Wednesday, September 11, 2013

மாதுளை பூ

உடலை வலுவாக்கும் 


மாற We know that the medicinal properties of all types of flowers ..


எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு  வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை  கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள்.

உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும்  சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த  மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம்  தண்ணீர் அருந்தினால் உடனே குணம் தெரியும்.

உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால்  சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே  முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில்  போட்டு  பொன் வறுவலாக வறுத்து கொள்ள  வேண்டும். இதனை இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து  சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்  மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.

ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்  வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல்  காணப்படும். பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது.  இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள்  சீற்றம் குறையும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். மாதவிலக்கு நிற்கும்  காலமான மொனோபாஸ் காலத்தில்பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும். இவர்கள்  மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.  அதுபோல வெள்ளை படுதலும் குணமாகும்.  

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes