Wednesday, September 11, 2013

மந்தாரையின் மருத்துவ பயன்பாடு

சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு  சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன.  இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார...

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெந்தயக்கீரை

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.  வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை...

அல்சரை போக்கும் கீரை

கீரை இயற்கையின் பரிசு. தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரையில் வைட்டமின் ஏ,  கே, டி மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளன. கீரையில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல மூல ஆதாரமாக விளங்குகின்றது.. கீரை புற்றுநோய்கெதிரான மற்றும் அழற்சியை தடுக்கின்ற நோய்யெதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. குழந்தைகளுக்கு கீரைகளை கொடுத்து வளர்க்க  வேண்டும். கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமான பலன்களை தருகிறது. கீரை, காய்கறிகள், மற்றும் பழங்கள்  சேர்த்து கலந்து ஜீஸ் செய்து சாப்பிடலாம்.  கீரையை ப்ரீசரில் வைத்தாலும் அதன் பலன் குறையாது. என்றாலும் கீரைகளை வாங்கிய நாட்களிலே சமையல் செய் சாப்பிட வேண்டும். கீரை  சாப்பிடுவதால் கண்களுக்கான பிரச்சனை எதுவும் ஏற்படாது...

வல்லாரையும் அதன் பயன்களும்

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து அளமை தோற்றம் திரும்பும்.  எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை...

சிவப்பு கீரையும் பயன்பாடும்

கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட  கீரைகளை விட கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு கீரையில்  அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது. கூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45  கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267மிகி கால்சியம், பாஸ்பரஸ் 67மில்லி கிராம், இரும்பு 3.9  மில்லி கிராம், விழித்திரை 1827 மெக்ஜி, 0:08 தயாமின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் 60 மில்லி கிராம் கொண்டு செயல்படுகிறது. முக்கியமாக கீரையில்...

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில்  வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து  அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது. உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள்.  முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை.  கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம்  உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது. முளைக்கீரை...

அல்லி மலர்

நீரிழிவை கட்டுப்படுத்தும்  ல் பூக்கும் அல்லிச்செடியின் இலைகளை விட இதன் மலர்களுக்குத்தான் மருத்துவத்தன்மை அதிகம் உண்டு. மலர்களில் வெள்ளை அல்லி, சிவப்பு  அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியவையாகும். அல்லி பூவைச் சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து அரை மண்டலமாக (இருபது நாள்)  தொடர்ந்து சாப்பிட்டு வர உஷ்ணம் தொடர்பான பிணிகள் சரிப்படும். வெள்ளை அல்லிப்பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவு எடுத்து போதிய  அளவு சர்க்கரை சேர்த்து நீரிலிட்டுக் காய்ச்ச வேண்டும்.  பாகு பதமான உடன் இறக்கி ஆறவைத்து, காலையிலும் மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர சிறுநீர் தாரை தொடர்பான  நோய்களைக் குணமாக்கும். நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து நாற்பது நாட்கள் இதனைச் சாப்பிட்டு வர குணம் பெறும். கண்சிவப்பு,...

மாதுளை பூ

உடலை வலுவாக்கும்  மாற எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு  வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை  கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள்.உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும்  சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த  மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை...

Page 1 of 7212345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes