ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
﴿إِنَّا خَلَقْنَا الإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ “நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்.”(76:2)
“ ஒருமுறை யூத மதத்தைப் பின்பற்றும் ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “ ஏ முஹம்மதே! மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “ஓ யூதனே! மனிதன் ஆணினதும் பெண்ணினதும் கலப்புத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான்” என்றார்கள். உடனே அந்த யூதர் “முன் வந்த நபிமார்களும் இவ்வாறுதான் கூறினார்கள்” என்றார்.” (முஸ்னத் அஹ்மத்)
முதலாவது கருத்து:
அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் விண்ணியல், பூகோளவியல், இரசாயனவியல், விலங்கியல், முளையவியல் என பல்வேறு அறிவியல் கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவை வெறுமனே விஞ்ஞானத் தகவல்களாக மாத்திரமல்லாமல் இறை இருப்பை உறுதிப்படுத்தவும் ஈமானைப் பலப்படுத்தவுமான ஏற்பாடுகளாகவுமேதான் காணப்படுகின்றன. “விஞ்ஞானமோ, தொழிநுட்பமோ, அதுசார் உபகரணங்களோ கண்டுபிடிக்கப்பட்டிராத அந்த 6ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற அறிவியல் உண்மைகளைக் கச்சிதமாகக் கூறுவது எவ்வாறு சாத்தியம்?” என்று சிந்திக்கும்போதுதான் இஸ்லாம் இறைவழிகாட்டலின் கீழ் முஹம்மத் நபியவர்களால் போதிக்கப்பட்ட ஒரு இறைமார்க்கம் என்பது நிரூபனமாகின்றது. அந்த அறிவியல் உண்மைகளில் பலதைக் கண்டறிந்துள்ள இன்றைய நவீன விஞ்ஞானம் இன்னும் பலதைக் கண்டுபடிக்கவில்லை என்பதும் உண்மைதான்.
முளையவியல் ஆராய்ச்சிகளுக்கு ஆர்வமூட்டும்வகையில் அல்குர்ஆனும் ஹதீஸ{ம் பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களைத் தருகின்றன. மனித உருவாக்கம் பற்றிப் பல்வேறு கருத்துவேறுபாடுகள் கடந்த நூற்றாண்டுகளில் காணப்பட்டபோதிலும் பிற்பட்ட காலங்களில் அவை பிழையானவையென நிரூபிக்கப்பட்டன. அன்று மருத்துவத் தொழிநுட்பம் வளர்ச்சியுற்றிறாமையே இதற்குக் காரணம். ஆனால் 21ஆம் நூற்றாண்டின் மருத்துவத் தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியின் விளைவாக தாயின் கருவறையில் குழந்தையின் ஒவ்வொருகட்ட வளர்ச்சிப் படிமுறைகளையும் துல்லியமாக அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையில் 21ஆம் நூற்றாண்டில் அறியப்பட்டுள்ள இக்கருவளர்ச்சி பற்றிய உண்மைகளை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆனும்; ஹதீஸ{ம் கூறியிருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். எனவே இன்றைய கருவளர்ச்சிக் கண்டுபிடிப்புகள் எவ்வாறு அல்குர்ஆனுடன் பொருந்தி நிற்கின்றன என்று பார்ப்போம்.
சிசு உருவாக்கம் பற்றிய பழமைக் கருத்துக்கள் :
கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தாயின் கருவறையில் சிசு உருவாக்கம் மற்றும் சிசு வளர்ச்சி பற்றிய பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவந்துள்ளன.
1 Aristotle, Galan என்போர் “பெண்ணின் மாதவிடாய் இரத்தம் கர்ப்பப்பையில் உறைவதனூடாகவே சிசு உருவாகின்றது” என்றனர். இக்கருத்து கி.பி. 16ஆம் நூற்றாண்டுவரை ஆதிக்கம் செலுத்தியது.
2 1694 இல் நுணுக்குக்காட்டி கண்டுபிடிக்கப்பட்டதும் மனிதன் முழு வடிவத்தில் சிறிய அமைப்பில் விந்தினுள் காணப்படுகின்றான் என்ற கருத்து உருவானது. இதனைச் சித்தரிக்கும் விதத்தில் Hartsoeker என்பவர் ஒரு வரை படத்தையும் வரைந்து வெளியிட்டார். இதன்மூலம் மனித உருவாக்கத்தில் ஆணின் பங்கு மட்டுமே உள்ளது என்ற வாதம் நிலவியது.
3 1727 இல் பெண்ணின் சினை முட்டை கண்டுபிடிக்கப்பட்டதும் குழந்தை உருவாக்கத்தில் பெண் மட்டுமே பங்களிப்புச் செய்கிறாள் என்ற வாதம் உருவானது. ஆணின் விந்தினுள் மனிதன் எவ்வாறு சிரிய அமைப்பில் காணப்படுகின்றானோ அதே வடிவில்தான் பெண்ணின் சினை முட்டையிலும் மனிதன் காணப்படுகின்றான் என்ற கருத்து உருவாகி 1775ஆம் ஆண்டுவரைக்கும் நீடித்தது.
இக்கருத்துக்கள் அக்காலப்பகுதிகளில் உண்மையானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பிற்பட்ட காலங்களில் அவை பிழையென உறுதிப்படுத்தப்பட்டன. அக்கருத்துக்கள் உறுதியான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலமல்லாது வெறும் யூகங்களின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டிருந்தன. அக்கால மருத்துவத் தொழிநுட்ப வளர்ச்சிகளின் வசதிகளுக்கமையவே அம்முடிவுகள் பெறப்பட்டன என்பதால் அவற்றைப்பற்றி குறை கூறுவதற்கில்லை.
எனினும் 21 ஆம் நூற்றாண்டின் அதீத மருத்துவத் தொழிநுட்ப வளர்ச்சி, தாயின் கருவறையையும் கருவறையினுள் உள்ள சிசுவையும் சிசுவின் உடலினுள் உள்ள பகுதிகளையும் கூட அலசி ஆராயும் சாத்தியத்தினைத் தந்துள்ளது. எனவே ஒரு சிசுவின் படிப்படியான வளர்ச்சிக்கட்டங்களைத் துல்லியமாக இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தினால் அறிய முடியுமாக உள்ளது என்பதனை நாம் ஆரம்பமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
சிசு உருவாக்கம் பற்றிய அல்குர்ஆனின் கருத்துக்கள் :
4 நாம் மேலே பார்த்த கற்பனைக் கருத்துக்களை விட்டும் விஞ்ஞான பூர்வமான ஒரு கருத்தை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. மனித உருவாக்கத்திற்கு ஒரு ஆணினது விந்தணுவும் பெண்ணினது சினை முட்டையும் கட்டாயம் அவசியம் என்பதை இன்றைய விஞ்ஞானம் நிருபித்துள்ளது. இதனையே 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆன் இவ்வாறு கூறிவிட்டுள்ளது.
﴿إِنَّا خَلَقْنَا الإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ “நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்.”(76:2)
﴿ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.” (49:13)
﴿خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ . يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ﴾
“குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது.” (86:6,7)
“ ஒருமுறை யூத மதத்தைப் பின்பற்றும் ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து “ ஏ முஹம்மதே! மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “ஓ யூதனே! மனிதன் ஆணினதும் பெண்ணினதும் கலப்புத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான்” என்றார்கள். உடனே அந்த யூதர் “முன் வந்த நபிமார்களும் இவ்வாறுதான் கூறினார்கள்” என்றார்.” (முஸ்னத் அஹ்மத்)
ஆக மனித உருவாக்கத்தின் மூலம் எது? என்பதை அல்குர்ஆனும் ஹதீஸ{ம் ஆரம்பமாகவே இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளதோடு இன்றைய மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளுக்கு சான்றிதழ் வழங்கி அவற்றை உண்மைப் படுத்தவும் செய்கின்றன.
கருவறையில் சிசு வளர்ச்சி :
ஒரு தடவையில் ஆணிலிருந்து 2-4ml அளவான விந்து வெளிப்படுத்தப்படுகின்றது. 1ml அளவான விந்தில் சுமார் 120 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு அணு மாத்திரமே பெண்ணின் சினை முட்டையுன் இணைந்து கருக்கட்ட ஆரம்பிக்கின்றது. இதனை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். (ما من كل الماء يكون الولد) “முழுத்திரவத்திலிருந்தும் குழந்தை உருவாவதில்லை” (முஸ்லிம்)
ஆணின் விந்து பெண்ணில் செலுத்தப்பட்டு 24 மணி நேரங்களுக்குள், பலோப்பியன் குழாயினூடாக கருவறையை நோக்கி வந்துகொண்டிருக்கும் பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்து கருக்கட்ட ஆரம்பிக்கின்றது. அவ்வாறு இணைந்தது முதல் 5 மணிநேரங்களில் ஆணின் 23 நிறமூர்த்தங்களும் (Chromosome) பெண்ணின் 23 நிறமூர்த்தங்களும் (Ovum Chromosome) சேர்ந்து மொத்தமாக 46 நிறமூர்த்தங்களின் துணையோடு பரம்பரைப் பதிவு நிரல் (Genatic Programe) ஒன்று அக்கலத்தினில் உருவாக்கப் படுகின்றது. இங்கு ஆணின் நிறமூர்த்தம் XX என்ற அமைப்பிலும் பெண்ணின் நிறமூர்த்தம் XY என்ற அமைப்பிலும் காணப்படுகின்றன. பின்னர் பலோப்பியன் குழாயினூடாக விந்தினதும் சினை முட்டையினதும் சேர்க்கையான அக்கலப்புத்துளி 6 ஆம் நாளில் கருவறையை வந்தடையும். இக்கலப்புத் துளியையே அல்குர்ஆன் نطفة امشاج என்கின்றது.
﴿إِنَّا خَلَقْنَا الإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ﴾ “நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்.”(76:2) விஞ்ஞானம் இதனை ணுலபழவந என்கின்றது. இது கருவறையை நோக்கி வரும்போதே 2,4,8,16 என்ற பெருமானத்தில் ஒரு கடினமான உரையினுல் (Zona Pellucida) பருமனில் எவ்வித மாற்றமும் ஏற்படாத நிலையில் பல கலங்களாகப் பிரிகையடையும். இது Morula எனப்படுகின்றது. (படம் :4)
கருவறையை நோக்கி வரும் வழியின் 4ஆம் நாளில் Zygote - Blastocyst என்ற சூழாக விருத்தியடைய ஆரம்பித்து 6ஆம் நாள் கருவறையை வந்தடைகின்றது. பின்பு அங்கு இஸ்திரமாக 10 நாட்கள் نطفة امشاج என்ற நிலையில் தங்கியிருக்கும். இந்தத் தங்கு நிலையையே அல்குர்ஆன் ﴿فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ. إِلَى قَدَرٍ مَّعْلُومٍ﴾ “குறிப்பிட்டதொரு (கால) அளவுவரை அதனைப் பாதுகாப்பான இடத்தில் அமைத்தோம்” (77:21,22) ﴿ ثم َجَعَلْنَاهُ نطفة فِي قَرَارٍ مَّكِينٍ﴾ “பின்னர் ஒரு பாதுகாப்பான இடத்தில் (கருவறையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.” (23:13) என்கின்றது. உண்மையில் தங்குமிடம் என்பது அங்கிருந்துகொண்டே சகல தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமான அமைப்பில் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.
பாதுகாப்பான தங்குமிடம் :
அந்தவகையில் தாயின் கருவறை மிகப் பொருத்தமானதொரு தங்குமிடமாகக் காணப்படுகின்றது. இலகுவான முறையில் ஒட்சிசன் வாயுவையும் போசனைப் பதார்த்தங்களையும் பெறக்கூடிய வகையில் இக்கருவறை இருப்பதோடு இயல்பான விதத்தில் தொழிற்படுவதற்கு உகந்த இடமாகவும் இது காணப்படுகின்றது.
பாதுகாப்பான இடம் என்ற கருத்தில் நோக்கினால் அதற்கும் பொருத்தமாகவே قَرَار என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவறை தாயின் இடுப்புக்குழியின் மையத்தில் அமைந்துள்ளமை முதல் பாதுகாப்பு வலயமாகும். கருவறைக்குப் பின்பக்கம் உள்ள முதுகந்தண்டு இரண்டாவது பாதுகாப்பு வலயம். மூன்றாவது பாதுகாப்பு உத்தியாக பின்பக்கம் உள்ள தசை நார்கள் காணப்படுகின்றன.
இப்பாதுகாப்பு முறையினை இன்னும் சற்று விரிவாக அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ﴾ ﴿يَخْلُقُكُمْ “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கின்றான்.”(39:6) இங்கு மூன்று இருள்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் சரியான விளக்கத்தை Toronto பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் பீடாதிபதியும் முளையவியற் துறைப் பேராசிரியருமான Dr. Emeritus Keith Moore (a) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார். அம்மூன்று இருள்களுமாவன :
1/ தாயின் வயிற்றறைச் சுவர் (Abdominal wall)
2/ கருவறையின் சுவர் (Uterine wall)
3/ சிசுவைச் சூழ இருக்கும் மென்சவ்வுப் படலமும் அம்னியோன் பாய்மமும் (Amniotic membrance) இப்பாய்மத்தில் கரு பாதுகாப்பாக மிதந்துகொண்டிருக்கும். (படம் :5,6)
قَرَار مَّكِينٍ என்ற பதத்தின் மூலம் எவ்வளவு ஆழமான விளக்கத்தை அல்லாஹ் கூறியிருக்கின்றான் என்று பாருங்கள். அல்குர்ஆன் சொற்சுருக்கத்துடனும் ஆனால் பொருட்செறிவுடனும் இவ்வாறு கூறுவது அதன் அற்புதத்தன்மைக்கு மற்றுமொரு ஆதாரமாகும்.
கருவறையை வந்தடைந்த சூழ் கருப்பை சுவரில் தங்கி அதனுள் புதைந்து உள்ளே வேர்விட்டு “சூழ் வித்தகம்- Placenta” என்ற நிலைக்கு மாறுகின்றது. இதுவே அலகா علقة எனப்படுகின்றது. சூழ் கருவறைச் சுவரில் புதைந்து வேர்விடும் நிகழ்வானது உண்மையில் ஒரு வித்தினை நிலத்தில் நட்டு அது வேர்விட்டு வளரும் செயற்பாட்டினை ஒத்திருக்கும். (படம்:7) அவ்வேரினூடாக சூழ் வித்தகம் ஒட்சிசன் வாயு, போசாக்குகள் இன்னும் இரத்தம் என்பவற்றை உறிஞ்சி வளர்ச்சியுற ஆரம்பிக்கும். இதன்போது அந்த சூழ் வித்தகம் கருவறைச் சுவற்றில் தொங்கிய நிலையிலேயே காணப்படும். இதனை அல்குர்ஆன் :
﴿ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً﴾ “பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக்கட்டியாகப் படைத்தோம்” (23:14) என்று கூறுகின்றது. இந்த Placenta வைக்குறிக்க அல்குர்ஆன் علقة என்ற பதத்தைப் பிரயோகித்துள்ளது. علقة என்பதற்கு பல கருத்துக்கள் காணப்படினும் அவற்றில் மூன்று முக்கியமானவையாகும்.
முதலாவது கருத்து:
علقة என்றால் ஏதாவதொன்றில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் என்று ஒரு கருத்து காணப்படுகின்றது. உண்மையில் இந்த علقة சூழ் வித்தகமானது கர்ப்பப்பைச் சுவரில் தொங்கிக்கொண்டே இருக்கின்றது. (படம்:8)
இரண்டாவது கருத்து:
علقة என்ற பதம் இரத்தக் கட்டி என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது. இக்கட்டத்தில் எளிமையான வடிவில் இதயமும் குருதிச் சுற்றோட்டத்தொகுதியும் உருவாக்கப்பட்டிருக்கும். எனினும் சுற்றோட்டம் இயங்கு நிலையில் இருக்காது. இதன்போது علقة வின் தோற்றம் சிவப்பு நிறத்தில் ஒரு இரத்தக்கட்டியை ஒத்திருக்கும். இதனை அல்லாஹ் இரத்தக்கட்டியாகப் படைத்தோம் என்று கூறுகின்றான். (23:14) (படம்:9)
மூன்றாவது கருத்து:
இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைக்கும் علقة என்றே குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு அட்டையும் தொற்றிக்கொள்ளும் தன்மைகொண்ட ஒரு புலு இனம் என்பதையும் நாம் அறிவோம். இந்த சூழ் வித்தகத்தின் படிப்படியான வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது கோள வடிவத்திலிருந்து மாறி நீண்டு விடுகின்றது. அப்போது அது ஒரு அட்டையின் வடிவத்தை ஒத்திருக்கும். (படம்:10) அதுமட்டுமன்றி அட்டை இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதுபோன்றே இக்கட்டத்தில் علقة வும் கர்ப்பப்பைச் சுவரில் தொற்றிக்கொண்டு ஒட்சிசனையும் போசனைப் பதார்த்தங்களையும் இரத்தத்தின் வழியாக உறிஞ்சிக்கொண்டிருக்கும். எனவே இவ் அர்த்தமும் அல்குர்ஆனின் மொழி அற்புதத்திற்குச் சான்று பகர்கின்றது. இதனை மற்றுமொரு இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ﴿ خلق الإنسان من علق ﴾ “மனிதனை (அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்) இரத்தக்கட்டியிலிருந்து அவன் படைத்தான்” (96:02) இவை அல்குர்ஆனின் மொழியற்புதத்தை எடுத்துக்காட்டுகின்றன.
அல்குர்ஆனின் மொழியாழத்தை விளங்க மற்றுமொரு விடயத்தை இங்கு அவதானிப்போம். مضغة என்பதற்கு பற்களால் மெல்லப்பட்ட ஒரு பொருள் என்றும் கருத்ருத்துக்கொள்ளப்படுகின்றது. இதற்கு வாயிலிடப்பட்டு மெல்லப்பட்ட ஒரு Chewing gum இனை உதாரணமாக் கொள்ளலாம். அதன் ஓரங்களில் எவ்வாறு வரிசையாகப் பல்லின் பதிவுகள் காணப்படுமோ அதை ஒத்த வடிவத்தையே مضغة வும் கொண்டிருக்கும். (படம்:11) இந்நிலையில் கரு இரண்டும் கெட்டான் நிலையில் அதாவது மத்திமமான ஒரு நிலையில் இருக்கும். சரியானதொரு தோற்றம் இன்றி பாதி உருவத்தில் காட்சியளிக்கும். இதனையே அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.
﴿ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ ﴾“நிச்சயமாக நாம் (ஆரம்பமாக) உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் பின்னர் (முறையாகப்) படைக்கப்பட்ட (அல்லது முறையாகப்) படைக்கப்படாத தசைக் கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்.” (22:05)
مضغة அமைப்பைத் தொடந்து கருவில் என்பு வளர்ச்சி ஆரம்பிக்கின்றது. عظام என்பது என்பைக் குறிக்கின்றது. இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ﴿فخلقنا المضغة عظاما﴾ “பின்னர் அம்மாமிசத் துண்டை எழும்புகளாகப் படைத்தோம்.”(23:14) என்பு வளர்ச்சி குறிப்பிட்டதொரு காலத்துக்குள் முற்றாகப் பூரணமடைகின்றது என்று கூற முடியாது. ஏனெனில் ஒரு மனிதனின் என்பு வளர்ச்சியானது அவனது 20-25 வயது வரைக்கும் நீடித்துச் செல்கின்றது. கருவறையினில் முளையத்தின் ஆரம்ப நிலைக்கான என்பு வளர்ச்சியே நடைபெறுகின்றது. என்பு வளர்ச்சியினைத் தொடர்ந்து அவற்றைச் சூழ தசைகள் உருவாகின்றன. முளையத்தின் என்பு மற்றும் தசை உருவாக்கங்கள் சுமார் 15 நாட்களில் நடைபெறுகின்றன. இச்செயற்பாட்டினை அல்குர்ஆன் இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றது. ﴿ فكسونا العظام لحما﴾ “பின்னர் அவ்வெழும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்.” (23:14)
0 comments:
Post a Comment