மஞ்சுவும், சாமிநாதனும் ஒரு கால்குலேட்டரை வைத்துக் கொண்டு வட்டிக்கணக்குப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய்விட்டனர். ரூபாய் பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு பதினைந்து வருடத் தவணையில் பதினெட்டு சதவீதம் வட்டிக்கு மாதத்திற்கு எவ்வளவு ரூபாய் வருகிறது என்பதைத்தான் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மஞ்சுவிற்கு ஒரு தொகை வந்தால், சாமிநாதனுக்கு வேறு ஒரு தொகை வருகிறது. விளைவு? வாய்த்தகராறு தான் மிச்சம். இரண்டு மூன்று நாட்களாக இரவில் படுக்கப் போகும் முன்பு இவர்களுக்கு இதே வேலையாகி விட்டதை உணர்ந்த சாமிநாதனின் அம்மா சிவகாமிக்கு மருமகள் மஞ்சு மீது எரிச்சல் வரவே, "ஏண்டா... சாமிநாதா நீங்க வீடு வாங்கறதுக்குள்ள நாமெல்லாம் ஒரு வழியா ஆயிடுவோம்னு நினைக்கிறேன். தினம் எனக்கு இந்த தலைவலி தாங்க முடியல... இந்த வயதான காலத்தில..." சிவகாமி இப்படி அலுத்துக்...