Wednesday, December 28, 2011

ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு


[ சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்க்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள்.
நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா? பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்க்ள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை.
ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும், பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிந்து கொள்ளுங்கள்; நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை. சரி ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம் இல்லையென்றால் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம் கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும்.
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பாக இருங்கள். மனம் விட்டுப்பேசுங்கள், சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்கள். விட்டுக்கொடுக்கிறதால பெரிதா என்னங்க இழந்துட போறோம். விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.]
எல்லோரும் பெண்கள் பெருமையாகவே மதிக்கப்படுகிறார்கள் என்பதுடன் பெண்கள் மதிக்கப்படுவதையே ஆண்களும் விரும்புகின்றனர். ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்கு மரியாதையும் மதிப்பும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
ஒரு ஆண் ஒரு பெண்ணை மிகவும் மதிப்போடு தான் பார்க்கிறான், நீங்கள் சொல்லலாம் பேருந்தில் தொடங்கி அலுவலகம் வரை தொல்லை, இருக்கதான் செய்கிறது அவை எல்லாம் வக்கிரம் கொண்ட ஆண் சமூகம் தானே இப்படி செய்கிறது. சரி வருவோம். யாரோ ஒரிருவர் தவறு செய்வதால் மொத்த ஆண்களையும் குற்றம் சொல்வதா? ஆண் என்பதால் பெற்ற தந்தையை வெறுத்து விடுகிறோமா என்ன?
சரி, எத்தனையோ இடங்களில் ஆண்களும் பெண்களால் பாதிக்கபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்ன... வெளியில் சொல்வதில்லை எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி இருப்பான் என்ன கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னு சொல்லிகிட்டு போவான். அது தான் அவனோட தன்னம்பிக்கை. எந்த பிரச்சினையானாலும் அதை சமூகம் அறிந்துவிடக்கூடாது என நினைத்து பிரச்சினைகளை மறந்து விடுவான். அல்லது மறைத்து விடுவான். ஆனால் பெண்கள் அப்படியில்லை, சின்ன பிரச்சினை என்றாலும் மற்றவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடத்தான் செய்கிறார்கள். ஒருவிதத்தில் பெண்களின் கண்ணீர்தான் அவர்களின் மிகப்பெரிய ஆயுதமும்! அதே நேரத்தில் பலவீனமும் என்ன சரிதானே?
பெண்களின் மேல் அதிக அன்பும் போற்றுதலும் வைத்திருக்கிறான் என்பதை நான் இப்படித்தான் எடுத்துகொள்கிறேன். பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டாடிக்கொண்டே தான் இருக்கிறான். ஒரு பெண் பருவ மாற்றம் அடைந்து பூப்படைந்துவிட்டால் அதை விழாவாக கொண்டாடுகிறார்கள். அடுத்து திருமணம் முடிந்து ஒரு வாரிசை சுமக்க ஆரம்பிதவுடன் எத்தனை சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்கின்றார்கள். பெண் தாயாகும் போது அதை இந்த உலகம் எத்தனை சந்தோஷமாக கொண்டாடுகிறது யாராவது அதை வெறுக்கிறார்களா என்ன?
ஆண்கள் பெண்களை வெறும் அழகுப்பொருள்களாக மட்டுமே பார்க்கின்றனர். இருக்கலாம் ஆண்கள் அழகு என்பதை ஆராதிக்கதானே செய்கின்றனர் உங்கள் அழகை ஆராதிப்பது உங்களுக்கு பெருமைதானே உங்கள் அழகை மெருகூட்டதானே வித விதமான ஆடைகள் சிகையலங்காரங்கள் ஆபரணங்கள் இப்படி எல்லாமே! சரி, நீங்களே சொல்லுங்கள் ஒரு பெண்ணுக்கு எது அழகு? 10,000 ரூபாய் பட்டுச்சேலையும் 10 பவுண் நெக்லஸ் போட்டால் பெண்களுக்கு அழகு வந்துவிடுமா?
சரி உடை விஷயத்தில் தான் எவ்வளவு மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு சேலையில் இல்லாத அழகா அரைகுறை ஆடையில் இருக்கிறது. ஒரு பெண்ணின் குணத்தை அவளின் உடையும் வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா எது நாகரீகம்? நாகரீகம் பிறந்த காலத்தில உடை இல்லாத போது துணிகளுக்கு பதிலாக இலைகளை கட்டிகொண்டு நடந்தனரே பின்னர் படிப்படியாக ஆடை தரித்து தங்கள் உடலை மறைத்துகொண்டனரே அப்படி வளர்ந்த நாகரீகம் மீண்டும் உள்ள ஆடைகளை குறைப்பது தான் நாகரீகமா என்ன உங்களின் உடைகளே கொண்டு இந்த சமுதாயம் மதிப்பிடும் என்பது தெரியாதா?
ஆள் பாதி ஆடை பாதி என்பதன் அர்த்தம் படித்த நல்ல பதவியில் உள்ள பெண்களுக்கு கூடவா தெரியாது. இல்லை நாகரீகம் கண்னை மறைத்து விட்டதா? சிலர் நாகரீகம் எனும் பெயரில் அரைகுறை ஆடை இட்டு காண்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கை வைக்கிறார்கள் சரி நீங்களே சொல்லுங்க! அழகா சேலை உடுத்தி மங்களகரமாய் இருப்பது அழகா இல்லை அரைகுறை ஆடையுடன் பார்ப்பவரின் உணர்ச்சிகளை தூண்டுவது அழகா?
அந்த காலத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்க்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள். நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா? பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்க்ள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை.
சரி, குடும்ப நல நீதிமன்றம் வரை வந்திருக்கிறார்களே பிரச்சினைதான் என்னவென்று பார்த்தால் எனது கணவன் நான் டிவி பார்க்கும்போது டிவியை அனைத்துவிட்டார் என்றோ தூங்கும் போது குறட்டை விட்டார் எனவோ இருக்கும் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது விட்டுக்கொடுத்தல் சகிப்பு தன்மை புரிந்துகொள்ளும் தன்மை இவை எல்லாவற்றையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் நான் தொலைபேசியில் அழைதால் பேசவில்லை கடைக்கு அழைத்தேன் வரவில்லை இதெல்லாம் ஒரு காரணமா?
உங்களுக்கு தெரியாதாதா! இந்த காலத்தில் பொருளாதார தேவை என்பது மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கனவனோ அல்லது மனைவியையோ அலைபேசியில் அழைக்கிறீர்கள். ஒரு வேளை அலுவலக உயரதிகாரியிடம் அலுவலக பணியில் இருக்கும் போது எடுத்து பேச முடியாது. இது ஆண் பெண் இருவருக்கும் தான் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் எடுத்து பேச முடியாது சத்தம் கேட்காத்தும் ஒரு காரணமாக இருக்கலாம். இதையெல்லாம் புரிந்துகொள்ள கூடிய விஷயம்தானே. இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று குடும்ப நீதிமன்றம் செல்வது சரிதானா?
சரி, அடுத்தது ஒருவர் மேல் ஒருவர் சந்தேகம். ஒரு குடும்பத்தில் பணப்பிரச்சினை வேறு சில பிரச்சினைகள் எல்லாமே நாம் தீர்த்து விடலாம். சந்தேகம் எனும் பேய் நுழைந்தால் பின்னர் எல்லாவற்றிலுமே சந்தேகம் தான் சுருக்கமாக சொல்லப்போனால் மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி. அப்படித்தான் தொட்டதுக்கெல்லம் குற்றம் அதுக்காக தவறுகளை கண்டும் காணாமல் செல்வதில்லை. இந்த உலகத்தில இருக்கிற எல்லா உயிரினங்களும் மற்ற சக உயிரினங்கள் மீது அன்பு வைத்திருக்கிறது. ஆனால் அவற்றுக்கு எல்லாம் ஐந்தறிவு தான் மனிதர்களாகிய நமக்கு ஆறாவது அறிவும் உண்டு இருந்தும் என்ன செய்ய நாம் தான் எதையும் ஆராய்ந்து பார்ப்பதில்லையே.
கணவன் மனைவி சம்பாஷனைகள் குறைந்து வருகிறது. காரணம் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் இருவருக்குமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சல் இருக்கதான் செய்யும். ஆனால் இதில் ஆண்கள் மட்டும் மனைவியிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான். ஒருவேளை அது அவனின் ஆளுமையை உணர்த்துவதற்காக கூட அப்படி நடக்கலாம். என்னைப்பொருத்த வரை ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பாக இருங்கள். மனம் விட்டுப்பேசுங்கள், சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்கள். விட்டுக்கொடுக்கிறதால பெரிதா என்னங்க இழந்துட போறோம். விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.
ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும், பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிந்து கொள்ளுங்கள்; நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை. சரி ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம் இல்லையென்றால் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம் கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும். உங்களுக்கு தெரியுமா உளவியாலாகவும் மருத்துவ உலக அடிப்படையில் பார்த்தாலும் ஒரு ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் விரும்புகின்றனர். சரி ஆண்களை விட்டு விடுங்கள், நீங்க ஒரு தாய் உங்களுக்கு உங்க மகன் மேல் கொஞ்சம் அதிகமாகவே அன்பு இருக்கதான் செய்யும். சரி, நீங்கள் ஒரு தந்தை உங்களுக்கு மகள் மேல் அன்பு அதிகாமவே தான் இருக்கும். இதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. நம்மை நாம் புரிந்துகொள்ள் முயற்சித்தாலே புரிந்துவிடும்
ஒரு ஆண் அல்லது பெண் இருவருக்குமே அழகு என்பது வெரும் நிறத்திலோ அல்லது விலையுயர்ந்த ஆடையிலோ ஆபரணங்களிலோ இல்லை. அது நிரந்திரமும் இல்லை. அது தானே இயற்கை வயது கூடும் தோறும் வாலிபம் மாறிக்கொண்டேதானே வருகிறது. புற அழகை விட்டு அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அன்பால் ஆளுமை செய்வோம்/ விட்டுக்கொடுப்போம்/ ஆணும் பெண்ணும் ஒன்றுதான். பால் மட்டுமே வேற என்பதை புரிந்துகொள்வோம். மேம்படுவோம்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes