Wednesday, September 28, 2011

பெற்ற பாவத்திற்காக விற்ற சொத்துக்கள்

அந்தத் திருமண சூழ்ச்சியில்
விழுந்த பொருளாதாரச் சறுக்கல்களின் தலைவாயில்கள்

பெற்ற பாவத்திற்காக விற்ற சொத்துக்கள்
பட்டியலிடப்பட காரணமான காரணகர்தாக்கள்
...
குடிசை ஓரத்தில் கேட்கும் விசும்பல் சத்தத்தில்
எதிரொலிக்கும் சோகப் பின்னணிகள்

பெண்னைப் பெற்றவனின் மூளை நரம்புகளில்
துளிர்த்த வியர்வைத் துளிகள்

இவைதான் "வரதட்சணை" என்ற கொடிய அரக்கனின்
சுய விமர்சனங்கள்

இனி ... இதோ
திருமணத்தால் விழி பிதுங்கும்
பெண் வீட்டாரின் சோகப் பிரசுரங்கள்

பெற்ற பெண்னை கரையேற்றும் நோக்கத்தோடு
கவலைகளைப் போர்த்திக்கொண்டு தூங்குபவனை
பயமுறுத்தும் கனவுகள் எதார்த்தமானவை

இந்த இரவு கழிய
உள்ளக் குமுறல் மட்டுமே மூலதனமாக்கப்பட்டது
ஆனாலும்...
"நாளைய திருமணம் சிறப்பாய் நடைபெற வேண்டும்"
என்ற ஆவல் பிரதிபலிக்கத் தவறவில்லை.

மூத்தவளுக்கு வாங்கிய நகைகளை அணிந்து
அழகு பார்த்துக் கொண்ட
இளைய சகோதரிகளின்
கண்களில் துளிர்த்த கண்ணீருக்கு
அர்த்தம் தெரியவில்லை!

துக்கத்திற்க்கும் தூக்கத்திற்க்கும் மத்தியில்
கழிந்தன இச்சோதனை இரவுகள்

மணப் பெண்னுக்கு வாங்கிய
உயர் ஆடைகள் ஒரு புறமிருக்க
துவைத்துக் காய்ந்து கொண்டிருந்தது
தகப்பனாரின் வெள்ளாடைகள்

அது கரை படப் போவதும்
இவர் குறைபடப் போவதும்
தவிர்க்கமுடியாதது

அந்தப் பேராசைக் காரர்களின்
சூழ்ச்சியில் சிக்கித் தவித்து
சின்னாபின்னப் படப் போவது
இவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.

மறுநாள்
மூன்று வாடகை டம்ளர்கள் தவறி
அதன் விலை கொடுக்கப்பட்டது

இன்னும் வழக்கமான
பிரியாணியில் உப்பு இல்லை
எங்களுக்கு வரவேற்பு சரிஇல்லை
என்ற குறைபாட்டு கோஷங்களுக்கிடையில்
திருமணம் சிறப்பாய் நடந்தேறியது .

பிறந்த வீடு துறந்து வெளியேறினாள் புதுப்பெண்
அந்த உள்ளத்தில் எழுந்த "பாச எரிமலைகள்"
உதட்டில் அடக்கப்பட்டு
விழிகளில் வழிந்தது

உற்சாகமாய் கையசைத்து வழியனுப்பியது
அந்த இரண்டு வயதுக் குழந்தை
ஆம்.. அந்த தந்தையின் நான்கில் ஒரு பங்கு
சுமை இறக்கப்பட்டிருக்கலாம்...

ஆறு மாதங்கள் உருண்டோடின!
புகுந்த வீட்டு அராஜகங்கள் குறித்து
மகள் எழுதிய ஆறு பக்க கடிதம்
தகப்பனின் வாயிற் கதவைத் தட்டியது

நான்கு மாதத் தவணையில்
தர ஒப்புக்கொண்ட வரதட்சணை பாக்கி
என்ற இடத்தில் அடிக் கோடிடப்பட்டிருந்தது
இருந்தாலும் என்னைப் பற்றி
கவலைப்பட வேண்டாம்
என்று முடிக்கப்பட்டிருந்தது.

இதயப் புண்களில் கசியும்
இரத்தத்தில் பாய்ச்சப்பட்டது இன்னுமோர் அம்பு
அணைந்த விளக்குகளில் நனைந்த கன்னங்கள்
துடைத்துக் கொள்ளப்பட்டன

தோளில் துண்டோடு பணம் தேடப் புறப்பட்டார்
சோகத்தில் திரும்பி வந்தவருக்கு
சுபச் செய்தி சொல்லப்பட்டது
ஆம்.. இளைய மகள் பூப்பெய்தி விட்டாள்.

Thanks
Islamkalvi.com

பணத்திற்காக சீதனச் சந்தையில்

பணத்திற்காக சீதனச் சந்தையில் 
உனது வாழ்க்கையை விற்கும்
ஆண் ஜாதியே ....
நாம் உமக்கு எதிராய் குரல் கொடுப்போம்
 பேரம் பேசி வாழ்க்கையை விற்கும் நிலையில் இந்த ஆண் மகனா??????????
அவமானம்...அவமானம்....
கேவலம்..... கேவலம்...
உன் நிலை கேவலம்
பணத்திற்காய் விலை போகிறவள் விபச்சாரி
பணத்திற்காய் வாழ்க்கையை விற்கும்
நீ மட்டும் எந்த வர்க்கம்.....

வைத்திய மாப்பிள்ளைக்கு வரதட்சனை வேண்டாமாம்
செல்வதற்கு கார் பங்களா மட்டும் போதுமாம்..
எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எதுவும் வேண்டாமாம்
இருக்க வீடு வளவு மட்டும் போதுமாம்....
எதுவும் வேண்டாமாம்
அரசாங்க தொழில் ஒன்றே போதுமாம்...
அறிவில் உயர்ந்த ஆண் மகன் கேட்கின்றான்
சீதனப் பிச்சை...
படித்துப் பட்டம் பெற்ற பாமர வர்க்கமா நீங்கள்...

பெற்றெடுத்த தாய் கேட்கின்றாள் இன்று ...
பெண் மனம் புரியாது
தன் மகனுக்காய் வரதட்சனை...
தான் ஊட்டிய பாலுக்கு பத்து லட்சம் வேண்டுமாம்
ஆணைப்பெற்ற அம்மாக்களின்
அகங்காரம்-இது
நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட
 நாங்கள் பொம்மைகள் அல்ல
மானமுள்ள உணர்வுகொண்ட மாதர்கள்
பணம் செலுத்தி பல் இளித்து
பஞ்சனை சுகம் நாங்கள் தேடவில்லை..

கை நீட்டி பிச்சை வாங்கும்
மானமற்ற ஆண்களே !!!!!!
சீதனத்தால் பெண் சமூகம் வடிக்கும்
ஒவ்வொரு கண்ணீர் துளிகளும்
உம் வாழ்வை அழிக்கும்
சாபம் நிறைந்த நெருப்புப் பொறிகள்
என்பதை மறவாதீர்கள்......... 

கிழக்கிலங்கையில் அண்மையில்
நான் சந்தித்த சீதனக் கொடுமையில்
வாழ்விழந்து இளமையைத் தொலைத்து
முதிர் கன்னியாய்
மூலையில் முடங்கிக் கிடக்கும்
ஓர் அன்புச் சகோதரியின்
இதயத்திலிருந்து வெளிப்பட்ட வேதனை
நிறைந்த கண்ணீர் துளிகளின் உண்மை
வெளிப்பாடாக எழுதப்பட்டது .....


(சீதனம் வாங்கும், வாங்கவிருக்கும் ஆண்களுக்காக எழுதப்பட்டது)

Thanxs-பிரியமுடன் யஸ்மின் யஹ்யா- 

Monday, September 26, 2011

தங்கம் உருவான கதை

தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.
இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத் துகள்கள்
மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள்
பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

Thursday, September 22, 2011

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். மற்றவர்களின் சொத்துக்களைப் போலிப் பத்திரங்கள் தயாரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் படுகிறபாடுகளை இப்போது ஊடகங்களில் பார்த்து வருகிறோம் அல்லவா? இங்கு கூட தங்களின் பண பலம் அரசியல் செல்வாக்குக் கொண்டு தண்டனையிலிருந்து சிலர் தப்பி விடலாம்.
ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை போலிப் பத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்து, அட்டூழியம் செய்கிறவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன? இதற்கு நபி(ஸல்) அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா? நிச்சயம் வழிகாட்டி இருக்கிறார்கள். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ் முஷ்ரிக்குகளிலும் மிகக் கொடிய முஷ்ரிக்குகளான தாருந்நத்வா மதகுருமார்கள் கையில் சிக்கி இருந்தது. அங்கு எண்ணற்ற சிலைகளும், சமாதிகளும் நிறைந்து காணப்பட்டன.
இந்த நிலையிலும் நபி(ஸல்) அங்கு சென்று தான் அல்லாஹ்வைத் தொழுதார்கள். அப்போது அந்த தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைமை இமாமாகவும் அந்த மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட, நபி(ஸல்) அவர்களால் அபூ ஜஹீல்- மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும், இந்த அபூ ஜஹீலின் தோழர்களும் நபி(ஸல்) கஃபாவில் அல்லாஹ்வைத் தொழும்போது பெரும் துன்பங்களைக் கொடுத்தார்கள்.
ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் மீது அழுகிய ஒட்டகக் குடலை அபூ ஜஹீல் வகையறாக்கள் போட்டதால் நபி(ஸல்) மூச்சுத் திணறி பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த காஃபிர்களோ கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கிறோம்.
இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன? கஃபதுல்லாஹ் எண்ணற்ற சிலைகளைக் கொண்டும், சமாதிகளைக் கொண்டும் நிரப்பப் பட்டிருந்தாலும் அது அல்லாஹ்வின் வீடு என்பதில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அதனால் தான் நபி(ஸல்) அங்கு சென்று மிகமிக ஆபத்தான, துன்புறுத்தல்கள் நிறைந்த நிலையிலும் அல்லாஹ்வைத் தொழுது தமது உம்மத்திற்கு வழி காட்டி இருக்கிறார்கள். சிலைகளும், சமாதிகளும் இருக்கும் நிலையிலேயே மதீனாவிலிருந்து கஃபாவை நோக்கியே தொழுதார்கள். இது இறைவனின் கட்டளையாகும்.
அதேபோல் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறு போட்டு அவரவர்கள் பெயர்களில் பதிவு செய்து பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற அட்டூழியங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாறப் போவதில்லை.
எனவே நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ´ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி(ஸல்) காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர். ஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி(ஸல்) காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்ட ளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.
ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 போன்ற பல இடங்களில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ளான். தொழவைக்கும் இமாமின் பித்அத், குஃப்ர், ´ஷிர்க் காரணமாக அவரின் தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும், அவர் பின்னால் தொழும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் அணுவளவு கூட குறைவு செய்ய மாட்டான் அல்லாஹ்.
அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லும் மதகுருமார்கள் 9:31, 42:21, 49:16 வசனங்களின் வழிகாட்டல்படி தர்கா, மத்ஹபினரை விட கொடிய ´ஷிர்க் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் முன்னவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் முன் சென்ற இமாம்கள், வலிமார்கள் போன்றோரை வசீலாவாக-இடைத்தரகர்களாக மட்டுமே ஆக்குகிறார்கள்.
இவர்களோ அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதித்து 42:21 வசனப்படி அல்லாஹ்வுக்கே இணையாளர்களாக ஆகிறார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால் இங்கே அவர்களுக்கு மிகக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்; தீர்ப்பு மறுமையில் என்றிருப்பதால் இவ்வுலகில் அவர்கள் விருப்பப்படி 9:34 வசனம் கூறுவது போல் மக்கள் சொத்துக்களைத் தவறான முறைகளில் சாப்பிடுகிறார்கள். 49:16 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள்.
குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் இவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதில்லை என்பதே உண்மை. ஈமானுக்கு அடுத்து அடிப்படையான ஐங்காலத் தொழுகைகளையே உள்ளச்சத்தோடு, பேணுதலோடு அன்றாடம் தவறாமல் ஜமாஅத் தோடு சேர்ந்து தொழாத இவர்கள் வேறு எந்த மார்க்க விஷயங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றப் போகிறார்கள்?
அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளை 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 இத்தனை இறைவாக்குகளில் மனோ இச்சைப் பற்றி எச்சரித்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு தங்கள் மனோ இச்சை சரிகாணும் பெயர்களில் பத்திரப் பதிவு செய்து அபகரித்துக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள்தான். இது அன்று குறைஷ் குஃப்பார்கள் அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்வை அபகரித்து வைத்திருந்த செயலுக்கு ஒப்பானதாகும்

ஷிர்க்கின் தோற்றம்

மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை  அடிப்படையாகக்  கொண்டு  துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக்  கொள்கைக்கு மாறினானா என்பதை நாம்  முதலில்  அறிய வேண்டும்.  இதற்குத் தெளிவான விளக்கத்தைத்  திருகுர்ஆன் கூறுவதைப்  பார்ப்போம்.  “மனிதர்கள்  ஒரே சமுதாயமாகவே இருந்தனர்” (அல்குர்ஆன்2:213)
இந்த திருவசனத்தின்படி மனிதன் முதலில் தவ்ஹீது (ஏகத்துவம்) வாதியாகவே இருந்திருக்கிறான் என்பது தெளிவகின்றது. இதே கருத்தைத் தான் ஹதீஸும் வலியுறுத்துகிறது.”நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன் ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை  விட்டும்  அவர்களைத்  திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப் பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது  என்று காட்டிவிட்டான்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இயாழ் இப்னு அஹ்மது, நூல்: அஹ்மது
ஆரம்பத்தில் மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய இறை வசனமும் நபி மொழியும் தெளிவு படுத்துகின்றன.
ஷிர்க்கின் (இணை வைத்தல்) மூலகாரணம் என்ன?
ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக் கொள்கையுடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் “ஷிர்க்” (இணை வைத்தால்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
“நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் ‘வத்து’ ‘சுவாவு’  ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!” என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர் கூறினார்கள்) (அல்குர்ஆன் 71:23)
இந்தத் திரு வசனத்தில் கூறப்பட்ட ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’  ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள்  மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர்; பின்னர் அடுத்த தலை முறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர் என்றும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் தந்தனர். (நூல்: புகாரி- தப்ஸீர் பகுதி)
அன்று நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க முற்பட்டதற்குக் காரணம் எதுவோ, அதே காரனத்தினால் தான் இன்றும் பெரும் பகுதியினர் ஷிர்க்கில் வீழ்ந்து  கிடக்கின்றனர். நபி(ஸல்) தம் உம்மத்தினர் ஷிர்க்கில் விழக்கூடாது என்றூ எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்தனையையும் மீறி நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களின் அடக்கஸ்தலத்தில் பல தகாத செயல்களை செய்யத் துவங்கிவிட்டனர்.
எத்தனையோ பள்ளிவாசல்கள் நிர்வாகம் நடத்த போதிய பொருளாதாரம் இன்றி திணறிக் கொண்டிருக்க, கப்ருகளை நிர்வாகம் செய்யப் பொருளாதாரம் குவிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை வணங்க நூறு பேர் வருகின்றனர் என்றால் அவனது அடிமைகளை வணங்க ஆயிரக்  கணக்கானோர் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
இறைவா! “என்னுடைய கப்ரை வணக்கஸ்தலமாக ஆக்கி விடாதே” என்று நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள் என்றால் அது நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைப் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்று அவர்களின் அடக்கஸ்தலத்தை வணங்குமிடமாக ஆக்காமல் பாதுகாத்துக் கொண்டான். ஆனால் மற்ற கப்ருகள் அந்த நிலைக்கு மாறி விட்டன!
“நாங்கள் கப்ரை வணங்கவா செய்கிறோம்?” என்று நம்மில் சிலர் கேட்கின்றனர். வணங்குவது என்றால் தொழுவது மட்டும் தான் என்று  இவர்கள் எண்ணியுள்ளனர்.  தங்களின் தேவைகளை நிறை வேற்றும்படி பிரார்த்தனை செய்வதும் வணக்கம் என்பதை என்றுதான் உணவார்களோ? சிலைகளுக்குச் செய்யப்படுவது போல் அலங்காரங்களூம் அபிஷேகங்களும், வேறு பெயர்களில் இங்கேயும் நடக்கத்தான் செய்கின்றன. சிலைகள் முன்னே சிலர் பக்தி சிரத்தையோடு நிற்பது போலவே கப்ருகளின் முன்னிலையிலும் இவர்கள் நிற்கின்றனர். இந்நிலை உணர்ந்து தவ்ஹீத் அடிப்படையில் மக்கள் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

கணவனின் கடமை

கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதோ, அல்லாஹ்வின் தூதர்   ஆண்களை எச்சரிக்கிறார்கள்:
“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி   அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
நபி  அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.
சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி  அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி   அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி  அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி  அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
நபி  அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)
நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி   அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி  வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.
பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி  அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி   கூறியுள்ளார்கள்.
நபி  அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)
இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி   அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி   அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)
நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.
மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)
இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் “உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று அறிவுரை கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.
எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
“முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர்   அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி  அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து
ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி
கொள்ளட்டும்” என நபி  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ)  நூல்: முஸ்லிம் 2915
உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே
தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)  நூல்: புகாரி 56
ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்
அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு
அணிவிப்பதும்  இருப்பதும் வீட்டில் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162
”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்
கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம்நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”
என்று நபி  அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: திர்மதி 1082

எச் ஐ வி தொற்றைக் குறைக்க விருத்தசேஷனம்

ஒரு சிறுவனுக்கு விருத்த சேஷனம் செய்யப்படுகிறது.


உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.


இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

விருத்தசேஷனம் எச் ஐ வி தொற்றைக் குறைக்கும்விருத்தசேஷனம் செய்வது எச் ஐ வி பரவுவதை 60 வீதத்தால் குறைக்கும் என்று கூறும் ஆய்வு குறித்து ஒலிப்பெட்டகம்.

இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.


இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது
More details:
http://www.bbc.co.uk/tamil/science/2011/08/110818_circumcisionscript.shtml

உறவினரை இணைத்து வாழ்வீர்

ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.


நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்


உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்


பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல்: புகாரீ


நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்


உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!
நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?
இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.
இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.
பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.
அது மட்டுமா?பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.
நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,
மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.
இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!
போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?
இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்

மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.
அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.
பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!
பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.
பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.
இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?
விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?
இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!
இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.
இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?
முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,
‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!
வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,
சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!
இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.என இன்று வீரசபதம் ஏற்போமாக!
‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’
இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)
 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)

Tuesday, September 20, 2011

அமெரிக்கா நாட்டிலும் இந்த கருத்துக்கணிப்பானது நடைபெற்றது

அபூ அப்ஃரின்.
லண்டன் தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.சி (B.B.C – British Broad casting Corporation) யானது சமீபத்தில் உலகம் முழுவதும் ஆய்வு அறிக்கை ஒன்றினை மேற்கொண்டது. ஈராக்கில், அமெரிக்க கூட்டுப்படைகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டுமா..? அல்லது வேண்டாமா..? என்ற கருத்தினை கேட்டு இருந்தது. இதில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இதில் கலந்துக்கொண்டனர். பல பேரின் கருத்தானது இந்த ஆண்டுக்குள் அமெரிக்க கூ(நா)ட்டு படைகள் வெளியேற வேண்டும் என்று கூறி இருந்தனர். சில பேர்கள் பயந்துக்கொண்டு, கருத்துக்கணிப்பில் எந்த விதமான பதிலையும் கூறவில்லை. 22 நாடுகளை சார்ந்த 23,000 மக்கள் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டனர். இதில் 67 சதவீதமான மக்கள் அமெரிக்க கூட்டு படைகள் இந்த ஆண்டுக்குள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்றும், 49 சதவீதமான மக்கள் நிரந்தரமாக ஈராக்கை விட்டு அமெரிக்க நாச படைகள் வெளியேற வேண்டும் என்றும் சொன்னார்கள்.

அமெரிக்கா நாட்டிலும் இந்த கருத்துக்கணிப்பானது நடைபெற்றது. அங்கு 61 சதவீதமான மக்கள் சொன்ன கருத்து என்னவென்றால், இந்த வருடத்திற்குள் படைகள் அனைத்து வாபஸ் பெற வேண்டும் என்றனர். 24 சதவீத மக்கள் உடனடியாக படைகள் வெளியேற வேண்டும் என்றனர். 32 சதவீதமான மக்கள் ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு அமெரிக்க படைகள் ஈராக்கை விட்டு வெளியேறலாம் என்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இவ்வுலகம் இறை நம்பிக்கையாளனுக்குச் சிறைக்கூடமாகும். இறை நிராகரிப்பாளனுக்குச் சுவனமாகும்.'
அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: புகாரி,முஸ்லிம்,

ஜெர்மனி நாட்டில், 2006 ஆண்டில் 4,000 மக்கள் இஸ்லாம் மார்க்கத்தினை தழுவி உள்ளனர். 2005 ஆண்டில் 1,000 மக்கள் இஸ்லாம் மீது பற்றுக்கொண்டு அதனை மனமுந்து ஏற்றுக்கொண்டு உள்ளனர். இஸ்லாம் அதற்கு முந்தைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) இந்த அறிக்கையினை ஜெர்மன் நாட்டைச் சார்ந்த அன்பு சகோதரர். சலீம் அப்துல்லா அவர்கள் கூறி உள்ளார்கள். (Br. Salim Abdulla - Director of the Islamic Archives in the western town of Soest). தற்போது ஜெர்மனியில் 3.2 மில்லியன் மக்கள் தொகையில் 18.000 பேர்கள் இஸ்லாத்தினை தழுவி உள்ளார்கள்.

பின்லாந்து நாட்டில் உள்ள ஹால்சிங்கி (HELSINKI) என்ற நகரில், முன்னாள் தீயணைப்புத்துறையை சார்ந்தவர்களும் மற்றும் சில தொழிலாளர் துறையை சார்ந்தவர்களும் சேர்ந்து அங்குள்ள அப்துல்லா தான்மி (Abdullah Tanmi) அவர்கள் தலைமையில் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த இயக்கம் ஒன்றினை அமைத்து உள்ளனர். கிறிஸ்துவர்கள் அதிகம் இருக்கும் பின்லாந்து நாட்டில் தற்போது 55,000 இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தின் குறிக்கோள்கள் என்னவென்றால் பின்லாந்து நாட்டின் கடைகளில் மதுபானங்களை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் சில பள்ளிக்கூடங்களில் மார்க்கத்திற்கு எதிராக ஏதேனும் நடந்தால் பிள்ளைகளை அங்கு படிக்க பெற்றோர்கள் அனுப்பக்கூடாது. பொது இடங்கள் மற்றும் இல்லங்களில் நீச்சல் உடைகளை பிள்ளைகள் அணிவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. அடுத்த வருடம் பின்லாந்து நாட்டில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் (Municipal Council Election) இந்த இயக்கம் போட்டியிடும். மற்றும் 2011 ம் ஆண்டில் பொது தேர்தலிலும் இந்த இயக்கம் போட்டியிட்டு மிகப்பெரும் அரசியல் கட்சியாக மாற உள்ளது. இன்ஷா அல்லாஹ்..

துபாய் நாட்டின் துணை அரசரும் மற்றும் பொருளாதாரத்துறை, தொழில் துறை அமைச்சருமான H.H. ஷேக் ஹம்தன் பின் ராஷித் அல் மக்தூம்; அவர்கள் (H.H. Shaikh Hamdan bin Rashid Al Maktoum – Deputy Minister of Dubai and UAE minister of Finance and Industry) கொடுத்த பொருள் உதவியால், ஜெர்மன் நாட்டில் உள்ள ஃபாராங்போர்ட் (Frankfurt) என்ற இடத்தில் கட்டப்பட்ட பள்ளி வாசலானது 7.9.2007 அன்று மாலை திறக்கப்பட்டது. இந்த பள்ளி வாசலின் கட்டுமானப்பணியானது 2001 துவங்கப்பட்டது. இந்த பள்ளி வாசலுக்கு, இஸ்லாத்தின் முதல் கலிபாவான அபூ பக்கர் அல் சித்திக் (The Mosque named after Abu Bakr Al Siddique, the first Caliph of Islam) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாஷா அல்லாஹ்.. இந்த பள்ளி வாசல் திறப்பு விழாவின் நிகழ்ச்சியில், அங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களும், தூதரக அதிகாரிகளும் மற்றும் உள்ள அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர்.

துபாயில் உள்ள செம்பிறை சேவை இயக்கமானது (Red Cresent Society- RCS)பல தன்னார்வ தொண்டுகளை உலகமெங்கும் செய்து வருகிறது. சமீபத்தில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனிஷியா நாட்டில் உள்ள ஃபாண்டா அஷிக் (Banda Aceh) என்ற இடத்தில் 1,033 வீடுகளை திர்ஹம் 18 மில்லியன் செலவில் கட்டிக்கொடுத்து உள்ளது. இந்த சேவை இயக்கத்திற்காக பல உதவிகளை ஐக்கிய அமீரகத்தின் அரசரான ர்.ர் ஷேக் கலீபா பின் ஷையத் அல் நைகியான் ((H.H Shaikh Khalifa Bin Zayed Al Nahya) அவர்கள் கொடுத்து உள்ளனர். ஆகையால் அவருடைய பெயரினை அந்த இடத்திற்கு வைத்து உள்ளனர். அத்துடன் ரமளான் மாதந்தோறும், நோன்பாளிகள் நோன்பு திறக்கவேண்டும் என்பதற்காக வேண்டி பல ரமளான் குடில்களை (Ramalan Tents) துபாயின் பல மாகாணங்களில் ஆங்காங்கே அமைத்து உள்ளனர். இந்த ரமளான் குடில்கள் நோன்பு காலங்களில் மட்டும் செயல் படும். இதனால் பல தொழிலாளர்கள் அங்கு மிக சிறப்பாக நோன்பினை திறக்கவும் மற்றும் பல நண்பர்களுடன் பல நாட்டவர்களும் கலந்து உரையாடி மகிழ்வுடன் மற்றும் சந்தோஷத்துடன் நோன்பு திறக்க வசதி வாய்ப்பாக இது அமைகிறது. சகோதரத்துவம் நிறைந்த மார்க்கம் என்பதினை இதிலிருந்தே நாம் கண் கூடாக காணலாம்.

இது போல், அமெரிக்காவில் மக்களின் சேவையினை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பல இஸ்லாமிய அமைப்புகள் ஆதிக்க சக்தியால் பல வருடங்களாக நசுக்கப்பட்டு வருகின்றன. இச்சேவை நிறுவனங்கள் அனைத்தும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல் படுகின்றன என்ற ஒரு காரணத்தினை காட்டி நசுக்கப்பட்டு விட்டன. அமெரிக்காவில் மிசோரி மாகாணத்தில் செயல்பட்ட இஸ்லாம் - அமெரிக்க சேவை இயக்கமும் (Islamic – American Relief Agency) டெக்ஸாஸ் மாகாணத்தில் மிக பெரிய அளவில் செயல்பட்ட புனித பூமி சேவை நிறுவனமும் (Holy Land Foundation for Relief and Development) மற்றும் மெக்ஸிகன் மாகாணத்தில் செயல்பட்ட Good Will Charitable Organisation என்ற இயக்கமும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு உள்ளன. ஆகையால் நோன்பு காலங்களில் இங்குள்ள இஸ்லாமியர்கள்; தாங்களின் 'ஜகாத்' தொகையினை யாரிடம் கொடுப்பது, எந்த விதமான முறையில் அதனை கொண்டு கொடுப்பது, யார் யாருக்கு பகிர்ந்து கொடுப்பது, எப்படி கொடுப்பது என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.

பல மேற்கத்திய நாட்டவர்கள் உண்மையான மார்க்கம் என்றும் சத்திய மார்க்கம் என்றும் இது தான் நேர் வழியை காட்டக்கூடிய மார்க்கம் என்றும் இஸ்லாத்தினை அவர்கள் புரிந்துக்கொண்டனர். அல்லாஹீதலாவின் பெரும் உதவியால் அதிகமானளவில் பல மக்கள் இஸ்லாத்தினை பற்றி அறிந்து கொண்டு அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். அங்குள்ளவர்கள் இண்டர்நெட் மூலமாக விளம்பரங்களை கொடுத்து யாராவது எங்களுக்கு இஸ்லாத்தினை பற்றிய முழுவிவரங்களை சொல்லிக்கொடுக்க தயாராக இருக்கிறீர்களா..? என்றும் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'எல்லாக் குழந்தைகளும் இயற்கையமைப்பில்தான் பிறக்கின்றன. பிறகு அவர்களது தாய் தந்தையர்கள் அவர்களை யூதர்களாகவோ, கிறஸ்த்துவர்களாகவோ, நெருப்பi வணங்குபவர்களாகவோ உருவாக்கி விடுகின்றனர். இது எவ்வாறுள்ளதெனில், ஒரு கால்நடை நல்ல ஆரோக்கியமான குட்டியைத்தானே ஈன்றெடுக்கின்றது, நீங்கள் அதில் ஊனமுடையதைப் பார்க்கவா செய்கின்றீர்கள்? அல்லாஹ் எந்த இயற்கையமைப்பில் மனிதர்களைப் படைத்துள்ளானோ அதே இயற்கையமைப்பை மேற்கொள்ளுங்கள். அல்லாஹ் படைத்த இயற்கையமைப்பில் எந்த மாற்றமும் இருந்திட முடியாது! இதுவே முற்றிலும் மேலான செம்மையான மார்க்கமாகும்'
அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: புகாரி,முஸ்லிம்,

அமெரிக்க மட்டும் அந்த விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஒரு பிடியாக இருக்கிறது. என்ன செய்வது.. அல்லாஹ் நாடினால் மாற்றம் நிச்சயமாக ஏற்படும் அங்கேயும். அமெரிக்க நாட்டைச்சார்ந்த எல்லோரும் இஸ்லாத்தினை தழுவ கூடிய காலம் வெகு விரைவில் வரும் அதனை நாம் காணத்தான் போகிறோம். இன்ஷா அல்லாஹ்..நாம் இல்லையென்றாலும் நம்முடைய சந்ததிகள் காணத்தான் போகிறார்கள்.

அமெரிக்க பல நாடுகளில் புரியாமல் மாட்டிக்கொண்டு தற்போது என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கிறது. பல நாடுகளில் அமெரிக்காவிற்கு ஏதிராக பல எதிர்ப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. 7.9.2007 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆசிய – பசிபிக் பொருளாதார கருத்தரங்கானது (Asia - Pacific Economics Co-Operations (APEC)மூன்று நாட்கள் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் கலந்துக்கொள்ள பல நாட்டினை சார்ந்த 21 தலைவர்கள் கலந்துக்கொண்டனர். அந்த கருத்தரங்கத்தின் வளாகத்தின் வெளியே போர் எதிர்ப்பு அணியினர் கைகளிலும் மற்றும் முகத்திலும் சிவப்பு கலரில் உள்ள வர்ணங்களை பூசிக்கொண்டு தாங்களின் எதிர்ப்பு குரல்களை எழுப்பினார்கள் அங்குள்ள இளைய சமுதாயத்தினர்.

அமெரிக்காவின் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான General. James Jonesஅவர்கள் சமீபத்தில், NBC என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்கா தன்னுடைய ஈராக்கில் ஏற்பட்ட தோல்வியினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதனுடைய அடுத்த கட்ட நடவடிக்கையான வளைகுடாவின் ஒரு சில பகுதிகளை தாங்கள் வசப்படுத்திக்கொள்ளலாம் என்ற அதனுடைய முகத்திலும் தற்போது கரிப்பூசப்பட்டு வருகிறது. ஆகையால் வளைகுடாவில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் அமைதியான ஒரு திருப்பம் மற்றும் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.

அமெரிக்காவை சார்ந்த Former Federal reserve Chairman ALAN GREENSPANஅவர்கள் குறிப்பிடுகையில், அமெரிக்கா நாடானது தன்னுடைய தாகத்தினை தீர்க்க எரிப்பொருள் வேண்டும் என்பதற்காக வேண்டி தான் ஈராக்கை தேர்ந்தெடுத்துக்கொண்டது என்று தன்னுடைய கண்டனத்தினை தெரிந்து உள்ளார்.

15.9.2007 சனிக்கிழமையன்று, அமெரிக்கா வெள்ளி மாளிகை முன்பாக சுமார் 6,000 அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டமானது அமெரிக்காவிற்கு எதிரான போர் எதிர்ப்பு குரலாக ஒலித்தது. இதில் 197 நபர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டதில் பாதி பேர்கள் ஈராக்கிலிருந்து திரும்பி சென்ற போர் படையினரும் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மற்றும் அவர்களுடைய நண்பர்களும் தான். போராட்டத்தினை கட்டுப்படுத்த அங்குள்ள காவல் துறையினர் போராட்டத்தினை கலைக்க அவர்களின் முகங்களில் மிளகாய் தூள் அடங்கிய பைப்பினை கொண்டு அடித்தார்கள்.

2005 செப்டம்பர் மாதத்தில் டானிஷ் (Danish) நாடானது இறுதித்தூதரை பற்றிய சில பொய்யான சித்திரங்களை வெளியிட்டு இருந்தது. அந்த சமயத்தில் பல நாடுகளில் பல எதிர்ப்புகளை ஆதிக்க சக்திகள் சந்தித்தன என்பதனை நாம் மறந்துவிட வில்லை. அப்போது உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பல உயிர்களை பல உடமைகளை நாம் பறிக்கொடுத்தோம். அப்போராட்டத்தில் வளைகுடா நாடுகளும் கலந்துக்கொண்டன. ஆனால் சாலைப்போராட்டமாக அவர்கள் செய்யாமல், டானிஷ் நாட்டின் தயாரிப்பு பொருட்களை தடை செய்தனர் அந்த அந்த நாடுகளில். இதனால் டானிஷ் நாட்டிற்கு பல கோடி டாலர் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நாட்டு பொருட்களை கடைகளில் இருந்தால் அதனை குப்பைகளில் தூக்கி போட வேண்டும் என்றும் அப்படி குப்பைகளில் போடாத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது வளை குடா நாடுகள். தற்காலிமாக அந்த பொருட்கள் நிறுத்தப்பட்டன வளைகுடா நாடுகளில். ஆனால் அந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களில் மீண்டும் டானிஷ் நாட்டின் தயாரிப்பு பொருட்கள் வளைகுடா நாடுகளில் உள்ள கடைகளில் திரும்பவும் வந்து விட்டன. வளைகுடா வாழ் மக்கள் அதனை மறந்து விட்டமையால் டானிஷ் தயாரிப்புகள் அதிகமான அளவில் சந்தைக்கு வந்து விட்டன. மக்கள் அதனை விரும்பி வாங்குகிறார்கள். அந்த நாட்டிற்கு தன்னுடைய ஆதரவினை, அந்த நாட்டு பொருட்களை வாங்குவதால் அவர்கள் காட்டுகிறார்கள்.

'விசுவாசங்கொண்டோரே..! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில சிலர், சிலருக்குப்பாதுகாவலர்களாக இருக்கின்றனர், உங்களில் எவரேனும் அவாகளை(த் தனக்கு)ப் பாதுகாவலராக்கிக் கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர்தாம், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர் வழி காட்ட மாட்டான்'. திருக்குர்ஆன் 5: 51(இது பொதுவாக அனைத்து கிறஸ்த்தவர்களுக்கு எதிரான வசனமல்ல. யார் எதிரியாக இருப்பார்களோ அவர்கள் குறித்து சொல்லப்பட்ட எச்சரிக்கை (ஆசிரியர்)


டென்மார்க் நாட்டினை போல் சுவீடனும் தற்போது இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்ய போகிறோம். நாமே கேட்டு கொள்வோம்..? விடைகள்.. அந்த நாட்டு பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இது போல் வேற ஏதேனும் நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல் பட்டால் நாம், நம்முடைய பணத்தின் ஒரு சல்லியினை கூட அவர்களுக்காக கொடுக்க கூடாது. நாம் கொடுக்கும் ஒரு சல்லி காசு கூட எந்த வழியிலும் அந்த நாட்டிற்கு போகக்கூடாது. அந்த நாட்டு பொருட்களை வாங்கவே கூடாது. அப்போது தான் நாம் நாமாக இருக்க முடியும். இல்லையென்றால் நம்மை அந்த ஆதிக்க சக்திகள் அடிமையாக்கி வைத்து விடுவார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக இருந்து ஆதிக்க சக்திகளுக்காக ஏதிராக நாம் ஒவ்வொருவரும் போராடினால் நாமும் வெற்றியடையலாம்.. நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும்.

பிரிட்டன் ஈராக் நாட்டிலிருந்து வெளியேறும் போது பாஸ்ரா நாட்டின் பழமையான அரண்மனை ஒன்றினை ஈராக் மக்களிடம் ஒப்படைத்தது. பாஸ்ரா என்ற இடமானது ஈராக்கிலிருந்து 550 கீ.மீ தூரத்தில் தெற்குப்பகுதியில் அமைந்து உள்ள நகரமாகும். பிரிட்டன் படைகள் பாஸ்ரா பகுதியிலிருந்து விரட்டு ஓடியதை கண்ட ஈராக் நாட்டு இளைஞர்கள் 7.9.2007 அன்று அங்குள்ள தெருக்களில் மகிழ்ச்சியுடன் அந்த வெற்றியினை கொண்டாடினார்கள்.

'நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது, அவனே உயிர்ப்பிக்கின்றான், (அவனே) மரணிக்கும்படியும் செய்கின்றான், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த பாதுகாவலரும் இல்லை, எந்த உதவியாளரும் இல்லை.' திருக்குர்ஆன் 9 : 116
 
நன்றி: Khaleej Time
டென்மார்க் நாட்டை தொடர்ந்து, தற்போது சுவீடன் நாடும் தன்னுடைய புத்தியை காட்ட ஆரம்பித்து விட்டன. சுவீடன் நாட்டைச்சார்ந்த கார்டூனிஸ்ட் Lars Vilks என்பவர், வரைந்த முஹம்மது நபியின் சித்திரப்படமானது சுவீடன் நாட்டிலிருந்து வெளிவரும் Nerikes Allehand என்ற பத்திரிகையானது சென்ற மாதம் ஆகஸ்டு 18 ம் தேதி அன்று வெளியிட்டு இருந்தது. தற்போது எகிப்து, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மக்களிடம் பல எதிர்ப்பினை கிளப்பி உள்ளது அந்த சம்பவம். சுவீடன் நாட்டு பிரதம மந்திரியான Fredrik Reinfeldt என்பவருடன் அந்த நாட்டு இஸ்லாமிய இயக்கத்தினை சார்ந்த 22 நபர்கள் இந்த சம்பவத்தினை பற்றி அவரிடம் வலியுறுத்தி உள்ளார்கள். மேற்குறிப்பிட்ட பத்திரிகையானது மன்னிப்பினை கேட்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். சமீபத்தில் அந்நாடு மன்னிப்பு கேட்டு விட்டதாக ஊடகத்துறைகள் தெரிவித்து விட்டன.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes