Sunday, November 18, 2012

பொடுதலைக் கீரை

பொடுதலைக் கீரையுடன் சம அளவு வெள்ளருக்கு சேர்த்து அரைத்து மூன்று சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.

* துத்திக்கீரை, ஒரு கடுக்காய் இரண்டையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கி சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.

* முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.

* பசலைக் கீரைச் சாறு, யானை நெருஞ்சில் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தினமும் காலை, மாலை  60 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.

* சுக்காங்கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல்  குறையும்.

* பிண்ணாக்குக் கீரையைச் சாறு எடுத்து, அதில் கடுக்காய் தோலை ஊறப்போட்டு, பிறகு காய வைத்து எடுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும்.

இந்த கீரை வகைகளில் இருக்கும் நன்மைகளை பார்த்து மலச்சிப் போனா மட்டும் போதாது அதன் பயனை அனுபவியுங்கள்.

முளைக்கீரை

*நாம் உடல்நிலை சரியில்லை யென்று மருத்துவரை அனுகும் போது கேட்கும் முதல் கேள்வி தினமும் உணவில் கீரை சேர்த்து கொள்வீர்களா என்று தான்.நாம் உண்ணும் உணவில் கீரை சேர்த்து கொண்டு சாப்பிடடால் நோயின்றி வாழமுடியும்.
தண்டுகீரையின் இளஞ்செடியே முளைக்கீரை ஆகும்

*இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும்.கால்சியம் சத்துகள் நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன.

வலுவடையும் எலும்புகள்
 
*முளைகீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம்.இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.வளரும் குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இந்த கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது முதியோர்களுக்கு இதை கண்டிபாக தரவேண்டும்.நரம்புகளுக்கும்  எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்
  
பறந்தோடும் மாலைகண் நோய்
   
*முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000 / மிஹி ( அகில உலக அலகு ) வைட்டமின்  உள்ளது. இது மாலைக்கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

*முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்., பல்நோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும்.

*இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு,இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குண்மாகும்.அத்துடன் கண் குளிர்ச்சியை பெறும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதனால் குணமாகும்.

சேப்பகிழங்கு கீரை



சேப்பகிழங்கு,சாமை கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது.இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.
சேப்பகிழங்கில் புரதம் கொழுப்பு தாது உப்புகள்,நார்சத்து மாவுச்சத்தும்,காணப்படுகின்றன.    

சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும். இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சேம்புக்கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும். இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.

குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.

சேம்பங்கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது. இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.

இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும். காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.

பாலக்கீரை

பாலக்கீரையால் சிறுநீர்கடுப்பு, நீரடைப்பு, ருசியின்மை, வாந்தி, ஆகிய நோய்கள் நீங்கும் உடல் சூட்டை தணிக்க வல்லது. தண்ணீர் தாகத்தையும் நாவரட்சியையும் போக்கவல்லது அதிக சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.அமிலம் மிகுதியால் ஏற்படும் நெஞ்சுக் கரிப்பை நீக்கும் வயிற்றுபுண்ணை ஆற்றவல்லது. அல்சருக்கு சிறந்த மருந்தாகும்.

முடக்கத்தான் கீரை

காசம் சொறி சிரங்கு கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும். இடுப்பு பிடிப்பு, இடுப்பு குடைச்சல், கைகால் வலி, கை கால் குடைச்சல்  முதலியனவற்றை குணமாக்கும் நரம்பு சம்பந்தமான  நோய்களை நீக்கும் ஆற்றலை பெற்றது. இக்கீரை நரம்பு மற்றும் தசைநார்களுக்கு வலுவூட்ட வல்லது. மூலநோய்களுக்கு சிறந்த மருந்து. 

அரைக்கீரை
   
பிரசவித்த பெண்களின் பிரசவித்த மெலிவை போக்கி உடலுக்கு சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றன. இருமல், நுரையீரல் காய்ச்சல்களை போக்கும். நீர்க்கோர்வை, குளிர் காய்ச்சல், வாத காய்ச்சல், உடலில் தேங்கும் வாய்வு வாத நீர்களைப் போக்கும். பிடரி நரம்பு வலித்தல் நரம்பு வலி சன்னி தலைவலி ஆகியவற்றை குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி கீரை

கல்லீரல், மண்ணீரல் நுரையீரல், சிறுநீரகம், ஆகிய உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இந்த உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை நீக்கி கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது. உடலில் கனத்தையும் பருமனையும் தொந்தியையும் கரைக்க விரும்புகிறவர்கள் இக்கீரையை நான்தோறும் பகல் உணவில் நான்கு வாரங்கள் தொடர்ந்து உண்டு வர பலன் கிடைக்கும். 

கருவேப்பிலை

இது உடலுக்கு பலம் உண்டாக்ககூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தை தணித்து உடல் சூட்டை ஆற்றும்  குணம் உடையது. வயிற்றோட்டம் பித்தவாந்தி உணவு செரியாமை வயிற்று உளைச்சல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

பசலைக்கீரை 

இக்கீரை நோய் தடுப்பு சக்தி உடையது. ரத்தத்தை உண்டாக்கும் நல்ல பலத்தை உடலுக்கு தரும். ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் ஆற்றலுடையது. குறைந்த மற்றும் மிகுந்த அழுத்தமாயினும் இரண்டையும் சமன்படுத்தும் ஆற்றல் பெற்றது.

சிறுகீரை  இக்கீரை உடலுக்கு வனப்பையும் அழகையும் தரும். வாதநோயை போக்கும் கல்லீரலுக்கு நன்மையைச் செய்யும். உடலில் தோன்றும் பித்த சம்பந்தமான நோய்களை இது கண்டுபிடிக்கும். விஷக்கடி முறிவாகப்  பயன்படக்கூடியது. 

சுக்கான் கீரை

வயிறு சம்பந்தபட்ட எல்லா நோய்களையும் கட்டுபடுத்தும். வாயுவுத் தொல்லைகளைப் போக்கும் சூட்டு இருமல் ஆஸ்துமா மூச்சுத் திணறல் ஆகியவற்றைக் கட்டுபடுத்தும் ஈரலுக்கு வலுவைத் தந்து பசியைத் தூண்டும் செரிமான ஆற்றலையும் பெருக்கச்செய்யும். நெஞ்செரிச்சல் கடும் பித்தம் முதலியவற்றை கண்டிக்கும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தியைக் குணப்படுத்தும் வயிற்றுச்சூட்டை  தணித்து வயிற்றில் ஜிரணமாகாத பொருட்களை ஜீரணிக்கச் செய்கிறது.

தூதுவாளைக் கீரை 

ஆஸ்தூமா நோயைக் குணப்படுத்தும் நிமோனியா, டைபாய்டு, சுபவாத சுரம் போன்ற நோய்களுக்கு இது மருந்தாகும். குளோரோமைசின் ஆன்டிபயாடிக்ஸ் போன்று மிக விரைவாகவும் வேகமாகவும் அபாயம் எதுவுமின்றி நோயாளியை பாதுகாக்கும். உடல்பலமும் முகவசீகரமும் அழகும் தரவல்லது.

பொன்னாங்கன்னி

இக்கீரையை உண்பதால் வாய்ப்புண், வாய்நாற்றம், மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மூலச்சூடு கைகால் எரிச்சல் வயிற்றெறிச்சல் ஈரல் நோய் முதலியன நீங்கும். நல்ல பசியை உண்டாக்கும். கருவிழி நோய்கள் குணமாகும்.

மணத்தக்காளி கீரை 

உடலுக்கும் அழகுக்கும் வசீகரத் தன்மையும் கொடுக்கும். இக்கீரை இதயத்திற்கு பலமும் வலிமையும் ஊட்ட வல்லது. குடல் புண்ணுக்கு ஏற்றதொரு மருந்து இது. உடம்பின் களைப்பை நீக்கி நல்ல தூக்கத்தை கொடுக்கவல்லது. தலைவலிக்கு சிறந்த மருந்து.

முருங்கைக் கீரை

நீரிழிவு வியாதியை நீக்கும் ஆற்றலுடையது. நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும் தன்மை பெற்றது. சிறுநீரை பெருக்கித் தள்ளும் ஆற்றல் கொண்டது. ரத்த விருத்திக்கு ஏற்றது. தொண்டை தொடர்பான நோய்களை நீக்கும்  

முருங்கை கீரை

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.
 
எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.

பசலைக் கீரை


கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

இக்கீரையை நன்றாக நசுக்கி, தலையில் வைத்துக் கட்டினால் உடலில் ஏற்படும் மிதமிஞ்சிய உஷ்ணத்தைப் போக்கும்.

இதன் இலைகளை நெருப்பிலிட்டு வதக்கி, வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டினால் விரைவில் குணம் கிட்டும். உடல் வறட்சியைப் போக்கும். நீர் தாகத்தைத் தணிக்கும்.மலத்தை இளக்கி, மலச்சிக்கலைப் போக்கும்.

குழந்தைகளுக்கு நீர்கோத்திருந்தால், பசலைக் கீரையைச் சாறு பிழிந்து அதில் கற்கண்டு கலந்து ஒரு வேளை ஒரு ஸ்பூன் வீதம் ஓரிரு நாட்கள் குடிக்கத் தந்தால் போதும். குணம் கிட்டும்.

உடலுறவு இச்சையைத் தூண்டும்.

கொடியில் அல்லாமல் தரையில் படரும் பசலையும் உண்டு. இது தரைப் பசலைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கீரைக்கும் ஒரே பலன்தான்.

இக்கீரை அதிக குளிர்ச்சித் தன்மை உடையது. எனவே குளிர்ச்சித் தேகம் கொண்டவர்கள் அதிகம் உண்ணக்கூடாது. கபம் கட்டும்.

குப்பை மேனி

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது.இதை யாரும் வளர்ப்பதில்லை,காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது .

*சிறு செடியாக வளரும்.குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும் இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .

*நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

*இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட  தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப்  உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

*வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம் 200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

மருத்துவ குணங்கள்:

*குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

*குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.

*குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

*குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

*குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

*குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டு வர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்து மப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

*குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)

*எப்போதும் எந்த மூலிகைகளையும் தகுந்த மருத்துவரை ஆலோசித்து பின் உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது .இது அணைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும் .

*மேலும் எந்தமூலிகையும் சுத்தி செய்தல் என்று ஒரு முறை உள்ளது .அது இன்னும் பலரிடம் ரகசியமாகவே இருக்கிறது .மேலும் மூலிகைகளின் மாந்திரிகத்தன்மை குறித்தும் பெரிய தகவல்கள் மர்மமாக உள்ளது .ஒட்டுன்னிகளைப் பற்றியும் பல தகவல் உள்ளது.

வெந்தயக்கீரை



சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. 

சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம். 

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். 

குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். 

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். 

இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். 

வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. 

சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

பச்சை நிற பருப்புக் கீரை

*பருப்புக் கீரை சுவையான கீரை. பெயருக்கு ஏற்ப, பருப்புடன் சேர்த்து உண்டால் சுவை கூடும். இந்தக் கீரையை வீட்டுத் தோட்டங்களில் எளிதாக 
வளர்க்கலாம். 

*பருப்புக் கீரையின் தண்டை துண்டாக்கி, நட்டு வளர்க்கலாம். பருப்புக் கீரை 15 செ.மீ. உயரம் வளரும். 

பச்சை நிற இலைகள் தடிமனாக இருக்கும். வேர்பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பயன்படும் பாகங்கள்

*உணவாக, இலை, தண்டு அனைத்தையும் உட்கொள்ளலாம். மருத்துவப் பயன்களுக்கு, இலை, தண்டு, வேர் அனைத்தும் பயன்படும்.

 குணங்கள்

*குளிர்ச்சி உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும், வறட்சியைப் போக்கும்.

*100 கிராம் கீரையில் நீர்ச்சத்து – 90.5 கி,
*புரதம் – 2.4 கி,கொழுப்பு – 0.6 கி,
*தாது உப்புகள் – 2.3 கி,நார்ச்சத்து – 1.3 கி,
*சர்க்கரைச்சத்து – 2.9 கி
*சுண்ணாம்புச்சத்து – 111 மி.கி.
*பாஸ்பரஸ் – 45 மி.கி.
*இரும்பு – 14.8 மி.கி.
*மாவுப்பொருள் – 2292 மி.கி.
*தையாமின் – 0.10 மி.கி.
*ரிபோஃபிளேவின் – 0.22 மி.கி.
*நியாசின் – 0.7 மி.கி.
*வைட்டமின் சி – 29 மி.கி.
*கலோரித்திறன் – 27 கலோரி

மருத்துவ குணங்கள்

*கல்லீரல் நோய், ரத்த பேதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. பித்தக் கோளாறுகளுக்கு நல்லது. கல்லீரல் வீக்கத்தை போக்கும்.
இதற்கு பருப்புக் கீரையுடன் கீழாநெல்லியை சமபாகம் எடுத்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உட்கொண்டால் கல்லீரல் வீக்கம் குறையும். 

*பருப்புக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பித்த தலைசுற்றல் முதலிய பித்தக் கோளாறுகள் நீங்கும்.குடல் வறட்சியை நீக்கி, மலத்தை இளக்கும்.
இதன் இலையையும், விதைகளையும் அரைத்து பூசினால், தீப்புண்கள் விரைவில் ஆறும்.

*சீத பேதியை கட்டுப்படுத்த அரைத்த கீரையுடன் வெங்காய சாற்றையும் சேர்த்து உட்கொள்ளலாம்.தண்டை அரைத்து கை, கால் எரிச்சலுக்கு 

தடவலாம்.இலைகளை பிழிந்து சாறு எடுத்து, அதில் மஞ்சள் பொடியை கலந்து உடலில் ஏற்பட்ட கட்டி, வீக்கம் இவற்றில் தடவி வர, கட்டி 
வீக்கம் குறையும்.

*பருப்புக் கீரை வயிற்று கிருமிகளை அழிக்கும்.பருப்புக் கீரை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். 
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

Sunday, November 11, 2012

ஆவாரம் பட்டை

அரைப்பலம்  ஆவாரம்ட்டையை நன்றாய் இடித்து ஒரு பாத்திரதஙதல் போட்டு 3டம்ளர் தண்ணீர் விட்டு  அடுப்பில் வைத்து எரித்து பின்னர் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் போன்றவை குணமாகும். 

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes