Monday, May 28, 2012

ரோஜாப் பூ

ரோஜாப் பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும், இதயத்திற்கு வலுவூட்டும். ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும். ரோஜா மொக்குகளில் ஒரு கையளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரணமாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயத்தில் பித்த்தை உற்பத்தி செய்யும் பண்டங்களை சேர்க்கக்கூடாது. ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும்.

போட்டது முதல் காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். காலையில் வெய்லில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும். ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.

பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண் சீராகும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும். ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீருடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

Saturday, May 26, 2012

தாமரைப் பூ

மலரும் மருத்துவமும் தாமரை...


புல் பூண்டு, செடி, கொடி, மரம் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இவை பருவ காலத்திற்கும் வளரும் பகுதிக்கேற்பவும் அவற்றின் குணங்கள் சிறிது மாறியிருக்கும்.

இவ்வாறு மனிதர்களுக்கு பயன்படுபவையில் மலர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை. இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது. இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும் அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர். தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு.

தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.


Tamil - Thamarai

Sanskrit - Padma

English - Lotus

Telugu - Tamara

Malayalam - Thamara

Botanical Name - Lelumbo nucifera

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்

ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்
கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில்
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்

-அகத்தியர் குணவாகடம்

பொருள் - வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தேக எரிச்சல் நீங்கும்.

தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.

நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.

சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.

ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.

வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும்.

இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.

வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.

தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.

மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.

தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.

தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.

காலிஃப்ளவர். பூ

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன.
இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.
இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும்.
இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.
இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்கும்.
உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது. தினம் காலிஃப்ளவரை சமையலில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக குண்டாகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைட்டமின் பி1, 2, 3, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன. சத்தான காலிஃப்ளவர் வாரம் இருமுறை உட்கொண்டால் உடல் நலம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நந்தியா வட்டம் பூ



பூக்களின் மணத்தை நுகராதவர்கள் எவரும் இருக்க முடியாது. வாசனையோடு நோயையும் குணப்படுத்தும் சிறப்பு இந்த பூக்களுக்கு உண்டு. சடங்கு சம்பிரதாயங்களில் பூக்களே முதலிடம் வகிக்கிறது.

பூக்களின் மருத்துவக் குணங்கள் அளப்பரியவை. இந்த மலர்களின் மருத்துவத் தன்மைகளை வைத்து நோய்தீர்க்கும் மலர் மருத்துவம் என்ற மருத்துவ முறை இருந்து வருகிறது.

மலர்களின் மருத்துவக் குணம் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் நந்தியாவட்டப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இது பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. பூக்கள் வெண்மையாய் ஒற்றை அல்லது இரட்டையாயிருக்கும். ஒற்றை அடுக்கு பூவே சிறந்தது. இது பாலுள்ள செடியாகும்.

இதன் பூ, வேர், பால் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

இதனை நந்திபத்திரி, நத்தியாவர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

காசம் படலம் கரும்பாவை தோடமெனப்

பேசுவிழி நோய்கடமை பேர்ப்பதன்றி-ஓசை தரு

தந்திபோ லேதெறித்துச் சாருமண்டை நோயகற்றும்

நந்தியா வட்டப்பூ நன்று

(அகத்தியர் குணபாடம்)

நேத்திரி வாயுகமழ் நேத்திரப்புண் வெட்டருகல்

நேத்திரங் பாலசன்னி நீசவினைக் கோத்திரங்கள்

மாளநொருக்குதலால் வாகடர்கைக் கேற்றவச்ர

வாளாஞ் சுயோதனனார் மாலை

(தேரன் வெண்பா)

நந்தியாவட்டப்பூ சித்தமருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகம் பயன் படுகிறது.

கண் நோய்கள் நீங்க

உடலின் முக்கிய உறுப்புகளில் கண்கள் முதலிடம் வகிக்கின்றது.

ஐம்புலன்களில் ஒன்றான கண்களை பேணிக் காப்பது மிகவும் அவசியம். கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. அனைத்து வேலைகளும் கணினி மூலம் செய்யப்படுவதால் கண்களுக்கு அதிக பளு உண்டாகிறது. மேலும் இரவை பகலாக்கும் மின்சார விளக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல வகைகளில் கண்களை பாதிக்கும் மீடியாக்கள் தற்போது பரவி வருகின்றன. இதனாலும் இரவு உறக்கமின்றி வேலை செய்வதாலும் கண் நரம்புகள் சூடாகிவிடுகின்றன.

இதுபோல் ஈரல் பாதிப் படைந்தாலும் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்று பலருக்கு 40 வயதிலேயே வெள்ளெழுத்து என்கின்றனர். மேலும் சிறு குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லாமல் கண்ணாடி அணிந்துள்ளனர். கண் லேசர் அறுவை சிகிச்சைகள் அதிகம் நடைபெறுகின்றன.

இந்த நிலை மாற நந்தியாவட்டப் பூ சிறந்த மருந்தாகும்.

நந்தியாவட்டப் பூவை சாறு எடுத்து அதனை கண்களில் சிறு துளி விட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறு, கண் படலம், கரும்பாவை முதலியன மாறும்.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண் நரம்புகள் பலப்படும்.

காச நோயின் பாதிப்பு குறைய

மனிதனை அழிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்று. காச நோயால் இந்தியாவில் வருடத்திற்கு பல லட்சம் மக்கள் பலியாகின்றனர். இந்த நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபட நந்தியாவட்டப் பூ உதவுகிறது.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை மாலை என இருவேளையும் உண்டு வந்தால் காச நோயால் ஏற்பட்ட களைப்பு, இருமல் நீங்கும். தேகம் வலுப்பெறும். மேலும் உடலுக்கு வனப்பையும் கொடுக்கும்.

மண்டைக் குத்தல் நீங்க

தலை வலிக்காமல் தலையில் குத்துவது போல் சிலருக்கு தோன்றும். பித்த அதிகரிப்பு மற்றும் தலையில் நீர் கோர்த்துக்கொள்ளுதல் போன்றவையே இதற்குக் காரணம்.

இவர்கள் நந்தியாவட்டப் பூவை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் மண்டைக் குத்தல் நீங்கும்.

கண் எரிச்சல் நீங்க

நந்தியாவட்டப் பூவின் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து கண்களில் விட்டால் கண் எரிச்சல் நீங்குவதுடன் உடல் சூடு தணியும்.

வெட்டுக்காயம் ஆற

நந்தியாவட்டப் பூவை அரைத்து வெட்டுக் காயத்தின் மீது பற்று போட்டால் காயம் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும்.

இத்தகைய நற்பயன் கொண்ட நந்தியாவட்டப் பூவை பயன்படுத்தி நோயிலிருந்து காத்துக் கொள்வோம்

அல்லி பூ




ழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும். இது அனைவரும் அறிந்த உண்மை. பூக்கள் நறுமணத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றின் மருத்துவத் தன்மை பற்றி விரிவாக அறிந்து வருகிறோம்.

கடந்த இதழில் மாதுளம் பூவின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொண்டோம். இந்த இதழில் அல்லி மலரின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூ தான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். மாலைப் பொழுதில் தான் அல்லி மலர் மலரும். அல்லிக்கு ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் உண்டு.

Tamil - Alli

English - Water lily

Sanskri - Kumudam

Malayalam - Neerampal

Telugu - Alli-kada

Botanical Name - Nymphaea alba

இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பைச் சேர்ந்தது.

சிவப்பு, வெண்சிவப்பு நிற பூக்களைக் கொண்டது. குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் இது ஏராளமாய்ப் பூக்கும்.

மேகமறும் புண்ணாறும் விட்டேகும் நீரிழிவு

தாகந் தணியும் தழலகலும் - வாகான

மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்

அல்லி மலரால் அறி
(அகத்தியர் குணபாடம்)

உடல் சூடு தணிய

உடல் சூட்டால் பல வியாதிகள் தொற்றிக் கொள்ளும். கண்கள் பாதிப்படையும். ஈரல் பாதிப்படைந்து பித்த நீர் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல், சரும நோய்கள் உண்டாகும். இரத்த ஓட்ட மண்டலம் பாதிக்கப்படும். இதனால் சிறுநீரக பாதிப்பு உண்டாகும். தூக்கமின்மை, அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்தல், சூட்டை அதிகரிக்கக்கூடிய உணவுகள் இவற்றால் உடல் சூடு அடைகிறது. இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். உடல் சூட்டினால் உண்டாகும் நோய்களின் தாக்கமும் குறையும்.

நீரிழிவு பாதிப்பு நீங்க

சர்க்கரை நோயானது பாரபட்சமின்றி அனைத்து தர மக்களையும் பாதிப்படையச் செய்கிறது.

இந்த பாதிப்பு நீங்க வெள்ளை அல்லி மலரின் இதழ்களை காயவைத்துபொடித்து கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வர நீரிழிவு நோயின் பாதிப்பு நீங்கும்.

சிறுநீர் எரிச்சல் குறைய

சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை கஷாயம் செய்து அருந்தி வந்தால் நீர் எரிச்சல் நீங்கும்.

தாகம் தணிய

சிலருக்கு அடிக்கடி நாவறட்சி உண்டாகும். எவ்வளவுதான் நீர் அருந்தினாலும் தாகம் தணியாது. இவர்கள் வெள்ளை அல்லி மலரின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் தாகம் தணியும்.

செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்

செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ

டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்

கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு

புண்ணின் நோய் பன்னோயும் போம்

-அகத்தியர் குணபாடம்.

கண்ணோய்கள் நீங்க

கண்கள் உடலின் பிரதான உறுப்புகளுள் ஒன்று. இன்று கணினி முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதால் கண் பார்வை நரம்புகள் நீர்கோர்த்து கண் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றன.

இதனைப் போக்க செவ்வல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.

இரத்தம் சுத்தமாக

உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். செவ்வல்லியின் இதழ்களை காயவைத்து பொடி செய்து காலை மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்

குங்குமப் பூ


பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணம். இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.

இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது.

மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம். இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.
குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள். கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள். குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.

குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை. இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும். இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.

இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.

Tamil – Kungumapoo

English – Saffron

Sanskrit – Kumkuma

Malayalam – Kugamapoo

Telugu – Kumkumapoova

Hindi – Kesar

குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்

தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
- அகத்தியர் குணவாகடம்

பொருள் – நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.

மருத்துவப் பயன்கள்

காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.

கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.

ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும். மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.

கண் பார்வையை தெளிவாக்கும். 40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும். கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.

அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்



முல்லைப் பூ

 
முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி மூக்கில் விட தலைவலி தீரும்.
முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.
ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.
முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது

செம்பருத்தி பூ

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள்இ ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.




கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள்இ தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.

இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்

முல்லைப் பூ

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

இதன் மருத்துவ குணங்கள் பின்வருமாறு:
1. முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
2. முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி மூக்கில் விட தலைவலி தீரும்.
3. முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
4. ஒருகைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
5. உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.
6. முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
7. முல்லைப் பூ மட்டுமல்லாமல் அதன் இலை, வேர்ப் பகுதிகளும் அதிக மருத்துவ குணம் கொண்டது.

மல்லிகை பூ





லர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்.

இதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர்.
மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது. அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. இதை மலர் மருத்துவம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

இங்கிலாந்தில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் M.ஆ.ஆ.கு. ஐ.கீ.இ.க, M.கீ.இ.கு படிப்புகளைப் படித்துவிட்டு சில காலம் ஆங்கில மருத்துவராக பணிபுரிந்தார். அப்போது ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார். பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டு பிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப் பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார். அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன என்பதை உணர்ந்தார். அதனால் நோய்கள் குணம் ஆவதையும் உணர்ந்தார். இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.

இந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்

கறிவேப்பிலை -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Wednesday, May 23, 2012

இலுப்பைப் பூ

Benefits Herbal Flowers Aid0174
இயற்கையின் படைப்பில் மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பூக்கள், காயாகி, கனியாகி அதனை மக்கள் உண்பதற்கு இயற்கை கொடுக்கிறது. கனியாக மாறும் வரை காத்திருக்காமல் பூக்களை சாப்பிட்டாலே அதற்குறிய அத்தனை குணங்களும் கிடைக்கும்.

காதுகளைக் காக்கும் மகிழம்

மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தலைவலி நீங்கும்

அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு. அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது. நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும். பொதுவாக நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக் கடுமையான தலைவலி நீங்கும்.

தொட்டாச்சிணுங்கி பூக்கள்

தொட்டாச் சிணுங்கி என்ற முள் கொடியில் தொட்டால் சிணுங்கிப் பூ கிடைக்கும். தொட்டவுடன் இந்தக் கொடியின் இலைகள் சுருங்கிவிடும்.தொட்டாச்சிணுங்கி வேர் என்பவற்றிற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது சித்த மருத்துவர்களது கூற்றாகும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் ஏற்படுகின்ற பல நோய்கள் இப்பூவினால் குணமாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்மை அதிகரிக்கும்

இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.

ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வது முண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

சளி நீங்கும்

தூதுவளைப் பூ மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இந்தப் பூ அதிக அளவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பூவை வதக்கி துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, மூக்கடைப்பு குணம் அடையும்.தூதுவளைப் பூவைப் போன்று தூதுவளை இலையையும் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் ஏற்படும். தொண்டை, வயிறு இவைகளில் ஏற்படும் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது

மணம் வீசும் மலர்களுக்குள் இத்தனை மருத்துவ குணமா

செம்பருத்திப்பூ:
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.
ரோஜாப்பூ:
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.
வேப்பம்பூ:
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.
முருங்கைப்பூ:
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.
மல்லிகைப்பூ:
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் படி, உலகில் மிக வேகமாக பெருகிவரும் ஆபத்தாக, சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பதே உடல் பருமன் எனப்படும் ஒபிஸிட்டி. இது, நேரடி நோயாக கருதப்படாவிட்டாலும், பல்வேறு வியாதிகளுக்குக் காரணமாகிறது என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
'குண்டாக இருக்கும் நீங்கள் முப்பதே நாட்களில் ஒல்லியாக வேண்டுமா?' என்பது போன்ற விளம்பரங்களில் உள்ள முகவரிகளை நாடலமா என்றும் சிலர் யோசிப்பதும் உண்டு. தேவையின்றி ரிஸ்க் எடுப்பது நல்லதல்ல. இதோ உங்களுக்கு சில எளிய குறிப்புகள். இதனை பின்பற்றுவது மிகவும் சுலபம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
உடல் பருமனின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. நமது உயரத்தின் அளவைப் பொறுத்து உடல் எடையும் இருக்க வேண்டும். நமது உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுவதும் மிகச்சுலபம்.
நமது உயரத்தின் அளவிலிருந்து 100 செ.மீ. அளவைக் குறைத்தால், அதுதான் சரியான உடலின் எடை. உதாரணத்துக்கு நீங்கள் 160 செ.மீ இருக்கிறீர்கள் எனில், 160-100=60. உங்களுக்கான சரியான எடை 60 கிலோகிராம். இதற்கு அதிகமாக இருந்தால், அதைக் குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டியது அவசியம்.
உடல் பருமனாவதற்கு, உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள குறைபாடு மற்றும் சரியான உடற்பயிற்சியின்மை இவை இரண்டும்தான் முக்கிய காரணங்கள். மற்றும் ஹார்மோன் கோளாறு காரணமாகவும், பரம்பரை காரணமாகவும் குண்டாகுபவர்களின் சதவிகிதம் மிகக் குறைவு.
உடல் பருமனைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமே தவிர, எடைக் குறைப்பதற்கான பிரத்யேக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனபதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை:
* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
* பட்டினிக் கிடத்தல் கூடாது
* அதிக நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவேண்டும்
* உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்க்கவும்
* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
* ”கூல் ட்ரிங்ஸ்சுக்கு” தடை விதிக்க வேண்டும்.
* தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2 லிருந்து 4 வரை)
* இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
* கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.
* அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.
குழந்தைகளுக்கு...
* குழந்தைகளுக்கான உணவில் கீரை, பருப்பு மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்தல்
* கொழுப்புச் சத்து உணவை அதிகமாக தவிர்த்தல்
* சாக்லெட், பிட்ஸா, சிப்ஸ் வகைகள், கூல் ட்ரிங்ஸ் போன்றவற்றை அதிகம் வாங்கிக் கொடுக்காமல், கட்டுக்குள் வைக்க வேண்டும்.
* அதிகம் டி.வி பார்ப்பது, அதிக நேரம் அமர்ந்து கொண்டு வீடியோ கேம்ஸ் விளையாடுவதைத் தவிர்த்தல்
* விளையாட்டு மைதானத்தில் உடல் சிரத்தை கொள்ளும் வகையிலான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்

காலை உணவு அவசியமா

வரும் போது மலம் கழிக்கலாம்; காசு தந்தால் பின்னிரவிலும் வேலை செய்யலாம்; அழகாய் தெரிவேன் என்றால் அணுசக்தி ரசாயனத்தையும் அள்ளிப்பூசிக் கொள்ளலாம்; ருசியாய் இருக்கும் என்றால் பெயர் தெரியாத வேதிக்கலவையையும் உறிஞ்சி உள்ளம் களிக்கலாம், என்ற மனோபாவம் உச்சி முதல் பாதம் வரை ஒட்டிப்போனதுக்கு இந்த நிலையில்லா அறிவியலும், அதன் நிழலில் நங்கூரமிடும் பெரும் வணிகப்பிடியும்தான் காரணம்.

உலகின் பல வளர்ந்த நாடுகளின் காலை உணவை நிர்ணயிப்பது என்பது ஓரிரு மிகப்பெரிய உணவு நிறுவனங்கள் மட்டுமே!.. “சோள அவலா?..ஓட்ஸ் கஞ்சியா? கோதுமை ரொட்டியா?..கொழுப்பு நீக்கிய பதப்படுத்தப்பட்ட கலவை பாலா?”- எது வேண்டும் உங்களுக்கு? என்ற வணிக முழக்கத்துடன், அந்த அண்ணன்மார் கம்பெனிகள் இப்போது இந்திய காலை உணவையும் கபளீகரம் செய்ய துவங்கி விட்டன. 100 கோடி மக்களின் காலை உணவைக் குறி வைத்து இயங்கும் அந்த சந்தையில் சத்தமில்லாமல் நசுங்கிப்போய் கொண்டிருப்பது நம்ம ஊர் காலை உணவு!

இரவு சந்திரனின் ஆட்சிக்காலம்; பகல் சூரியனுக்கானது. இரவில் மொத்த பிரபஞ்சமும் குளிர்ச்சியடைவதும், பகல் சூரியனின் வெம்மையால், போர்த்தப்பட்டிருப்பதும், சித்தம், ஆயுர்வேதம், சீன மருத்துவம் இன்னும் ஏனைய பல பாரம்பரிய மருத்துவ முறைகளின் அன்றைய அறிவியல் புரிதல்!  காலையின் குதூகலம் குறித்துப் பாடாத கவிஞன் இல்லை. ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’- என்ற புத்துணர்வு கண் விழிக்கும் சமயம், மனதுக்குள் பொங்கியதென்றால், அன்று உங்கள் வாழ்வின் மற்றொரு மிகச் சிறந்த தினம்.

 குளிர்ந்த இரவில், வெம்மையாய் உடல் தூங்கிப் பின் விழித்த உடன் மெல்ல மெல்ல பிரபஞ்சத்தின் வெம்மைக்கு ஏற்றாற் போல் உடல் குளிர, காலை குளியலும் காலை உணவும் வழிநடத்த வேண்டும்.  “காலங்கார்த்தாலே சுரீர் என பில்டர் காபியோ அல்லது சேட்டனின் மசாலா தேனீரோ சாப்பிட்டால் தான் அந்த நாள் இனிக்கும். இன்னும் கூடுதலாய் கக்கூஸில் இருந்து கொண்டு, அந்த மணத்துடன் புகைத்தால் தான் மலமே கழிக்க முடியும், என்ற பிடிவாதம் வந்ததுதான் நம் ஆரோக்கியத்தின் அழிவின் ஆரம்பம்.

காலை உணவும் நம்மைக் குளிர்ப்பிக்க வேண்டும். காலையில் சாப்பாட்டில் கோதுமையில் செய்யும் சப்பாத்தி, கோதுமை ரவா உப்புமா, கோழிக்கறி, கொள்ளுப்பயறு பொதுவாக தவிர்க்கப்பட வேண்டியவை. அதே சமயம் குளிர் காலத்தில், பனிக்காலத்தில் காலை நேரத்தில் இவைகளுக்குச் சிறப்பு அனுமதி உண்டு.

காலை உணவில்  “கோல்டு மெடல் கொடுக்க வேண்டும் என்றால், அது வெண்பொங்கலுக்குத் தான். குளிர்ச்சியான பாசிப்பருப்பும் அரிசியும் சேர்ந்த பொங்கல் குளிர்ச்சியுடன் உடல் ஊட்டம் தருவது. சிறு குழந்தைகளின் உடல் எடை உயர, நோய் எதிர்ப்பு ஆற்றல் கூட்ட, வெண்பொங்கலுக்கு இணை ஏதும் இல்லை. கொஞ்சம் மிளகு, கறிவேப்பிலை, பசுநெய் சேர்த்து பொங்க வேண்டிய வெண்பொங்கலை வரகரிசியில் செய்தால் அது கூடுதல் சிறப்பு. வரகு, சோளம், ராகியெல்லாம் நாம் மறந்துவிட்ட காலை உணவுக்கான பொக்கிஷங்கள். சிறுசோளம்-உளுந்து சேர்த்த தோசை, ராகி இட்லி, தினை அரிசி உப்புமா என செய்து கொடுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, தேசத்தையும் உழவையும் சேர்த்து பாதுகாப்பீர்கள். குழந்தைகளுக்கு காலை உணவில் புரதத்திற்கு முக்கிய இடம் வேண்டும். சத்துமாவுக் கஞ்சி, முளைகட்டிய பாசிபயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்(இஞ்சி சேர்த்து) அவசியம் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம். காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும். சர்க்கரை நோயாளிகள் எனில், குறைவான பழத்துண்டுகளுடன், ராகி உப்புமா, ஒட்ஸ் உப்புமா, கோதுமை ரவை உப்புமா( காய்கறிகளுடன் கிச்சடி போல் சமைத்தது) சாப்பிடுவது நல்லது.

ஓட்ஸ்-க்கு பெரிய உசத்தி ஒய்யாரம் நிறுவப்படுகிறது. அது பணக்கார அப்பாவுக்கு பிறந்த புது ஹீரோவுக்கு, அவர்களே வைக்கப்படும் கட் அவுட் மாதிரிதான். ஓட்ஸை விட மிகச்சிறப்பான  நம்நாட்டு தானியங்கள் நம்மிடையே ஏராளம். பாவம் அவை பிறந்த வீடு ஏழை நாடு என்பதால் புகுந்த வீட்டில் மரியாதை இல்லை; ‘அத்திப்பூக்கள்’- சீரியலை சுமந்து வர கேபிள் டிவியில் அதற்கு இடம் இல்லை;   அலங்கரிக்காத அந்த சிறு தானியங்களில் கஞ்சி, உப்புமா, கிச்சடி இட்லி என சமைத்து சாப்பிடுங்கள். ஓட்ஸுக்கு ஒரு துளியும் குறைவில்லாதவை அவை.

 “காலை உணவா..? நான் டயட்டிங்கில் இருக்கிரேன்.. “கரீனா கபூர் மாதிரி  ‘ஸீரோ ஸைசில் இடுப்பு வேண்டும் எனக்கு!”, என பீரோ சைஸில் இருக்கும் உங்க பிரியாமனவர் சொன்னால் பதட்டப்பட வேண்டாம். காலை உணவு சாப்பிடுவது மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும் என பல வெள்ளைக்கார சித்தப்பாக்கள் பலத்த குரலில் சொல்ல ஆரம்பித்துவிட்ட்தால், அட! அவுகளே சொல்லிட்டாங்க..அப்புறம் என்ன? என நம்ம ஊர்  ‘மேதாவிகள் கேட்டுப்பார்கள். ஆம்! காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று  journal of american nutrition சமீபத்தில் 12,000 நபர்களில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை தவிர்க்கின்றன. அதைப்பார்த்து நம் தாய்மார்களும் என்ன தான் செய்வது என தவிக்கின்றனர். பெற்றோரும் பிள்ளையும் 6 மணிக்கு எழும் பழக்கத்தை முதலில் கொண்டுவாருங்கள். கொஞ்சமாய் விளையாட்டு, பரபரப்பில் உங்களை கோமாளியாக்கி நிறைய ஜோக் என காலையை குதூகலமாக்கி இட்லியை ஊட்டுங்கள். இரவில் அருகில் படுத்து உற்ங்குகையில் சோளக்கொல்லையை ஒலிம்பிக் டார்ச் போல் நீங்கள் சுற்றி வந்த்தை சொல்லி சிரியுங்கள். காலையில்  “இந்த சோளமாமா அது? என சாப்பிடும் போது அது கேட்கும். உங்கள் குழந்தைக்கு காலை உணவு தருவது அறிவியலல்ல. கலை. அந்த கலையை ரசித்து செய்யும் பெற்றோரின் குழந்தைகள் மட்டுமே நாளைய வரலாற்றின் ஆரோக்கியமான பக்கங்கள்.

குல்கந்து செய்முறை

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.
குல்கந்து செய்முறை
நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். ரோஜா இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும்.
இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.
ஜீரணக் கோளாறு நீங்கும்
குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.
ஆண்மை பெருக்கி
குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கின்றனர் என்று கூறப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
இதயத்திற்கு ஏற்றது
ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.
இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிடலாம் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.
குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

Tuesday, May 22, 2012

பித்தத்திலிருந்து விடுதலை பெற....!

 

Natural remedies for bile reflux - Food Habits and Nutrition Guide in Tamil



















விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...
* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

அரிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்

 

Medicinal Values of Indian Jujube - Food Habits and Nutrition Guide in Tamil




















சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.
இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்
இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.
நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.
ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.
வேப்பம்பழம்:
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.
வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்

ணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான்.  அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.
குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? 
1. வருமானம்Image
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்டவேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்லவேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல்
தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று
எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘
என்றுஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்டவேண்டும்
 ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை
விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்லவேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும்
 பணத்தைஎடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்
போல் ஆடை,அலங்காரம்.

ஆசனவாசல் குடைச்சலுக்கு

Home Remedies for Pinworms - Food Habits and Nutrition Guide in Tamil


















நம்மை சுற்றி இருக்கும் காய்கள், கனிகள், பூக்கள், இலைகளின் மருத்துவக் குணங்களை பல வேளைகளில் மறந்து விட்டு மருத்துவரையும், மருந்துகளையும் நாடிச் செல்கிறோம். பக்க விளைவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், உடனடித் தீர்வுக்காக காத்திருக்கிறோம். இயற்கை நமக்கு தந்த கொடைகளை சரி வர பயன்படுத்தினாலே ஆரோக்கியமாக வாழலாம்! நோய்கள் குணமாக வீட்டிலிருந்தபடியே சரி செய்ய சில எளிய வழிமுறைகள் இதோ:-
ஆசனவாசல் குடைச்சலுக்கு:
இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவர்களுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால் அரிப்பு குணமாகும்.
அம்மைநோய் வேகத்தை தணிக்க:
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைபாதியாக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனைவெல்லத்துடன் கொடுத்தாலும் வேகம் தணியும். அம்மைத் தழும்புகள் மறைய கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும். தினம் சந்தனச் சோப்பு உபயோகிக்கவும்.
வாய்ப்புண்ணுக்கு அகத்திக்கீரை:
உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக்கொள்வது அவசியம். தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

அக்கி குணமாக:
பப்பாளிப்பழச்சாறும், பசும்பாலும் கலந்து பூசலாம். தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினாலும் குணமாகிவிடும்.
அரைக்கருப்பன் சரியாக:
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் சொறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காய்ச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.
தேக ஆரோக்கியத்திற்கு:
தேக ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்­ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி, யோகாசனம் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
ஆண்மை வலுப்பெற:
அரசம்பழத்தை பாலில் போட்டு காய்ச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தளற்சி நீங்கும். ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தாலும் தளற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம், உழுந்து இவைகளை தேனுடன் சேர்த்து அருந்தினால் தளர்வு நீங்கும்.. இலுப்பைப் பூ கஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.
இரத்தம் பெருக:
இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள், பழவகைகள், தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி, ஈரல், மீன் முதலியவை அதை உண்பவருக்கு உடன் இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளிப்பழமும் - பீட்ரூட்டும் இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும் சேர்த்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.
இளநீர் மருத்துவம்:
இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களைத் தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தில் சாவை தவிர அதாவது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா).
Image பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.
  • குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
  • கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
  • கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
  • கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
  • தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
  • 5 கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vinegar) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
  • காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
  • நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
மேற்கண்ட நபிமொழிக்கு விரிவுரையாகிய ஃபத்ஹுல்பாரி, உம்தத்துல் காரீ, அல்மின்ஹாஜ் ஆகிய நூல்களில் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை அனுபவித்தே எழுதியுள்ளனர். கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை எல்லாக் காலங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே கருஞ்சீரகம் குறித்த தகவல்களின் உண்மைத் தன்மையில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes