Showing posts with label கீரையின் பயன். Show all posts
Showing posts with label கீரையின் பயன். Show all posts

Wednesday, September 11, 2013

மந்தாரையின் மருத்துவ பயன்பாடு

சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு  சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. 
In big cities like Chennai ORCHID ikkukal leaves along the stitch used to eat rice.

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும்  இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். 

மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்  வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,  ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். 

மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு,  ஆகியவற்றை  குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல்,  பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.   

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெந்தயக்கீரை

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. 

சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம். 
Normally used in cooking talaitan fenugreek spinch of fenugreek seeds. This nutrient-rich spinach. Fenugreek seeds growth through. This is the result of three months kayttu tantuvitum Booth. Fenugreek spinach before flowering plant used to pitunkivita. Fenugreek young green plant.

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். 

குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். 

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். 

இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். 

வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. 

சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

அல்சரை போக்கும் கீரை

கீரை இயற்கையின் பரிசு. தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரையில் வைட்டமின் ஏ,  கே, டி மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளன. கீரையில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல மூல ஆதாரமாக விளங்குகின்றது.. 

கீரை புற்றுநோய்கெதிரான மற்றும் அழற்சியை தடுக்கின்ற நோய்யெதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. குழந்தைகளுக்கு கீரைகளை கொடுத்து வளர்க்க  வேண்டும். கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமான பலன்களை தருகிறது. கீரை, காய்கறிகள், மற்றும் பழங்கள்  சேர்த்து கலந்து ஜீஸ் செய்து சாப்பிடலாம்.  

கீரையை ப்ரீசரில் வைத்தாலும் அதன் பலன் குறையாது. என்றாலும் கீரைகளை வாங்கிய நாட்களிலே சமையல் செய் சாப்பிட வேண்டும். கீரை  சாப்பிடுவதால் கண்களுக்கான பிரச்சனை எதுவும் ஏற்படாது மேலும் உடல் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. கீரை சாப்பிட்டால் செரிமானம்  சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. Spinach is a gift of nature. Spinach is advising doctors to be included in the daily diet.


அல்சரால் அவதி படுகின்றவர்கள் கீரையை தினம் ஒரு வேளை உணவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் வயிறு சம்பந்தமான அனைத்து  பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தேர்வாக உள்ளது. பெருங்குடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. தோல் பராமரிப்பிற்கும் கீரை  உதவிகிறது. 

கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளதால் உலர்ந்த, அரிப்பு ஏற்படுத்த கூடிய தோல்களை உடையவர்களுக்கு இது உடனடி  நிவாரணியாக செயல்படுகிறது. இதய நோய்களை தடுக்கிறது. அதாவது கீரையில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆக்ஸிஜனேற்றத்தை  தடுத்து கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு ஹோமோசைஸ்டீன் ரசாயன மருந்தாக உள்ளது. கீரையில் அடங்கியுள்ள  கரோட்டின்  புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கபடுபவர்களுக்கு கீரை சிறந்த ரசாயன மருந்தாக  உதவுகிறது.

வல்லாரையும் அதன் பயன்களும்

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து அளமை தோற்றம் திரும்பும். 
 Vallarai becoming capable of so much spinach. Brew, cough, cloud, vallarai in treating diseases such as spinach unrivaled.

எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். 

யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. 

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். 

சிவப்பு கீரையும் பயன்பாடும்

கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட  கீரைகளை விட கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு கீரையில்  அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது. 

கூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45  கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267மிகி கால்சியம், பாஸ்பரஸ் 67மில்லி கிராம், இரும்பு 3.9  மில்லி கிராம், விழித்திரை 1827 மெக்ஜி, 0:08 தயாமின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் 60 மில்லி கிராம் கொண்டு செயல்படுகிறது. 

முக்கியமாக கீரையில் பீட்டா கரோட்டின், லுடீன், குளோரோபில், ஃபோலிக் அமிலம் மற்றும் மாங்கனீசு கொண்டிருக்கிறது. எந்த வகையான கீரையாக  இருந்தாலும் அவை ரத்தசோகை, வறிற்று கடுப்பு, கபம், நோய் எதிர்ப்புசக்தி, கல்லீரல், ஆம்பியண்ட் காய்ச்சல் போன்றவற்றிக்கு தீர்வு வழங்குகிறது.  கீரை புற்றுநோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கீரையில் நார்சத்துகள் கொண்டுள்ளதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது. 
 Many varieties of spinach, green like spinach, spiny amaranth, spinach and spinach red forest.

அதிக வெப்பத்தில் கீரையை சமைக்கும் போது கீரை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். கீரை வேகவைக்கும் போது  சேதமடைந்தால் கீரையில் உள்ள பெஸ்பன் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு போதை மருந்தாக செயல்படும். நார்சத்து உணவான  கீரை பெருங்குடல், புற்றுநோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, எடைகுறைத்தல் போன்றவைக்கு சிவப்பு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. 

சிறுநீரகத்தை மேம்படுத்தி மகப்பேறு காலத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சிறுநீரகத்தை சுத்தபடுத்த வேண்டும் என்றால் ரத்தத்தை சுத்தபடுத்திய  பின்னர் காய்கறி போல கீரையை சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்கள் 2கைப்பிடி சிவப்பு கீரைகளை எடுத்து சீராகும் வரை பிசைந்து அதில்  1டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஸ்டெயனைடு சேர்க்கவும். பின்னர் தேன் மற்றும் முட்டை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பானத்தை வாரத்தில் ஒரு  முறை குடிக்கலாம். வயிற்றுகடுப்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் எளிதில் குணமாகும். பின்னர் கீரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்த வேக  கைவைத்து ஜீஸ் செய்து சாப்பிடலாம். 

நோய் வராமல் தடுக்க தினமும் 100 கிராம் கீரையை ஒரு வேளையாவது உணவில் சேர்த்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்வோம்.. ஏதேனும்  நோய் இருந்தாலும் கூட கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் நோயிலிருந்து விடுதலை பெறலாம். 

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில்  வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து  அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது. 

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள்.  முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை.  கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம்  உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது. 
Spinach need to take daily diet. Spinach is rich in nutrients and vitamins AMARANTH
முளைக்கீரை மிளகூட்டல்

என்னென்ன தேவை

முளைக்கீரை-1கட்டு
துவரம் பருப்பு-100 கிராம்
துருவிய தேங்காய்-1மூடி
சீரகம்-1ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3
உளுந்தம் பருப்பு-1ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-1ஸ்பூன்
கடுகு- 1/2ஸ்பூன்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது
முதலில் துவரம் பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரையின் மண் நிரம்பிய வேர் பகுதியை நறுக்கிப் போட்டு  விட்டு மீதமிருக்கும் கீரையை தண்ணீரில் சுத்தமாக அலசி பொடிபொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய கீரையை தனியாக வேகவைத்து  எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயுடன் சீரகம், மற்றும் தேங்காய்  சேர்த்து மை போல மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். தீயை மிதமாக  வைத்துக்கொள்ளவும். பின்னர் கீரையையும் துவரம் பருப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு கிளறவும். அரைத்த விழுதையும் சேர்க்கவும். கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகச் சேரும்படி கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்  எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான முளைக்கீரை மிளகூட்டல் தயார்.

Thursday, December 13, 2012

டிப்ஸ்

கொசுக்களை விரட்ட விளக்கெண்ணெய்!

தினமும் காலை 50 மிலி முள்ளங்கி சாறு குடித்து வர சிறுநீர் தொடர்பான வியாதிகள் குணமடையும்.
பாகல் இலை சாறுடன் மோர் கலந்து குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
கத்தரி பிஞ்சுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது.நாரத்தை சாறுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உமிழ் நீர் அதிகம் ஊறுவது குறையும்.
 
- ஆர். பிரபா, திருநெல்வேலி.

டை மீந்துவிட்டால் ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறியதும் உதிர்த்து பொரியல்களுக்குத் தூவலாம். வித்தியாசமான உசிலி பொரியல் தயார்.
வெண்டைக்காய் பொரியல் உதிர் உதிராக இருக்க வேண்டுமா? வெண்டைக்காய் வதக்கலை இறக்கும்போது சிறிது பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து விடுங்கள்.
துருவிய கொப்பரை தேங்காய், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து, ஆறியதும் கொரகொரப்பாக பொடிக்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், கிழங்கு பொரியல்களுக்கு மேலாகத் தூவலாம்.
 
- ராதா மோகன், சென்னை-4.

கொசுக்களை விரட்டும் கொசுவர்த்தி சுருள், லிக்விடேட்டர் போன்றவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும். ஒரு அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் விட்டு, விளக்கேற்றி வைத்தால் கொசுக்கள் வராது.
தக்காளி நன்றாக கனிந்து இருந்தால் அவற்றின் மீது சிறிது தூள் உப்பைத் துவி பிசறி வைக்கவும். இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது, அப்போதுதான் பறித்த தக்காளி போல கெட்டிப்பட்டு இருக்கும்.
 
- எஸ். நித்யா, சென்னை-56.

 

Thursday, December 6, 2012

புதினா (Mentha spicata)


ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலிவயிற்றுப் பொருமல்செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
Foliage
 
புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.
புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.
புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.
புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.
புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.
இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.
எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.
சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.
தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

Sunday, November 18, 2012

ஆரைக் கீரை



நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.

குளிர்ச்சித் தன்னம உடையது. நாக்கிற்கு நல்ல சுவை தருவது இக்கீரை. உடல் உஷ்ணத்தைத் தணித்து, குளிர்ச்சி குறையாமல் வைத்திருக்கும்.
இது அதிகமாய் வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும். அதனால் உடலில் நீர்ச்சத்து இருக்கும். வறண்ட தேகம் உடையவர்க்கு உகந்கது.
இக்கீரையைச் சமைத்து உண்டால் வெள்ளை நோய் குணமாகும். அதிகமான தாகத்தைத் தணிக்கும். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து போகும். அவர்களுக்கு இக்கீரை கண் கண்ட மருந்து. சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் மதியம் மட்டும் இக்கீரையைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சமைத்து உண்டுவர, நல்ல குணம் கிட்டும். இக்கீரை உடலுக்கு நல்ல வலுவூட்டும். இக்கீரையை வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு சக்கரையை கலந்து நாள்தோறும் குடித்து வந்தால் நோய்கள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முள்ளங்கிக் கீரை

முள்ளங்கி மண்ணுக்கு அடியில் தோன்றும் கிழங்கு ஆகும். அதன் மேல்பாகத்தில் வளரும் கீரையே முள்ளங்கிக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இக்கீரைக்கு மருத்துவக் குணங்கள் உண்டு என்றாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இக்கீரை வயிற்றில் புழுக்களை உண்டாக்கும். பித்தத்தையும் அதிகரிக்கும். வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இருப்பினும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கியைப் போலவே இக்கீரையும் பயன்படுகிறது. இக்கீரையின் தளிர்களைப் பறித்து, சோற்று உப்புடன் சேர்த்து தினமும் காலையும் மாலையும் உண்டு வந்தால் வெள்ளையால் உண்டாகும் நீர் அடைப்பு விலகும். இக்கீரை கல்லீரலில் உண்டாகும் பல கோளாறுகளைக் குணப்படுத்தும், அதுபோல் இருதயத்திற்கும் பலம் சேர்க்கும். இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் அவ்வப்போது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பலன் கிட்டும். 

பொடுதலை



கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.

இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் 

இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க 

வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.

பொடுதலையின் பேருரைத்தால் போராமப் போக்கும்

அடுதலை செய் காசம் அடங்கும்கடுகிவரு

பேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம்

வாதமும் போ மெய்யுரக்கும் வாழ்த்து

(அகத்தியர் குணபாடம்)

இது வெப்பத் தன்மை கொண்டது.

இதனை பூற்சாதம், பொடுதலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

ஒற்றைத் தலைவலி நீங்க

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் 

எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் 

மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல 

வகையில் அல்லல்படுத்தும்.

இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று 

போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமலை தடுக்க

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் 

பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் 

குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. 

பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் 

விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக 

குறையும்.

அக்கிப் புண்ணை குணப்படுத்த

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். 

இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். 

பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் 

கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து 

புண்கள் விரைவில் ஆறும்.

வயிற்று உபாதைகள் நீங்க

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 

என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று 

உபாதைகள் நீங்கும்.

வெள்ளை படுதலை குணப்படுத்த

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் 

ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி 

செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு 

வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு 

வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பொடுகு நீங்க

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் 

பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து 

ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி 

அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை 

நீங்கும்.

விரை வீக்கம் குறைய

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் 

உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான 

பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

கருப்பை வலுப்பெற

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும்.

இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை 

வலுப்பெறும்.

கை கால் வீக்கம் குணமாக

கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள 

பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும்.

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு 

ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

தோல் நோய்கள் அனைத்திற்கும் பொடுதலை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தலையிலுள்ள பொடுகையும் நீக்கும். இச்செடியின் வேர், காய், பூ அனைத்துமே மருத்துவக் குணம் உடையது, எனவே இச்செடியை வேர், பூ, காயோடு பிடுங்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு நீர் விட்டு நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதிக நெருப்பில்லாமல் நன்றாகக் காய்ச்சி வாரம் இருமுறை தலையிர் நன்றாக அழுத்தித் தேய்த்து குளிக்க தலை மற்றும் உடல் தொடர்பான தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும், தலையில் தோன்றும் பொடுகும் நீங்கும்.

கீரையை விட சத்தான உணவுவகை உண்டோ

தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப்புக்களையும் பெற ஒருவர் தினசா¢ 125 கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்களையும் அன்¢சி, பருப்பு போன்ற உணவுகளில் நமக்குத் தேவையான மாவுப் பொருட்களும், புரதமும் மட்டுமே கிடைக்கின்றன. முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.

* கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில்தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக,  ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். 

* இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசா¢ சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.

* வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும். 

* வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.

* அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.  

* வைட்டமின்கள் குறைந்தால் பசி ஏற்படாது. நரம்புகள் சக்தியிழந்து உடல் வலிவு குறைந்து காணப்படும் வாயிலும் உதட்டிலும் புண்கள் ஏற்படும் இரத்த சோகை உண்டாகும். பொ¢பொ¢ என்ற நோயும் உண்டாகும்.

* வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

* வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது. 

* வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும்போது பொ¢தும் அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும். 

* நமது இருதயம் சரி¢யாகச் சுருங்கி விரி¢வதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது. 

* சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கா¢சலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரி¢மிதமாகக் கிடைக்கின்றது.

* இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும். 

* இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை, முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.

* மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
 
* ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.

* வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன. 

ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

யானை திப்பிலி:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

* தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, 

* வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல், 

* சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன. 

* அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

* அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.

* நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன. 

* இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. 

* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். 

* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

லெட்டூஸ் கீரை


கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலை கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக்கீரை என்றும் கூறுவர். இதன் 

பிறப்பிடம் இந்தியா தான்.  இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

* இந்தக் கீரையானது இமயமலைச்சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. 

இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும்.

* சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும் இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும். பச்சை நிறம் 

கீரை வகையைச் சார்ந்தது.

* சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் வைட்டடமின்'ஈ' சத்தும், அதிகப்படியான தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர் 

மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது.

* புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒரு வித சத்து இக்கீரையில்  இருக்கிறது. இக்கீரை 

உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது.

* சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன. 

பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் அழகுக்கூடும்.

* மூச்சிரைப்பு நோயான ஆஸ்தும்£வைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாவுச்சத்து காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன் 

சேர்த்துக் கொள்வார்கள். நீரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரையாகும்.

இந்த அரிய வகை கீரையின் மகத்துவத்தை அறிந்தும் பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள்!

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes