Showing posts with label விலங்கினம். Show all posts
Showing posts with label விலங்கினம். Show all posts

Thursday, December 1, 2011

கடல்குதிரை (Sea Horse)

மனிதன் திறமைக்குச் சவால் விட்டு தனது தீராத அறிவுப் பசிக்கு ஓயாது உணவளித்துக் கொண்டு அவனின் தலைக்கு மேலே பரந்து விரிந்துக் கிடக்கும் 2500 கோடி ஒளி ஆண்டுகளை கொண்ட பால் வெளி இரகசியத்தை அறிய ஆசைப்பட்டான். விளைவு வானவியல் என்னும் முற்றுப் பெறாத ஒரு புத்தகத்தின் முன்னுரையை ஆரம்பித்து வைத்தான்.

இத்தகைய மனிதனுக்கு இந்த பூமியில் மூன்றில் இரண்டு பங்குடைய கடலைப் பற்றியும் அதில் வாழக்கூடிய உயிரினங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பொருட்களின் மூலமாகிய அணு ஆராய்ச்சிக்கென்று ஒரு துறை, இரசாயம், பௌதீகம், உயிரின ஆய்வுக்கென விலங்கியல், தாவரவியல் போன்ற துறை, பூமியின் உள் இரசியங்களைக் கண்டறிய புவியியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான துறை என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு துறையை ஏற்படுத்திய மனிதன் கடலுக்கென்று ஒரு துறையை ஏற்படுத்தி அதை ஒரு வரையறைக்குள் கொண்டு வர ஆசைப்பட்டதில் என்ன வியப்பு இருக்கின்றது?

இதற்கென்று கடலும், கடலியலும் என்ற துறையை
(ocean and oceanography) ஏற்படுத்தி கடலை தன் வசப்படுத்த முயற்சிகள் தொடருகின்றன. இதற்கென்று ஒரு புறம் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு இருப்பினும் கூட ஆராய்ச்சியின் முடிவுகள் ஆழ்கடல் ஆராய்ச்சி என்பது அவ்வளவு இலேசான காரியம் அல்ல என்ற முடிவின் பக்கம்தான் நம்மை தள்ளுகின்றன. எந்த ஒரு கடல் இரகசியமாகட்டும் அதை அறிய அவன் கொடுக்கும் விலை மிகக் கூடுதலாகும். ஏனென்றால் ஆழ்கடல் ஆராய்ச்சி என்பது கடல் நீரின் அளவிடற்கறிய அழுத்தத்தையும் ஆழ்கடலின் அடர்ந்த இருளையும் கடந்துதான் இவனால் எதை ஒன்றையும் கண்டறிய இயலும். அது ஒரு வேற்று கிரகத்தை ஆராய முயற்சிப்பதை போன்றே அல்லாது இலகுவான காரியமாக அவனுக்கு இருக்கவில்லை. அதாவது சுருக்கமாகச் சொன்னால் கடலுக்கடியில் ஒரு வித்தியசமான வேறுபட்ட ஒரு உலகம் இருக்கின்றது என்பதுதான் உண்மையாகும். அறிவியல் ஆய்வுக்கூடங்களின் நுண்ணோக்கிக்கு மட்டும் காட்சி தரும் நுண்ணுயிரிகள் முதல், பிரமாண்டமான உயிரினங்கள் வரை அதில் வாழுகின்றன. இத்தகைய கடல் வாழ் உயிரினங்களின் அதிசய செயல்பாடுகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை போன்ற பல தகவல்கள் பல சமீப காலங்களில் மனிதனால் கண்டறியபட்டுள்ளது.

இதுவரை அறிவியல் உலகம் கண்டிராத ஓர் அதிசய உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு இராட்சத ஸ்கொய்ட்
(giant squid) பற்றிய ஒரு உண்மை அறிவியல் உலகை அதிசயத்தில் ஆழ்த்தியது. இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் புரியாத புதிர்களை உள்ளடக்கிய உயிரினம் என்று அறிவியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றார்கள். அதாவது ஒரு பெண் இராட்சத ஸ்கொய்டை பிடித்து ஆராய்ந்த போது அதன் முன்புற தசைகளினோடே ஆணுடைய விந்தணு, மாத்திரை வடிவில் இருக்கக் கண்டார்கள். அந்த மாத்திரையின் உள்ளே லட்சக் கணக்கான உயிரணுக்கள் இருப்பதையும் கண்டறிந்தார்கள். ஆண் ஸ்குவாட் தன் விந்தணுவை பெண்ணின் தோல் பகுதியில் வைத்து அதிக அழுத்தம் (hydraulic pressure) கொடுத்து உள் செலுத்துகின்றது. அந்த இடத்தில் ஏற்படும் சிறிய காயம் விரைவில் ஆறிவிடுகின்றது. அதன் உள்ளே அந்த விந்தணு மாத்திரையை தக்க வைத்து தேவையான போது பயன்படுத்திக் கொள்வதைக் கண்டறிந்துள்ளார்கள். அந்த விந்தணுவோ மாத்திரை அமைப்பில் (capsule) லட்சக்கணக்கான உயிரணுவை உள்ளடக்கி அமைந்திருப்பது அறிவியல் உலகம் இதுவரை காணாத அதிசயமாகும். இந்த உண்மையைக் கண்டறிந்த அறிவியலார்களினால் அந்த விந்தணுவை எவ்வாறு பெண் இராட்சத ஸ்வாட்கள் பயன்படுத்தி சந்ததிப் பெருக்கம் செய்கின்றன என்பதைப் பற்றிய தகவல் இதுவரை கணடுபிடிக்க முடியவில்லை. ஏன் என்றால் இவை வாழும் ஆழ்கடலின் இருள் இந்த உண்மையை வெளிச்சத்திற்கு வர தற்சமயம் தடையாக இருக்கின்றது. எதிர் வரும் காலத்தில் மனிதன் கண்டறியக் கூடும்.

எனவே பல பதில் தெரியாத விஷயங்களை உள்ளடக்கிய ஒரு துறைதான் கடற் துறை ஆகும். இத்துறையில் சமீபகால ஆய்வில் கண்டறிந்த உண்மைகளில் ஒன்றுதான் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் அதிய ஆண் கடல்குதிரைகளைப் பற்றியதாகும்.

கடல் வாழ் உயிரினங்களாகட்டும் அல்லது தரை வாழ் உயிரினங்கள் ஆகட்டும் இவை எல்லாவற்றைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு அம்சத்தைப் பெற்று விளங்குவது கடல்குதிரையாகும். கற்பம் தரித்து தன் சந்ததியை சுமந்து பெற்றெடுக்கும் தந்தைகள்தான் கடல்குதிரையாகும். இத்தகைய தன்மையை பெற்று விளங்குவதால் நம் தொடரின் நோக்கத்திற்காக பெற்றெடுக்கும் தந்தைகளைப் பற்றிய செய்தியை அறிவோம்.

கடல்குதிரை என்று சொன்னவுடன் குதிரையின் ஏதோ ஒரு அம்சத்தைப் பெற்றிருக்கும் என்பது சொல்லாமலே உங்களினால் விளங்கிக் கொள்ள முடியும். பொதுவாக நன்கு அறிந்த ஒன்றினை அறியாத ஒன்றிற்கு உவமையாக சொல்லக் கூடிய சொல் வழக்கு நம்மிடம் கால காலமாக இருந்து வருகின்றது. உதாரணமாக கடல் பசு. இது நம் பசுவை ஏதோ சில அம்சத்தில் ஒத்திருக்கும் ஆகவே அதை கடல் பசு என்றும் கடல் சிங்கம், கடல் யானை, கடல் நாய் இதுப்போன்று எத்தனையோ எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும்.


இந்த கடல்குதிரையைப் பொறுத்த வரையில் அதன் முக அமைப்பு மட்டுமே குதிரையின் அமைப்பில் அமைந்திருக்கின்றதே தவிர மற்ற எந்த வித ஒற்றுமையும் இல்லை.


கடல்குதிரை என்பது மிகச் சிறிய மீன் இனத்தை சேர்ந்த உயிரினமாகும். 2.5 செ.மீ முதல் 35 செ.மீ வரை அளவில் 35க்கும் மேற்பட்ட வகைகள் உலகின் எல்லா கடற் பகுதியிலும் காணப்படுகின்றன. இவை கடலின் ஆழம் குறைந்த பகுதிகளிலும் கடலின் ஓரப்பகுதியில் கடல் பாசிகளுக்கிடையே வாழுகின்றன. இவற்றின் முக்கிய உணவு இறால் மற்றும் சிறிய மீன் வகைகளாகும். தன் உடலின் மேற்பகுதி கடினமான ஓட்டைப் போன்ற கவச அமைப்பு கொண்டுள்ளது. இது இவற்றின் முக்கிய பாதுகாப்பு அம்சமாகும். மேலும் இவை பெற்றுள்ள மற்றுமொரு பாதுகாப்பு அம்சம் சூழலுக்கேற்றார் போல் தங்கள் நிறத்தை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் ஆற்றல், நன்கு அறியப்பட்ட பச்சோந்தி எனப்படும் பல்லி வகைகளைக் (anole, Chamelein) காட்டிலும் தங்கள் நிறங்களை மாற்றும் ஆற்றல் பெற்றதாகும். தங்கள் எதிரியிடமிருந்து தப்பிக்கும் போது அவை கடல் பாசிகளினிடையே பாசிகளைப் போன்று தங்களை முற்றாக மாற்றிக்கொள்வதன் மூலம் பெருமளவிற்கு எதிரியின் கண்களைக் கட்டி தப்பித்துக் கொள்கின்றன. இவற்றின் உடலின் உட்புறம் அமைந்த காற்றுப் பைகளில் காற்றை நிரப்பி வெளியேற்றுவதன் மூலம் நீரின் மேலும் கீழும் செல்ல ஏதுவாயிருக்கின்றது.

ஆற்றலை அளக்க அடிப்படை அலகாக குதிரையின் திறனைப்
(horse power) பயன்படுத்துவதை அனைவரும் அறிந்து இருப்போம். ஒரு குதிரைத் திறன் என்பது 33,000 பவுண்டு எடையுடைய ஒரு பொருளை ஒரு நிமிடத்தில் ஒரு அடி உயரத்திற்குத் தூக்கினால் அங்கு செயல்படும் ஆற்றல் ஒரு குதிரைத் திறன் என்று வரையறுத்து வைத்துள்ளார்கள்.

குதிரையின் ஓடும் திறனைக் கணக்கில் கொண்டுதான் ஆற்றலை குதிரைத் திறனில் சொல்லும் வழக்கம் வந்தது. ஆனால் இந்த புல் தடுக்கி (விழும்) பைல்வான் கடல்குதிரையின் லகானை முடுக்கி விட்டால் கூட ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க இது எடுத்துக் கொள்ளும் காலம் மூன்று நாட்களாகும். ஆம்! மூன்று நாட்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லும் வேகம்தான் இதனுடையதாகும். இனி மிகக் குறைந்த வேகத்திற்கு ஆமையை உதாரணம் சொல்வதை விடுத்து கடல்குதிரையை சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

கடல்குதிரை இனத்தில் மாத்திரமே ஆண் இனம் தங்கள் சந்ததியை சுமந்து பெற்றெடுக்கின்றன என்பது நிச்சயமாக இறைவனின் அத்தாட்சிகளினின்றும் உள்ளதாகும். மனிதனைப் பொருத்தவரை எந்த ஒரு உயிரினத்தைப் பற்றியும் அறிந்துக் கொள்ளும் அறிவை பெற்றுள்ளானே தவிர அதற்கான காரண காரியத்தை பற்றித் தெளிவு படுத்தும் அறிவு மனிதனிடம் இல்லவே இல்லை.

மேலும் தன் சக்தியைக் கொண்டு ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளை தன் இச்சைப்படி மாற்றி அமைக்கும் ஆற்றலும் பெற்றிருக்கவில்லை. இறைவன் மனிதனுக்கு எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தது பயன் பெற்று அதன் மூலம் படிப்பினைப் பெற்று அந்த ஏக இறைவனை மகிமைப் படுத்தத்தான்.

பெண் கடல்குதிரைகள் ஒரு நேரத்தில் 200 முட்டைகள் வரை இடக்கூடிய இயல்பைப் பெற்று விளங்குகின்றன. ஆண் கடல்குதிரைக்கு பெற்றெடுக்கும் தேவை இருப்பதானால் இவை காதல் பாக்களைப் படித்து பெண் இனத்தை தங்களின் பக்கம் ஈர்க்கின்றன. இவற்றால் கவரப்பட்டு வந்தாலும் பெண் கடல்குதிரைக்கு எந்த குறைவோ எந்த சுமையோ ஏற்படுவதில்லை. மடியில் இருக்கும் கனத்தை இறக்கி வைக்கும் விதமாக கரும்புத் தின்னக் கூலியா என்பதைப் போல அவை வந்த வேகத்தில் ஆண் கடல்குதிரைக்கு மட்டும் இருக்கும் பிரத்யேகமாக வயிற்றுப் பகுதியில் அமைந்த தோல் பையில் முட்டைகளை இட்டு தன் வழியைப் பார்த்து நடையைக் கட்டிக் கொள்கின்றன. அந்த முட்டைகள் குஞ்சு பொறிக்கும் தன்மையில்லாத மலட்டு முட்டைகளாகும். அதன் பிறகு ஆண் கடல்குதிரை அதில் தன் உயிர் அணுவை செலுத்தி அந்த முட்டையை சூல் கொள்ளச் செய்கின்றது. அதன் பிறகு அதை 40 முதல் 50 நாட்கள் வரை தன் வயிற்றிலேயே வைத்திருந்து பிறகு பெற்றெடுக்கின்றது. பிறந்த குஞ்சுகள் தன் தாயைக் காட்டிலும் தன் தந்தைக்கே அதிக கடமைப்பட்டுள்ளன. நான் தாயுமானவன் தந்தையானவன் என்று உவமையாக அல்லாது உண்மையில் உரிமை கொண்டாட தகுதி படைத்தவைகள் இவைகள்.

கடலில் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் கேட்டினால் கடல்குதிரை மட்டுமல்லாது கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து வரும் அபாயகரமான காலக்கட்டத்தில் இருக்கின்றன. எண்ணெய் கப்பல்களில் ஏற்படும் விபத்துக்களினால் கடல்நீரில் கொட்டும் எண்ணெய், பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை அழித்துவிடுகின்றது. இத்தகைய நிலையால் கடல்குதிரையின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

நவீன மீன்பிடி தொழில் வளர்சியில் ஏற்பட்ட புரட்சியினால் இனப்பெருக்கத்திற்கு கூட விட்டு வைக்காத அளவிற்கு சல்லடைப் போட்டு சலித்து பிடிக்கப்படும் மீன்களினால் அடுத்த பருவ சந்ததிப் பெருக்கத்திற்கு பெருமளவிற்கு பாதிப்பு போன்ற பல காரணங்கள் சொல்ல முடியும். மேலும் கடல்குதிரை மருத்துவப் பயன்பாட்டிற்காகவும், காம உணர்வை அதிகப் படுத்தும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் அதிக அளவிற்கு ஆசியப் பகுதியில் வேட்டையாடப்படுகின்றன.

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் கடல்குதிரைக்கு இருப்பதாக சீனர்களினால் நம்பப்படுகின்றது. மேலும் உணவுத் தேவைக்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.

உண்மையில் பெற்றெடுப்பதென்பது பொதுவாக பெண் இனத்தைச் சார்ந்த விஷயமாக இருப்பினும் கூட இதில் மட்டும் இறைவன் இந்த விதிவிலக்கான அம்சத்தை வைத்து படைத்திருப்பதென்பது என்னால் முடியாத ஒன்றும் இல்லை என்பதை பறைசாற்றும் முகமாகத்தான் என்பதை விளங்கிக் கொள்ளும் போது அந்த உள்ளத்தில் அக இருள் நீங்கி ஒளி பரவுவதை அறிந்துகொள்ள முடியும். இதை விடுத்து இத்தகைய அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முயற்சிப்பவன் அழகிய நல்ல செயலை செய்வதாக எண்ணித் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை. இத்தகைய அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை உணர்ந்து நம் நம்பிக்கை பலப்படக்கூடிய நல்ல மக்களில் நம்மை ஆக்கி வைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் ஆதரவு வைப்போமாக.

நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோரை அவர்கள் நம்பிக்கைக் கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்கு கீழே ஆறுகள் ஓடிக் கொண்டு இருக்கும். (அல்குர்ஆன் 10:9)

கொரில்லா (Gorilla)

மனிதனின் செயல்பாடுகள் மற்றும் தோற்றத்தில் அவனைப் போலவே ஒத்த பல பண்புகளைக் கொண்ட கொரில்லாக்களைப் பற்றிய விபரங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

பலவிதமான சர்சைகளுக்கும், விவாதங்களுக்கும் ஆத்திக மற்றும் நாத்திக மக்களுக்கிடையே மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளுக்கிடையேயும் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்திய இந்த உயிரினத்தைப் பற்றிய டார்வினின் கருத்து 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய அளவிலான ஆராய்ச்சிக்கு வித்திட்டதாகும். இதைப் போன்று அறிவியல் உலகில் புயலைக் கிளப்பிய வேறு ஒரு உயிரினம் எதுவும் இல்லை என்று நம்மால் திட்டவட்டமாக சொல்ல இயலும். இத்தகைய வாலில்லாத குரங்கு வகையைச் சேர்ந்த கொரில்லாக்களைப் பற்றிய விபரங்களையும் விரிவான தகவல்களையும் இவற்றின் மூலம் பரிணாம வளர்ச்சி ஏற்றபட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பதைப் பற்றிய நம்முடைய சொந்த அபிப்ராயங்களையும் பார்ப்போம். இந்த கொரில்லா எந்த விஷயத்தில் மற்றவற்றை விட வேறுபட்டு விளங்குகின்றது என்பதற்கு நமக்கு நிறைய எடுத்துக்காட்டுகளின் அவசியம் தேவை இல்லை. மனிதனைப் போன்று தோற்றத்தில் இருக்கும் ஒரே விலங்கினம் இத்தகைய கொரில்லாக்கள் என்ற ஒரு விஷயம் நம் தொடரின் நோக்கத்தை நிறைவு செய்யப் போதுமானதாகும்.


பொதுவாக அறிவியல் அறிஞர்கள் எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அவற்றின் சில பண்புகளை அடிப்படையாக வைத்து ஒரு பட்டியலின் கீழ் வகைப்படுத்துகின்றனர். அதுபோல் மனிதன் உட்பட 235 பாலூட்டி இனங்களை பிரிமேட் (
ஆண்டாண்டுக் காலமாக கொரில்லாக்கள் ஆபத்தான பயங்கரமான உயிரினமாகத்தான் மக்கள் மத்தியிலே உருவகப்படுத்தப்பட்டு வந்தன. எந்த விஷயத்தில் ஒரு தெளிவு இல்லையோ அதில் தங்கள் கற்பனைக் குதிரையை தட்டி முடுக்கிவிடுவதென்பது மனித இயல்பாகத்தானே இருந்து வருகிறது.

1933ம் ஆண்டு வெளிவந்த கிங் காங்
(King kong) படம் முதற் கொண்டு 1976ம் ஆண்டு வெளிவந்த கிங் காங் படம் வரை இவை அச்சத்தை எற்படுத்தும் பாத்திரங்களாகத்தான் மக்கள் மத்தியிலே விளம்பரப்படுத்தப்பட்டது. அவற்றின் தோற்றம் அத்தகைய அச்ச எண்ணத்தை தோற்றிவிப்பதாக இருப்பினும் கூட உண்மையில் கொரில்லாக்கள் மிக மிக சாதுவான பிராணிகளாகும். இதைப் பற்றிய மக்களின் கற்பனைகள் உண்மைக்கு மாற்றமாக மடையுடைந்த வெள்ளமாய் பாய்ந்து சென்றதற்குக் காரணம் அவற்றைப் பற்றிய உண்மையான தெளிவு இல்லாமையே.

கொரில்லாக்களை அவை வாழக்கூடிய இயற்கையான சூழலிலேயே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஆராய்ச்சி (
Field study) சிந்தனை முதன் முதலாக 1960 ஆண்டு வாக்கில்தான் தோன்றியது. முதன் முதலாக கொரில்லாக்களை பற்றிய ஆராய்ச்சியை விரிவான முறையில் மேற் கொணடவர் போஸே தயான் (Fossey Dian) என்ற பெண்மணி ஆவார். இந்த போஸே தயான் அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கியல் வல்லுனர் ஆவார். இவர் கொரிலாக்களைப் பற்றிய ஆய்விற்காக தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்பணித்தவர். இதற்கென காங்கோ மற்றும் ருவாண்டாவின் மலைக் காடுகளில் தன் பாதச் சுவடுகளை பதித்து கொரில்லாக்களைப் பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர். இவர் மூலமாகத்தான் கொரில்லாக்களைப் பற்றிய நிறைய தகவல்கள் தெரிய வந்தன. 1967 முதல் 1985
ஆண்டு வரை காட்டில் அமைந்த தன் ஆராய்ச்சி கூடத்தில் மர்மமான முறையில் கொல்லப்படும் காலம் வரை இந்த ஆராய்ச்சியில் மிக ஈடுபாட்டுடன் ஆய்வுகள் மேற்கொண்டார். இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் கொரில்லாக்களைப் பற்றிய ஒரு நல்ல தெளிவைக் கொடுத்துள்ளது. அவருக்கு பிறகும் இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கொரில்லாக்கள் பிரிமேட் என வகைப்படுத்தப்பட்ட உயிரினங்களில் மிக அதிக அளவு எடையுடைய உயிரினமாகும். கொரில்லாக்களும் சிம்பன்சியும் மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மனிதனை ஒத்த உருவ அமைப்பையும் மற்றும் சில பண்புகளையும் பெற்று விளங்குகின்றன. அவற்றின் உடல் அமைப்பு அவற்றின் இனப் பெருக்க முறை மற்றும் அவை குட்டியை பராமரிக்கும் முறை அவற்றின் கை மற்றும் கால் அமைப்பு ஆகியவற்றை மனிதனுக்கும் இவைகளுக்கும் இடையேயான ஒற்றுமையாகச் சொல்லலாம். இருப்பினும் இவற்றைக் கொண்டு மனிதன் பரிணாமம் பெற்றான் என்ற முடிவுக்கு அதற்குள் எட்டிவிடாதீர்கள். உருவத் தோற்றத்தில் ஒத்து இருக்கின்றன என்பதோடு உங்கள் சிந்தனை செல்வதைச் சற்றே மடை போடுங்கள்.


குடும்பத் தலைவருடன் குடும்ப உறுப்பினர்கள்.

கொரில்லாக்கள் மிக அடர்ந்த தாவர வகைகள் நிறைந்த மலைப் பகுதிகளில் ஒரு சமுதாயமாக இணைந்து வாழக்கூடிய அக்மார்க் காட்டுவாசியாகும். நிலையான குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இவற்றின் ஒரு குழுவில் சில எண்ணிக்கையிலிருந்து 50 வரையிலான எண்ணிக்கை வரை கூட ஒரு கூட்டுக் குடும்ப அமைப்பில் இணைந்து வாழக்கூடியவை. இருப்பினும் பொதுவாக ஒரு குழுவில் ஒன்று முதல் இரண்டு ஆண் கொரில்லாக்களும்
(Silver back) நான்கு முதல் ஐந்து பெண் கொரில்லாக்களும் மற்றும் அவற்றின் குட்டிகளும் (infant) சேர்ந்தவை ஒரு குடும்பமாக இருக்கும். ஒரு குழவில் மூத்த வகையுடைய ஆண் கொரில்லா குழுவின் தலைமையை வகிக்கும். அது இறப்பெய்யும் வரை எந்த போட்டியோ தேர்தலோ இன்றி தானே ராஜா தானே மந்திரிதான்.

ஆண் கொரில்லாக்கள் பருவ வயதை அடையும் போது அவற்றின் பின்புற முடி சற்றே வெள்ளையாக நிறமாற்றம் அடையும் இந்தத் தருணத்தில் தான் இவை உடல் ரீதியாக இனப்பெருக்கத்திற்கு தகுதியடைகின்றன. இதன் பிறகு இந்த காட்டு மைனர் ஒரு ஜோடியை கவர்ந்து தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்கின்றான். மேலும் இந்த நாயகனால் கவரப்பட்ட மற்ற குடும்பத்தைச் சேர்ந்த நாயகிகளும் சில இணைந்து விடுவதுண்டு. இதை சில்வர் பேக் (
silver back) என்ற காரணப்பெயரோடு குறிப்பிடுகின்றார்கள். அதே குடும்ப சந்ததியில் வயசுக்கு வராத மற்ற ஆண் கொரில்லாக்கள் பிளாக் பேக் (black back) என்று அழைக்கப்படுகின்றன. ஆண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்களை விட இரு மடங்கு எடையுடையதாகும். நாலைந்து மனைவியை வைத்துக் காலம் தள்ள வேண்டும் என்று சொன்னால் சும்மாவா? தேவையான போது தன் இஷ்ட நாயகியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. சக்களத்தி சண்டை உண்டா? என்ற விபரம் கிடைக்கவில்லை.

ஆண் கொரில்லாக்கள் 180 கிலோ எடையும், 1.75 மீட்டர் உயரமும் (சராசரி மனிதனின் உயரம்), பெண் கொரில்லாக்கள் 90 கிலோ எடையுடன் 1.5 மீட்டர் உயரமும், குட்டி பிறக்கும் போது 2 கிலோ எடை வரை இருக்கும். கொரில்லாக்களின் வாழ் நாள் அதிக பட்சமாக 45 வருடங்களாகும்.


பயப்படாதே கண்ணே நீ விழுந்தால் என் உடலில் மட்டும் அல்ல. என் உள்ளமும் காயப்படும்.

கொரில்லாக்கள் குரங்கு இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும் அவை பிரதான தரை வாழ் விலங்கினமாகும். இருப்பினும் அவற்றினால் மரங்கள் ஏறவும், பழ வகைகளைப் பறித்து உண்ணவும், கிளை விட்டு கிளை தொற்றித் தாவி பாய்ந்து செல்லவும் மற்ற வகையான குரங்கு சேட்டைகள் புரியவும் திறன் பெற்றவையாகும். ஆண் கொரில்லாக்களை விட பெண் கொரில்லாக்கள் மற்றும் குட்டிகள் அதிகம் மரங்களில் ஏறக்கூடியதாய் இருக்கின்றன. ஏனெனில் பெரும்பாலான தாவர வகைகள் ஆண் கொரில்லாக்களின் அதிகப்படியான எடையைத் தாங்கக் கூடியதாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். இவற்றின் தோலின் நிறம் கருமையாகும். இவற்றின் உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் அறவே முடிகளற்றும் முகம் மற்றும் மார்பில் சிறிதளவிற்கு முடியும் இதைத் தவிர்த்து மற்ற உடலின் மற்ற பகுதியில் அடர்ந்த முடிகளையுடையதாயிருக்கும். இவைகளின் பரந்த உறுதியான மார்பு இவற்றின் பராக்கிரமத்திற்குச் சான்று பகரக்கூடியவை. இவற்றின் கை மற்றும் கால் அமைப்பு மனிதனை ஒத்திருப்பினும் இவை கை மற்றும் கால்கள் நான்கின் மூலம் நடந்து செல்லக் கூடியவையாகும். இவற்றின் கை அதன் கால்களைக் காட்டிலும் 20 சதவிகிதம் வரை நீளமாகும். இவற்றின் கைகள் கால்களின் நீளத்தை விட அதிகமாக இருப்பதனால் உடலின் பெரும்பகுதி எடையை இவற்றின் கைகள் தாங்கிக் கொள்கின்றன. கொரில்லாக்கள் பொதுவாக தண்ணீரை விரும்புவதில்லை. அவை உண்ணக்கூடிய இலை தழைகளின் நீர் சத்து பெருமளவில் இவற்றின் தண்ணீர் தேவையைப் பூர்த்தியாக்கி விடுகின்றன. கொரில்லாக்கள் மற்ற வகை வாலில்லாத குரங்குகள் போன்றல்லாது சுத்தமான சைவப் பிராணியாகும்.

தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறு கதைகள் பேசி, மனம் வாடி மிக உழன்று என்ற பாரதியின் கவிதையைப் போல கொரில்லாக்கள் தங்கள் வாழ்நாளின் பாதிக்கு மேற்பட்ட நேரத்தை உண்டு கழிப்பதிலேயே செலவிடுகின்றன. இவற்றின் பிரதான உணவு இலை, தண்டு, பூ, பழம், விதை, வேர் மற்றும் கிழங்கு போன்றவையாகும். இவை தங்கள் உணவிற்காக ஒரு நாளைக்கு சில நூறு மீட்டர்கள் முதல் ஒரு மைல் தூரம் வரை பயணிக்கக் கூடியதாகும். கொரில்லாக்கள் மற்ற வகைகளைப் போன்றல்லாமல் நடத்தல், விளையாடுதல், ஓய்வெடுத்தல் போன்ற குண இயல்புகளைக் கொண்டுள்ளன. எந்த இடத்தில் இருக்கும்போது சூரியன் அஸ்தமனத்தை அடைகின்றதோ அதே இடத்திலேயே இந்த நாடோடிக் கொரில்லாக்கள் தங்கள் குழுவுடன் தங்கிக் கொள்கின்றன. கொரில்லாக்கள் ஒவ்வொரு தினமும் இரவில் புதிய தங்கும் கூட்டை அமைத்துக் கொள்கின்றன. இவற்றின் கூடு வளைந்து கொடுக்கக் கூடிய மரக் குச்சிகள், இலை மற்றும் புற்பூண்டுகளைக் கொண்டு தரையிலோ அல்லது மரத்திலோ அமைத்துக் கொள்கின்றன. பொதுவாக ஆண் கொரில்லாக்கள் மரத்தினடியிலும் பெண் கொரில்லாக்கள் மற்றும் குட்டிகளும் மரத்தின் மேலும் இரவில் உறங்குகின்றன. இவற்றின் ஒரு குழு 5 முதல் 30 கிலோ மீட்டர் வரையான பரப்பளவை தங்கள் இராஜியத்தின் ஏகபோக எல்லையாகக் கொண்டு உணவு தேவைக்காகவும் தூங்க, நடக்க போன்றவைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றன. மனிதர்களைத் தவிர்த்து மற்ற குறிப்பிட்டுச் சொல்லும் படியான எதிரிகள் இல்லை என்று சொல்லலாம். மிகச் சொற்பமான சில இடங்களில் சிறுத்தைகளினால் இவை தாக்கப்படுகின்றன. அதையல்லாது மற்ற எதிரிகள் என்று சொல்லும் படியாக எதுவும் இல்லை.


பயந்துவிடாதீர்கள்! வெறும் பாவ்லாதான்!!

கொரில்லாக்கள் பொதுவாக சண்டைச் சச்சரவுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவதில்லை. நமக்குள் எதுக்கு சண்டை பேசாமல் நீ உன் வேலையைப் பார்! நான் என் வேலையைப் பார்க்கின்றேன்! என்பது போல் உடல் ரீதியாக காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய அளவிளான சண்டையை பெரும்பாலும் தவிர்த்துக் கொள்கின்றன. ஒரு குழுவைச் சேர்ந்தவை அதன் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்கின்றன. அதே சமயம் தலைமையை வகிக்கக் கூடிய ஆண் கொரில்லாக்கள் தலைமைக் கேற்ற பண்புடன் இவைகளுக்கு ஏதேனும் ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது தங்கள் குடும்பத்தைச் சூழ்ந்து கேடயமாக பாதுகாப்பதில் எந்த குறையும் வைப்பதில்லை. மேலும் மற்ற குடும்ப ஆண் கொரில்லாக்களும் பாதுகாப்பில் பின் வாங்குவதில்லை. கொரில்லாக்கள் ஆபத்தான நேரங்களில் தங்களை மார்பை இரு கரங்களினாலும் ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்கின்றன.

குடும்பத்தைக் கட்டிக் கொண்டு மார் அடிக்கும் பொழப்பாய் போச்சே என்ற சலித்துக் கொண்டு மாரடிக்கக் கூடியவை இல்லை! இவை அடிப்பது, எதிரியை நேருக்கு நேர் அழைத்து அவற்றிற்கு பீதியை கொடுக்கும் மார் தட்டலாகும். மேலும் இவற்றின் பயத்தை உண்டாக்கும் கர்ஜனையும் அவை தங்கள் மார்பை அடித்துத் கொள்ளும் முறையும், வீரிட்டு கத்துவதன் மூலமும் இறுதியாக இவற்றின் வெளிபாடு மிகைத்து விடும்போது நிசப்தமான காடே அல்லோகலப் பட்டுவிடும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதை சகித்து கொள்ள முடியாமலோ அல்லது பயந்தோ அவற்றை நெருங்கக் கூடிய எதிரி ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாக புறமுதுகிட்டு பீதியினால் ஓட்டம் பிடிக்கின்றது. இருப்பினும் இவற்றை சுற்றுலா பயணிகள் எந்த விதமான இடையூரும் இன்றி அன்புடன் உணவு பொருட்களுடன் நெருங்கும் போது அவை அவற்றை மிக அன்புடன் ஏற்றுக் கொள்கின்றன.

கொரில்லாக்கள் தங்களுக்கிடையே 15 வகையான வித்தியாசமான ஒலியை எழுப்புவதன் மூலம் மற்றவற்றுடன் தகவல் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. விலங்குகள் தங்களுக்குள் ஏதோ விதத்தில் பேசி மற்றவற்றிற்கு தகவல்களை தெரிவிக்கின்றன என்பது அறிவியல் ரீதியாக நிரூபனம் செய்யப்பட்டுள்ளது. இவையும் வித்தியாசமான ஒலியை எழுப்புவதன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்கின்றன. கொரில்லாக்கள் சைகை மொழியை மிக விரைவில் அறிந்துக் கொள்ளும் திறன் பெற்று விளங்குகின்றன. கோகோ (
koko) என்ற கொரில்லாவிற்கு நன்கு பயிற்சி அளித்ததன் மூலம் 500க்கு மேற்பட்ட சைகைகளை புரிந்துக் கொள்ளும் திறன் இருப்பதாக அறிய வந்துள்ளது. சில கொரில்லாக்களுக்கு முன்பாக கண்ணாடியை வைத்து சோதித்த போது பிரதிபலிப்பது தங்கள் உருவம்தான் என்பதை தெரிந்துக் கொள்ளுகின்றன. இதன் மூலம் இவற்றிற்கு சுயமான சிந்திக்கும் திறன் சிறிது இருப்பது விளங்கிக் கொள்ள முடிந்தது.


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

மனிதர்களைப் போன்றே இவற்றிற்கும் இனப்பெருக்கத்திற்கென்று குறிப்பிட்ட ஒரு கால வரையரைக் கிடையாது. வருடத்தின் எந்த நாட்களில் இவை உறவுக் கொள்கின்றன. பெண் கொரில்லாக்களின் மாத விலக்கு சுழற்சி மனித இனத்தைப் போன்றே 28 நாட்களாகும். தன்னுடைய 9 வயதில் பெண் கொரில்லாக்கள் பருவத்தை எட்டி இனப் பெருக்கத்திற்கு தகுதியடைகின்றன. இவற்றின் கர்ப காலம் 8.5 முதல் 9 மாதம் வரையான கால அளவாகும். தன் வாழ்நாளில் 3 முதல் 6 முறை நான்கு வருட இடைவெளியில் குட்டிப் போடுகின்றன. குட்டிகள் பெற்றெடுக்காத மலட்டு கொரில்லாக்களை விட மக்களைப் பெற்ற மகராசிகளுக்கு இவைகளிடையே நல்ல மதிப்பு உண்டு. கொரில்லாக்களின் குட்டிகள் மனிதக் குட்டிகளை விட இருமடங்கு விரைவாக தங்கள் பாரம்பரிய குணாதிசியங்களை அடைகின்றன. மனிதக் குட்டி எழுந்து நிற்கவே வருடத்தை எடுத்துக் கொள்கின்றது. இவற்றின் குட்டிகளோ தங்கள் வழிமுறைகளை விரைவில் கற்றுத் தேர்ச்சியடைகின்றன. பிறந்த குட்டிகள் 4 முதல் 5 ஆண்டுகள் வரை தன் தாயை சார்ந்தே வாழுகின்றன. பால் குடித்தும் மழை மற்றும் குளிரிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள தாயின் மடியில் தஞ்சம் அடைந்தும் இரவில் தாயின் கூட்டில் அதனுடன் தூங்கியும் காலம் கழிக்கும். தன் தாய் பயணிக்கும் போது அதன் முதுகில் சவாரி செய்த வண்ணம் பயணம் செய்யும். பொதுவாக பெண் கொரில்லாக்கள் பருவமடைந்த பின் பிறந்த வீட்டை விடுத்து புதிய வீட்டில் புகுந்து கொள்கின்றது. அதாவது வேறு குழுவில் சென்று இணைந்து கொள்கின்றது. அல்லது எலி வளையானலும் தனி வளை வேண்டும் என்று நினைக்கின்றனவோ என்னவோ? தெரியவில்லை!

மைனர் ஆண் கொரில்லாக்களுடன் இணைந்து புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொள்கின்றன. ஆண் கொரில்லாக்கள் பருவமடைந்தவுடன் "என் வழி தனி வழி" என்ற கணக்கில் புதிய காதலியை தேடி வீடு துறந்து காடே கதியாக வேறுக் குடும்பத்தை சேர்ந்த பெண் கொரில்லாக்கள் பின்னால் லோ-லோ என்று அலைய ஆரம்பித்து விடுகின்றது. அல்லது எங்கு காதல் தேடி அலைவது என்ற சோம்பலில் தன் குடும்பத்தில் இருக்கும் பெண் கொரில்லாவை தள்ளிக் கொண்டு செல்லும் முயற்சியிலும் இறங்குவதுண்டு. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் இத்தகைய சந்தர்ப்பங்களில் இவற்றிற்கு உடம்பில் டின் கட்டும் நிகழ்ச்சிகளுக்கும் அங்கே குறைவு இல்லை. இத்தகைய இந்த சந்தர்ப்பங்களில் இவைகளுக்கிடையே சண்டைகள் நிகழுவதுண்டு. மேலும் சில சமயம் குட்டிகளைக் கொன்றுவிட்டு அதன் தாயை கடத்தி கொண்டு செல்லும் அகராதிப் போக்கிற்கும் அங்கே குறைவில்லை.

காமத்திற்கு அல்லது காதலுக்கு முன்பு எதுவும் துச்சம் என்ற இந்த செயல்போக்கு மனித இனங்களில் அடிக்கடி காதில் விழும் செய்திதானே. எந்த நேரத்தில் அவைகள் குடும்பத்தை விட்டு ஓட இரகசியம் பேசிக் கொள்கின்றன என்பது அவற்றிற்குதான் வெளிச்சம். அரிதாகப் பருவமடைந்த ஆண் கொரில்லாக்கள் தங்கள் குடும்பத்துடனே தங்கிக் கொள்கின்றன. தன் தந்தை இறந்தவுடன் அல்லது வயது முதிர்ந்தவுடன் தந்தை வழி தனயன் வழி எனபது போல் அந்த குடும்பத்திற்கு தலைமைக்கு வருகின்றது. இவை 35 வருடங்கள் முதல் 45 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியனவாக இருப்பினும் 25 சதவிகிதம் குட்டிகள் பிறந்த இரண்டு வருடங்களில் நோய்களினால் இறந்து விடுகின்றன. இவற்றிற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப் போவது யாரோ?
 
'ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று
பையல் என்ற போது பரிந்தெடுத்து செய்யவிருக் கைப்புறத்திலேயேந்திக்
கனக முலை தந்தாளை..

என்ற பட்டினத்தாரின் வரிகள் இவற்றிற்கு பொருந்தாமல் போய்விடுமா என்ன? அந்த அரவணைப்பைப் பாருங்கள். அதன் முகத்தில் அன்பினைப் பாருங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்கும் என்ற குறளைப் போல் இறைவன் உயிர்களிடத்தில் வைத்த உணர்ச்சி மயமான அன்பு என்னும் பண்பை எங்ஙனம் வார்த்தைகளினால் விளக்குவது. முற்றிலும் சுய சக்தியற்ற தன் சந்ததியை காக்கும் உணர்ச்சி பூர்வமான அந்த பரோபகார சிந்தனையை இவை எங்கிருந்து பரிணாமம் பெற்றன. உதாரணத்திற்கு எல்லா உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்று பரிணாமம் பெற்றன என்று வைத்துக் கொண்டாலும் உடல் ரீதியான மாற்றம் ஏற்படலாமே தவிர இந்த உணர்ச்சி பூர்வமான பண்புகளை எவ்வாறு அவைகள் பெற்றிருக்க இயலும். ஏதோ சில விஷயங்களில் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஒரு ஒழுங்குடன் அமையலாம். ஆனால் எல்லா விஷயங்களிலுமா அவ்வாறு நிகழ முடியும்?. சாத்தியமே இல்லை! இல்லவே இல்லை!

இந்த உலகில் படைப்பினங்கள் மற்றும் உலகத்தின் ஒழுங்குபாடு எல்லா விஷயங்களும் எவ்வாறு ஒரு ஒழுங்குடனும் எந்த ஒரு முரண்பாடின்றியும் அமைய முடியும். இந்த பரிணாமத் தத்துவம் இந்த அளவிற்கு ஒரு மாயை ஏற்படுத்தியதற்கு காரணம் டார்வினை எதிர்த்த கிருஸ்துவ உலகம் அதற்கு ஒரு சரியான பதில் அளிக்காமையே ஆகும். எதிலும் பகுத்துதான் அறிவோம் என்று சொல்லும் டார்வின் வாதிகளுக்கு பதில் அளிக்க ஆயத்தம் ஆகிவிட்டனர் அறிவியல் அறிஞர்கள்.

இந்த நூற்றாண்டில் அறிவியல் உலகினை பிரமிப்பின் எல்லைக்கே இட்டுச் செல்லும், இட்டுச் செல்வதென்ன உதைத்தே துரத்தும் ஒரு துறை இருக்கிறது என்று சொன்னால் அது குரோமோசோம்களில் அடங்கியிருக்கும் ஜீன்களைப் பற்றித் மனிதனின் மரபியல் துறையாகும். மனித உடலின் 23 ஜோடி குரோமோசோம்களில் காணப்படும் இவைகள் மனிதப் படைப்பின் மூலமாக இறைவனால் படைக்கப்பட்டதாகும். இந்த சிறிய மரபியல் மூலக்கூறுகளுக்கென்று ஒரு துறை உருவாக்கப்பட்டு (Genetic Engineering) விரிவான முறையில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இந்தத் துறையில் இதுவரை விஞ்ஞானிகளினால் கண்டறியப்பட்ட சொற்பமான தகவல்கள் இவர்களின் கொள்கைக்கு ஆதரவளிக்கக் கூடியதாய் அமையவில்லை. மரபியல் மூலக்கூறுகளான அடினைன், குவானைன், தைமின் மற்றும் சைட்டோசின் ஆகிய இவைகள் அர்த்தமுள்ள வரிசையில் அமைந்திருக்கும் பாங்கு அறிவியலார்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவற்றில் கிட்டதட்ட 5000 கோடி தகவல்கள் பதியப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளார்கள். இந்த ஜீன்களை மனித உடலைக் உருவாக்கும் பொறியிலாருக்கு ஒப்பாக கொள்ளலாம். இவையே ஒரு மனிதனின் உறுப்புகள், நிறம், உயரம், ஆரோக்கியம், மரபியல் பண்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணியாகும். இவற்றில் ஏதேனும் தவறுகள் ஏற்படின் பிறக்கும் பிறப்பு மனித இனமா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். இந்தத் துறை ஆராய்ச்சி மனித இனத்தின் மூலம் ஒரு ஆத்மாதான் என்ற முடிவை எட்டிவிட்டது.

மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்சி அடைந்தான் என்ற கூற்றை டார்வின் வைத்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது குரங்குகளின் தோற்றம் மற்றும் அதன் சில செயல்பாடுகள் மனிதனைப் போன்றே இருப்பதுதான் முக்கியமான காரணம் ஆகும். ஆனால் சமீப கால ஆராய்ச்சியின் முடிவுகள் மற்ற உயிரினத்தின் இரத்தத்தை மனித உடலுக்கு ஏற்ற இரத்தமாக மாற்றக் கூடிய சாத்தியம் இருக்கிறதென்றுச் சொன்னால் அது பன்றியின் இரத்தம்தான் என்று விஞ்ஞானிகள் அடித்துச் சொல்கின்றார்கள். ஆம் மனித இரத்தத்தோடு நெருங்கிய ஒற்றுமை உடையது பன்றியின் இரத்தமாகும். மேலும் பன்றியின் இதய அமைப்பு மனித இதயத்தை பெருமளவிற்கு ஒத்திருக்கின்றன. எனவே மனிதன் பரிணாமம் அடைந்தான் என்று வைத்துக்கொண்டால் மிக நெருக்கமாக வருவது பன்றிதான் என்று அறிவியலார் சொல்கின்றார்கள். இப்பொழுது சப்தநாடியும் அடங்கிய இவர்கள் என்னச் சொல்லப்போகின்றார்கள். மனித குலத்தின் மூலம் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளும் போது அதை படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்கும் நிலை ஏற்படும் என்பதல்லாமல் இவர்கள் மறுப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்கின்றது. ஆரோக்கியமான ஒரு மனிதனின் உடலில் 30 டிரில்லியன் (1000 பில்லியன்ஸ் = ஒரு டிரில்லியன்) செல்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். இதில் ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் உணவுச்சத்துகள் எந்த விதமான குறைவுமின்றி வினியோகம் செய்யப்படுகின்றன.

ஆனால் இன்று உலகின் 600 கோடி மக்களுக்கும் ஒரே சீராக பட்டினியின்றி மனிதர்களினால் உணவளிக்கப்படுகின்றதா? ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவில் பாலை கடலில் கொட்டுகின்றார்கள். அமெரிக்காவில் கோதுமையை கடலில் கொட்டுகின்றார்கள். ஐரோப்பாவில் உணவு உற்பத்தி அதிகமாகி நிலத்தை உழாமல் தரிசாக போட்டு வைக்க மானியம் வழங்கப்படுகின்றது. மறுபுறம் நிகழும் பட்டினிச் சாவுகளை எதிர் நோக்கி சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, ருவாண்டா, உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகள். பசிக்கு மாங்கொட்டையை அரைத்து தின்று உயிர் விடும் மலைவாழ் இந்தியர்கள் ஒருபுறம் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும். மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இத்தகைய விஷயங்களில் இவனால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை. சீரான வினியோகம் என்பது இதுவரை இவனைக் கொண்டு சாத்தியமற்றதாய் இருக்கின்றது. ஆனால் இறைவன் படைத்த நம் உள் உறுப்புகளில் எந்தத் தங்கு தடையுமின்றி எந்த முரண்பாடுமின்றி வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உங்களுக்குள்ளேயே நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றது என்ற நித்திய ஜீவனாகிய நம் இறைவனின் வல்லமையை மனிதன் சிந்தனைச் செய்தாலே இறைவனின் அற்புதங்களை கணக்கின்றிக் காண முடியும்.

அறிவியலைப் பற்றி சிறிதளவே அறிந்தவன் இறைநம்பிக்கை இல்லாதவனாகிறான். ஆனால் அறிவியலைப் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவனோ, இறை நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாடு கொள்கிறான். என்ற ஒரு அறிஞனின் கூற்று இந்த இடத்தில் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

உங்கள் அனைவரின் மீளுதலும் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே உங்களை ஆரம்பத்தில் படைத்தான். பின்னர் நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கின்றான். (ஏக இறைவனை) மறுப்போறுக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தால் கொதிக்கும் பானமும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 10:04)
 Thnxs:http://www.nouralislam.org/tamil/islamkalvi/science/gorilla.htm
Primate) எனும் பிரிவின் கீழ் கொண்டு வருகின்றனர். இவற்றில் முதன்மையான பண்பாக மனிதனைப் போன்று தட்டையான அகன்ற முகமும் நேராகப் பார்க்கக் கூடிய கண் அமைப்பும், மற்ற விலங்குகளைக் காட்டிலும் நன்கு வளைந்து கொடுக்கக் கூடிய வகையில் அமைந்த கை, கால், விரல்கள் அமைப்பையும் கொண்டுள்ளதால் இந்த பிரிவின் கீழ் விஞ்ஞானிகள் கொண்டு வருகின்றனர். இவற்றில் 30 கிராம் எடையுடைய லெமூர்(Mouse Lemur) முதல் அதைப் போன்று ஏறக்குறைய 6000 மடங்கு எடையுடைய கொரில்லாக்கள் வரை அதில் அடக்கம். அதில் மிக அதிக எடையுடைய கொரில்லக்களைப் பற்றிதான் நாம் பார்க்க

திமிங்கிலம் (Whale)

அல்லாஹ் படைத்த பாலூட்டிகள் அனைத்திலும் திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ் நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது. இந்த அமைப்பும் இவற்றிற்கு இறைவனால் பிரத்யோகமாக கொடுக்கப் பட்ட அருட் கொடையாகும்.

பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் அல்லாஹ்வுடைய படைப்பின் வல்லமையைப் பறைச்சாற்றும் இந்த திமிங்கிலங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.


திமிங்கிலம் என்றுச் சொன்னவுடன் நமக்கு மிகப் பெரிய அளவிளான மீனாகத்தான் நினைவுக்கு வருகின்றது. இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைத் சாராத பாலூட்டி ஆகும். மீன்கள் குளிர் இரத்த உயிரி ஆகும். மேலும் இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவில்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனை போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுறையீரல் அமைப்பை பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும்.

திமிங்கிலதில் 75-க்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஓவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன. 10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. டால்பின் புரொபோசிஸ் போன்றவைகள் உட்பட திமிங்கிலம் இனத்தை சேர்ந்தவையாகும். கீழ் காணும் படம் அமேசான் ஆற்றில் வாழும் Pink டால்பின் ஆகும்.


அமேசான் ஆற்று Pink dolphin

விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை இருப் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இருப் புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.

பற்கள் உடையத் திமிங்கில வகைகள்
பற்கள் உள்ள வகைகளில் 1.5 மீட்டருக்கு குறைவான Horbor porpoise முதல் 18 மீட்டர் நீளமும் 55 டன் எடையுடைய Sperm whale வரை பல வகைகள் இருக்கின்றன. இதில் பல வியக்கத்தக்க சிறப்பம்சங்களுடன் விளங்கும் Sperm whale பற்றிப் பார்ப்போம்.

Sperm whale வலிமையான பற்களைக் கொண்ட திமிங்கிலங்களில் முதன்மையான இடத்தை வகிக்கும் வகையைச் சேர்ந்ததாகும். இவை இத்தகைய பற்கள் அமைப்பை பெற்று விளங்குவதனால் மிகப் பெரிய அளவிளான மீன்களைக் கூட ஒரே நேரத்தில் பிடித்து விழுங்க முடிகின்றது. இவை தங்களின் முக்கிய உணவாக உட்கொள்ளும் Gaint squid என்னும் மீன் இனத்தின் நீளம் 10 மீட்டர் என்றுச் சொன்னால் இவற்றின் வாயின் அளவையும் பற்களின் வல்லமையையும் நம்மால் உணர முடிகின்றது.

இவை ஒரு முறை சுவாசித்ததன் பின்னர் 80நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கறிய கடல் நீரின் அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இறையைத் தேடி கடலின் ஆழத்திற்கு செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளிளாலும் அடைய முடியாத ஒரு இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர்(இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. சுபஹானல்லாஹ். இவ்வளவு ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையை பிடிக்க பயன் படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்துக் கொள்ளும் முறையாகும். இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகினன்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid பிடித்து உண்ணும் போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை களீபரம் செய்யத் இவைத் தவறுவதில்லை. இவை தங்களின் உணவை பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றன.


Sperm Whale

மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஓன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.

பற்கள் அற்ற Baleen திமிங்கிலங்கள்பற்கள் உள்ள திமிங்கிலங்களுக்கும் பற்கள் அற்ற பலீன் திமிங்கலங்களுக்கும் இரையை பிடிக்கப் பயன் படுத்தும் முறையில் மிக பெரிய அளவிளான வித்தியாசங்கள் உள்ளன. Baleen திமிங்கிலங்களின் வாயின் மேற்பரப்பில் தொங்கக் கூடிய அமைப்பில் அமைந்த உறுதியான நீண்ட சீப்புக்களைப் போன்ற வளைந்துக் கொடுக்கக் கூடிய தன்மையைக் கொண்ட இதுதான் பலீன் என்று அழைக்கப்படுகின்றது. Green land Right whale என்றழைக்கப்படும் ஆர்டிக் திமிங்கிலங்களின் பலீன் தகடுகள் அதிக பட்சமாக நான்கு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது. இவைகள் பக்கத்திற்கு 270 முதல் 360 எண்ணிக்கை வரையும் வளரக்கூடியது. பலீன் திமிங்கிலங்கள் தங்கள் வாய்களில் உட் கொள்ளும் டன் கணக்கான தண்ணீரை திரும்பப் பீய்ச்சி வெளியேற்றுவதன் மூலம் இந்த பலீன் தகடுகளினால் வடிகட்டப் பட்டுச் சிக்கிக் கொள்ளும் சிறிய பிளாங்டன் மற்றும் சிறிய வகை மீன்களை உணவாக உட்கொள்கின்றன. இந்த பலீன்கள் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வாயின் உட்புறத்தில் அமைந்த இவைகளின் வெளிப்புறம் நேரானதாகவும் அதன் உட்புறம் இருப்புறங்களிலும் தேய்ந்த அமைப்பில் அமைந்துள்ளதால் மிகச் சிறிய அளவிளான உயிரினங்கள் கூட இவற்றின் வாயிலிருந்து தப்பிக்க இயலுவதில்லை. (முதலை வாயில் மாட்டுவதை விட இதன் வாயில் மாட்டுவது ஆபத்து போலும்).

இந்த பலீன்கள் நீளமாகவும் மிக உறுதியாகவும் எலாஸ்டிக் போன்ற கெரட்டீன் என்ற மூலப் பொருளால் ஆனவை. இந்த கெரட்டீன்தான் மனிதர்களின் முடி மற்றும் விரல் நகங்களை உருவாக்க காரணமாக இருப்பவை. இத்தகைய அமைப்பை அடிப்படையாக கொண்ட பலீன் திமிங்கிலங்களில் மிகப் பெரியதும் பல சிறப்பான அம்சங்களையும் கொண்ட Blue Whale என்றழைக்கப்படும் நீல நிறம் கொண்டு திமிங்கிலத்தை பற்றிப் பார்ப்போம்.


பலீன் திமிங்கிலங்களில் Blue Whale என்றழைக்கப்படும் இந்த திமிங்கிலம்தான் இந்த பூமியில் உள்ள உயிரினங்களிலேயே மற்ற எவற்றுடனும் ஒப்பிட இயலாத அளவிற்கு மிகப் பெரியதாகும். 24 மீட்டர் வரை நீளமும் 150 மெட்ரிக் டன் வரை எடையும் கொண்டதாகும். இவற்றின் உள் உறுப்புகளில் ஒன்றான இதயத்தின் அளவு Volks wagen beetle என்றழைக்கப்படும் காருடைய அளவிற்கு ஒப்பான அளவு என்றால் எவ்வளவு பிரமாண்டமான உருவமாக இருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். இவைகள் 100 ஆண்டுகளுக்கு மேலான வாழ் நாளைக் கொண்டவை. பொதுவாக உலகில் உள்ள எல்லா கடல்களிலும் காணப்படும் இவைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப் பட்டு அழிவின் விளிம்பை நோக்கி விரைந்து செல்லுவதால் எண்ணிக்கையில் மிகக் குறைந்துக் காணப்படுகின்றன. 760 லிட்டர் வரைக் கொள்ளளவு வயிற்றைக் கொண்ட இவைகள் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் அளவு 3600 கிலோ வரையாகும்.

இவைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு ஏறக்குறைய 11 -மாத கால அளவில் வழக்கமாக ஒரு குட்டியை ஈன்றெடுக்கின்றது. இதன் குட்டி பிறக்கும் போது தாயின் எடையில் 30 சதவீத எடையுடன் பிறக்கின்றது. 7.6 மீட்டர் நீளமும் மூன்று டன் எடையுடனும் பிறக்கக் கூடிய இவைகள் 7 முதல் 8 மாதங்கள் வரை தாயின் அரவணைப்பில் வாழுகின்றன. திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கின்றன. விஞ்ஞானிகள் இவற்றைப் பாலூட்டிகளின் பட்டியலில் ஒன்றாகக் கருத இதுவே முழு முதற்காரணமாகும். இந்த Blue Whale தன் குட்டிக்கு ஒரு நாளைக்கு கொடுக்கும் பாலின் அளவு 600 லிட்டர்களாகும். இதனுடையக் குட்டி ஒரு நாளைக்கு 90 கிலோ எடை வரை வளர்ச்சியடைகின்றது.

Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். அல்லாஹ் நாடியதை அதிகப் படுத்தக்கூடியவன் . இதன் மூலம் இவைகள் மிகத் தொலைத் தூர பிரதேசத்தின் தங்கள் இனத்துடன் தொடர்புக் கொள்ள பயன் படுத்துவதாக விஞ்ஞானிகள் அபிப்ராயப் படுகின்றார்கள். இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன் படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்றுச் சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக தொலை தூர கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

இனி திமிங்கிலங்களின் பொதுவான சில அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம். முதலாவதாக அவற்றின் உடல் அமைப்பை பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் பார்ப்போம். திமிங்கிலங்களின் உடலின் மேற்புறம் புரதத்தை உள்டக்கிய Bubler என்னும் மிகத்தடித்த அடுக்கு அமைந்துள்ளது. இது இவற்றின் உடல் வெப்பத்தை (உறை நிலையைக் கடந்த துருவப் பகுதிகளிலும்) சீராக வைத்துக் கொள்ளவும் தங்களுக்குத் தேவையான சத்துக்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும் பயனாகின்றது.

கடலின் மிக ஆழத்தில் இவை செல்லும் போது கடல் நீரின் மிக அதிக அளவான அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் இவற்றின் கண் அமைப்பு அமைந்துள்ளது. கண்களைக் சுற்றி அமைந்துள்ள தோல் போன்ற அமைப்பு தண்ணீரின் மிக அதிகமான அழுத்தத்தை தாங்கிக் கொள்ளவும் உப்பு நீரினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் காக்கக்கூடிய பாதுகாப்பு அரணாகவும் விளங்குகின்றது. இதே அமைப்பு கண்ணின் லென்சின் அமைப்பை மாற்றிக் கொடுப்பதன் மூலம் தண்ணீருக்கடியிலும் தண்ணீரின் மேற்பரப்பிலும் தெளிவாக காண வகைச் செய்கின்றது. பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் அமையப் பெற்ற பித்தப்பை மற்றும் குடல் வால்வு அமைப்பு இவற்றிற்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும். இவைகள் தண்ணீரின் அடியில் மணிக் கணக்காக தாக்குப் பிடிப்பதானால் இவற்றின் நுரையீரல் அமைப்பை பற்றி அறிந்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். இவற்றின் நுரையீரல் மற்ற பாலூட்டிகளைப் போன்று தொண்டையின் இணைப்பின்றி காற்றுக் குழாய் (Blow hole) மூலம் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதால் இவற்றினால் ஒரே நேரத்தில் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது. இவற்றின் நுரையீரல் மனிதர்களின் நுரையீரலை விட அமைப்பில் சற்றுக் குறைந்திருப்பினும் கூட செயல் பாட்டில் மனிதர்களின் நுரையீரலை விட மிகைத்த ஒன்றாகும். மனிதர்களின் நுரையீரல் ஒரு சுவாசத்தின் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரைதான் ஆக்ஸிஜனை கிரகிக்க இயலுகின்றது. ஆனால் திமிங்கிலங்களின் நுரையீரலோ 80 முதல் 90 சதவிகித ஆக்ஸிஜனை கிரகித்துக் கொள்ளுகின்றது.

இவற்றின் நுரையீரல் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அதே வேளையில் கார்பன் டை ஆக்சைடை மிக வேகமாக வெளியேற்றுகின்றது. இதுவும் மனித நுரையீரலை விட வேகமான செயல்பாடாகும். எனவேதான் இவைகளினால் நீண்ட நேரம் தண்ணீரில் தாக்குப் பிடிக்க முடிகின்றது. இவற்றின் இரத்தம் மற்றும் திசுகளில் சேகரிக்கப் படும் அதிகப்படியான ஆக்ஸிஜன் ஹீமோ குலோபின் (hemoglobin) மற்றும் மையோ குலோபின்(Myoglobin) மூலம் 80 முதல் 90 சதவிகிதம் வரை ஆக்சிஜன் வினியோகம் செய்யப் படுவதால் தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. மேலும் இவை தண்ணீருக்கு அடியில் தங்கள் உணவுக்காக சென்றதன் பின்னர் இவற்றின் இதயம் நிமிடத்திற்கு 3 லிருந்து 5 முறை வரை மட்டுமே துடிப்பதனால் பல உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் நிறத்தப் பட்டு நீண்ட நேரத்திற்கு இவைகளினால் பிராண வாயுவை பயன்படுத்திக் கொள்ள இயலுகின்றது. இதனால் இவற்றின் மூளை மற்றும் இதயத்தின் இயக்கம் குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப் படுவதனால் நீண்ட காலம் வாழ இது வகைச் செய்கின்றது.

மனிதர்களின் மூளையைக் காட்டிலும் அளவில் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது. 1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்கள் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் மூளையின் முன் புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமான சிந்தித்து சமத்யோகமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

பாலூட்டிகளின் சாம்ராஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்க் கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளை பெற்றெடுக்க அலாஸ்காவிற்க்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடியத் தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரியக் கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.

இவைகள் பெரும் பயணத்தை மேற்கொள்ளும்போது இவைகளினால் எழுப்பப்படும் பாடல்கள் மிக மிக முக்கியமான வியமாக விஞ்ஞானிகளினால் கருதப்படுகின்றது. ஒவ்வொரு இனத்திற்கும் பிரத்யோகமான பாடல் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளார்கள். Hump back என்ற திமிங்கிலத்தின் பாடல் வரிகள் விட்டு விட்டோ அல்லது தொடர்சியாகவோ 20 நிமிடங்கள் வரை இவைகளினால் எழுப்பப் படுகின்றது. பயணத்தின் போது ஒரு கூட்டத்தினால் எழுப்பப்படும் இந்த பாடல் வரிகள் ஏறக்குறைய ஒத்திருக்கின்றது. வருடத்திற்கு வருடம் சற்று மாறுதலுடன் ஒலிக்கப்படும் இந்த பாடல்கள் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் முற்றிலும் புதிய பாடலாக வடிவெடுகின்றது. அலாஸ்காவில் வசிக்கக் கூடிய எக்ஸிமோக்கள் Bowhead திமிங்கிலம் தண்ணீருக்கு அடியில் எழுப்பும் ஓசை guitar என்ற இசை சத்தத்தை ஒத்து இருப்பதை அறிந்துள்ளனர். இவ்வாறு இவை எழுப்பும் பாடல்கள் இவற்றின் இனப் பெருக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். இவற்றின் பாடல் வரிகளை வரிசைப் படுத்தும் முயற்சியில் இதுவரை வெற்றி காண முடியவில்லை. இந்த முயற்ச்சியில் வெற்றி கிட்டினால் பல பயன் தரத்தக்க தகவல்கள் தெரியவரலாம். திமிங்கிலங்களின் புத்திக் கூர்மையை கண்டறியும் வியத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதை அறிவியல் அறிஞர்கள் ஒத்துக்கொள்ளுகின்றார்கள்.

உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்துக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப் படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன் படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப் பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட I W C (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. வேட்டையாட அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கை அளவு இனம் போன்றவற்றை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் சட்ட விரோதமாக வேட்டையாடப் படுவதனால் இந்த பிரம்மாண்டமான உயிரினம் அழிவுறும் தருவாயை எட்டியுள்ளது. பின் வரும் படம் Sperm Whale வேட்டையாடப்பட்டு கிடக்கும் காட்சி.


அல்லாஹ்வின் படைப்பாற்றலின் ஒரு அங்கமாக விளங்கி வரும் இந்த திமிங்கிலங்களை பற்றிய சிந்தனையில் இன்னும் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் பரிணாமத் தத்துவவாதிகள் ஊகத்தின் அடிப்படையில் பலவாறாக பிதற்றிக் கொண்டு இருப்பதை இன்றளவிலும் விட்டப்பாடில்லை. ஜீனோம் தொழில் நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டு இந்த நூற்றாண்டில் உலகிற்கு பிரமிப்பை ஏற்படுத்தக் கூடிய உண்மைகள் வந்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் பரிணாமத்திற்கு தோள் கொடுக்கும் இவர்கள் முயற்சி நம்மை வியப்படைய வைக்கின்றது.

திமிங்கிலங்கள் முன்பு நான்கு கால்கள் உள்ள விலங்காக இருந்ததாகவும் கடற்கரையின் ஓரங்களில் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை உண்டு வாழ்ந்து வந்ததாகவும் காலப் போக்கில் இவைகளின் உணவுத் தேவை அதிகரிக்கவே அதை நிறைவு செய்யும் பொருட்டு கடலில் இறங்கி படிப் படியாக இன்றைய உருவ அமைப்பை எட்டியுள்ளதாகவும் சொல்கின்றார்கள். இவை ஹிப்போபொடமஸ் (Hippopotamus) என்ற விலங்கின் ஜீன்களோடு நெருக்கமான அமைப்பில் காணப்படுவதனால் இவை இந்த விலங்கிலிருந்துதான் திமிங்கிலமாக மாறி இருக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்து வைக்கின்றார்கள். எந்த வியத்தில் ஒரு திட்டவட்டமான முடிவை எட்ட வில்லையோ அதில் எதையாவது ஒரு கருத்தை சொல்லி வருவது கால காலமாக நடந்து வரும் நிகழ்ச்சிதான். முக்கியமாக இதையெல்லாம் ஒரு இறைவன்தான் திட்டமிட்டு படைத்தான் என்பதை இவர்களினால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் இவர்களினால் மறுக்க முடியாத அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் வரும் போது அதற்கு என்ன சமாதானத்தைக் கூறப்போகின்றார்கள். அல்லாஹ் நாடியவர்களை தவி நேர்வழிப் பெறக் கூடியவர்கள் யார்? அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர் வழிக் காட்டக்கூடியவன். நம் இறைவன் மகாத் தூய்மையானவன்.

அவர்களில் அதிகமானோர் ஊகத்தை தவிர பின்பற்றுவதில்லை. ஊகம் ஒரு போதும் உண்மையை தேவையற்றதாக்காது. அவர்கள் செய்வதை அல்லாஹ் மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 10:36)

எகிட்னா (ECHIDNA)




எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன.

எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றன. மேலும் இவைகள் எறும்புகள் மற்றும் கறையான்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களையே தங்கள் வாழுமிடமாக அமைத்துக் கொள்கின்றன.

وَكَأَيِّن مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்துத் திரிவதில்லை. அல்லாஹுவே அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றான். அவன் செவியுறுபவன் , அறிந்தவன். (29:60)

உருவ அமைப்பும் தகவமைப்பும்உருவ அமைப்பும் இவை வாழும் தகவமைப்பையும் ஒப்பிடும் போது இவை உருவத்தில் மிகச் சிறியவை. இவை 35 முதல் 53 செ.மீ வரை நீளம் உடையவை. குட்டையான வாலும் மிக உறுதியான கால்களும் கொண்டவை. இவற்றின் உடலில் வளரும் ஈட்டிகளைப் போன்ற உறுதியான முடிக் கற்றைகள் இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. இவற்றின் கால்களில் வளரும் உறுதியான நகங்களைக் கொண்டு கெட்டியான பூமியின் பரப்பில் செங்குத்தான பள்ளங்களைத் தோண்டி தங்களின் உறைவிடமாக ஆக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இவைகளின் உடலில் வளரும் முட்களைப்போன்ற கூரிய முடிக்கற்றைகள் ஆபத்தான நேரங்களில் சிலிர்த்துக் கொள்வதன் மூலம் உடலைச்சுற்றி ஊசியைப் போன்ற பாதுகாப்பு அரணை உண்டாக்குவதன் மூலம் இவைகளை எந்த உயிரினங்களும் (புலி சிங்கம் உட்பட எவையும்) எளிதாக நெருங்க முடிவதில்லை. மனிதர்களில் சிலர் இவற்றின் இறைச்சியை உண்பதனால் மனிதர்களே இவற்றின் மிகப்பெரிய எதிரியாக அமைந்துள்ளார்கள்.

இனப்பெருக்கமும் வாழ்க்கையும்இவை ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கருவுறும் பெண் எகிட்னாவின் கற்பகாலம் 9 முதல் 27 நாட்கள்வரை ஆகும். அதன் பிறகு இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு முட்டைகளை இடுகின்றது. இட்ட முட்டைகளை அது தன் அடி வயிற்றில் உள்ள தோல் போன்ற (கங்காருக்கு இருப்பது போல்) பைக்குள் வைத்து 10,11 நாட்கள் வரை அடை காக்கின்றது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சு(குட்டி) தன்தாயின் வயிற்றில் அமைந்துள்ள பையிலேயே ஏறக்குறைய 55 நாட்கள் வரை தங்குகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த இந்த குஞ்சுகள் தன் தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளிலேயே பாலை அருந்துகின்றன. இவைகள் பாலூட்டிககளைப் போன்று பால் சுரப்பி அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன்அடி வயிற்றில் வியர்வை சுரப்பதுப் போன்று சுரக்கும் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு குட்டி வளர்ந்து தன்னிச்சையாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பாதுகாப்பான பைகளைவிட்டு வெளிவருகின்றன.

எகிட்னாவின் இந்த அதிசயமான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அல்லாஹ் அமைத்து கொடுத்திருக்கின்றான் என்று நம்புவதில் நம்மைப் பொறுத்த வரை எந்தச் சிரமமும் இல்லை. விலங்குகளின் இப்படிப்பட்ட அமைப்புகளை ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பரிணாமக் கதைகளும் பகுத்தறிவாளர்களும்குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் எனச் சொல்லக்கூடிய அறிவு ஜீவிகளிடமிருந்து(?!), இப்பொழுது வாழ்கின்ற எந்த ஒரு குரங்கும் மனிதனாக ஆவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஏற்கத்தக்க பகுத்தறிவுப் பூர்வமான பதிலும் இல்லை. மேலும் இக்கூற்று நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், பிசுபிசுக்கப்பட்டு ஓரம் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பேய்களைப் பார்த்ததாகக் கதைவிடும் பத்திரிக்கைகள் கூட இந்த ஊரில் இந்த நாட்டில் போன வருடம் ஒரு குரங்கு (பரிணாம வளர்ச்சி மூலம்) மனிதனாக ஆனது என்று எழுத முடியவில்லை.

وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَابَّةٍ آيَاتٌ لِقَوْمٍ يُوقِنُونَ
உங்களைப் படைத்திருப்பதிலும் ஏனைய உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பக்கூடிய சமுதாயத்திற்கு பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 45:04)

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes