Sunday, November 18, 2012

பச்சை நிற பருப்புக் கீரை

*பருப்புக் கீரை சுவையான கீரை. பெயருக்கு ஏற்ப, பருப்புடன் சேர்த்து உண்டால் சுவை கூடும். இந்தக் கீரையை வீட்டுத் தோட்டங்களில் எளிதாக 
வளர்க்கலாம். 

*பருப்புக் கீரையின் தண்டை துண்டாக்கி, நட்டு வளர்க்கலாம். பருப்புக் கீரை 15 செ.மீ. உயரம் வளரும். 

பச்சை நிற இலைகள் தடிமனாக இருக்கும். வேர்பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பயன்படும் பாகங்கள்

*உணவாக, இலை, தண்டு அனைத்தையும் உட்கொள்ளலாம். மருத்துவப் பயன்களுக்கு, இலை, தண்டு, வேர் அனைத்தும் பயன்படும்.

 குணங்கள்

*குளிர்ச்சி உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும், வறட்சியைப் போக்கும்.

*100 கிராம் கீரையில் நீர்ச்சத்து – 90.5 கி,
*புரதம் – 2.4 கி,கொழுப்பு – 0.6 கி,
*தாது உப்புகள் – 2.3 கி,நார்ச்சத்து – 1.3 கி,
*சர்க்கரைச்சத்து – 2.9 கி
*சுண்ணாம்புச்சத்து – 111 மி.கி.
*பாஸ்பரஸ் – 45 மி.கி.
*இரும்பு – 14.8 மி.கி.
*மாவுப்பொருள் – 2292 மி.கி.
*தையாமின் – 0.10 மி.கி.
*ரிபோஃபிளேவின் – 0.22 மி.கி.
*நியாசின் – 0.7 மி.கி.
*வைட்டமின் சி – 29 மி.கி.
*கலோரித்திறன் – 27 கலோரி

மருத்துவ குணங்கள்

*கல்லீரல் நோய், ரத்த பேதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. பித்தக் கோளாறுகளுக்கு நல்லது. கல்லீரல் வீக்கத்தை போக்கும்.
இதற்கு பருப்புக் கீரையுடன் கீழாநெல்லியை சமபாகம் எடுத்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உட்கொண்டால் கல்லீரல் வீக்கம் குறையும். 

*பருப்புக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பித்த தலைசுற்றல் முதலிய பித்தக் கோளாறுகள் நீங்கும்.குடல் வறட்சியை நீக்கி, மலத்தை இளக்கும்.
இதன் இலையையும், விதைகளையும் அரைத்து பூசினால், தீப்புண்கள் விரைவில் ஆறும்.

*சீத பேதியை கட்டுப்படுத்த அரைத்த கீரையுடன் வெங்காய சாற்றையும் சேர்த்து உட்கொள்ளலாம்.தண்டை அரைத்து கை, கால் எரிச்சலுக்கு 

தடவலாம்.இலைகளை பிழிந்து சாறு எடுத்து, அதில் மஞ்சள் பொடியை கலந்து உடலில் ஏற்பட்ட கட்டி, வீக்கம் இவற்றில் தடவி வர, கட்டி 
வீக்கம் குறையும்.

*பருப்புக் கீரை வயிற்று கிருமிகளை அழிக்கும்.பருப்புக் கீரை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். 
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes