Sunday, November 18, 2012

சேப்பகிழங்கு கீரை



சேப்பகிழங்கு,சாமை கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது.இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.
சேப்பகிழங்கில் புரதம் கொழுப்பு தாது உப்புகள்,நார்சத்து மாவுச்சத்தும்,காணப்படுகின்றன.    

சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும். இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சேம்புக்கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும். இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.

குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.

சேம்பங்கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது. இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.

இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும். காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes