Wednesday, September 11, 2013

அல்லி மலர்

நீரிழிவை கட்டுப்படுத்தும் 

 Allicceti blooming flowers than leaves in water that is more than maruttuvattanmai. Flowers on the white Nymphaeaceae, red   Nymphaeaceae appear to benefit both.
ல் பூக்கும் அல்லிச்செடியின் இலைகளை விட இதன் மலர்களுக்குத்தான் மருத்துவத்தன்மை அதிகம் உண்டு. மலர்களில் வெள்ளை அல்லி, சிவப்பு  அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியவையாகும். அல்லி பூவைச் சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து அரை மண்டலமாக (இருபது நாள்)  தொடர்ந்து சாப்பிட்டு வர உஷ்ணம் தொடர்பான பிணிகள் சரிப்படும். வெள்ளை அல்லிப்பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவு எடுத்து போதிய  அளவு சர்க்கரை சேர்த்து நீரிலிட்டுக் காய்ச்ச வேண்டும். 


பாகு பதமான உடன் இறக்கி ஆறவைத்து, காலையிலும் மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர சிறுநீர் தாரை தொடர்பான  நோய்களைக் குணமாக்கும். நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து நாற்பது நாட்கள் இதனைச் சாப்பிட்டு வர குணம் பெறும். கண்சிவப்பு, கண்  எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும். அல்லி இலையை  நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம். 

கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் ஏற்படும். இக்கட்டிகளை போக்க அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில்  எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும். அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப்  பூச அக்கி கொப்புளம் தீரும். சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வர இதயம் பலமடையும்.  இதய படபடப்பு நீங்கும். 

உடலில் ரத்தம் பெருகும். அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர  வெள்ளை நோய் குணமாகும். ஆண்மை பெருகும். அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாது விருத்தி உண்டாகும்.  கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும். 

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes