சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது.
ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு மானம் கப்பலேறுவது அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போனபின்பு தான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் செய்திகளில் பரபரப்பான வந்த தகவல் கேரளா மாநிலம் மூணாறில் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளம் ஜோடிகளில் பெண் கழுத்தினை அறுத்து கொலை செய்யப் பட்டு இறந்தது தெரிய வந்ததும், அந்தப் பெண்ணோடு தங்கி இருந்த ஆண் தலை மறைவான செய்தியும் வந்தன.
போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் சென்னை கால் சென்டரில் வேலை பார்த்த ஷமிலா என்றும் அவருடன் தங்கி இருந்தவர் அவருடைய காதல் கணவர் மகேஷ் தலை மறைவாகி விட்டதாகவும் மறு தகவல் வந்தது. சிறிது நாள் கழித்து மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் மணியக்காரன் பட்டியில் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதெல்லாம் செய்திகள். ஆனால் அதில் என்ன சுவாரிஸ்யமான விஷயம் என்ன வென்றால் அவர் தனது காதல் மனைவி பற்றி எழுதி வைத்திருந்த கடிதம் தான்.
தான் கைபிடித்தவளுக்காக தன் பெற்றோர்களை புறக்கணித்தார் அந்த மகேஷ். அப்படிப் பட்டவருக்கு கிடைத்த பரிசு தன் காதல் மனைவி செய்த நம்பிக்கை மோசம். மகேஷ் தான் இறக்குமுன் போலிசுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
படித்த பெண்கள் தங்களை முழுமையாக வெளி நாட்டுக் கலாச்சாரத்திற்கு தங்களை மாற்றிகொள்கிறார்கள். வாழ்கையே வெறும் இன்பத்திற்காகத் தான் என நினைக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையான, உணர்வுப் பூர்வமான உணர்வு தேவையில்லை. அவர்களுக்கு கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் என்ற கவலையே கிடையாது. படிப்பு, பணம், கொஞ்சம் அழகு இருந்தால் போதும் எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. எல்ல பந்த பாசத்தினையும் மறந்து குறுகிய காலத்தில் தங்கள் வாழ்க்கையினை அவர்களே தேடிக் கொள்கிறார்கள்.
அந்த காதல் கணவரை விட்டுவிட்டு பத்துப் பேர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சொல்லி அவர்கள் பெயர்களையும் சொல்லி அதற்கு ஆதாரமாக தன் மனைவியின் செல் போனுக்கு வந்த அழைப்புகளையும் பேஸ்புக் இணைய தளத்தில் வந்த தகவல் பரிமாற்றங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார். இதனை நான் எதற்கு இங்கே குறுப்பிடுகிறேன் என்றால் பெண்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் உணர்வுகளுக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.
அடிப்படை கோளாறு: நான் மேலே குறிப்பிட்ட செய்தி ஒரு சம்பவமாக பார்க்காது இன்றைய வெளிநாட்டு மோகத்தால் ஏற்படும் தப்பு தாளங்கள் என்று எடுத்துக் கொண்டு அதனை களைய அனைவரும் முயற்ச்சி செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய தேவைகளை எல்லாம் சுருக்கிக் கொண்டு, சிறு துன்பமும் இல்லாது செல்லமாக வளர்க்கின்றார்கள். அனால் அந்தக் குழந்தைகள் பெரியவ்ரானதுடன் தங்களுடைய பாரம்பரியம் என்னவென்று அறியாமல் வாழ்க்கை முடிவுகளை சுயமாக அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட இளசுகளுக்கு அருகில் உள்ளது கள்ளிச்செடி என்று தெரிவதில்லை.
மாறாக அவைகள் தாங்கள் சுற்றிக்கொள்ள விரும்பும் துணையாக எண்ணுகிறார்கள். அனால் அவைகளைத் தெரியாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேலை நாட்டு நாகரியத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தூபம் போடுகிறார்கள்.
ஒரு உண்மை நிகழ்ச்சியினை சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஒரு உண்மை நிகழ்ச்சியினை சொல்ல ஆசைப்படுகிறேன்.
பத்தாவது படிக்கும் ஜரினா என்ற சிறுமி அவள் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளை. அவளுடைய பிறந்த தின விழா முன்னிட்டு தனக்கு தன தோழிகளெல்லாம் வைத்திருப்பது போல ஒரு செல் போன் வேண்டும் என்று தன் பெற்றோரை நச்சரித்திருக்கிறாள். தன் செல்ல மகள் விருப்பப் பட்டுக் கேட்கின்றாலே என்று அந்த அப்பாவி பெற்றோரும் ஒரு செல் போன் வாங்கிக் கொடுகின்றார்கள்.
அனால் போன் வாங்கியதும் அவளுடைய நடை உடை பாவனை பேச்சு அதனையும் மாறிவிட்டது. அன்பான பெற்றோர்களிடம் கூட பேசுவதினைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டாள். பெரும்பாலான நேரங்களில் அவள் படுக்கை அறையுலும் பாத் ரூமிலுமே அவள் காலத்தினை கழித்தால். அவள் படிப்பின் பிடிப்பும், பாசப் பிடிப்பும் பாழாகி விட்டது. அதற்கான காரணத்தினை அறியும் பொருட்டு அவளை ஒரு மனோதுத்துவ டாக்டரிடம் அழைத்துச்சென்றார்கள்.
