Sunday, November 18, 2012

பசலைக் கீரை


கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

இக்கீரையை நன்றாக நசுக்கி, தலையில் வைத்துக் கட்டினால் உடலில் ஏற்படும் மிதமிஞ்சிய உஷ்ணத்தைப் போக்கும்.

இதன் இலைகளை நெருப்பிலிட்டு வதக்கி, வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டினால் விரைவில் குணம் கிட்டும். உடல் வறட்சியைப் போக்கும். நீர் தாகத்தைத் தணிக்கும்.மலத்தை இளக்கி, மலச்சிக்கலைப் போக்கும்.

குழந்தைகளுக்கு நீர்கோத்திருந்தால், பசலைக் கீரையைச் சாறு பிழிந்து அதில் கற்கண்டு கலந்து ஒரு வேளை ஒரு ஸ்பூன் வீதம் ஓரிரு நாட்கள் குடிக்கத் தந்தால் போதும். குணம் கிட்டும்.

உடலுறவு இச்சையைத் தூண்டும்.

கொடியில் அல்லாமல் தரையில் படரும் பசலையும் உண்டு. இது தரைப் பசலைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கீரைக்கும் ஒரே பலன்தான்.

இக்கீரை அதிக குளிர்ச்சித் தன்மை உடையது. எனவே குளிர்ச்சித் தேகம் கொண்டவர்கள் அதிகம் உண்ணக்கூடாது. கபம் கட்டும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes