Assalamualaikum Warahmatullahi Wabarakatuh
May the peace, mercy, and blessings of Allah be with you.
Lā 'ilāha 'illā Allāh, `Muhammad rasūl Allāh
There is no god except Allah, Muhammad is the messenger of Allah.
Ashahado An Laa ilaaha illal Laho Wahtha Ho La Shareekala Hoo Wa Ash Hado Anna Mohammadan Abdo Hoo Wa Rasoolohoo
I testify that (there is) no partner for Him. And I testify that certainly Muhammad (is) His worshipper and His Messenger.
Subhanallahe Wal Hamdulillahe Wa Laa ilaha illal Laho Wallahooakbar. Wala Haola Wala Quwwata illa billahil AliYil Azeem.
Glory (is for) Allah. And all praises for Allah. And (there is) none worthy of worship except Allah. And Allah is the Greatest. And (there is) no power and no strength except from Allah, the Most High, the Most Great
Laa ilaha illal Lahoo Wahdahoo Laa Shareekalahoo Lahul Mulko Walahul Hamdo Yuhee Wa Yumeeto Wa Hoa Haiy Yul La Yamooto Abadan Abada Zul Jalal Lay Wal Ikraam Beyadihil Khair. Wa hoa Ala Kulli Shai In Qadeer.
(There is) none worthy of worship except Allah. He is only One. (There is) no partners for Him. For Him (is) the Kingdom. And for Him (is) the Praise. He gives life and acuses death. And He (is) Alive. He will not die, never, ever. Possessor of Majesty and Reverence. In His hand (is) the goodness. And He (is) the goodness. And He (is) on everything powerful.
Astaghfirullah Rabbi Min Kullay Zambin Aznabtuho Amadan Ao Khat An Sirran Ao Alaniatan Wa Atoobo ilaihe Minaz Zambil Lazee Aalamo Wa Minaz Zambil Lazee La Aalamo innaka Anta Allamul Ghuyoobi Wa Sattaarul Oyobi Wa Ghaffaruz Zunoobi Wala Haola Wala Quwwata illa billahil AliYil Azeem.
I seek forgiveness from , my Lord, from every sin I committed knowingly or unknowingly, secretly or openly, and I turn towards Him from the sin that I know and from the sin that I do not know. Certainly You, You (are) the knower of the hidden things and the Concealer (of) the mistakes and the Forgiver (of) the sins. And (there is) no power and no strength except from Allah, the Most High, the Most Great.
Allah Humma inni Aaoozubika Min An Oshrika Beka Shai Aown Wa Anaa Aalamo Behi Wasthaghfiruka Lima La Aalamu Behi Tubtu Anho Wa Tabarrato Minal Kufri Washshirki Wal Kizbi Wal Jheebati Wal Bidaati Wan Nameemati Wal Fawahishi Wal Bohtani Wal Maasi Kulliha Wa Aslamtoo Wa Aamantoo Wa Aqoolo Laa ilaaha illal Lahoo Mohammadur Rasool Ullah.
O Allah! Certainly I seek protection with You from, that I associate partner with You anything and I know it. And I seek forgiveness from You for that I do not know it. I repended from it and I made myself free from disbelief and polytheism and the falsehood and the back-biting and the innovation and the tell-tales and the bad deeds and the blame and the disobedience, all of them. And I submit and I say (there is) none worthy of worship except Allah, Muhammad is the Messenger of ALLAH.
Wednesday, December 28, 2011
வேண்டாமே... விவாகரத்து.
தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க 7 பண்புகள்!
Posted in: இஸ்லாம் சிந்தனைவெளிநாட்டு மாப்பிள்ளைன்னா கொம்பா முளைச்சிருக்கு...?

Posted in: இஸ்லாம் சிந்தனைஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு
பெண்களின் மேல் அதிக அன்பும் போற்றுதலும் வைத்திருக்கிறான் என்பதை நான் இப்படித்தான் எடுத்துகொள்கிறேன். பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டாடிக்கொண்டே தான் இருக்கிறான். ஒரு பெண் பருவ மாற்றம் அடைந்து பூப்படைந்துவிட்டால் அதை விழாவாக கொண்டாடுகிறார்கள். அடுத்து திருமணம் முடிந்து ஒரு வாரிசை சுமக்க ஆரம்பிதவுடன் எத்தனை சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்கின்றார்கள். பெண் தாயாகும் போது அதை இந்த உலகம் எத்தனை சந்தோஷமாக கொண்டாடுகிறது யாராவது அதை வெறுக்கிறார்களா என்ன?
அந்த காலத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்க்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள். நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா? பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்க்ள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை.
கணவன் மனைவி சம்பாஷனைகள் குறைந்து வருகிறது. காரணம் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் இருவருக்குமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சல் இருக்கதான் செய்யும். ஆனால் இதில் ஆண்கள் மட்டும் மனைவியிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான். ஒருவேளை அது அவனின் ஆளுமையை உணர்த்துவதற்காக கூட அப்படி நடக்கலாம். என்னைப்பொருத்த வரை ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பாக இருங்கள். மனம் விட்டுப்பேசுங்கள், சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்கள். விட்டுக்கொடுக்கிறதால பெரிதா என்னங்க இழந்துட போறோம். விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.
Posted in: சிந்தனைக்குஇஸ்லாம் சொல்லும் திருமணம் என்றால் என்ன
இஸ்லாமிய திருமணத்திற்கு மணமக்கள் சம்மதம், இரு வீட்டார் ஒப்புதல், சாட்சிகள், ஜமாத்தார்கள் எனப்படும் ஊர் பொதுமக்கள் மிக மிக அவசியம். குறிப்பாக பெண் தரப்பில் பெண்ணின் தந்தை, சகோதரர்கள் அல்லது அதற்கு சமமான பாதுகாவலர்களின் ஒப்புதல் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் இல்லாத திருமணம் செல்லாது. இந்த முறை மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கைவிடும் சில காவாலிகளிலிடமிருந்து பெண்ணிணம் காப்பாற்றப்படுகிறது.
ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம், பெண்கள் செய்யக்கூடாதா?
Posted in: கடமைகள்இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்
பெண் மற்றும் திருமணம் குறித்த இஸ்லாமின் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் முஸ்லிமை இக்காலத்தில் வெளிப்பகட்டு அலங்காரங்களைக் கொண்ட இளம் பெண்கள் கவர்ந்திட முடியாது. மாறாக, மார்க்கப் பற்றுள்ள பெண்கள்தான் அவரை ஈர்க்க முடியும். தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் நிதானத்துடன், நிம்மதியான மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வுக்கு வழிவகுக்கும் இஸ்லாமிய நற்பண்புகளைப் பெற்ற பெண்ணையே தேர்ந்தெடுப்பார். தான்தோன்றித்தனமான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சியையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். இதற்கெல்லாம் மேலாக மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, நன்னடத்தை உடையவளையே அவர் விரும்புவார். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பார்.
நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நற்குணமுடைய பெண்ணிடம் அழகும் விரும்பத்தகுந்த பண்புகளில் ஒன்று என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்பது கருத்தல்ல.
உண்மை முஸ்லிம் தனது இல்லறத்தில் மனைவியுடனான உறவுகளைப் பேணுவதில் இஸ்லாமிய நெறியை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் குறித்தும், அவளுடனான நல்லுறவு குறித்தும் இஸ்லாமிய வழிகாட்டுதலை நாம் அறியும்போது ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம்.
எனவே உண்மை முஸ்லிம், எவ்வாறு நேசிக்க வேண்டும் எவ்வாறு வெறுக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அவ்வாறே வெறுப்பவர்மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தை வெளிப்படுத்தவும் மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நிதானமான, நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
Posted in: இஸ்லாம் சிந்தனைTuesday, December 27, 2011
பித்அத்’களை எதிர்ப்பது பயங்கரவாதமா?
இவையெல்லாம் என்ன? இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இவையெல்லாம் நபிவழிகளா? குறைந்தபட்சம் மார்க்கம் இவற்றை அனுமதிக்கின்றதா? ‘பரக்கத்’ (வளம்) வேண்டி செய்யப்படும் இவற்றால் இறையருள் கிட்டுமா? அப்படி கிட்டும் என்றால், இறைவனோ இறைத்தூதரோ இறைத்தூதரின் அன்புத் தோழர்களோ சான்றோர்களோ யாராவது இவற்றைச் சொல்லியிருப்பார்களா? இல்லையா?நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால், அது நிராகரிக்கப்படும். (புகாரீ)
மற்றொரு ஹதீஸ் இவ்வாறு எச்சரிக்கின்றது: உரைகளில் சிறந்தது இறைமறை;நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறை;செயல்களிலேயே தீயது புதிதாக உருவாக்கப்படுவதுதான். புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்) ஒவ்வொன்றும் தவறான வழியாகும்; தவறான ஒவ்வொரு வழியும் நரகத்திற்குச் செல்லும். (முஸ்லிம், நஸயீ)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்,ஒவ்வொரு ‘பித்அத்’வாதியிடமிருந்தும் பாவமன்னிப்பை (தவ்பா) தடுத்துவிடுகிறான் . (தப்ரானீ, ஷுஅபுல் ஈமான்)
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: அல்லாஹ்வுக்கே சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்; (அவனையே) வழிபடுங்கள். (53:62)
அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (4:36)
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள்: எந்த மனிதரும் எந்த மனிதருக்கும் சஜ்தா செய்வது தகாது. அப்படித் தகும் என்றிருந்தால், பெண் தன் கணவனுக்கு சஜ்தா செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருப்பேன். அவனுக்கு அவள் அந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள்.
ஒரு விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புகிறவர்களாயின், அதை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் விட்டுவிடுங்கள். இதுவே சிறந்ததும் நல்ல முடிவும் ஆகும். (4:59)
மற்றொரு வசனம், ‘‘நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டாலும் அதன் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது’’ (42:10) என்று கூறுகின்றது.
![]() |
| தாருல் உலூம் தேவ்பந்த் அரபிக் கல்லூரி |
- தேவ்பந்த் மதரசா, ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு, வஹ்ஹாபிஸம் எல்லாம் பயங்கரவாத இயக்கங்கள்.
- இவர்களின் பிடியில் சிக்கியுள்ள பள்ளிவாசல்களையும் மதராசக்களையும் கைப்பற்ற வேண்டும்.
- வக்ஃப் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.
- காங்கிரஸ் கட்சியை நம்பக் கூடாது; தோற்கடிக்க வேண்டும். இதற்காக மஷாயிக் வாரியம் அரசியலில் குதிக்க வேண்டும்.
![]() |
| அகில இந்திய மஷாயிக் வாரியம், பத்திரிகையாளர் சந்திப்பு |
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால்,அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். (புகாரீ)
Posted in: இஸ்லாம் சிந்தனை


4:55 PM
முஹம்மது பாரி