அந்த டாக்டர் முதலில் செய்த காரியம் அவள் செல் போனை வாங்கி சோதனை செய்தபோது ஜரினா ஒரு ஆண் நண்பருடன் தொடர்பு வைத்து பள்ளிக்குச் செல்லாமல் அவனுடன் ஊர் சுற்றியது தெரிந்தது. அதன் பின்பு அந்த டாக்டரும் பெற்றோரும் நல் அறிவுரைகளை எடுத்துச் சொல்லியும் அந்த பையனை கண்டித்து அவனுடன் உள்ள தொடர்பையும் துண்டித்ததால் இன்று அவள் தன் படிப்பினை நல்ல முறையில் பின்பற்றுகிறாள், பெற்றோரிடமும் பாசத்துடன் பழகுகிறாள்.
இதுபோன்ற சம்பவம் தனிப் பட்டதா என்றால் இல்லையே!
சென்னையிலுள்ள ஸ்கூல் ஆப் ஒர்க்ஸ் என்ற கல்லூரியில் ஒரு சர்வே சமீபத்தில் நடத்தி அதற்கான ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலான செல் போன் அதிக நேரம் உபயோஹிக்கும் பையன்களும் சிறுமிகளும் மனோதுத்துவ பிரச்சனைகளுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறார்கள்.
அதில் 33 விழுக்காடு சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் அதிக நேரத்தினை செலவிடுவதில்லை என்றும், செல் போனிலே காலம் கழிப்பதாக சொல்கிறார்கள். 40 விழுக்காடு குழைந்தைகள் தங்கள் செல் போனை அரைமணிக்கு ஒரு தடவை செக் செய்வதாக சொல்கிறார்கள். ஒரு மனோதத்துவ டாக்டர் நம்பி கூறும்போது பதிமூன்று வயதிற்க்குக் குறைவான சிறுவர் சிறுமியர் கூட செல் போன் தொடர்பால் பாதிக்கப் பட்டவர்கள் வருவதினை பார்க்க பாவமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக சொல்லுகிறார்.
சென்னை மண்ணடியில் வாழும் சிலர் கோட்டை எதிரில் உள்ள பூங்காவிற்கு அதிகாலை நடைப்பயிர்ச்சிக்கு செல்லவது வழக்கம். ஒருநாள் ஒரு புர்கா அணிந்த மாணவி தன் பள்ளி பையுடன் வேற்று மத வாலிபரோடு அந்தப் பார்க்குக்கு வந்து புர்கவை களைந்து வைத்து விட்டு அந்த வாலிபரின் கரங்களில் தஞ்சம் புகுந்து சல்லாபத்தில் திளைத்திருந்தால் . அதனை அறிந்த எங்களின் நண்பர் ஆறுமுகம் அந்த மாணவியிடம் சென்று கடிந்து விரட்டிவிட்டார்.
இதனை நான் எதற்காக சொல்கிறேனென்றால் பெற்றோர் தன் பிள்ளைகள் மேல் கல்வி படிக்க வேண்டும் என்று வாயை கட்டி வயித்தைக் கட்டி படிக்க வைக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் ஒழுங்காக பள்ளி செல்கின்றார்களா என்று கவனிக்க தவறி விடுகிறார்கள்.
2) பிள்ளைகள் நவீன கல்வி பெற இன்டர்நெட் வசதியுடன் கூடிய அதிக திறன் வாய்ந்த கணினியினை வாங்கிக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்கள் பிள்ளைகள் அந்த கணினிதான் உலகம் என்று முடங்கிக் கிடக்கும்போது கண்டிக்க தவறி விடுகிறார்கள். அந்த கணினியில் தன் செல்லக் குழந்தைகள் என்ன அப்படி செய்கிறார்கள் என்று அறியாமையினால் அந்தக் குழந்தைகள் தடம் மாறும்போது தெரிவதில்லை. பெற்றோர்களும் கணினியின் ஆரம்பக் கல்வி கற்க வேண்டும்.
3) பிள்ளைகள் உலகக் கல்வி பெற்றால் போதும் மர்க்க கல்வி தேவையில்லை என்ற ஒரு தவறான நிலைப்பாடு சில பணக்காரர்களிடம் இருப்பதினால் பல குழந்தைகள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் சீரழிந்து விடுகின்றனர். ஆகவே உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும், நல் ஒழுக்க போதனைகளும் வீட்டிலுள்ள பெரியோர் போதிக்க வேண்டும்.
4) பல மத குடும்பங்கள் ஒரு இடத்தில் வாழும் இந்த உலகத்தில் ஆண்களுடன் பெண்கள் சகசமாக குடும்ப நண்பர் என்ற போர்வையில் பழக விடக் கூடாது.
5) பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் வயது வந்த பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது.
6) டிவி மற்றும் கம்ப்யுட்டரினை பிள்ளைகள் படுக்கை அறைகளில் வைக்காது பொது அறையில் வைக்க வேண்டும். கணினியில் ஆடல் பாடல் ஆடம் பாட்டம் கொண்டாட்டம் என்ற போர்வையில் டிவியில் ஒளி பரப்பப் படும் ஆபாச காட்ச்சிகளை கண்டிப்பாக பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்ககூடாது.
7) குழந்தைகள் தங்கம் போன்ற பெற்றோர்களுக்கு பாசமானவர்கள் தான், மறுக்கவில்லை, ஆனால் தங்கக் கம்பியினை நம் கண்ணில் குத்த விடலாமா?
ஆகவே பாசம் உள்ள தாய்மார்களும், அரவணைப்புகொண்ட தந்தைமார்களும், அன்புடைய உடன் பிறப்புகளும், கண்ணியம் காக்கும் சமுதாய இயக்கங்களும் ஈமானை இழந்து, பண்பாடுகளுக்கு விடைகொடுத்து காதல் மோகத்தில் அற்ப சுகம் கிடைக்கும் என்று பக்குவமில்லாத பருவத்தில் வாழ்வினைத் துளைக்கும் வருங்கால சிறுவர்கள், சிறுமிகளை மனம் போன போக்கில் சீரழிய விடலாமா?
0 comments:
Post a Comment