Sunday, July 3, 2011

வாங்காதீர் வரதட்சனை

கொடுப்பது குற்றம்-இதைவிட
வாங்குவது மாபெரும் குற்றம்

இதுவே இஸ்லாத்தின் சட்டம்-ஆனால்
கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள்
கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை
மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள்

இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்
ஆண்களில் சில அறிவீனர்கள்!
ஆத்திரமடையாதீர் தோழர்களே!
அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள்

ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே!
பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே!
வாங்கியது போதும் வாலிபர்களே!
இறைவனுக்குப் பயந்து
இம்மை மறுமையை நினைத்து
இன்றே இப்பொழுதே
வரதட்சணையை கைவிடுவீர்!

வெறுக்கக் கூடிய வரதட்சணை
பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை!
வாழப்போவது மனைவியுடன் தான்!
வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல!

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes