Thursday, December 13, 2012

டிப்ஸ்

கொசுக்களை விரட்ட விளக்கெண்ணெய்!

தினமும் காலை 50 மிலி முள்ளங்கி சாறு குடித்து வர சிறுநீர் தொடர்பான வியாதிகள் குணமடையும்.
பாகல் இலை சாறுடன் மோர் கலந்து குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
கத்தரி பிஞ்சுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது.நாரத்தை சாறுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உமிழ் நீர் அதிகம் ஊறுவது குறையும்.
 
- ஆர். பிரபா, திருநெல்வேலி.

டை மீந்துவிட்டால் ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறியதும் உதிர்த்து பொரியல்களுக்குத் தூவலாம். வித்தியாசமான உசிலி பொரியல் தயார்.
வெண்டைக்காய் பொரியல் உதிர் உதிராக இருக்க வேண்டுமா? வெண்டைக்காய் வதக்கலை இறக்கும்போது சிறிது பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து விடுங்கள்.
துருவிய கொப்பரை தேங்காய், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து, ஆறியதும் கொரகொரப்பாக பொடிக்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், கிழங்கு பொரியல்களுக்கு மேலாகத் தூவலாம்.
 
- ராதா மோகன், சென்னை-4.

கொசுக்களை விரட்டும் கொசுவர்த்தி சுருள், லிக்விடேட்டர் போன்றவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும். ஒரு அகல் விளக்கில் வேப்ப எண்ணெய் விட்டு, விளக்கேற்றி வைத்தால் கொசுக்கள் வராது.
தக்காளி நன்றாக கனிந்து இருந்தால் அவற்றின் மீது சிறிது தூள் உப்பைத் துவி பிசறி வைக்கவும். இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது, அப்போதுதான் பறித்த தக்காளி போல கெட்டிப்பட்டு இருக்கும்.
 
- எஸ். நித்யா, சென்னை-56.

 

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes