Friday, April 27, 2012

இயற்கையின் ரம்மியமான சில காட்சிகள்

 

Some nice scenes from nature

து.ரஜனி,ரஜனி, து.நாகரஜனி, நாகரஜனி, T.Nagarajani, Nagarajani, T.Rajani, Rajani, Rajani Thurai, து.பவன்,து.அருள்பவன்,அருள்பவன்,பவன்,து.அருள், T.Arulbavan, T.Bavan, T.Arul Bavan, Arul Thirumalai, Arulbavan, , Arulbavan Thurai,து.அருணோதினி,அருணோதினி,அருணா,T.Arunothini, T.Aruna, Aruna, Arunothini, Aruna Thurai,Arunothini ,Trincomalee,Sri Lanka


Monday, April 9, 2012

இந்திய வங்கிகளில் முஸ்லிம்கள் நிராகரித்த 75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்


ஒரு அரசு சட்டங்கள் இயற்றும் போதும் திட்டங்கள் தீட்டும் போதும் எந்த மக்களின் நலனிற்காக இவற்றை இயற்றுகிறதோ அந்த மக்களின் இயல்போடு ஒத்துப் போகின்ற வகையில் அந்த சட்டங்களும், திட்டங்களும் இயற்றினால் தான் அது வெற்றி பெறும். இல்லையென்றால் அது வெற்றி பெறாது என்பதற்கு நமது நாட்டில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதுவும் இந்தியாவைப் போல மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக, மாநில ரீதியாக, மொழி ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபாடுகளை அதிகம் கொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் மிகவும் கவனமாக பல ஆய்வுகளின் அடிப்படையில்   தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான் அது வெற்றி பெறும்.

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மதச்சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாதவங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருந்தகாரணத்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக 2005ல் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட – RBI Legal News and Views என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2005ஆம் ஆண்டே 75 ஆயிரம் கோடி முடங்கிக் கிடந்தது என்றால், கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கி கிடந்தது என்றால் இப்போது இந்த தொகையின் அளவு என்னவாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆக, முஸ்லிம்களின் மார்க்கம் மிகக் கடுமையாக தடை செய்துள்ள, பெரும்பாவங்களில் ஒன்று என்று எச்சரிக்கை செய்துள்ள, வட்டி அடிப்படையிலான இந்திய வங்கியியல் நடைமுறைதான் இவ்வளவு பெரிய தொகையை முஸ்லிம் சமூகம் நிராகரித்ததற்கான அடிப்படைக் காரணம்.
வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டி கணக்கு எழுதுவது, அதற்கு சாட்சியாக கையெழுத்திடுவது அனைத்தும் பெரும் பாவம் என்று இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக்குகிறது. முழுவதும் வட்டி அடிப்படையிலான வங்கியியல் நடைமுறை காரணமாக முஸ்லிம்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் கூட பிற எல்லா சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்னுக்கு இருக்கிறார்கள். இதனால் இந்த சமூகம் பொருளாதார ரீதியாகமுன்னேறிய சமூகமாக மாறுவதற்கு, முஸ்லிம் சமூகத்தவர் பெரிய பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கு, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு, பங்குகள் மூலம் பெரிய அளவிலான நிதியைத் திரட்டி பெரும்தொழில் செய்வதற்கு,  ஏழைமாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு என்று பிற சமூகங்களைப் போல  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கு தடையின்றி செயல்பட இயலாத நிலையில் உள்ளது. மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவிற்கு இன்றைய வங்கியியல் நடைமுறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
முஸ்லிம்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள். மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் கிளைகளை ஙிலிகிசிரி லிமிஷிஜிணிஞி கிளைகளாக அந்த வங்கிகளின் தலைமையகம் வைத்துள்ளது. முஸ்லிம்கள் இன்றைய வங்கிகளோடு நெருங்கி பரிவர்த்தனை செய்யாதது தான் இதற்குக் காரணம் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றம் என்பது நாட்டு மக்கள் அனைவரது சமூக – பொருளாதார – கல்வி முன்னேற்றத்தில் தான் அடங்கியுள்ளது. 110 கோடி இந்திய மக்களில் ஏறக்குறைய 25 கோடிமக்களை புறக்கணித்து விட்டுஅல்லது அவர்களின் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. இதைஉணர்ந்த டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்றைய வங்கியியல் நடைமுறைக்கு மாற்றாக இருக்கக்கூடிய வட்டியில்லா – வங்கியின் நடைமுறை குறித்து ஆய்வு செய்திட மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஆனந்த் சின்ஹா அவர்களது தலைமையில் ஒரு குழுவை அமைத்தது ரிசர்வ் வங்கி. இந்தக் குழு 2006ல் தந்த அறிக்கையில் இன்றைய சூழலில் தற்போதைய ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட வட்டியில்லா வங்கி இந்தியாவில் அமைப்பது சாத்தியமில்லை என்று அறிக்கை தந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் பொதுவுடமை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூகஇயக்கங்களின் இடைவிடாத பெரும் முயற்சியின் காரணமாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இதில் சிறப்புக் கவனம் எடுத்துள்ளார்கள்.
தற்போதைய பொருளாதார சிக்கல்களிலும் உலகளவில் வட்டியில்லா வங்கிகளின் வெற்றியைத் தொடர்ந்து மத்தியரிசர்வ் வங்கியும் இந்த வட்டியில்லா – வங்கியை இந்தியாவில் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் வி.ஙி.ழி  ராவ் அவர்கள் “நாங்கள் வட்டியில்லா வங்கியின் செயல்பாட்டினை ஆய்வு செய்து வருகிறோம் ரிசர்வ் வங்கியின் வரைவு செயல் திட்டத்திற்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். நேரடியாக இந்தியாவில் வட்டியில்லா வங்கிகளை அனுமதிப்பதா அல்லது தற்போதைய பொதுத்துறை வங்கிகளிலேயே ஒரு வட்டியில்லா வங்கி கவுண்டரை திறப்பதா என்ற விவாதங்கள் நடந்து வரும் வேளையில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் ரஹ்மான்கான் அவர்கள் ஒரு அருமையான திட்டத்தை பிரதமர் அவர்களிடம் அளித்துள்ளார்.
மலேசியாவில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாபுங் ஹாஜி என்ற நிறுவனம் மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. அதாவது ஹஜ்ஜுக்கு செல்ல நிய்யத் செய்தோர் இந்த வங்கியில் பணம் சேமிப்பதற்கான திட்டம் இது முழுக்க ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
மலேசியாவில் வெற்றிகரமாக செயல்படும் தாபுங் ஹஜ் என்ற இந்த நிறுவனம் ஹஜ் செல்வோர் சேமிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கிறது. முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்த தொழில் முதலீடு நடக்கிறது. மிகப்பெரிய நிறுவனமாக இன்று வளர்ந்துள்ளது. இதே போன்ற ஒரு நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி முஸ்லிம்களின் பணத்தை சேமிப்பதற்கு அதை “லாப – நட்டத்தை பகிர்ந்து கொள்ளுதல்” என்ற அடிப்படையில் பல்வேறு தொழில்களில் ஷரியத் சட்டத்திற்குட்பட்டு முதலீடு செய்தால் மிகப்பெரிய பொருளாதார புரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்துள்ளார் ரஹ்மான்கான். பிரதமர் அவர்களும் அமைச்சரவைச் செயலாளரிடம் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்யுமாறு பணித்துள்ளார்.

இது குறித்து ரஹ்மான் கான் கூறுகின்ற போது “இந்த திட்டம் குறித்து பல அறிஞர்களிடமும் உலமாக்களிடமும் கலந்து பேசியதில் அனைவருமே ஆதரவு தெரிவிக்கின்றனர். இது போன்ற நிறுவனத்தை தொடங்கி சோதனை செய்த பிறகு முழுமையான இஸ்லாமிய வங்கியை தொடங்கலாம்” என்றார். அமெரிக்க வங்கிகளில் கோடிக்கணக்கான டாலர்களை போட்டு வைத்திருந்த அரபு நாடுகள், அந்த நாடுகளின் தொழிலதிபர்கள்; செப்.11 தாக்குதலுக்கு பிறகான அரசியல் போக்கின் காரணமாக பெருமளவு பணத்தை திருப்பி எடுத்ததும் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இப்படி திருப்பி கொண்டு வரப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலர்களை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைத் தேடி வருகின்றார்கள் என்ற செய்தி மத்திய கிழக்கிலிருந்து வரும் பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது. இந்த நேரத்தில் இந்தியா வட்டி இல்லாத வங்கியை தொடங்கினால் இந்த அன்னிய முதலீடு   பெருமளவு இந்தியாவில் முதலீடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நமது ட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கேரள மாநில அரசு இதற்கான வேலையைத் தொடங்கிவிட்டதை நாம் சென்ற இதழிலேயே செய்தி வெளியிட்டிருந்தோம். மனிதனுக்கு எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்பதை மனிதனால் முடிவு செய்ய இயலாது. மனிதனை படைத்த இறைவனால் தான் முடியும்.
Thnxs:http://www.samooganeethi.org/?p=58

ரத்தக்கட்டுக் காயங்களை அலட்சியப்படுத்த வேண்டாம்


சாதாரணக் காயம்தானே’ என்று நாம் கவனிக்காமல் விட்டுவிடும் சின்னக்  காயங்கள்கூட சில நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். அந்த வகையைச் சேர்ந்ததுதான் ரத்தக்கட்டு.
விளையாடும்போதோ, எங்கேயாவது இடித்துக்கொள்ளும்போதோ அல்லது தவறி விழும்போதோ வெளிப்புறமாக ஏற்படுவதுதான் இந்த ரத்தக்கட்டு. ரத்தக்கட்டுக் காயங்களை அலட்சியப்படுத்தினால், நாளடைவில் அந்த இடத்தில் ரத்த அழற்சி ஏற்பட்டு, கட்டிகளாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட பகுதியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலைகூட ஏற்படலாம்'' என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன்.
உடல் உறுப்புகளில் அடி ஏற்படும்போது, தோலுக்கு அடியில் உள்ள மெல்லிய 'முடிவு ரத்த நாளங்கள்’மற்றும் தசை செல்களில் சிதைவு ஏற்படும். இதனால், தோல் பகுதியைக் கிழித்துக்கொண்டு ரத்தம் வெளியேற முடியாமல் தோலுக்கு உள்ளேயே தேங்கி நின்றுவிடும். இதைத்தான் ரத்தக்கட்டு    (Hematoma) என்கிறோம்.
பொதுவாகக் காயம் ஏற்பட்டவுடன் அதைக் குணப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்தில் நிணநீர் (Lymph)  வந்து சேரும். காயமானது சிறிய அளவில் இருந்தால் நிணநீர் மூலம் தானாகவே குணமாகிவிடும். ஆனால், காயம் வலுவானதாக இருந்தாலோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ, இது சாத்தியம் இல்லை. இதுபோன்ற சூழலில் ரத்தக்கட்டைக் கரைக்க நிறைய வழிகள் இருக்கின்றன.
முதலில் அடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
ஆமணக்கு இலை, நொச்சி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, விளக்கெண்ணையில் வதக்கி, வெள்ளைத் துணியில் வைத்துக் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இதற்கு வீக்கத்தை உருக்கி ரத்தக்கட்டைப் போக்கும் தன்மை அதிகம்.
வெறும் விறலி மஞ்சளைப் பொடி செய்து, அரை ஸ்பூன் பொடியினை ஒன்றரை கப் தண்ணீரில் கலந்து, இளஞ்சூடாக்கி ரத்தக்கட்டு உள்ள இடத்தின் மேல் பத்து போடலாம். மஞ்சளுக்கு ரத்தக்கட்டைக் குணமாக்கும் தன்மை உண்டு.
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் அமுக்கிராங்கிழங்குச் சூரணத்தை வாங்கி, ஒரு கோப்பை பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நாட்கள் குடித்து வர, ரத்தக்கட்டு கரைந்துவிடும். அமுக்கிராங் கிழங்குச் சூரண மாத்திரைகளும் சாப்பிடலாம்.
கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து அதில் கால் ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, பொடி அரிசிக் கஞ்சியில் போட்டுவேகவைத்துக் குடிக்கலாம். ஆனால், கர்ப்பிணிகளோ, கருத்தரிக்கும் நேரத்தில் உள்ள பெண்களோ கருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் அக்கறையோடு.

இரத்த அழுத்தத்தை குணமாக்கும் சீரகம்

ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும் திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து பருகவேண்டும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் அதிகரிக்காது. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
******************************************************************************
‌சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.
வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்
***************************************************************************
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
மந்தத்தைப் போக்கும், நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறு விட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
திராட்சைப் பழச்சாறுடன் சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

*******************************************************************************************
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை,
நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச்
செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

Wednesday, April 4, 2012

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு

ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில், ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.

இயற்கை உணவுகள்:

ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:
ஒமீகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது.

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.

“சென்ஈஸ்ட்ரோஜன்களை’ தவிர்க்க வேண்டும்:

ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன என்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

கண் பார்வையைத் தூண்டும் காரட்




க்களின் அன்றாட உணவு முறைகளில் கீரைகள், காய்கள், கிழங்குகள் இடம் பெற்று வந்தால் அதுவே பிணித் தடுக்கும் மருந்தாகவும் செயல்படும்.

இத்தகைய உணவுகளை புறம் தள்ளி எண்ணெயில் வறுத்த உணவுகள். பதப்படுத்தப் பட்ட உணவுகள் என பல உணவுகளை இன்று அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். போதாக்குறைக்கு வைட்டமின் டானிக், மாத்திரை என உட்கொள்கின்றனர். இவை யாவுமே உடலுக்கு வலுவும், ஊக்கமும் தரக்கூடியவை அல்ல.

இயற்கையாக பறித்த காய்கறி, கீரைகளை உண்டு வந்தால் அவைதான் உடலுக்குத் தகுந்தவாறு ஈர்க்கப்பட்டு நோயில்லா வாழ்வைக் கொடுக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கீரைகள், காய்கள் கிழங்குகளில், கிழங்குகள் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் காரட் பற்றி அறிந்து கொள்வோம்.

பொதுவாக காரட் மலைப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. இது கிழங்கு வகைகளைச் சார்ந்தது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக காரட் பயன்படுகிறது. இதில் அதிகளவு உயிர்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சமைத்தும் சாப்பிடலாம். அல்லது பச்சையாக சாலட் செய்தும் சாப்பிடலாம். அதுபோல் ஜூஸ் செய்தும் அருந்தலாம். தற்போது காரட் ஜூஸ் மிகவும் பிரபலமாக உள்ளது.

காரட் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாகக் காணப்படும். 5 முதல் 10 செ.மீ. நீளம் உள்ள கிழங்காக இருக்கும். மண்ணுக்குள் பல சில்லடை வேர்களைக் கொண்டது.

குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் மிகவும் சிறந்த சத்து நிறைந்த உணவாக காரட் உள்ளது.

கண் பார்வை தெளிவு பெற:

காரட்டில் வைட்டமின் “இ’ சற்று அதிகம் நிறைந்துள்ளது. அதுபோல் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக்கண் போன்றவற்றை போக்கும் குணம் உண்டு. கண் பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மையைப் போக்கி கண் பார்வையை அதிகரிக்கிறது. 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்து தொந்தரவுக்கும் நிரந்தர முடிவுகட்ட காரட் உதவுகிறது.

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாமல் கண்களை பாதுகாக்கும் காவலனாக காரட் எப்போதும் பயன்படும். காரட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாக அடிக்கடி உண்டு வந்தால் கண் பார்வை கூர்மையாக்கும். முதுமையில் உண்டாகும் கண் நோய்களையும் குணப்படுத்தும்.

எலும்புகள் வலுவடைய:

எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலம் கொடுப்பவை. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இத்தகைய சத்துக்களை அதிகம் கொண்டது காரட். முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட காரட்டை உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலவீனம் குறைந்து பலப்படும்.

மலச்சிக்கல் தீர:

மலச்சிக்கலே மனிதனுக்கு நோயின் வாசலாகும். மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம். செரிமானக் கோளாறு ஏதும் வராமல் தடுத்து உண்ட உணவை செரித்து மலத்தை சீராக வெளியேற்ற போதுமான நார்ச்சத்து காரட்டில் உள்ளது. காரட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்குவதுடன் மூலநோயின் தாக்கமும் குறையும்.

காரட்டின் மேல் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அல்லது திருகி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். வாய்வு தொந்தரவுகள் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறும். வாய் நாற்றம் நீங்கும்.

* காரட் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் இரும்பு சத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் கலந்து நச்சுக்களை வெளியேற்றும். இரத்த அழுத்ம், இதயநோய் அணுகாமல் காக்கும்.

* சருமத்திற்கு பொலிவைத் தரும்.

நரம்புகள் பலப்பட:

மூளைச் சூட்டைத் தணித்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு மிகவும் ஊட்டசத்து மிக்க உணவாகவே காரட்டை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் இழப்பை சரிசெய்ய காரட் உதவுகிறது.

மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு காரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.
காரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளபக்கும்.

காரட்டில் தலைமுடி உதிர்வதை தடுக்கும் குணம் உள்ளதாக ஜெர்மன் பல்கலைக்கழக இயற்கை உணவு ஆராய்ச்சிக்கழகம் அண்மையில் கண்டறிந்துள்ளது.

குழந்தைகளுக்கு:

காரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பசும் பாலில் போட்டு அவித்து எடுத்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் பலப்படும். வளர்ச்சி சீராகும். இளைப்பு நீங்கி உடல் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பெரியவர்கள்:

காரட்டை பசும் பாலில் அவித்து அதனோடு காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காரட்டை நாமும் உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்

மலரும் மருத்துவமும் வாழைப் பூ

மலரும் மருத்துவமும் வாழைப் பூ...


பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். தோட்டங்களிலும் சாகுபடி செய்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. அகத்தியர் பெருமான் குணபாடத்தில் எட்டு வகை வாழையைப் பற்றியும் அதன் குணங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்களைப் பற்றி சித்தர்கள் அகத்தியர் பெருமான்
வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டை பித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - ஆழியனல்
என்னஏரி கைகால் எரிவுந் தொலைத்துடலில்
மன்னவளர்க் குத்தாறுவை
- அகத்தியர் குணபாடம்

பொருள் : குருதிமுனை, வெள்ளை, வெறி உடல் கொதிப்பு, சீதக்கழிச்சல் எருவாய்க் கருப்பு, இருமல், கை, கால் எரிச்சல் இவைகளைப் போக்கும் ஆண்மையைப் பெருக்கும். வாழைப்பூ துவர்ப்புத் தன்மை கொண்டது.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க:

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு:

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

Tuesday, April 3, 2012

ககோவ்' என்ற பறவை பெர்முடா பெட்ரல் என்றும் அழைக்கப்படுகிறது

ககோவ்' என்ற பறவை பெர்முடா பெட்ரல் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இது பெர்முடா தீவுகளில் மட்டும் காணப்படுகிறது. இந்தப் பறவை இயற்கை ஆய்வாளர்களுடன் கடந்த 300 ஆண்டுகளாக `கண்ணாமூச்சி' விளையாடி வந்திருக்கிறது. இந்தப் பறவை இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று நினைக்கப்படும் போதெல்லாம் சில பறவைகள் கண்ணில் தென்படும்.

ஒரு காலத்தில் பெர்முடா தீவுகளில் மிக அதிகமாகக் காணப்பட்ட இப்பறவைகள், இங்கு குடியேறிய ஆங் கிலேயர்களுக்கு நல்ல உணவாகின. குறிப்பாக 17-ம் நூற்றாண்டில் இடையிடையே கடுமையான உணவுப் பற் றாக்குறை ஏற்பட்டபோது `ககோவ்' பறவையே முக்கிய உணவானது. அப்புறம் அப்பறவைகள் கண்ணில் படாமல் போக, அவை முற்றிலுமாக அழிந்துவிட்டதாகக் கரு தப்பட்ட நிலையில் 1916-ம் ஆண்டு மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து மறுபடி காணாமல் போன அவை 1951-ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டன. அப்போது ஒரு தீவுத்திட்டில் 18 ஜோடி கள் மட்டும் இருந்தன. `டி.டி.டி.' என்ற பூச்சிக்கொல்லி மற்றும் வீட்டு விலங்குகள் பெர்முடா தீவில் அறிமுகப் படுத்தப்பட்டதன் விளைவாக `ககோவ்' பறவைகள் அழிந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

அடுத்து, பெர்முடாவின் வனக் கட்டுப்பாட்டு அலுவலர் டேவிட் விங்கேட் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார். பெர்முடா தீவுக்கு வரும் வெப்பமண்டலப் பறவைகள் `ககோவ்' பற வைகளை அழித்து அவற்றின் கூடுகளை ஆக்கிரமிப்பதை அவர் அறிந்தார். எனவே `ககோவ்' பறவைகளின் கூடுகளை பெரிய வெப்பமண்டலப் பறவைகள் நெருங்காமல் தடை களை ஏற்படுத்தினார்.

அதன்விளைவாக, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் `ககோவ்' பறவைகளின் எண்ணிக்கை 126 ஜோடிகளாக அதிகரித்துள்ளது.

இரட்டைத்திமில் ஒட்டகம்

இரட்டைத்திமில் ஒட்டகம் (Camelus bactrianus) என்பது இரட்டைத் திமில் கொண்ட, பாலூட்டி விலங்கினத்தைச் சேர்ந்த ஒட்டகம் ஆகும். இவ் ஒட்டகங்கள் ஈடான சுமை தாங்கும் இரட்டைக் குளம்புகளைக் கொண்டுள்ளன. இவை சீனாவின் வடக்கேயும், மங்கோலியாவிலும் உள்ள கோபி பாலைநிலப்பகுதியில் வாழ்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, கிரேக்க மொழியில் பாக்ட்ரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் கி.மு 2500 ஆண்டளவில் இந்த இரட்டைத் திமில் ஒட்டகம் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டது (கொல்லைப்படுத்தப்பட்டது) என்று நினைப்பதால், இதனை பாக்ட்ரிய ஒட்டகம் என்றும் அழைப்பர். பெரும்பாலும் காணப்படும் ஒற்றைத்திமில் ஒட்டகம் கி.மு 4000 ஆண்டளவில் வளர்ப்பு விலங்காக ஆனது என்று கருதப்படுகின்றது.

இன்று ஏறத்தாழ 1.4 மில்லியன் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் உலகில் வாழ்கின்றன. இவை வளர்ப்பு வகை ஒட்டகங்கள். ஆனால் 2002 அக்டோபர் மாதத்தில், வட மேற்கு சீன-மங்கோலியாப் பகுதியில் வளர்ப்புக்கு உட்படுத்தப்படாத இயற்கைசூழலில் வாழும் இரட்டைத்திமில் ஒட்டகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் இன்று உலகில் ஏறத்தாழ 950 இருக்கலாம் என்றும், இந்த இயற்கைவாழ் வகை முற்றாக அழிவுறும் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு அதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டைத்திமில் ஒட்டகங்கள் ஏறத்தாழ 3 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டவை. திமில்கள் மட்டுமே 20 செ.மீ உயரம் உடையவை. ஆண் ஒட்டகங்கள் 400 கிலோ கிராம் முதல் 600 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். பெண் ஒட்டகங்கள் ஏறத்தாழ 350 கிலோ கிராம் முதல் 500 கிலோ கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இரட்டைத்திமில் ஒட்டகங்களுக்கு அதிகமாக முடி (உடல்மயிர்) இருக்கும். இவற்றின் மூக்குத் துளைகளை இறுக்கி மூடிக்கொள்ளும் வசதி கொண்டவை. மணல் வீச்சில் இருந்து காத்துக்கொள்ள தடிப்பான கண்ணிமைகளும் உள்ளன.

இந்த ஒட்டகங்கள் நடக்கும் பொழுது இடப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒரு சேர முன்னெடுத்து வைத்துப் பின்னர் வலப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒரு சேர முன்னெடுத்து வைத்து நடக்கின்றன. இப்படி இடக்கால்களும் பின்னர் வலக்கால்களும் நகர்த்தி நடத்தலுக்கு குதிரை நடைக் கலைச்சொல்போலவே பண் அல்லது போக்கு என்று பெயர். இரட்டைத்திமில் ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க வல்லது. சிறுதொலைவு ஓட்டத்தில் மணிக்கு 65 கிலோ மீட்டர் விரைவில் ஓட வல்லது.

இவ்விலங்கின் இனப்பெருக்கம் பின்பனிக் காலத்தில் நடக்கிறது. ஆண் ஒட்டகங்கள் தம்முடைய ஐந்து முதல் ஆறு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. பெண் ஒட்டகங்கள் மூன்று முதல் நான்கு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. இனப்பெருக்கப் பருவத்தின்போது ஒரு குழுவில் உள்ள ஆண்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஒட்டகம் மற்ற ஆண் ஒட்டகங்களைக் கடித்தோ அவற்றின் மேல் அமர்ந்து காட்டியோ தன் வலிமையைப் பறைசாற்றும். இப்படி பெண் ஒட்டகத்தைக் கவர்ந்து பின் உறவு கொள்ளும். தன் வாழ்நாளில் ஒரு ஆண் ஓட்டகம் பல பெண் ஒட்டகங்களுடன் உறவு கொள்ளும். இவ்விலங்கின் சூல்கொள்ளும் காலம் பதிமூன்று மாதங்களாகும். ஓட்டகக் கன்று பிறந்த சில மணி நேரத்தில் நன்றாக நடக்கத் தொடங்கிவிடும். ஓட்டகக் கன்று மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தன் தாயுடன் வாழும்.

இரட்டைத்திமில் ஒட்டகம் பகற்பொழுதில் உற்சாகத்துடன் இரை தேடும்.இவை தனியாகவோ 30 விலங்குகள் வரை கொண்ட குழுக்களாகவோ காணப்படும்.இவ்விலங்கு ஒரு தாவரவுண்ணி ஆகும்.எவ்வகையான கடினமான முட்களையும் உண்ணக்கூடிய தன்மையை இவ்விலங்கின் வாய் பகுதிகள் பெற்றுள்ளன. இவை உண்ணும்பொழுது உணவைப் பகுதியாக மென்றுவிட்டு உணவுப் பையில் சேகரித்துக்கொண்டு பின்பு ஓய்வு நேரத்தில் அசை போடும்.

இரட்டைத்திமில் ஒட்டகங்களில் தனித்த ஒரு சில உள்ளினங்கள் (சிற்றினிங்கள்) இருப்பதாக நம்ப இடம் உண்டு. இந்த ஒட்டகங்களில் மூன்று வெவ்வேறு இடங்களில் வாழும் வகைகளாகக் கொள்ள இடம் உள்ளது. இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் கோபி பாலை நிலத்தில் காழ்சுன் கோபி (Gashun Gobi) என்னும் பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. இவை வளர்ப்பு இரட்டைத் திமில் ஒட்டகங்களில் இருந்து பழக்க வழக்கங்களிலும், மரபணு தொடரமைப்பு முறைகளிலும் மாறுபட்டது. ஆனால் இம்மாறுபாடுகளின் சிறப்புத் தன்மையை இன்னும் நிறுவவில்லை. மரபணுக் குறிப்புத்தொடரில், 3% வேறுபாடு உள்ளதாக கூறப்படுகின்றது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இயற்கைவாழ் விலங்குகளின் தரவில் இருந்து பெற்றதால், இவை உறுதியான முடிவுகள் அல்ல.

கனடிய ஆய்வாளர் வில்லியம் சோம்மர்சு (William Sommers) என்பவர், இயற்கைவாழ் ஒட்டகங்கள் உப்புநீரை குடிக்கக்கூடியவை என்று கண்டு கூறியுள்ளார். வளர்ப்பு ஒட்டகங்கள் உப்புநீரைக் குடிக்க மாட்டா என்பது குறிப்பிடத்தக்கது. உப்புநீரைக் குடித்தாலும், அது இவ்விலங்குகளுக்குப் பயன்படுகின்றதா என்பது நிறுவப்படவில்லை.

படிவளர்ச்சியில் சிறப்பான மாறுபாடு கொண்ட, அதே நேரத்தில் உலகளாவிய வகையில் அழிவுறும் நிலையில் உள்ள விலங்குகள் என்னும் பட்டியலில் 8 ஆவதாக உள்ளது இந்த இரட்டைத்திமில் ஒட்டகம். குறிப்பாக இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகம் அழிவுறும் தருவாயில் உள்ளது.

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது

ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா? நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா? என்ற சந்தேகம் ஏற்படலாம். அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது . ஒட்டகம் என்ன, மனிதனுடைய நிலையே அது தான்! மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான். இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது? ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும். அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா? அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும். எல்லாம் அறிந்த இறைவன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.
ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது (அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ, நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் ‘ஹைட்ரஜனோடு’ அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ‘ஆக்ஸிஜனை’ கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.
நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் ‘ஹைட்ரஜனோடு’ அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ‘ஆக்ஸிஜனை’ கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது. வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் .
இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும் நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான். இறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால், நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.
“அவனே இறைவன். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.” – 59:24.
இதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான். அதேப்போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் ‘ஹைட்ரஜனோடு’ அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ‘ஆக்ஸிஜனை’ கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான திமிலை இறைவன் வடிவமைதான். இன்னும் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமான முறையில் ஒட்டகத்தின் உட்புற, வெளிப்புற அமைப்புகளை வடிவமைத்து ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யும்படி இறைவன் கூறுகிறான்.
பாலைவன மக்களுடைய வெளிஉலகப் பயணத்திற்காக பிரத்தியேகமாக உயிரிணத்தில் வடிவமைக்கப்பட்ட 680 kg வரை எடையுள்ள ஓட்டக(வாகன)ம், 450 kg வரை உள்ள சுமையை சுமந்து கொண்டு சீரமைக்காத சாலைகளில் பயணிக்கும் போது சிறு சிறு கற்கள் அதனுடைய கால்களில் குத்தி வலித் தாங்க இயலாமல் விழுந்து விட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ?அதேப்போன்று அதனுடைய காலும் சதைப்பகுதி என்பதால் ஒரு குறிப்பிட்ட தூரமே நடக்க இயலும் அதன் பிறகு காலின் சதைப்பகுதித் தேய்ந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டால் அதில் பயணிப்பவருடைய நிலை என்னாவது ?இதனால் தான் பாரம் சுமக்கும் நமது ஊர் மாடுகளின் கால்களின் குளம்புகளில் லாடம் அடித்து விடுவார்கள்.
ஆனால் அன்றைய பாலை வெளிப் பிரதேசத்தின் நெடுந்தூரப்பயண வழிகளின் நிலை அவ்வாறில்லை. கரடு முரடான பாதைகள், ஒதுங்குவதற்கு அறவே நிழலில்லாத வனாந்திரம் (எங்காவது பலநூறு மைல்களுக்கப்பால் மட்டுமே கிராமங்கள் தென்படலாம்) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு செல்லும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒட்டகத்தின் முதுகில் அமர்நதிருப்பார்கள் .இதை எல்லாம் அறிந்த அல்லாஹ் அதனுடைய தட்ப வெட்ப நிலைக்கொப்பவே ஒட்டகத்தை வடிவமைத்தான்.ஒட்டகம் பயணிக்கும் வழிகள் சீரமைக்காத சாலைகள் என்பதால் ஒட்டகம் இலகுவாக ஓடுவதற்கு அதனுடைய கால்களில் மூன்று மடக்குகளை வைத்துப் படைத்தான்.குட்டிப் போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்ல முடிகின்றது. மனிதன் கண்டுப்பிடித்த மோட்டார் வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்கள் இருக்கும் ஒன்றிலிருந்து அடுத்த கியர் மாற்றும் பொழுது வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் அதேப் போன்று வேகத்தைக் குறைப்பதற்கும் டாப் கியரிலிருந்து அடுத்த கீழ் கியருக்கு மாற்றுகிறோம். பாரங்களை சுமந்து கொண்டு ஓட்டகம் மேடானப் பகுதிகளில் இலகுவாக ஏறுவதற்கும், அதிலிருந்து பள்ளாமானப் பகுதிக்கு மெதுவாக இறங்குவதற்கும் அதனுடைய கால்களில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மடக்குகளே உதவுகின்றன. அவனே சிறந்த படைப்பாளன். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலிரியாவான். திருக்குர்ஆன்:23:14.
அதேப்போன்று கற்கள் நிறைந்தப் பகுதிகளில் சிறு சிறு கற்கள் காலில் குத்தி கிழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மற்ற மிருகங்களுக்கு இருப்பதைப் போல் வெடித்த இருக் குளம்புகளாக அல்லாமல் அவற்றை இணைத்து ஒரேக் குளம்பாக மாற்றி அதனுடைய உயரத்தையும் அதிகப்படுத்தினான்.மற்ற மிருகங்கள் வெடித்த இருக் குழம்புகளைக் கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்).மிருகங்களின் கால் குளம்புகளைப் பார்த்தே வாக்கிங், ரன்னிங் சூ உருவாக்கப்பட்டிருக்குமோ ?மேல்படி ரன்னிங் சூ வில் மட்டும் மற்ற சூ வில் இல்லாத அளவுக்கு அதனுடைய அடிப் பாகத்தில் அரை அல்லது ஒரு இஞ்ச் அளவுக்கு தடித்த ரப்பரால் உயரம் அமைக்கப் பட்டிருக்கும் காரணம் அதனுடைய தடித்த ரப்பர் போன்ற அடிப் பாகங்கள் அதை அணிந்து ஓடுபவர்களுடைய கால்களை எவ்விக் கொடுக்கும் அதனால் அதிக களைப்பில்லாமல் ஓடுவதற்கு, வாக்கிங் செய்வதற்கு இலகுவாக இருக்கும். இன்று மனிதன் கண்டுப்பிடிக்கும் அதி நவீன கண்டுப் பிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது பெரும்பாலும் இறைவனின் படைப்புகளேயாகும். உதாரணத்திற்கு விண்ணில் பறக்கும் பறவைகளின் இடைவெளி இல்லாத இறக்கைகளின் அசைவுகளே உயரேப் பறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த ரைட் சகோதரர்களுக்கு விமானம் உருவாக்குவதற்கு தூண்டுதலாக இருந்தது. 680 kg வரை எடையுள்ள ஒட்டகம், 450 kg வரை சுமையை சுமந்துக் கொண்டு கற்கள் நிறைந்த பகுதிகளில் ஓடும் பொழுது கற்கள் அதனுடைய கால்களில் குத்துவதால் எந்த பாதிப்பும் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதற்கு அதனுடைய இணைக்கப்பட்ட கால்களின் குளம்பும், ரப்பர் போன்ற உயரமான அமைப்புமேயாகும். சுப்ஹானல்லாஹ் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். 23:14 சுட்டெரிக்கும் வெயில் ஒட்டகத்தின் முதுகின் மீது பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார்.
அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில் யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாது, மூச்சு விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும். அதற்கு காரணம். • மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.
அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் அடர்த்தியான முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. • அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass) கண்ணிற்கு கீழே உள்ள இமைப்போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.
பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு இறைவன் வழங்கினான்.
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17.
அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes