Sunday, October 9, 2011

நாத்திகவாதி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதர, சகோதரிகளே நாம் இறைவனால் படைக்கப்பட்ட, அறிவு கொடுக்கப்பட்ட, சிந்திக்கக்கூடிய மனித இனமாக இருக்கிறோம் ஆனால் இந்த சிந்தனைத் திறனைக் கொண்டு எதை சிந்திக்க வேண்டுமோ அதை சிந்திக்காமல் சிந்தனையை சிதறடிக்கும் விதமான செயல்களில் ஈடுபடுகிறோம். இறுதியாக படைத்த இறைவனைப் பற்றியே தாருமாராகவும் அவன் இருக்கிறானா? இல்லையா? அவன் இருந்தால் எப்படி இருப்பான்? அவனது உருவம் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறோம் இந்தக் கேள்வி இறைவனைப் பற்றி அறிந்துக் கொள்வதற்காக கேட்கப்பட்டல் பரவாயில்லை மாறாக இறைவனை இகழக்கூடிய விதமாக அமைந்துவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. இதோ மாற்று மதத்தவர்களால் நாள்தோறும் விரும்பிக்கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை இந்தக் கட்டுரையாக வடிவமைத்து உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.

முதல் கேள்வி கடவுள் உண்டா?
அனைத்து படைப்பினங்களையும் அல்லாஹ் படைத்துவிட்டு மனிதனுக்கு மட்டும் அறிவு, சிந்திக்கும் ஆற்றல், தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன், பாவமன்னிப்பு கோரும் தன்மை ஆகியவற்றை கொடுத்து தனது படைப்பினங்களிலேயே மிகச் சிறந்த படைப்பாக நம்மை புகழ்கிறானே அந்த கடவுள் (அல்லாஹ்) இருக்கிறானா? என்று கேட்கிறார்கள் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன் இவர்கள் என்றைக்காவது கீழ்கண்டவற்றை சிந்தித்த துண்டா?
  • தினமும் சூரியன் உதிக்கிறது, மறைகிறது!
  • இரவும் பகலும் மாறி மாறி இயங்கிக்கொண்டிருக்கிறது!
  • சந்திரன் பல நிலைகளை அடைகிறது!
  • மெல்லிய காற்றுடன் மழை பொழிகிறது!
  •  மேகக்கூட்டங்கள் கீழே விழாமல் விண்ணில் மிதக்கிறது!
  • இடி இடிக்கிறது மின்னல் மின்னுகிறது!

மேற்கண்ட இவைகள் மனிதனால் இயக்க முடியாதவை மேலும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை! இப்படிப்பட்ட சக்திகளை இயக்குவதற்கு ஒரு ஆற்றல் இருப்பது உண்மையென்றால் கடவுள் இருப்பதும் உண்மைதானே! அவ்வாறு இருக்க நம்மில் பலருக்கு ஏன் இந்த சந்தேகம்!

அல்லாஹ் கூறுகின்றான்;அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். அல்குர்ஆன் 14:32


இரண்டாம் கேள்வி – கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை? 
இறைவன் இருக்கிறானா என்று கேட்ட மனிதன் இப்போது இறைவனை ஏன் பார்க்க முடிவதில்லை என்று கேள்வி எழுப்புகிறான் ஆனால் ஒருநாள் கூட அவனால் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய உயிரை பார்க்க முடிவதில்லை! என்றைக்காவது இது பற்றி அவன் சிந்தித்தது உண்டா?

மனிதனோ தன்னுடைய உயிரைக்கூட பார்க்கக் வக்கற்றவனாக படைக்கப்பட்டுள்ளான் ஆனால் படைத்த இறைவனைப் பார்க்க ஆசைப்படுகிறான் ஆசை நிராசையானதும் விரக்தியுடன் கடவுள் இருந்தால் தென்படுவான் அவன் இல்லை அதனால்தான் பார்க்க முடிவதில்லை என்கிறான்! இது இவனது அறியாமையா? இவனது இயலாமையா?
இறைவனை இந்த உலகில் பார்க்க முடியாது என்று பல்வேறு வேதங்கள் சான்றுரைக்கின்றன அப்படிப்பட்ட வேதங்களின் வரிசையில் இந்துமத வேதமான யஜூர் வேதம் மற்றும் நமது அருள்மறை திருக்குர்ஆன் ஆகியன படைத்த இறைவனை பார்க்க முடியாது என்று ஆணித்தரமாக தெளிவாக சாட்சி கூறுகின்றன இதோ ஆதாரங்கள் உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது!

அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)

பார்வைகள் அவனை அடைய முடியா. ஆனால் அவனோ எல்லாப் பார்வைகளையும் சூழ்ந்து அடைகின்றான். (அருள்மறை குர்ஆன் 6: 103)

ஆனால் அருள்மறை குர்ஆன் ஒருபடி முன்னே சென்று இம்மையில் எவராலும் அல்லாஹ்வை பார்க்க முடியாது என்றும் மறுமையில் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்றும் ஒளிவு மறைவு இன்றி கூறுகிறது!


மூன்றாம் கேள்வி – கடவுள் எவ்வாறு படைக்கப்பட்டான்? 
கடவுள் இருக்கிறான் என்பதை அறிந்துக்கொண்டோம், அவனைப் பார்க்க முடியாது என்பதையும் அறிந்துக்கொண்டோம் அப்படி யானால் அவனை யார் படைத்தது என்பதே உங்களின் அடுத்த கேள்வியாக அமையும் ஆம் இது கேட்கப்படக்கூடிய கேள்விதான்!  காரணம் நாம் பிறக்கிறோம் அதற்கு தாய், தகப்பன் உதவி தேவை எனவேதான் இந்த கேள்வி எழுகிறது ஆனால் மனிதன் சிந்திக்க வேண்டும்!

மனித இனமாகிய நமக்குதான் பெற்றோர் தேவை இறைவன் மனித இனமில்லையே அப்படி இருக்க அவனுக்கு ஏது படைப்பு!  உதாரணமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியை நீங்கள் உங்கள் கைகளால் உருவாக்குகிறீர்கள் அப்படியானால் தொலைக் காட்சிப் பெட்டியாக நீங்கள் இருப்பீரா? இல்லையே!

கடவுளை யாரும் படைக்க முடியாது என்று எத்தனையோ வேதங்கள் சாட்சிகூறுகின்றன அவைகளின் வரிசையில் யஜூர் வேதம் மற்றும் நமது அருள்மறை திருக்குர்ஆன் ஆகியன இறைவனை யாராலும் படைக்க முடியாது என்று தெளிவாக சாட்சி கூறுகின்றன இதோ ஆதாரங்கள் உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது!

அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)

அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மத் ) நீர் கூறுவீராக!. அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை (அல்குர்ஆன்- சூரா இக்லாஸ்)

இந்துமதமோ இறைவனை பார்க்க முடியாது படைக்க முடியாது என்று சாட்சி கூற இறைவேதமான அருள்மறை குர்ஆன் இறைவனுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை, பெற்றோர், மனைவி, பிள்ளை இல்லை என்று இழிவு கிடையாது இறைவன் இறைவனாகத்தான் இருக்கிறான் என்று தெள்ளத் தெளிவாக சாட்சி கூறுகிறது.


நான்காம் கேள்வி இறைவனுக்கு சிலை, உருவம் கூடாதா? 
நம்மால் இந்த உலகில் கடவுளை எங்கும் பார்க்க முடியாது என்பதை இந்துமத வேதம் மற்றும் அல்குர்ஆன் வாயிலாக தெளிவாக அறிந்துக் கொண்டோம் நிலைமை இப்படி இருக்க, கடவுள் இப்படி இருப்பாரோ? அப்படி இருப்பாரோ என்று கற்பனை செய்வது கூடுமா?

உதாரணமாக ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வோம் இந்த பழத்தை பற்றி ஆப்ரிக்காவில் வாழும் ஒரு ஆதிவாசி வாழ்நாளில் ஒருமுறைகூட கண்களில் பார்க்கவில்லை, சுவையை அறியவில்லை ஆனால் காதுகளால் ஆப்பிள் என்ற பழம் ஒன்று உள்ளது என்பதை கேட்டுள்ளான் என்று வைத்துக்கொள்வோம் இப்போது இந்த ஆதிவாசி பெயர் சொல்லத் தெரியாத கடுக்காயை காயை கையில் எடுத்துக் கொண்டு தம் ஆதிவாசி சமுதாய மக்களிடம் சென்று கடுக்காயை நீட்டி இது ஆப்பிள் பழம் இதன் சுவை கசப்பாக இருக்கும் என்று கூறினால் மோசம் போவது யார்?

சிந்தித்துப் பாருங்கள் அந்த ஆதிவாசி தம் சமுதாயத்திடம் சென்று ஆப்பிள் பழத்தின் சுவை, நிறம், எடை, தோற்றம் ஆகியவைகளை நான் உணரவில்லை ஆனால் ஆப்பிள் என்ற பழம் உள்ளது என்று கூறினால் அவன் உண்மை பேசுகிறான் என்று அர்த்தம்? அல்லது கடுக்காயைத்தான் ஆப்பிள் பழம் என்று தானும் தவறாக எண்ணிக்கொண்டு தம் சமுதாய மக்களையும் குழப்பினால் அவன் பொய் பேசுகிறான் என்றுதானே அர்த்தம்?

மேற்கண்ட ஆப்பிள் பழ உதாரணத்தை கடவுளுக்கும் என சிந்தித்துப்பாருங்கள் கடவுளையும் அவனுடைய அழகிய தோற்றத்தையும் கண்களால் காணவில்லை ஆனால் கடவுள் இருக்கிறான் என்பதை அறிந்து வைத்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் கல்லை எடுத்து கலை நுணுக்கத்துடன் உருவம் கொடுத்து இதுதான் கடவுள் என்றால் என்ன சொல்வது? அந்த அறிவற்ற ஆதிவாசிக்கும் அறிவுள்ள நகரவாசிக்கும் என்ன வித்தியாசம்!

இறைவனுக்கு எந்த வஸ்துவை வைத்தும் இணை வைக்கக்கூடாது என்று எத்தனையோ வேதங்கள் உண்மை கூறுகின்றன அவற்றின் பட்டியலில் இந்துமத வேதமும், கிருத்தவ பைபிளும், உலகப் பொதுமறை அருள்மறை குர்ஆனும் மனிதவர்க்கத்தை நோக்கி இறைவனுக்கு எந்த வஸ்துவை வைத்தும் இணை வைக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறது அறிந்துக் கொள்ளுங்கள்!


இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் இந்துமத வேதம்
ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி (யஜூர் வேதம் 32:3) 
பொருள்
அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் பைபிள் வசனம் 
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.

 இறைவனுக்கு இணைவைப்பதை எதிர்க்கும் திருக்குர்ஆன் 

وَاعْبُدُواْ اللّهَ وَلاَ تُشْرِكُواْ بِهِ شَيْئًا

மேலும்,  அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணைவைக்காதீர்கள் (அல்குர்ஆன் 4:36)

இணைவைப்பவர்கள் நஷ்டவாளிகள் என்று கூறும் வேதங்கள் 
இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538) 


அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.   அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிற வர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.(பைபிள்) சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;  வைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. ஏசாயா 44:9 (Isaiah 44:6,9-20)9.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான் அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.(திருக்குர்ஆன், 004:048,116)


ஐந்தாம் கேள்வி ஏன் பல கடவுள்களை வணங்கக்கூடாது?
ஒரு கடவுளால் ஒன்றும் செய்ய முடியாது பல கடவுள் இருந்தால் நலமாக இருக்கும் என மாற்றுமதத்தவர்கள் நம்புகிறார்கள் அது முறையற்ற வாதமாகும். பல கடவுள் கொள்கை நம்புபவர்கள் கீழ்கண்ட உதாரணத்தை அறிந்துக் கொண்டால் தங்கள் வாதம் முற்றிலும் தவறானது என்பதை உணர்ந்துக் கொள்வார்கள்

ஒரு மனிதன் 10 பாவங்கள் செய்துவிட்டான் உடனே பகவானை-1 அணுகி பாவ மன்னிப்பு கேட்கிறான் ஆனால் பகவானோ-1 ஒரு பாவத்தை மட்டும் மன்னித்துவிட்டு மற்ற 9 பாவங்களை மன்னிக்க முடியாது என்று கூறி கைவிறிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் உடனே அந்த பாவியான மனிதன் மற்ற 9 பாவங்களை சுமந்துக்கொண்டு பகவான்-2. பகவான்-3, பகவான்-4, பகவான்-5 ஆகியோரிடம் செல்கிறான் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவத்தை மன்னித்து விடடுகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் முதன் முதலாக மன்னிக்க மாட்டேன் என்று கூறிய பகவான்-1க்கு என்ன மரியாதை இருக்கிறது.

சரி, ஆண் பகவான் ஒரு பாவத்தை மன்னிக்கவில்லை உடனே பெண் பகவானிடம் செல்கிறான் அதுவும் மன்னிக்கவில்லை உடனே அண்-பெண் (ஆண் பாதி, பெண் பாதி) கடவுளிடம் செல்கிறான் உடனே பாதி உடல் கொண்ட அண்-பெண்  பகவான் மன்னித்துவிடுகிறது. இங்கு கேள்வி என்னவெனில் ஆண் மற்றும் பெண் பகவான் ஆகியோர் தனித்தனியாக இருக்கும் போது மன்னிக்கமாட்டேன் என்று கூறிய ஒரு பாவத்தை இருவரும் இணைந்து அண்-பெண்  பகவானாக இருக்கும்போது மன்னிப் பார்களா?  

கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தில் இறைவனைக் குறித்து அவன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை உற்று நோக்கவும் இந்த வசனத்தில் அவர்கள் என பண்மையாக இருந்தால் பல கடவுள்கள் வணங்க வேதம் அறிவுறுத்தியிருக்கும் ஆனால் இறைவனை ஒருமையாக அவன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(
யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

ஆறாம் கேள்விஏசுநாதர் இறைவன் மகன் இல்லையா?
ஏசுநாதர் தந்தையின்றி பிறந்ததால் அவரை இறைவன் மகன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கிறார்கள் காரணம் ஏசுநாதருக்கு தந்தை கிடையாது என்பதே! தந்தையின்றி பிறந்த ஏசுநாதரை இறைவனின் மகன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் இறைமகனாக, மகளாக வர்ணிக்கவில்லை! ஆண் துணையின்றி ஏசுநாதர் பிறந்தார் ஆனால் ஆண், பெண் எந்த துணையுமின்றி ஆதாம் படைக்கப்பட்டாரே!

ஏசுநாதர் அதாவது நம் இறைத் தூதர் ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின் மீது இரக்கம் கொண்டதாலும் அவர்களின் மீது பரிவு கொண்டதாலும் அவரை உண்மை குமாரர் என்று பைபிள் கூறுகிறது இதனை வைத்துக்கொண்டே கிருத்தவர்கள் ஏசுநாதரை சர்வ வல்லமை படைத்த பிதாவின் குமாரர் என்று கூறுகின்றனர் ஆனால் அதே பைபிள் வேதம் சாதாரண மனிதர்கள் கூட பிதாவுக்கு உண்மையான குமாரர்களாக மாறமுடியும் என்று சாட்சி கூறுகிறது! இந்த உண்மையை ஏன் கிருத்தவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதோ ஆதாரம் கீழே!
மத்தேயு எழுதிய சுவிசேஷம்  5-ல் பைபிளின் கீழ்கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள் நீங்களும் தேவ குமாரராகளாம்!
43    உன் சினேகிதனை நேசி. உன் பகைவனை வெறு, என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
44    ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர் களுக்காக ஜெபியுங்கள்.
45    நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர் களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார்.
46    உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப் பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள்.
47    உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்த வர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள்.
48    பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற் குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.


ஏசுநாதர் தேவ குமாரனா? தேவ ஊழியனா?
சகோதரர்களே! மேற்கண்ட மத்தேயு எழுதிய சுவிசேஷம்  5-ஐ படித்திருப்பீர்கள் இதில் ஏசுநாதர் பிதாவின் மீது உண்மையான விசுவாசம் கொண்டு மனிதர்கள் மீது பரிவு காட்டியது குறிப்பிடப்பட்டுள்ளது அதுபோன்று அவரது சமுதாயமும் விளங்க வேண்டும் அப்போது அவர்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு குமாரர்கள் என்ற வார்த்தை ஊழியன் என்ற வகையில் தானே பொருள்படும்! அப்படியானால் தேவ குமாரன் ஏசு என்பதை தேவனின் ஊழியன் ஏசுநாதர் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும் ஆனால் கிருத்தவர்கள் ஏசுநாதர் உண்மையாளராக இருப்பதால் அவரை தேவ குமாரனாகவும், ஏசுநாதரை பின்பற்றியவர்கள் உண்மை யாளர்களாக இருந்தால் தேவ ஊழியன் என்றும் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? ஏசுநாதர் தேவ குமாரர் என்றால் அவரைப் பின்பற்றும் அனைவரும் தேவ குமாரர்கள்தான்! ஏசுநாதர் தேவ ஊழியன் என்றால் அவரைப் பின்பற்றும் அனைவரும் தேவ ஊழியர்கள்தான்! இதுதான் உண்மை! ஈஸா (அலை) அல்லாஹ்வின் மகனல்ல! திருக்குர்ஆனை புரட்டிப்பாருங்கள்!
وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللّهِ وَقَالَتْ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللّهِ ذَلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ يُضَاهِؤُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُواْ مِن قَبْلُ قَاتَلَهُمُ اللّهُ أَنَّى يُؤْفَكُونَ
யூதர்கள் உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? அல்குர்ஆன் 9:30
முடிவுரை
இந்துக்களின் வேதம், கிருத்தவகளின் வேதம் ஆகியன இறைவன் ஒருவன், இணைதுணை இல்லாதவன், படைப்பினங்கள் அவனை இவ்வுலகில் காண முடியாது அவனுக்கு நிகர் யாருமில்லை என்கிறது! இதையே இறுதியாக வந்த அருள்மறை குர்ஆனும் கூறுகிறது.

திருமறைக் குர்ஆனுக்கு முன் வந்த பல வேதங்களில் திருத்தல்கள் இணைப்புகள் என எத்தனையோ நடந்தேரியுள்ளன ஆனாலும் திருமறைக் குர்ஆனில் அப்படிப்பட்ட திருத்தங்கள் எதுவும் நுழையாமல் 1400 ஆண்டுகளாக அல்லாஹ் பாதுகாத்து வருவதும் மேலும் அருள்மறை குர்ஆன் அருளப்படும்போது இருந்த அதே நடையில் சுவையுடன் இருப்பதும் மாபெரும் அற்புதம்தானே!

அல்லாஹ் கூறுகிறான்:  மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கிவைத்துள்ளோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்ப தாகவுமிருக்கின்றது‘. (அல்மாயிதா 5:48) 

இது(குர்ஆன்) இறைவனின் வேதமாகும். இதில் யாதொரு சந்தேமும் இல்லை. (திருக்குர்ஆன் 2:2)

இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை.(திருக்குர்ஆன் 68:52)

(
முஹம்மதே) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (திருக்குர்ஆன்  14:1)
 
நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரையை ஏற்றுக் கொள்ள எவரேனும் இருக்கின்றாரா? (திருக்குர்ஆன்54:17)


எவ்வித ஐயமின்றி அகில உலகின் அதிபதியிடமிருந்தே இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கின்றது. (நபியே) எது உம்மீது இறக்கியருளப் பட்டிருக்கிறதோ அது சத்தியமேயாகும். (திருக்குர் ஆன் 32:2;13:1)

திண்ணமாக இந்த நல்லுரையை நாம் தான் இறக்கி வைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாப்போராகவும் இருக்கின்றோம். (திருக்குர்ஆன்15:9)

சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஓர் அழகிய அழைப்பு! 
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

لا اله الا الله محمد رسول الله

லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ் 
 இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்

(எழுத்துப்பிழை, தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்! சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம்!)
நன்றி-
சகோதரர்கள் ஜாகிர் நாயக் மற்றும் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பலரது சொற்பொழிவுகள் அதிகமாக கேட்டது இந்த கட்டுரை வரைய உதவியாக இருந்தது மேலும் சில செய்திகளை கீழ்கண்ட தளங்களில் படித்தது உதவியாக இருந்தது! நன்றிகள் (ஜஜாகல்லாஹ் கைரன்)
http://maricair.blogspot.com/
http://egathuvam.blogspot.com/
http://www.islamkalvi.com/
http://www.tamilmuslimmedia.com/darulsafa/www/Tamil/drzakir_ravi.htm
http://www.islamiyadawa.com/qa/qa47.htm
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அறிவைக் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும் நாம் அவனின் அடிமைகளாக இருப்போம்!  
அல்ஹம்துலில்லாஹ்!

தாயத்து தாயத்து தாயத்து தாயத்து தாயத்து தாயத்து

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



 தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு
ஒரு ஹஜரத் கருப்பு கயிற்றை எடுத்து அதில் திருமறை வசனங்களை படித்து உஃப், உஃப் என ஊதிவிட்டு இந்த கயிறு மகத்துவமிக்கது இதை கழுத்திலோ, இடுப்பிலோ கட்டிக் கொண்டால் துன்பம் விலகும், சூனியம் நீங்கும், காத்து கருப்பு அண்டாது என்று கூறுவார்! மற்றொருபுறம் தர்காஹ்வில் ரெடிமேடாக கருப்பு, சிகப்பு, மஞ்சள் நிற கயிறுகளுடன் சில அரபு வசனங்கள் எழுதப்பட்ட காகிதங்களை சயனைடுகுப்பி போன்ற வடிவத்திலோ உள்ள தாயத்தில் சுருட்டியோ அல்லது கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் கழுத்தில் கட்டும் பச்சைநிற தலையைனை போன்ற பொருளில் சொருகிவிட்டோ மக்களை நோக்கி மகத்துவமிக்க இந்த தாயத்தை கட்டிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வார்! இவர் மக்களை தேடி செல்லமாடடார் மக்கள் இவரை நாடி வருவார்கள் உலகிலேயே மார்க்கெட்டிங் தேவைப்படாத பிஸினஸ் தாயத்து பிஸினஸ்!

அடிப்படை அறிவுகூட இல்லாத பெயர்தாங்கிகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர்கள் மந்தரித்து கொடுக்கும் தாயத்து கட்டுவதால் துன்பம் விலகுமா? அப்படி விலகுவதாக இருந்தால் மாற்றுதத்தவர்களுடைய கோவிலில் மந்தரித்து கொடுக்கும் காப்பு கயிற்றில் கூட மகத்துவம் இருக்குமே! அப்போ அந்த கோவிலில் மகத்துவம் கொட்டுகிறது என்ற நீங்கள் மறைமுக நம்பிக்கை வைத்துள்ளீர்களா?


திருக்குர்ஆனை எவ்வாறு அணுகுவது 
மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அருளிய அருள்மறை வேதத்தை பொருள் உணர்ந்து படித்தால் நேர்வழி கிடைக்குமா அல்லது அதன் வசனங்களை கழுத்தில் மாட்டிக்கொண்டால் நேர்வழி கிடைக்குமா? இது எவ்வாறு உள்ளது என்றால் இதோ உதாரணம்:

உங்களுக்கு தலைவலி ஏற்படுகிறது உடனே மருத்துவரை அணுகுகிறீர்கள் அவரும் நோய் குணமாகுவதற்காக மருந்துச் சீட்டு எழுதி அதில் உள்ள மருந்தை சாப்பிட வலியுறுத்துகிறார் ஆனால் நீங்கள் அந்த மருந்துகளை வாங்காமல் மருந்துச்சீட்டை சுருட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு நோய் குணமாகிவிடும் என்று நினைத்தால் நீங்கள் முட்டாள்தானே! ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டை உங்களால் உணர முடிகிறது அல்லாஹ் கொடுத்த அருள்மறை குர்ஆனை உங்களால் உணர முடியவில்லை!

குர்ஆனை படித்து அதன்படி நடக்க முற்பட்டால் நேர்வழி கிடைக்குமா? அல்லது அதன் வசனங்களை தங்கத் தகட்டில் எழுதி கரைத்து குடித்தாலோ அல்லது கழுத்தில் எழுதி மாட்டிக்கொண்டாலோ நேர்வழி கிடைக்குமா?

சிந்தித்துப்பாருங்கள்  
ஒருவன் கயிறு திரிக்கிறான் அதன் மீது கருப்பு சாயம் ஏற்றுவதற்காக சாயப்பட்டறையில் கொடுக்கிறான் பிறகு அந்த கயிற்றுக்கு சாயம் ஏற்றப்பட்டு வெயிலில் காய வைக்கிறான்! வெயிலில் காய்ந்துக் கொண்டிருக்கும் சாயம் ஏற்றப்பட்ட கயிற்றின் மீது யார் யாரோ நிற்பார்கள், பறந்துக்கொண்டு காக்கை கூட மலம் கழித்திறுக்கும்! சாக்கடையிலிருந்து வெளியேறும் எலி கூட உணவு என எணணி நக்கிப் பார்த்திருக்கும் இப்படிப்பட்ட கயிற்றில் ஏதாவது மகத்துவம் ஏற்றப்பட வாய்ப்பு உள்ளதா?

மந்தரிக்கும் ஹஜரத்துகள் செல்போனில் சார்ஜ் ஏற்றித்தருவது போன்று சாதாரண கயிற்றில் மகத்துவத்தை ஏற்றி தருகிறார்களே  இதற்கு மாறாக மகத்துவமிக்க வசனங்களை பட்டுத்துணியால்  நெய்யப்பட்ட கயிற்றில் ஏற்றித்தரளாமே! விற்பனையாகாது என்ற பயமா? அல்லது அவர்கள் ஓதும் வசனங்கள் அதில் ஏறாதா?

தாயத்தும் மடத்தனமும்
  • புத்தக வடிவில் இருக்கும் இறைவேதத்தை கழிவரைக்கு எடுத்துச் செல்வீர்களா இல்லையே ஆனால் அதையே காகிதத்தில் எழுதி, அதை தாயத்தில் சொருகி கழுத்திலோ இடுப்பிலோ கட்டிக்கொண்டு அதனுடன் கழிவரைக்கு செல்கிறீர்களே இது அசிங்கமாக தெரியவில்லையா?
  • ஒயின் ஷாப்புக்குள் இறைவேதத்தை எடுத்துச் செல்வீர்களா இல்லையே ஆனால் அதே ஒயின் ஷாப்புக்கள் தாயத்து கட்டிய எத்தனை தடியர்கள் செல்கிறார்கள் அப்போ அந்த இறைவசனங்களுக்கு மதிப்பில்லையா?
  • குழந்தைகளுக்கு இடுப்பில் தாயத்துகளை கட்டுகிறீர்களே அதற்குள் இறைவேத வசனங்கள் இருக்கின்றதே ஒருவேளை அந்த குழந்தை இரவில் படுத்து சிறுநீர் கழித்துவிட்டால் அந்த அசுத்தம் இறைவசனங்களில் தெளிக்குமே இது உங்களுக்கு அருவருப்பாக தெரியவில்லையா?
  • உங்களுடைய பள்ளிச் சான்றிதழுக்கு தரப்படுகின்ற மதிப்பு கூட இந்த இறைவசனங்கள் நிறைந்த காகிதங்களுக்கு தரமாட்டீர்களா?
  • அழகாக திருமறையை பச்சை துணியில் கட்டி கைகள் படாத இடத்தில் வைத்து ரசிக்கிறீர்கள் ஆனால் அதன்  வசனங்களை காகிதங்களில் எழுதி அதை குழந்தைகளுக்கு இடுப்புக்கு கீழே தொங்கவிட்டு ரசிக்கிறீர்கள் உங்கள் செயல்கள் உங்களுக்கு புரிய வில்லையா?
சயனைடு குப்பியும் தாயத்தும் ஒப்பீடு

இதோ கீழ்கண்ட நபிமொழிகளையும் திருமறை வசனங்களையும் ஆராய்ந்து பாருங்கள் தெளிவு பிறக்கும்!
  நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்)  அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)” என்று கூறினார்கள். [நூல்-புஹாரி எண் 2653 ]

இந்த இறைவசனத்திற்கு என்ன அர்த்தம் 
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன்)

தீன்குலத் தாய்மார்களே
உங்கள் குழந்தைக்கு சிறு துன்பம் நேர்ந்தவுடன் சமாதிகளை வணங்கி, ஹஜரத்துகளிடம் தாயத்து வாங்கி கட்டுகிறீர்களே இது நியாயமா?

உங்கள் குழந்தைக்கு நேர்ந்த துன்பத்தை அல்லாஹ்விடம் முறையிடமாட்டீர்களா? அல்லாஹ்வுக்கு சிறு உறக்கமோ ஆழந்த உறக்கமோ ஏற்படாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறதே இதை உங்களால் உணர முடியவில்லையா?

அல்லாஹ்வுக்கு உங்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை சூழ்ந்து அறிகிறவன் என்பதை உங்களால் உணர முடிய வில்லையா?

மறைவானவற்றை அல்லாஹ்வைத்தவிர யாரும் அறிந்துக் கொள்ளமுடியாது என்று திருமறையில் அடிக்கடி கூறப் பட்டுள்ளதே அதை உங்களால் உணர முடியவில்லையா?
நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 46:4)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

  அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)

  நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு!’ (திர்மிதி)
அல்லாஹ் மிக அறிந்தவன்
 அல்ஹம்துலில்லாஹ்

மாமியார் மருமகள் சண்டைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர்களே! குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட் கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம்.  நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே! நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே! அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது? பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன? அலசிப்பார்ப்போம்!






எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52
முதலில் மேற்கண்ட இந்த இறை வசனத்தை உள்ளத்தில் ஆழமாக பதித்துக்கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு இடமே இல்லை காரணம் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கம் கீழ்படியாமைதான்! எந்த இடத்திலாவது அல்லாஹ் பெற்ற தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உறவுமுறைகள் ஆகியவற்றை முறித்துக்கொண்டு வாழ அறிவுறுத்தி யிருக்கிறானா? நம் ஆதிபிதா ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) இருவரும் தவறு செய்தார்கள் அல்லாஹ் இருவருக்கும்தான் தண்டனை அளித்தான் இதில் ஆண் பெண் என்ற பாரபட்சம் பார்த்து தண்டனை அளிக்கவில்லையே!
 பெற்றோரை பேணுதல் 
பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை
நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்”
(லுக்மான்: 14).
  இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).

தாய்க்கு முன்னுரிமை வழங்கிய மாநபி நாயகம் (ஸல்)
‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,   ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
  
தந்தைக்கு கண்ணியம் அளிக்க அறிவுறுத்திய அருமை நபி (ஸல்)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.  நூல்: திர்மிதீ
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’ அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516
  பெற்ற தாய், தந்தையர் சுவனத்திற்கு உவமை!
முஆவியா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து
” நான் போரில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அதுபற்றி உங்கள் ஆலோசனையைப் பெற வந்துள்ளேன்” என்று கூறினேன். “உனக்குத் தாய் இருக்கிறார்களா?” என்று நபி(ஸல்) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்கள் : நஸயீ, தப்ரானி)
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்.  அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி) நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்
 

மனைவியை பேணுதல்

“உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.”  (ஸஹீஹ் முஸ்லிம்)
 (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 30:21)
 மூமினான மனைவியை வெறுக்காதீர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நல்ல மனைவிக்கு அடையாளம்
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
 மனைவியிடம் எவ்வாறு நடந்துக்கொள்வது! நபிமொழி!
பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனைவியின் நியாயமான உரிமையை பரிக்காதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஸுனனுத் திர்மிதி)
நீங்கள் சிறந்தவரா? சுய பரிசோதனை செய்து பாருங்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)
பெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு?
·                    பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்,

உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்!

முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!

நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒரு படைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப் பீர்களா?

இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது!

இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும்! உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப்பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன்பிறந்தவர்களுமே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்!

இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்!

மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்!

தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும்! மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்! விழிப்புடன் இருங்கள்!

”நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்!
அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்!
மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல!

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52
குறிப்பு
மார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள் உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம். ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்! எப்படி வரும் நிம்மதி! 


 நம் அனைவருக்கும் நல் குடும்பத்தை வழங்கி அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

அல்ஹம்துலில்லாஹ்!

ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள் இது முழுக்க முழுக்க அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும் குருட்டு வித்தையாகும்.

உதாரணமாக உங்கள் அன்பு மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நாடுவீர்கள் ஆனால் இந்த ஜோதிடர்கள் செவ்வாய்தோஷம் என்று கூறி அந்த இளம் ஆண், பெண்ணின் திருமணத்தை தடை செய்வார்கள் இதனால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி ஆணும், பெண்ணும் 35 வயது வரை இல்லற சுகத்திற்கு ஏங்கி அறை கிழட்டு பருவத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து குழந்தை பேறு இல்லாதவர்களாகவும், வயது முதிர்ந்த நிலையில் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு கணவன், மனைவி பொருத்தம் அமையாமலும் காணப்பட்டு வாழ்க்கை முழுவதும் அலங்கோளமாக காணப்படுவார்கள். மேலும் 35 வயதில் தகப்பனை இழந்தும், தாயை இழந்தும் அநாதைகளாக திருமணம் செய்துக்கொள்பவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள் ஏன் இந்த அவலம்.

சிந்தித்துப்பாருங்கள் உலகத்தில் இன்று சுமார் 600 கோடி மக்களுக்கும் மேல் வசிக்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் தோஷம், பீடை என்று இருந்திருந்தால் யாருக்கேனும் திருமணம் நடைபெறுமா? இந்த அவல நம்பிக்கை முழுக்க முழுக்க தமிழ் பேசக்கூடிய நம் தமிழர்களின் மத்தியில்தான் உள்ளது மாறாக அமெரிக்கர்கள், ஆப்ரிக்கர்கள், ஜப்பானியர்கள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் என்று யாருக்கும் இந்த தோஷம் பயம் ஏற்படுவதில்லை காரணம் உலகில் உள்ள 600 கோடி மக்களில் ஜோதிடத்தை நம்புபவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் ஜோதிடத்தையும், ஜாதகத்தையும் நம்புவதில்லை அதை அனுமதிப்பதும் கிடையாது. குறி சொல்லும் ஜோதிடன் உங்களிடம் அற்ப காசுகளுக்காகத்தான் குறி கூறுகிறானே தவிர அவனுக்கு கோடி ரூபாய் பணம் இருந்தால் குறி சொல்வதை கேவலமாக எண்ணி பார்க், பீச் என்று ஜாலியாக அலைந்து திரிவான். எனவே இந்த ஜோதிடமும், ஜோதிடனும், ஜாதகமும் பொய் என்பதை உணருங்கள். இதோ சிந்திப்பவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

ஜோதிடம் பொய்யானது! 
ஜோதிடம் என்பதற்கு வான மண்டலத்திலுள்ள (GALAXY)  நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்பது பொருளாம்! எந்த நட்சத்திரமாவது மனிதனிடம் பேசுமா எனவே ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பொய். எந்த நட்சத்திரமாவது குறி சொல்கிறதா? பேசுகிறதா? இது முட்டாள்தனம் இல்லையா? எடுத்த எடுப்பிலேயே ஜோதிடம் என்ற பெயர் பெய்யாக இருக்கிறது சரி பார்ப்போம் இதில் என்ன உள்ளது என்பதை!

ஜோதிடன் என்பவன் பொய்யன்!
நட்சத்திரங்களின் மொழியை அறிந்தவன் ஜோதிடனாம் இது கொஞ்சம் ஓவரா இல்லையா? ஒரு தமிழ் பேசக்கூடியவனிடம் சென்று எதுகை, மோனை பற்றி கேட்டால் திக்குமுக்காடுகிறான் தமிழே தடுமாற்றமாக உள்ள நிலையில் ஜோதிடனுக்கு நட்சத்திர மொழி தெரியுமாம். வடமாநில மொழியான ஹிந்தி படிக்க தமிழனுக்கு தெரியல வானமண்டல மொழி தெரியுதாம்!

நட்சத்திரம் குறி கூறுகிறதாம்!
நட்சத்திரம் நேரத்தை கூறுகிறதாம் அது வானமண்டலத்தில் உள்ள 9 கோள்களின் மூலமாக விதியை ஆராய்ச்சி செய்து இது இப்படி! அது அப்படி என்று கூறுகிறதாம். எந்த நட்சத்திரமாவது பேசுமா அப்படி பேசுவதாக இருந்தால் இதோ நாம் டேப்ரிக்கார்டர் தருகிறோம் அதன் பேச்சை பதிவு செய்து தாங்க நாமும் கேட்டு ரசிக்கிறோம்!

கோள்களின் பெயரால் மோசடி
வான் மண்டலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் இருக்கிறதாம் இந்த கோள்கள்தான் நேரத்தை நிர்ணயிக்கிறதாம். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் ராகு, கேது என்பது கண்ணிற்கு தெரியாத கோள்களாம் மற்ற 7 கோள்கள்தான் கண்களுக்கு புலப்படுமாம். (ராகு, கேது ஆகிய இரு கோள்கள் நிழல் உலக தாதாத்கள் போன்று நிழல் கோள்களாம் இவைகள்தான் கெட்ட நேரத்துக்கு காரணமாம்) 

இந்த ஒன்பது கோள்களுக்கு அருகில் அஸ்வினி, கார்த்திகை, ஆயில்யம், சித்திரை என்று 27 நட்சத்திரங்கள் இருக்கிறதாம் இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றவாம். சூரியனை சுற்றி கோள்கள் வருகிறதா? இல்லை இந்த 27 நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் வருகிறதா? தலையே கிர்ர்ர்ருன்னு சுற்றுகிறது!

எல்லா கோள்களும் ஒரே வேகத்தில் வருவதில்யாம் ஒவ்வொரு கோளும் வேகத்தில் மாறுவிடுகின்றனவாம்.

சரி! கோள்கள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது.
பூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி(Venus), செவ்வாய் (Mars) ,வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) முதலான கோள்கள் சூரியன் (Sun), சுற்றி வருகிறது.

ஜோதிடர்கள் கூறும் கோள்களின் வேக கணிப்பு பொய்

கோள்கள் பெயர்
ஜோதிடர்களின் கோள் கணிப்பு
நாசா விஞ்ஞானிகளின்
கோள் கணிப்பு
சூரியன்12 மாதம்சுழலும் காலம்  30 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 273 m/s/s
வெளியேறும் வேகம் 620 km/sec.
சந்திரன்30 நாள்சுழலும் காலம்  27.32 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 1.6 m/s/s
வெளியேறும் வேகம் 2.38 km/sec
செவ்வாய் 1½ ஆண்டுகள்சுழலும் காலம் 24.62 மணிகள்
ஈர்ப்பு வேகம் 3.7 m/s/s
வெளியேறும் வேகம்  5.01 km/sec.
ராகு &  கேது18 ஆண்டுகள்,இப்படி 2 கோள்கள் இல்லை
சனி30 ஆண்டுகளசுழலும் காலம் 10.53 மணிகள்
ஈர்ப்பு வேகம் 9.1 m/s/s
வெளியேறும் வேகம்  35.60 km/sec.
ஜோதிடர்களின் இந்த கோள்களின் வேக கணிப்பை விஞ்ஞானிகளின் வேக கணிப்புடன் இணைத்துப்பார்த்தால் நமக்கு தலை சுற்றல்தான் வருகிறது. இந்த அளவுக்குமா ஜோதிடர்கள் புரளியை கிழப்புவார்கள்.

சனி கிரகத்தை கிண்டல் செய்யும் ஜோதிடர்கள்!
ஒன்பது கிரகங்களில (அதாவது 2 பொய் கிரகங்களும் சேர்த்து) சந்திரன் என்ற கிரகம்தாம் வேகமாக சுற்றுகிறதாம்.  சனி கிரகம் மெதுவாக சுற்றுகிறதாம். எனவே சனி கிரகத்தை மந்தன் என்று கூறுகிறார்கள்.

சனி கிரகம் பற்றிய நொண்டி கதையை கேளுங்கள்
சனி என்பவர் ஒரு கிரகமாம் அவருக்கு ஒருகால் நொண்டியாம். ஆகவேதான் இந்த சனி கிரகம் மட்டும் சூரிய குடும்பத்தில் நொண்டி நொண்டி மெதுவாக சுற்றிவருவாராம். அந்த நொண்டி கதையை படித்துப்பார்ப்போமா!

இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினானாம்  அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றாம்  ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விட்டானாம்.

ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்குமாம் அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாதாம். இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டானாம். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனராம்  

ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினராம் அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டாராம்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டாராம். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகுமாம். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டாராம், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தனவாம்.


இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தானாம், சனி 12ம் இடத்தில் காணப்பட்டாராம்

தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டானாம் உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டானாம் இது தான் சனிபகவான் நொண்டியான கதையாம். ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறாராம்.

நொண்டி கதையை சிந்தித்துப்பாருங்கள்
நாம் இந்த ஜோதிடப் பிரியர்களிடம் கேட்பது என்னவென்றால் இந்த சனி பகவானுக்கு ஜாதகம் கணிக்க யாரும் இல்லையா? தன் கால் நொண்டியாகும் என்ற செய்தியை சனி பகவானால் முன்கூட்டியே கணித்து அறியவோ அதற்கான பரிகாரம் செய்யவோ இயலவில்லை அப்படியிருக்க இந்த சனி பகவான் எப்படி மற்றவர்களுக்கு குறி சொல்ல பயன்படுவார்.

இந்த நொண்டிக்கதைகளை வைத்துக்கொண்டு மனிதர்களை ஏமாற்றுகிறார்கள் இந்த ஜோதிட வித்துவான்கள் அதாவது காசுக்காக தங்களடைய கடவுளையை நொண்டியாக்கி அதன் மூலம் குளிர்காய்கிறார்கள். தாங்கள் வணங்கும் கடவுளை நொண்டியாக்கும் இந்த அவலநிலை இந்த தமிழர்களுக்கு தேவையா?

ஜாதகத்தை  கணிக்கும் முறையில் தவறுகள்
  1. கிருதயுகம்.
  2. திரேதாயுகம்
  3. துவாபரயுகம்
  4. கலியுகம்.

வாண்மண்டலம் இந்த நான்கு யுகங்களையும் கொண்டதாம் இதற்கு  ஒரு சதுர்யுகம் என்று பெயராம். இந்த சதுர்யுகத்தில் முதல் 3-யுகங்கள் முடிந்துவிட்டதாம் இப்போது நடை முறையில் இருக்கும் யுகம் கலியுகமாம்

  • ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகளாம்
  • கலியுகத்தில் 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டனவாம்

ஆனால் விஞ்ஞானிகளின் துள்ளியமான கணிப்பு படி இந்த வாண் மண்டலம் காஸ்மோலாஜிகள் டைம் (cosmological time) பிரகாரம் 13.73 பில்லியன் வருடங்கள் முடிந்துவிட்டதாம்.

ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள் இப்போது 13.73 பில்லியன் என்பதை இந்திய முறைப்படி கணித்தால் 13,73,00,00,000க்கு மேல் செல்கிறது. அதாவது

விஞ்ஞான கணிப்பு
13,73,00,00,000
ஜோதிடர்களின் கணிப்பு
43,20,000
வித்தியாசம்
13,72,56,80,000

ஜோதிடர்களால் ஒழுங்காக பிரபஞ்சத்தின் வயதை கூட அறிய முடியவில்லை கணித பாடத்தையே தப்பாக போட்டு வைத்துள்ளார்கள் அப்படியிருக்க ஜாதகம் எப்படி துள்ளியமாக அமையும். (பிரபஞ்சத்தின் வயதை அல்லாஹ் மட்டுமே துள்ளியமாக அறிவான் காரணம் அவன் பிரபஞ்சத்தை முன்மாதிரியின்றி படைத்தவன்)

சிந்திக்க சில அருள்மறை குர்ஆன் வசனங்கள்

துன்பம் ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் அதிகாரம்
 எத்துன்பமும் அல்லாஹ்வுடைய கட்டளை கொண்டே தவிர உண்டாகுவதில்லை.(அல் குர்ஆன் 64:11)

அல்லாஹ்விடம் துன்பம் பற்றிய பதிவேடு உள்ளது
 எத்துன்பத்தையும் (உலகில்) நாம் உண்டாக்குவதற்கு முன்னதாகவே (லவ்ஹ{ல் மஹ்பூல் என்னும் ) பதிவேட்டீல் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலும் உங்களிலும் எத்துன்பமும் ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு (மிக) இலேசானதாகும்.(அல் குர்ஆன் 57~22)

அல்லாஹ்வைத் தவிர யாரக்கும் மறைஞானம் கிடையாது
மறைவானவற்றின் திறவுகோள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள். இன்னும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலை உதிர்வதைக் கூட அவன் அறியாமல் (அவன் கட்டளையின்றி) அது உதிர்வதில்லை.பூமியின் இருள்களுள்ள எந்த விதையும் எந்தப் பசுமையானதும் எந்தக் காய்ந்ததும் அவனுடைய தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல் குர்ஆன் 6:59)
மறைவான ஞானம் இறைத்தூதர்களுக்கும் கிடையாது
 (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் எங்களுக்கு எதை விதித்துள்ளானோ அதைத்தவிர (வேறொன்றும் ;) எங்களுக்கு உறுதியாக ஏற்படாது. அவன் (தான்) எங்களின் பாதுகாவலன். அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் முழுநம்பிக்கை வைக்கவும்.(அல் குர்ஆன் 9:51)
 அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்
தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.
பெரும்பாண்மையான இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும் படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!
தவ்ஹீத் எதை போதிக்கிறது
தவ்ஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்று பொருள்படும் அதாவது ஏகனாகிய அல்லாஹ்வை பற்றி இஸ்லாம் கூறும் சித்தாந்தம் இதோ:
  • அல்லாஹ் தனித்தவன், இணை துணையில்லாதவன்,
  • அல்லாஹுக்கு நிகர் அவனே
  • அல்லாஹுக்கு நிகராக யாரும் இல்லை,
  • அல்லாஹ் அவனே முதலானவன், அவனே முடிவானவன்,
  • அல்லாஹ் அவனே அகிலங்களை படைத்து பரிபாலிப்பவன்
  • அல்லாஹ் அவனே ஜீவராசிகள் அனைத்திற்கும் ரட்சகன்
  • அல்லாஹ் அருளானவன், அன்பானவன், அழகானவன்,
  • அல்லாஹ் பேராற்றலுடையவன், அண்டங்களின் அதிபதி
  • அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசையாது
  • அல்லாஹ் படைப்பினங்கள் ஒவ்வொன்றையும கண்காணிப்பவன்
  • அல்லாஹ் அனைத்து பாக்கியங்களையும் அருள்பவன்
  • அல்லாஹ் நம்மை பராமரிப்பவன், நம்மை பாதுகாப்பவன்,
மேற்கண்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கே கொண்டுள்ள பேராற்றலுடைய அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வை வணங்குகள் அவனைத் தவிர வேறு எதையும் வணங்காதீர்கள் அவ்வாறு வணங்கினால் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறது இந்த கோட்பாடுதான் தவ்ஹீத் அதாவது இஸ்லாத்தின் முதல் முக்கிய கலிமாவாகிய
லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ்
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்)
தவ்ஹீத் கொள்கையை பின்பற்றுபவர்கள் என்ன கூறுகிறார்கள்!
தவ்ஹீத் என்ற அழகான கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தாமாக எதையும் உருவாக்கிக்கொண்டு பேசுவது கிடையாது மாறாக அவர்கள் அல்குர்ஆனையும், நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையான ஹதீஸ்களையும் தீர ஆராய்ந்து அந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எவ்வாறு  வாழந்துக் காட்டி வாழ வலியுறுத்தினார்களோ அதைத்தான் போதிக்கிறார்கள். காரணம் நபி (ஸல்) அவர்களை பின்பற்று பவர்களாகிய நாம் நாமாக, நம் இஷ்டப்படி எதையும் பின்பற்றுவதில்லை எத்திவைப்பதில்லை மாறாக நம் நபிகளாரின் வழிமுறை பின்பற்றுகிறோம். இதோ கீழ்கண்ட இறைவசனத்தை கேளுங்கள்!
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 10:15)
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவர்கள் சத்தியமுழக்கமிடுகிறார்கள் இதோ அந்த சத்திய முழக்கத்தை சற்று நீங்களே சிந்தியுங்கள்!
அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள்!
ஏகனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம், நம் வாழ்வும் நம் மரணமும் ஒரு சோதனையாக உள்ளது அந்த சோதனையில் வெற்றி பெற வேண்டுமெனில் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அல்லாஹ்விடமே அருளுதவி தேடுங்கள் என்ற கண்ணியமாக முழக்கமிடுகிறார்கள்.
இந்த சத்திய முழக்கத்தை கேட்டவுடன் இணைவைப்பாளர்களும், மாற்றுமத்தவர்களும் எங்கள் இஷ்ட தெய்வங்களை ஏசுகிறான், இவனுக்கு அனுமதியளித்தது யார்? என்று பேசிக்கொள்கிறார்கள் சற்று கீழ்கண்ட வசனத்தை படித்தால் இவ்வாறு முழக்கமிட சொன்னது யார் என்ற புரியும்! இதோ அந்த வசனம்
நபிகளார் (ஸல்) கூறினார்கள்
பிரார்த்தனை தான் வணக்கமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ர­) (ஆதார நூல்கள்: அஹ்மத் , திர்மீதி, அபூதாவூத்)
அல்லாஹ் கூறுகிறான்
ல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:106)
இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் தர்காஹ்வை வழிபடாதீர்கள்!
தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தர்காஹ் வாதிகளை நோக்கி இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் அவர்கள் மண்ணோடு மண்ணாகி மக்கிவிட்டார்கள் அவர்களால் எதையும் கேட்க முடியாது, அவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்று அறிவுரை கூறினால் உடனே தர்காஹ்வாதிகள் என் அவ்லியாவை திட்டுகிறான் இவனுக்கு ஏன் இந்த நெஞ்சழுத்தம் என்று வினவுகிறார்கள். கப்ருகளை வணங்கும் சகோதரர்களே கீழ்கண்ட அருள்மறை குர்ஆனில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தை கேட்டால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்!
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:197, 198)
”கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தனர்’ (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.)

தாயத்து கட்டாதீர்கள்!
தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தர்காஹ்வாதி களிடம் மந்திரித்த தாயத்துக்களை கட்டாதீர்கள் அது நபிவழிக்கு முற்றிலும் மாற்றமானது இதனால் நீங்கள் சீரழிந்துவிடுவீர்கள் என்று அறிவுரை கூறினால் உடனே தர்காஹ்வாதிகள் உனக்கு இவ்வாறு கூறியவன் யார் என்று கேள்வி எழுப்புவார்கள் அதற்கு பதில் இதோ கீழ்கண்ட எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்தான் நம்மை தாயத்து கட்ட வேண்டாம் என்று ஆணை பிரப்பித்தார்!
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்
ஷபே பராத் இரவு வேண்டாம், மண்ணரைத் திருவிழா கூடாது!
தவ்ஹீத் என்ற அற்புதமான கொள்கையை ஏற்றுக்கொண்ட நாம் கப்ருகளை வணங்கும் தர்காஹ்வாதிகளையும், மத்ஹபுவாதி களையும் நோக்கி ஷபே பராத் என்ற இரவை நபிகளார் காட்டித் தரவில்லை அன்றைய தினம் மண்ணரைகளில் விழா கொண்டாடுவது காஃபிர்கள் மற்றும் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறை என்று அறிவுரை கூறினால் அதை ஏற்க மறுத்து நம்மை அடிக்க கைகளை ஓங்குகிறார்கள் இவர்கள் ஏன் கீழ்கண்ட வசனத்தை உணர்வதில்லை
அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:-
“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319    3456)
அல்லாஹ் கூறுகிறான்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
மவ்லூது பாடாதீர்கள், கத்தம் பாத்திஹா ஓதாதீர்கள்!
மவ்லூதுகளை பாடி கத்தம் பாத்திஹாக்களையும், நபிகளார் காட்டித்தராத திக்ருகளையும், 1000 முறை கௌது நாயத்தை அழைப்பதையும் கண்டித்து இதனால் நரகம் சித்தப்படும் என்ற எச்சரித்தால் நம்மை நோக்கி தர்காஹ்வாதிகள் மூடர்கள் இவர்கள் புதுமைவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள் ஆனால் இவ்வாறு உண்மையை உணர மறுக்கும் இவர்கள் நபிகளாரின் கீழ்கண்ட அறிவுரையை இதுநாள் வரை உணராதது ஏன்?
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள். (அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)
யார் அதிகப்பிரசங்கவாதிகள் தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவரா?

குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்இணைவைப்பாளர்கள் மத்ஹபுவாதிகள்
அல்லாஹ்வை தவிர எதையும் வணங்காதீர்கள்(அல்குர்ஆன்)அவ்லியாவையும் வணங்குவோம்
இறந்தோரை பிரார்த்திக்காதிர்கள் (அல்குர்ஆன்)இறந்தோர் நமக்கு அருள்புரிவார்கள்
கப்ருகளை உயர்த்திக் கட்டாதீர்கள்(நபிமொழி)கப்ருகளை உயர்த்திக் கட்டுவோம்
உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் (நபிமொழி)உயர்த்திக் கட்டப்படட கப்ருகளையும், தர்காஹ்களையும் இடிக்கமாட்டோம்!
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள்.
(அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)
மார்க்கத்தில் புதுமையை விரும்புவோம் மவ்லூது, கத்தம் பாத்திஹா, கந்தூரி விழா, ஷபே பராத், மண்ணரை திருவிழா 1000 முறை கவுஸ் என்ற அழைப்போம் இன்னும் ஏராளம் இருக்கு அது நம் மூதாதையர்கள் காட்டித்தந்த வழிமுறை அதை விடமாட்டோம்!
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்
தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்
தாயத்தை கட்டினால் என்ன? தாயத்தை கட்டுவோம், கட்டக்கூடாது என்று கூறுபவர் யார்?

முடிவுரை
தர்காஹ்வை வணங்கி வந்த என் அருமை சகோதர சகோதரிகளே இந்த அறிவுரை உண்ணிப்பாக படித்த நீங்கள் இனி எந்த வலிமுறையை பின்பற்ற போகிறீர்கள்!
அல்லாஹ்வும் அவனது அனைத்து நபிமார்களும் காட்டித் தந்த வழிமுறையையா? அல்லது அல்லாஹ்வும் அவனது நபிமார்களும் காட்டித்தராத உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய கண்மூடித்தனமான குருட்டு வழிமுறையையா?
நீங்கள் எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்
இனிப்பு வேண்டுமா? கசப்பு வேண்டுமா என்றால் இனிப்பை அழகாக தேர்ந்தெடுப்பீர்கள்! மானம் வேண்டுமா? அவமானம் வேண்டுமா என்றால் மானம்தான் பெரிது என்பீர்கள்! சுவர்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? என்றால் சுவர்கம்தான் வேண்டும் என்பீர்கள் ஆனால் அந்த சுவர்கத்திற்கு செல்ல நீங்கள் உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய மார்க்கத்திற்கு முரணாண காரியங்கள் அனைத்தையும் இன்றே இக்கணமே விட வேண்டும் அதற்கு பதிலாக நபிகாளர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் அது எப்படிப்பட்டது இதோ அல்லாஹ் கூறுகிறான் கேளுங்கள்!
(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (அல்குர்ஆன், 16:44)
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (அந்த) நாளில் அவர்களிடம் (நீங்கள் மக்களுக்கு எனது கட்டளைகளை எடுத்துக் கூறிய போது) “என்ன பதிலளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான். அதற்கு அவர்கள் அது பற்றி எங்களுக்கு எவ்வித ஞானமுமில்லை. நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை யெல்லாம் அறிந்தவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5: 109)

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்59:7)

குர்ஆன் ஹதிஸ் வசனங்களை தேட பேருதவியாக இருந்த வெப், பிளாக் தளங்கள் அனைத்திற்கும் நன்றி!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!

ஈமான் பறிபோகலாமா?..............வீடு கட்ட வாஸ்து

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஈமான் பறிபோகலாமா?

அன்புச் சகோதர சகோதரிகளே! நம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவன் நம்மை சோதித்துப்பார்ப்பதற்காகவே நன்மைகளையும், தீமைகளையும் உருவாக்கியுள்ளான். உதாரணமாக

நன்மைகளின் மூலம் சோதனைகள்! 
நம்மில் சிலர் சிலருடைய வாழ்க்கையில்கு தீமைகளை விட நன்மைகள் அதிகம் நடக்கும் பொருளாதாரத்தில், மனைவி, மக்கள், சொத்து, சுகம் போன்றவற்றில் சீரும் சிறப்பும் பெற்றிருப்பார்கள்! இப்படிப்பட்ட சுகங்களை அனுபவிக்கொண்டு படைத்த ரப்புக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்களா? என்பதற்காக நன்மைகள் கொடுத்து சோதிக்கிறான்!

தீமைகள் மூலம் சோதனைகள்! 
நம்மில் சிலர் சிலருக்கு அடிமேல் அடி விழுந்துக்கொண்டே இருக்கும், அதிகமாக பேரிழப்புகள், தொழில் நஷ்டங்கள், மனைவி மக்களின் தவறாக வழிமுறைகளால் குடும்பத்தில் நிம்மதி யின்மை, துக்கம், அழுகை போன்றவை காணப்படும் இப்படிப்பட்ட சோதனைகளை கொடுத்தால் ஒருவன் தனக்கு கீழ்படிகிறானா? அல்லது தன்னுடைய கட்டளைகளுக்கு மாறு செய்கிறானா என்று படைத்த ரப்புல் ஆலமீன் சோதிக்கிறான்! 

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)
 
 
 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்என்று கூறுவார்கள். (2:156)

ஆனால் நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட நன்மைகளை கண்டு நமக்கு இல்லையே என்றும், நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட தீமைகளைக் கண்டு அப்பாடா நாம் தப்பித்தோம் என்றும் வாழ்ந்து வருகிறோம். மேலும் முஸ்லிம்களாகிய நம்மில் சிலர் நன்மையோ தீமையே எப்போது வரும்? எவ்வாறு தடுப்பது? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு மாற்றுமதத்தவர்களின் காலடியில் விழுந்து ஈமானை இழந்துவிடுகிறோம் அவர்கள் கூறுவதை அப்படியே பின்பற்றுகிறோம்! இதோ ஈமானை இழக்கும் காரியங்கள் உங்கள் பார்வைக்கு:


ஜாதகம் கணிப்பது! நாடி சோதிடம் கணிப்பது!
ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தை பிறந்த நாள், நேரம்,  வினாடி போன்றவற்றை துள்ளியமாக வைத்துக்கொண்டு அதன்மூலம் அந்த குழந்தையின் எதிர்காலம், அதனுடைய தந்தையின் வெற்றி தோல்வி ஆகியன கணிக்கிறார்கள். கேட்டால் குழந்தையின் பிறப்பின் குறிப்பிட்ட வினாடியின்போதுதான் விதி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் இது முற்றிலும் பொய் என்பதற்கு ஆதாரம் உள்ளது!

மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி

இந்த நபிமொழியின் மூலம் நமக்கு தெளிவாக புரிவது என்னவென்றால் விதியை குழந்தை பிறக்கும் போது தீர்மாணிக்கப்படுவது கிடையாது மாறாக கருவறைக்குள் இருக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது என்பதே! மேலும் கருவரை யில் எந்த வினாடி விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் என்ன விதி எழுதப்பட்டுள்ளது என்பதும் படைத்த இறைவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை அவ்வாறு இருக்க பிறந்த நொடியை வைத்து எவ்வாறு ஜாதகம் கணிப்பீர்கள்! சில ஜாதக-புரோகிதர்கள் குழந்தை பிறந்த வினாடி வைத்த ஜாதகம் கணிக்கிறார்களே இவர்கள் பொய்யர்கள் என்பது இந்த நபிமொழியின் வாயிலாக தெளிவாக புலப்படவில்லையா! இன்னுமா நீங்கள் இப்படிப்பட்ட மனிதர்களிடம் சென்று ஏமாறவேண்டும்.

கைரேகைகள் கணிப்பது
ஒவ்வொரு மனிதனுக்கும் கண்கள், காதுகள், நாக்கு, வாய், பற்கள் இருப்பது போன்று கைகளில் ரேகைகள் இருப்பதும் சகஜம்தான் ஆனால் இதில் கூட கணிப்புகள் கணிக்கின்றனர்.  கைகளில் உள்ள ரேகைகளை பார்த்தால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான், அவனுக்கு எத்தனை திருமணங்கள் நடக்கும், அவனது கையில் செல்வம் நிலைக்குமா இல்லை ஓட்டைக் கையா? என்று பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் கைரேகையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பார்கள் அதை பார்த்துவிட்டு வீட்டுக் செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மரணித்தவர்கள் எத்தனைபேர். அந்த விபத்தில் கைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் கைகள் அறுபட்டவர்களுக்கு எதிர்காலம் இல்லையா? அல்லது கைரேகைகள் இல்லாததால் நல்ல நேரம், கெட்ட நேரம் முடிந்துவிட்டதா?

எண் கணித சோதிடம்
13ம் நம்பர் வீடு பேய்வீடு என்பார்கள், வண்டியின் வாகன எண் 8ஆக இருந்தால் கெடுதல் என்று கூறுவார்கள். இவர்களின் கணிப்பினால் வீட்டை காலி செய்தவர்கள் எத்தனைபேர் புது வண்டியை அற்ப விலைக்கு நஷ்டத்தில் விற்றவர்கள் எத்தனைபேர்! அருமைச் சகோதரர்களே! சற்று சிந்தித்துப்பாருங்கள் 13ம் நாளிலோ அல்லது 8ம் நாளிலோ நீங்கள் பிறந்திருந்தால் உடனே தற்கொலை செய்துக் கொள்வீர்களா? அல்லது எண்கணித நிபுணர் தான் இதை செய்வானா? 786 என்ற அவலம் கூட இந்த கூத்துக்களில் அடங்குகிறது என்ன செய்ய நம்முடைய குர்ஆன்-ஹதீஸ்களை விளங்காத மக்கள் கூட படைத்த இறைவனை நம்புவதைவிட இந்த எண்களை அதிகம் நம்புகிறார்களே! (அல்லாஹ் காப்பாத்தனும்)

கிளி ஜோசியம்
ஆகாயத்தில் தன் ஜோடியுடன் சுந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் கிளியை பிடித்து அதன் இறக்கைகளை உடைத்து அதை பறக்காதவிதமாக ஊணமாக்கி ஒரு கூண்டில் அடைத்துவிட்டு பின்னர் அதனிடம் சீட்டுக்களை எடுக்க சொல்கிறார்கள் இது முறையா? சிந்தித்துப்பாருங்கள் உங்கள் மனைவியுடன் நீங்கள் சுதந்திரமாக இல்லறத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கும் நேரத்தில் உங்களை பிடித்து உங்கள் கை, கால்களை உடைத்து ஊணமாக்கி கூண்டில் அடைத்துவிட்டு எனக்கு நல்ல நேரம் கூறு என்றால் எப்படி இருக்கும்! அந்த கிளியோ பாவம் பசிக்காக சீட்டை எடுத்து கொடுக்கிறது இல்லையெனில் இறை கிடைக்காது! ஆனால் நம்மில் சிலர் ரசிப்பதற்காக அதனிடம் செல்கிறார்கள்! அல்லாஹ் படைத்த உயிரினத்தை கொடுமை படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)

பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
  
பல்லி விழும் பலன்
பல்லி சத்தம் போட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் ஆனால் அதே பல்லி தலையில் விழுந்துவிட்டால் அவசகுணமாம்! பல்லி இறையைத் தேடவும் தன் உறவைத் தேடவும் அழைப்பு கொடுப்பது அதன் சப்தத்தால்தானே ஆனால் இந்த பல்லியின் சப்தம் எவ்வாறு சில அறிவாளிகளுக்கு மட்டும் சகுனமாக தென்படுகிறது!  பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்த இவர்களுககு பல்லி ஆசிரியராக வந்து தன்னுடைய சப்த சகுணத்தின் பாடம் கற்பித்ததா?  என்னய்யா வேடிக்கை இது!

மணி ஓசை சகுணம்
நம் பேசிக்கொண்டிருக்கும் போது தேவாலயத்தில் மணி அடிக்கப்பட்டால் அல்லது செல்போனில் ரிங் ஒலித்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் இப்படியும் ஒரு சில அறிவாளிகள் இருக்கின்றனர் ஆனால் இவர்கள் (மரணித்த) எளவு-வீட்டில் அமர்ந்துக் கொண்டு மரணித்த மனிதனை நோக்கி உயிர்பெற்றுவிடு என்று நினைக்க அந்த நேரத்தில் ஆலயமணி  அல்லது செல்போன் ரிங் அடிக்கப்பட்டால் அந்த மரணித்த மனிதன் உயிர்பெற்றுவிடுவானா?

பூனை சகுனம்
ஒரு பூனை பசியுடன் அங்கும் இங்கும் அலைந்துதிரியும் எலி கிடைக்கவில்லையெனில் தாருமாறாக ஓடும் ஆனால் நம்மவர்களோ பூனை குறுக்கே வந்துவிட்டது போகும் காரியம் நடக்காது என்பார்கள்! சிந்தித்துப்பாருங்கள்! பூனை இறைதேடும் போது நாம் குறுக்கே வந்திருப்போம் நம்மை பார்த்து எலி பயந்து ஓடியிருக்கும் இதனால் பூனையின் உணவு பறிபோயிருக்கும்! பூனைக்கு பேசும் ஆற்றல் இருந்து அது நம்மை பார்த்து அவசகுணம் பிடித்தவனே ஏன்டா நடுவில் வந்தாய் என்று கூறினால் எப்படி இருக்கும்?

விதவை சகுணம்
கைம்பெண்கள் (கணவன் இளந்தவர்கள்) பாவம கணவனை இழந்து நொந்து நூலாக மாறி அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்யவது பெற்ற பிள்ளை குட்டிகளை எவ்வாறு பராமறிப்பது என்று ஏங்கித்தவிக்கும்! இப்படிப்பட்ட பெண்களுக்கு கருணை காட்டாமல் இவர்கள் நடுவே வந்துவிட்டால் போன காரியம் உருப்படியாகாது என்கிறீர்களே சிந்தித்துப்பாருங்கள் தந்தைய இழந்த எததனை மகன்கள் விடிந்ததும் அவர்களுடைய விதவைத் தாயை பார்க்கிறார்கள் பெற்ற தாய் விதவையானால் சகுணம் இல்லையாம் வீதியில் விதவை போனால் குற்றமாம்!

மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து

வீடு கட்டுவார்கள் மனையடி சாஸ்திரம், வாஸ்து பார்ப்பார்கள் இறுதியாக அது சரியில்லை, இது சரியில்லை, இது மூலக்குத்தல், இது அந்த கடாட்ஷம் என்று நொண்டிச்சாக்கு கூறி இறுதியாக வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடுவார்கள். வீட்டின் மேல் மாடியில் கக்கூஸ் இருக்கும் கீழ் வீட்டார்கள் அடிக்கடி மலஜலம் கலிக்க மேல்மாடிக்கு வருவார்கள். சமையல் அறையின் அருகில் கக்கூஸ் இருக்கும் நாற்றம் சமைத்த உணவுக்குள் வந்துவிடும் கேட்டால் இதுதான் வாஸ்து என்பார்கள்! வீட்டுக்கு வெளியே சாக்கடை ஏரியாக ஓடும் அங்கே ஜன்னல் வைத்தால் யோகம் வரும் என்பார்கள் ஆனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு மலேரியா, டெங்கு போன்ற வைரல் நோய்கள்தான் தான் வரும்! வீடு உள்பக்கம் தாழ்வாக உள்ளது மனையடி சாஸ்திரப்படி உயரப்படுத்துகிறோம் என்று கூறி வீட்டிற்குள் 10-15 அடி நீளம் கொண்ட சிறிய திட்டு அமைப்பார்கள் அதில் தடுக்கிவிழுந்து பல் உடைபட்டவர்கள் எத்தனைபேர்? இதற்குப் பெயர்தான் மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து!

ராசிக்கல் மோதிரம்
ராசியாம் ராசிக்கல் மோதிரமம்!  பச்சை மரகதக் கல்லை மோதிரத்தில் வைத்தால் சிலருக்கு யோகம் கொட்டுமாம், கோமேதகம் மற்றும் பவளம் போட்டால் சிலருக்கு லாபம் கொட்டுமாம்! தங்கத்தை போன்று கற்களை விற்க முடியவில்லை உடனே ராசி என்று பெயர் வைத்துவிட்டார்கள். மனிதன் ஒரு உயிர் வாழக்கூடிய படைப்புதானே ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் மனிதனுக்கு நல்ல நேரம் வரும் எனில் குரங்கும் ஒரு உயிரினம் தானே அதற்கு அந்த ராசிக்கல் மோதிரத்ததை போட்டுவிடுங்களேன் ராசியினால் வாழைப் பழமாவது தினமும் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம்! ராசிக்கல் கடைக்காரர் தன்னுடைய கடையில் 1000 வகைவகையான ராசிக்கற்களை வைத்திருக்கிறார் எனவே கற்களால் ராசி வருகிறது உண்மையானால் ஏன் தன்னுடைய கற்களை பிறருக்கு விற்பனை செய்ய வேண்டும்! விற்காமல் இருந்தாலேயே ராசி கொட்டுமல்லவா? இதுவெல்லாம் பணம் கறைக்கம் நாடகம் சகோதரர்களே நம்பி மோசம் போகாதீர்கள்!

மச்சம் கணிப்பது
முகத்தில் மச்சம் இருப்பது ஏதாவது இரத்த ஓட்ட குறையினால் வரலாம் அல்லது இயற்கையாக அமையலாம் அதில் கூட கணிக்க ஆரம்பிக்கிறார்கள். மூக்குக்கு மேலே மச்சம் வந்தால் ஒரு கருத்து, கண்ணங்களில் மச்சம் இருந்தால் ஒரு கருத்து! தெருவில் சுற்றித்திரியும் நாய்க்கும் தான் மச்சம் இருக்கிறது அதற்காக அது மனிதனாக மாறிவிடுமா? நாயை பிடித்து மச்சம் பார்த்தால் நாய் கடித்து குதறிவிடும் மனிதனை பிடித்து மச்சம் பார்த்தால் பல்லை இழித்துக்கொண்டு கேட்பான்! நாய்க்கு உள்ள அறிவு கூட கணிக்கும் மனிதனுக்கும் அதை கேட்பவனுக்கும் வருவதில்லை இவர்கள் அறிவாளிகள்!

ஒரு நபிமொழி
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே!ஈமான்எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார். 
அவர்கள், ‘ஈமான்எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்என்று பதிலளித்தார்கள். 
இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ஸக்காத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்என்றார்கள்.அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே!இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)என்று பதிலளித்தார்கள். 

அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்று கேட்க நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்: 
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். 
நபி(ஸல்) அவர்கள் அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள்இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (ரலி), ஆதாரம் : புகாரி

முடிவுரை
உங்களுக்கு ஒரு தீங்கு வந்துவிட்டால் உடனே அதற்காக அல்லாஹ்விடம் துவா கேட்டு நல்லுணர்வு பெறாமல் கேடு கெட்ட மாற்றுமத கலாச்சரங்களை  பின்பற்றுகிறீர்களே நீங்கள் ஈமானின் சுவை சுவைப்பது எப்போது!
திருமறை வசனம்
முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, October 4, 2011

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக... ஆமீன்...!

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
 
3. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
 
4. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

5. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

6. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

7. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

8. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

9. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

10. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

11. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

12. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

13. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

14. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

15. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

16. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

17. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

18. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

19. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

20. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

21. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

22. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

23. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

24. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

25. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

26. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

27. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

28. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!


29.சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes