Thursday, October 27, 2011

என்ன ஒரு அதிசயமான விஷயம் இது. தேரைகள் ஆஸ்திரேலியாவில் சில

பகுதிகளில் பெரும் நன்னீர் முதலைகளை, கடும் விஷப் பாம்புகளை எல்லாம் 90 சதவீதம் போல அழித்து விட்டனவாம். இந்தத் தேரைகள் ஆஸ்திரேலியாவின் இயற்கையான வாசிகள் அல்ல. மழைக்காடுகளில், தென்னமெரிக்காவில் இருந்த இந்தத் தேரைகளை ஆஸ்திரேலியாவில் கரும்பை அழித்த சாம்பல் நிற வண்டுகளைத் தின்னும் என்று கருதி ஆஸ்திரேலியாவில் கொண்டு வந்து நுழைத்தனராம். தேரைகள் வண்டுகளைத் தின்னவில்லை. மாறாக தம் இயல்பான நிலத்துக்கு நேரெதிரான தட்ப வெப்ப நிலை கொண்ட ஆஸ்திரேலியாவில், அதன் அனேகமாக உலர்ந்த சீதோஷ்ணத்தையும் லட்சியம் செய்யாமல், பெரிதும் வளர்ந்து நாடெங்கும் பரவியதோடு அல்லாமல், அவற்றுக்கு எதிரிகள் யாரும் இல்லாததால் இன்று ஆஸ்திரேலியாவின் பெரும் பிரச்சினையாக ஆகி இருக்கின்றன. மேலும் விசித்திரமும், அற்புதமும் நிறைந்த பல தகவல்களுக்குக் கட்டுரையைப் படியுங்கள்.  விடியோவும்  பாருங்கள்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes