெண் என்பதால் அதிக சீதனம் கொடுத்து இந்தியா கூட்டிச்சென்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து அவனுடன் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். வெளிநாடு சென்ற சில மாதங்களிலேயே அவன் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது, எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு அங்கு ஒரு ஏற்கனவே திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான். யாருடைய ஆதரவும் இன்றி அவனுடன் போராடி விவகாரத்து வேண்டி அத்தை வெளியே வந்த போது அவருடன் வந்த ஒரே சொத்து அவன் கொடுத்த பெண் குழந்தைதான். இனி என் வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி அந்த பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார் பெண்ணின் குடும்பத்தார்கள் தான் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று என்று சொல்லணுமா என்ன?!
ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு அழகாக இருக்க வேண்டும்
என்று சொல்லுவது இருக்கே..
ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு அழகாக இருக்க வேண்டும்
என்று சொல்லுவது இருக்கே....
கடவுளே, இந்த ஆணழகன்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பாப்பதே இல்லைப்போல் இவர்களைப்போலவே அந்த பெண்களும் எங்களுக்கு வரும் மாப்பிள்ளைமார் சூர்யா மாதிரியோ ஆர்யா மாதிரியோதான் இருக்கணும் என்றாள் இவர்களுக்கு எல்லாம் எப்படி கல்யாணம் ஆகிறதாம்! அண்மையில் கூட இப்படிப்பட்ட ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளையின் கூத்தைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்கு தெரியாமல் போச்சு. அவர் என் அண்ணாவின் ப்ரண்ட் இங்கே தனியேதான் இருக்காரு அவரின் அப்பா செத்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில் நானும் அண்ணாவும் அவர் வீட்டுக்கு போய் இருந்தோம். எங்களை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தவர் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொன்னபோது அண்ணா பொண்ணு யாரு
எங்க இருக்கா எப்படி தெரியும் என்று விசாரித்த போதுதான் அந்த வெக்கம்கெட்ட செயலை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் அவர் சொன்னார்.
தன்னுடைய தந்தையின் இறந்தவீட்டை தான் வீடியோ எல்லாம் எடுத்து பெருசாக செய்ததாவும் அந்த வீடியோ நகல் தனக்கு அனுப்பட்டபோது அதில் ஒரு அழகான பொண்ணு ஒடியாடி வேலை செய்துகொண்டு இருந்ததாகவும், தன் தாயிடம் போன் பண்ணி அது யார் என்று கேட்ட போது அது பக்கத்துவீட்டு பொண்ணு என்று விவரம் சொன்னதும் அவளை தனக்கு புடித்து இருப்பதாக சொல்லி பொண்ணு கேட்க சொன்னாராம், தந்தை இறந்து சில வாரங்களே ஆனதால் இப்போது போய் பெண்கேட்டால் அவர்கள் தன்னை தப்பா நினைப்பார்கள் என்று அந்த தாய் மறுத்துவிட அதை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம் ஏனெனில் அந்த அழகான பெண்ணை அதர்குள் யாராவது கொத்திப்போய் விடுவார்களாம். பின் ஒரு வழியாக தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம்.
இப்போது எல்லாம் ஓக்கே ஆகி அந்த பெண்ணுடன் போனில் பேசுவதாகவும் அவர் சொன்ன போது என் எதிரே இருந்த அவரை நிமிர்ந்து பார்த்தேன். சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். தங்களுக்கு மாப்பிள்ளையாக வருபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தால் மட்டும் போதும் என் ஊரில் இருப்பவர்கள் நினைப்பதும், தங்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒரு தகுதியே போதும் ஜஸ்வர்யாராயைக்கூட பொண்ணு கேட்கலாம் என இங்கு இருப்பவர்கள் நினைப்பதும் கொடுமையின் உச்சம். சிந்திப்பார்களா இவர்கள்..?
  Part 2
மணமகன் அழகானவரா? தம் மகளின் அழகிற்கு நிகரானவரா? வயது வேறுபாடு அவர்களின் எதிர்காலத்திற்கு ஒத்து வருமா என்றெல்லாம் யாருமே சிந்தித்து பார்ப்பதில்லை. தம் மக்கள் வெளி நாட்டில் வாழும் ஒருவரைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்குப் போனாலே போதும் என்ற நிலையிலே வாழுகின்றார்கள். கொஞ்சம் கலர் குறைந்து களையற்றுப் போன 30+++ வயதுடைய மணமகன்களிடம் மாட்டிக் கொள்ளும் 20++ வயதுடைய இளம் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகின்றது. திருமணம் முடித்து சிறிது காலம் அலைபேசியில் தம் காலத்தை மன்னிக்கவும் வாழ்க்கையை நடத்தும் இவர்கள் மணப் பெண் வெளிநாட்டிற்கு வந்ததும் தம் விஸ்பரூபத்தைக் காட்ட முனைகின்றார்கள். இதற்கான பிராதான காரணம் மணகனிடம் காணப்படும் மனப் பயமும், உடல் நிலைக் குறைபாடுமே ஆகும்.
30++ வயதுடைய மண மகனைத் தம் மகளுக்கு கட்டி வைக்க ஆசை கொள்ளும் பெற்றோர் வெளி நாட்டில் தம் சந்ததிக்காகப் பல வருடங்கள் உழைத்த மண மகனுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கின்றதா? தம் இளைய வயதுடைய மண மகளை நன்றாக கவனிப்பாரா இம் மணமகன் என்றெல்லாம் அறியாது பெற்ற கடமைக்கு கலியாணம் முடித்து வைத்தால் சரி என்று அனுப்பி வைக்கின்றார்கள்.
தன்னை விட அழகான பெண்ணை மண முடித்து கூட்டிச் செல்லும் பெரும்பாலான புலம் பெயர் ஆண்களிடம் காணப்படும் உளவியல் ரீதியான குறைபாடு என்னவென்றால்;தன்னை விட அழகிலும், தோற்றத்திலும் உயர்ந்த பெண் எங்கே தன்னை விட்டுப் போய்விடுவாளோ எனும் அச்ச நிலையாகும். இல்லை தன்னை விட அழகான இப் பெண் அடுத்தவன் அழகினால் கவரப்பட்டு, தன்னை விடத் தொழில் ரீதியில் உயர்ந்திருக்கும் அடுத்த நபரோடு ஓடிவிடுவாளோ எனும் உளவியல் ரிதியான ஐயப்பாடே இந்த நிலைக்கு காரணமாகும்.
ஒரு 20+ வயதையுட பெண்ணைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு கூட்டிச் செல்லும் பெரும்பாலான ஆண்கள் தம் மனைவிமாரை வீட்டுச் சிறைக்குள்ளே வாழ வைத்து விட்டு தாம் வேலைக்கு சென்று விடுவார்கள். மனைவியும் ஒரு சராசரி மனித இனம் தானே எனும் இயல்பேதுமின்றி காலையில் வேலைக்குப் போனால், மாலையில் வீடு திரும்பும் இவர்கள் மனைவியை வெளியே கூட்டிச் செல்லும் போதும் இளம் பெண்ணாக இருப்பின் அப் பெண் பிரியப்படும் ஆடைகளை அணியக் கூடாது என்றும் முற்று முழுதாக உடலைப் போர்த்திய ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றார்கள். அல்லது கலாச்சார உடைகளை அணிய வேண்டும் என்கின்ற பாரம்பரிய நிலையினைப் பின்பற்றுகின்றார்கள்.
இதில் பரிதாபமான விஷயம் என்னவென்றால் ஐரோப்பிய வீதிகளில் பல பெண்கள் தலையினை ஸ்ரைற்றினிங் (Hair Straightening) பண்ணிச் செல்ல எம் தமிழ்ப் பெண்களோ ஈழத்தில் வாழ்ந்த அதே சிக்குப்பட்ட பரட்டைத் தலை முடியோடு செல்ல வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
தாம் தம்மைச் சூழ்ந்துள்ளோருக்கு காண்பிப்பதற்காக பெயருக்குப் பொம்மைக் கலியாணம் செய்து விட்டு, மனைவியைப் பற்றிய எந்த விதமான கரிசனையேதுமின்றி வாழும் ஆண்களும் எம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது தான் இன்னுமோர் வேதனையான விடயமாகும்.இத்தகைய வகையறாக்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் செய்கின்ற மிக நல்ல விஷயம் "காலம் பூராவும் உன்னைக் கண் கலங்காமல் பார்க்கிறேன்" என்று கூறி விட்டு வீட்டினுள் மனைவியை விட்டு விட்டுத் தாம் வேலைக்குச் சென்று மனைவிக்கும் சேர்த்தே உழைத்து வருவதாகும்.
ஆனால் மனைவி டீவியைத் தவிர வீட்டில் உள்ள ஏனைய தொடர்பாடற் பொருட்களை உபயோகிக்க கூடாது. கம்பியூட்டர் இருந்தால் அதில் இணையத்தைப் பாவிக்க கூடாது, கணவன் உறவினர்கள் எடுக்கும் தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்த்து ஏனைய அழைப்புக்களுக்கு பதில் சொல்லக் கூடாது. வெளிச் செல்லும் (Out going) அலைபேசி அழைப்புக்களை மேற் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு சிறைக் கைதியினைப் போல வாழுகின்ற பெண்கள் பலரும் உள்ளார்கள் என்று அறியும் போது வேதனை தான் எஞ்சுகிறது.
சமீபத்தில் நான் அறிந்த செய்தி 29 வயதுடைய ஆண் ஐரோப்பியக் கண்டத்திலுள்ள ஓர் நாட்டில் வசிப்பவர் 20 வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்து கூட்டிச் சென்றிருக்கிறார். பெண்ணுக்கு வேண்டிய இளமைச் சுகத்தினையோ அல்லது தாம்பத்தியச் சுகத்தினையோ அவரால் கொடுக்க முடியாத நிலை. இதற்கான காரணம் அவர் நீண்ட காலம் கடினமாக உழைத்த காரணத்தினால் முள்ளந் தண்டுப் பகுதியில் சத்திர சிகிச்சை (ஓப்பரேசன்) மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதாம். இவர்களைப் போன்று பலர் தம் நிலை தெரிந்திருந்தும் ஏன் ஈழத்தில் உள்ள அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள் என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது. இதே வேளை புலம் பெயர் நாட்டில் வாழும் சில நல்ல உள்ளங்கள் ஈழத்தில் விவாகாரத்தானவர்களைத் திருமணம் செய்து அவர்களுக்கு நல் வாழ்வைக் கொடுத்து வாழ வைத்துமிருக்கின்றார்கள்.
ஒரு பெண் வருடத்தில் 365 நாளும் டீவிப் பெட்டியின் முன் உட்கார்ந்திருப்பதும், கணவனின் உடையினைத் (துணி துவைப்பதும்) துவைப்பதும், வெளி உலகினைத் தரிசிக்காது, வீட்டினுள் விம்மி வெடித்து வாழுவதும் தான் வெளி நாட்டு மோகத்தின் பின்னணியில் சில பெண்கள் பெற்றுக் கொள்ளும் அவல நிலையாகும். அட...இவர்களும் மனித இனம் தானே! இவர்களும் படிக்க வேண்டுமே! அல்லது வெளி உலகில் ஏனைய இன மக்களோடு பழகி வாழ வேண்டும் இவர்கள் என்று எண்ணுவோரின் தொகை சிறிதளவு தான்.
பெற்றோர்கள் விடும் தவறு ஒரு புறம், தம் நிலையினை மறைத்து உளவியல் ரீதியில் தமக்கு உள்ள அச்சத்தை மறைத்து அப்பாவிப் பெண்களைத் திருமணம் செய்து வீட்டுச் சிறைக்குள் அடைத்து வைக்கும் ஆண்கள் விடும் தவறு மறுபுறம் எனப் பல செயல்கள் சுதந்திரமாகப் பறக்க வேண்டிய சிட்டுக்களின் கட்டுக்களை அறுத்துப் போடுகின்றது. பெற்றோர்கள் தம் பிள்ளையின் வளமான எதிர்காலம் பற்றிய தெளிவோடு மணமகனைத் தேடினால் இந்த அவலத்தினை இல்லாதொழிக்கலாம் என்பது யதார்த்தம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes