‘‘எப்படி இருக்கிறீர்கள் ஜாபர்?’’
‘‘இறையருளால் நலமாக இருக்கிறேன் இறைத்தூதர் அவர்களே!’’
‘‘நீங்கள் திருமணம் முடித்துவிட்டீர்கள்தானே?’’
‘‘ஆம். என்னை விட வயதில் மூத்த ஒரு விதவையைத்தான் மணமுடித்துள்ளேன்.’’
‘‘ஏன் அப்படிச் செய்தீர்கள்? நீங்கள் இளைஞர்தானே? ஒரு கன்னிப் பெண்ணாகப் பார்த்து முடித்திருக்கலாமே?’’
‘‘முடித்திருக்கலாம்தான். ஆனால், எங்களுக்குத் தாய், தந்தை இரண்டுபேரும் இல்லை. எனக்கு ஒன்பது சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ளவும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் சற்று வயது கூடிய பெண் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு விதவையை மணமுடித்தேன்.’’ அந்தச் சகோதரனின் தியாக உள்ளத்தை நினைத்தோ என்னவோ நபிகளார் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தார்: ‘‘உங்களுடைய இந்த ஒட்டகத்தை எனக்கு விலைக்குத் தருவீர்களா ஜாபர்?’’
‘‘விலை எதற்கு இறைத்தூதர் அவர்களே? நீங்கள் விரும்பினால் இதை இலவசமாகவே தருகிறேன்.’’ ‘‘வேண்டாம். விலைக்குத் தருவதாக இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.’’ ‘‘சரி. நீங்களே ஒரு விலை சொல்லுங்கள்.’’ நபிகளார் மிகக் குறைவாக ஒரு தொகையைக் குறிப்பிட்டார். உடனே ஜாபர், ‘‘என்னதான் மெலிந்த ஒட்டகமாக இருந்தாலும் இவ்வளவு குறைவான தொகைக்கு எப்படித் தரமுடியும்? நீங்கள் இதை இலவசமாகவே எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.
நபிகளார் சிரித்துக்கொண்டே விலையை இன்னும் சற்றுக் கூட்டினார். அதுவும் குறைவே என்று ஜாபர் சொல்ல, விலையை இன்னும் அதிகப்படுத்ததி னார். இப்படியே அதிகப்படுத்தி, அதிகப்படுத்தி நல்ல கணிசமான தொகையுடன் அந்தப் பேரம் முடிந்தது. நல்ல விலைக்கு ஒட்டகத்தை விற்றுவிட் டோம் என்று ஜாபருக்குத் திருப்தி.
விலை முடிவானதும் ஜாபர் ஒட்டகத்திலிருந்து இறங்கி அதை நபிகளாரிடம் ஒப்படைத்தபோது, நபிகளார் அவரைத் தடுத்தார். ‘‘நீங்கள் ஒட்டகத்துடன் வீடு செல்லுங்கள். நான் பணத்தைக் கொடுத்த பிறகு ஒட்டகத்தைப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார். நபிகளார் தம் வீடு வந்ததும் தோழர் பிலாலை அழைத்து, ‘‘இந்தப் பணத்தை ஜாபரிடம் கொடுத்து விடுங்கள். அவரிடமிருந்து நான் வாங்கிய ஒட்டகத் தையும் அவருக்கே அன்பளிப்பாகத் தந்துவிட்டேன் என்றும் சொல்லிவிடுங்கள்’’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
நபிகளாரின் அற்புதமான அணுகுமுறை இது. வறுமையில் வாடும் ஓர் இளைஞரின் சுயகௌரவத்திற்குச் சற்றும் ஊறு விளைவிக்காமல், அந்தக் கு டும்பத்தின் வறுமையைப் போக்க எப்படி உதவி செய்தார் பாருங்கள்! ஏழைகளின் தன்மானம் பாதிக்கப்படாமல் இதுபோன்ற வழிமுறையை நாமும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
‘‘உங்கள் செல்வத்தை (அறவழியில்) செலவிடுங்கள். இது உங்களுக்கே சிறந்ததாகும். தம்முடைய உள்ளத்தின் கஞ்சத்தனத்தைவிட்டு யார் விலகி இருக்கிறார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்’’(குர்ஆன் 64:16).



7:00 PM
முஹம்மது பாரி
Posted in:
தி
கொ
4. ஒவ்வொரு கலர் காய்கறியிலும் ஒவ்வொரு வகையான சத்து உண்டு. அதுவும் அடர் நிறங்களை வாங்குவது அதிக பயனளிக்கும். எனவே, நிறக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
7. இப்போதெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் வெளிநாட்டு இறக்குமதிக் கடைகளில் எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளோடு சீஸ், பட்டரைத் தொட்டுச் சாப்பிடுவது மிகப் பிரபலமாக இருக்கிறது. ஆனால், இந்த சீஸ், பட்டர் போன்றவை சிக்கனுடன் ஒப்பிட்டால்... சுமார் பத்து மடங்கு அதிக கொழுப்பு உடையவை. இது உடல் எடை அதிகரிக்கவும், கேன்சர் போன்ற நோய்கள் வந்து குடியேறவும் காரணமாகிவிடும். எனவே, தவிர்க்க வேண்டியது அவசியம்.
9. சதா குளிர்பானங்களையே குடித்துக் கொண்டிருப்பவர்கள், மாபெரும் ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை நிறமி, இனிப்பு, எக்கச்சக்க கலோரி என குளிர் பானங்கள் உடலுக்கு சர்வ நிச்சயமாக சிக்கல் உண்டாக்குபவை. 'ஆஸ்டியோபோரோசிஸ்' எனும் எலும்புச் சிதைவு, பற்சிதைவு, உடல்பருமன் அதிகரித்தல், இதய நோய் என பல நோய்களை இது அழைத்து வரும்.
11. சில வகை சாக்லேட்களைச் சாப்பிட்டாலே போதும்... வேறு உணவே தேவை-- யில்லை என்று நினைத்து அடிமையாகிவிடாதீர்கள். அவற்றில் சில வைட்ட--மின்கள் இருந்தாலும், அவையும் அதிக இனிப்பு சாக்லேட் போலதான். எனவே ஐஸ்கிரீம், சாக்லேட்... இவற்றையெல்லாம் ஆசைப்பட்டால் எப்போதேனும் சுவைக்கலாமே, தவிர அடிக்கடி சாப்பிடக் கூடாது.
14. போரடிக்கும்போது சாப்பிடுவதற்கு பக்கத்திலேயே ஒரு பிஸ்கட், சிப்ஸ், ஸ்நாக் பாக்கெட் வைத்திருக்க வேண்டாம். அதற்குப் பதிலாக நல்ல திராட்சை பழம் நூறு கிராம் வைத்திருங்கள். நூறு கிராம் திராட்சையில் வெறும் 70 கலோரிதான் உண்டு. அதற்காக அதை அதிகமாக விழுங்கவும் வேண்டாம். காரணம், அதில் சுகர் அதிகம்.
18. சிவப்பு இறைச்சிகளை ஒதுக்குங்கள். அவை ஆகவே ஆகாது. தவிர்க்க முடியாத சூழலில் கொஞ்சம் போல் சாப்பிட்டுவிட்டு, நகர்ந்துவிடுங்கள்.
23. தக்காளி, கேன்சர் வராமல் தடுக்கும் ஒரு நல்ல உணவு. குறிப்பாக நுரையீரல், வயிறு, தோல், புரோஸ்டேட் சுரப்பி, கிட்னி போன்ற இடங்களில் கேன்சர் வராமல் இது தடுக்கும். இத்துடன் ஆப்ரிகாட், கொய்யா, தர்பூசணி, பப்பாளிப்பழம், கறுப்பு திராட்சை இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
30. வைட்டமின் சி, ஆண்களுக்கு நல்ல உணவு. தினமும் 500 முதல் 1,000 மில்லி கிராம் வரை வைட்டமின்-சி உடலில் சேர்ந்தால் உயிரணுக்கள் வலிமையடையும். திராட்சை,பெப்பர், ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் நிரம்பியுள்ள எலுமிச்சை போன்ற பழங்கள் வைட்டமின்-சி நிறைந்தவை.
33. மாங்கனீஸ் சத்து, உடலின் ஆஸ்ட்ரோஜின் (Estrogen) சுரப்புக்கு நல்லது. குறிப்பாக, பெண்களின் தாய்மைப்பேறை இது ஊக்குவிக்கும். மாங்கனீஸ் குறைந்தால், குழந்தை பெறும் வாய்ப்பும் குறையத் துவங்கும். கீரை, முழு கோதுமை, அன்னாசிப் பழம், பீன்ஸ், பட்டாணி, முந்திரி... இவற்றிலெல்லாம் மாங்கனீஸ் சத்து உண்டு.
37. எலுமிச்சைப் பழச்சாறை 'லிவர் டானிக்' என்பார்கள். லிவரின் செயல்பாட்டை முறைப்படுத்தும். இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் அஜீரணக் கோளாறுகளெல்லாம் போய்விடும். குமட்டல், வாந்தி போன்றவற்றுக்கும் இது நல்லது.
40. 'ஆலியம் வெஜிடபிள்ஸ்' என அழைக்கப்படும் பூண்டு, வெங்காயம், சீவ்ஸ், லீக், ஸ்கேலியன் (கடைசி மூன்றும் நீளமான வெங்காய தண்டு போல் இருக்கும்)... இவையெல்லாம் தசைகளை வலுவாக்கும். இவற்றைச் சமைக்காமல் சாண்ட்விச், சாலட் என கலந்து கட்டி உண்டால் முழுப் பயன் கிடைக்கும்.
44. சாப்பிட்ட உடனே போய் குளிப்பது நல்லதல்ல. அதுவும் அஜீரணக் கோளாறுகளைத் தந்து விடக்கூடும். சாப்பிட்டதும் ஒரு 'தம்' பத்த வைப்பது, தம் பிரியர்களின் தலையாய கடமை. அது பயங்கர ஆபத்தை அழைத்து வரும். சாப்பிட்டபின் ஒரு தம் அடிப்பது, பத்து தம் அடிப்பதற்குச் சமம்.
47. நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் சில உணவுப் பழக்கங்களை வைத்திருப்பதாக பேட்டியளிப்பார்கள். அவற்றைக் கடைபிடித்தால் அவர்களைப் போல நாமும் ஆகி விடலாம் எனும் கனவு சிலரிடம் சுழற்றியடிக்கும். அதெல்லாம் வெறும் 'மாயா... மாயா'தான். அந்த சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். அப்படி உங்களுக்கு ஏதேனும் தேவையெனில் ஒரு நல்ல டயட்டீஷியனைப் பார்ப்பதே நல்லது.
49. வெறும் டயட் இருந்தால் போதும் என நினைப்பதே தப்பு. கூடவே, தொடர்ந்த உடற்பயிற்சி நிச்சயம் வேண்டும். அதற்கென நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வேலையிலேயே உடற்பயிற்சியைப் பாகமாக்கிக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் ஒரு ஸ்டாப்பிங் முன்னாடியே இறங்கி நடப்பது, லிஃப்ட் பக்கமே போகாமல் படியை நாடுவது, அடிக்கடி எழுந்து ஒரு நடை போடுவது... இப்படி!
52. டயட் இருப்பவர்கள் மறந்து விடும் சமாசாரங்களில் ஒன்று... டிரிங்க்ஸ். அவ்வப்போது ஒரு 'சிப்' ஜூஸ் குடித்தாலோ, ஒரு குளிர்பானம் குடித்தாலோ அதுவும் கணக்கில் சேரும் என்பதை அம்மணிகள் கணக்கில் கொள்ள வேண்டியது முக்கியம்.


63. தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் முக்கியத் தேவை... கால்சியம். அதற்கு தயிர் ஒரு நல்ல உணவு. கூடவே, அடர் பச்சை நிற காய்கறிகளையும் தாராளமாக உண்ணுங்கள். பெண்கள் சிறு வயதிலிருந்தே போதுமான அளவு கால்சியம் உட்கொள்வது அவசியம். அது பிற்காலத்தில் அவர்களை எலும்புச் சிதைவு போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றும்.
67. ஒரு உண்மை தெரியுமா? நல்ல ஆரோக்கியமான உணவை, சரியான அளவில் உண்டால் மனம் ரொம்பவே மகிழ்ச்சியாகி விடும். தலைகீழாகி விட்டால் மன அழுத்தம், உடல் சோர்வு என இல்லாத தலைவலி எல்லாம் வந்து சேரும். எனவே 'உண்பதைத் திருந்த உண்' என்பதை மனதில் கொள்ளுங்கள்.

76. புரோக்கோலி பெண்களுக்கான வரப்பிரசாதம் எனலாம். பெரிய மார்க்கெட்களில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கவலைப்படாமல் வாங்கி உண்ணுங்கள். பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு என பெண்களின் எலும்புக்கு உத்தரவாதம் தருகிறது புரோக்கோலி. தினமும் 200 கிராம் புரோக்கோலி சாப்பிட்டால் எண்பது வயதிலும் எலும்பு ஸ்ட்ராங்காக இருக்கும்!
81. அல்சீமர் போன்ற வயதானவர்களுக்கு வரைக்கூடிய நினைவை வலுவிழக்கச் செய்யும் நோய்களை, மீன் உணவை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் தவிர்க்கலாம்.

89. 'மூளை வளர்ச்சிக்கு வெண்டைக்காய் நல்லது' என்பார்கள். அதுமட்டுமல்ல... நார்ச்சத்து மிக்கதான இந்தக் காய், நாள்பட்ட கழிச்சலை நீக்கும் தன்மை கொண்டது. தொண்டை எரிச்சல், உடல் சூடு, நாக்கில் சுவையின்மை போன்றவற்றை குணமாக்கும்.
92. 'மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்' என்றொரு வாசகம் உண்டு. அதாவது, மண்ணுக்குள் விளையும் கிழங்குகளில், கருணைக்கிழங்கு மட்டும்தான் அதிகமான நார்ச்சத்து உள்ள கிழங்காகும். இது மலச்சிக்கலை உண்டாக்குவது இல்லை. மூல நோயாளிக்கு சிறந்தது. இந்தக் கிழங்கில் உள்ள 'காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்' எனும் பொருள், மெதுவாக ரத்தத்தில் சேரும் இயல்பு கொண்டதால்... சர்க்கரை குறைபாடுள்ளோரும் கருணைக்கிழங்கைச் சாப்பிடலாம்.
97. 'நான் எந்த வேலையும் செய்வதில்லை. சதா தியானம், யோகா என்றே இருக்கிறேன். எனவே, எனக்கு எந்த சக்தியும் தேவையில்லை' என்று இருந்தால்... ஆபத்துதான். உடலில் இதயம், மூளை, நுரையீரல் போன்றவை சதா இயங்கிக் கொண்டே இருக்கும். அவற்றுக்கு நிச்சயம் அடிப்படையான சக்தி தேவை என்பதை மறந்துவிடவேண்டாம்.












