கொசுக்களை விரட்ட விளக்கெண்ணெய்!
தினமும் காலை 50 மிலி முள்ளங்கி சாறு குடித்து வர சிறுநீர் தொடர்பான வியாதிகள் குணமடையும்.
பாகல் இலை சாறுடன் மோர் கலந்து குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.கத்தரி பிஞ்சுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது.நாரத்தை சாறுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உமிழ் நீர் அதிகம் ஊறுவது குறையும்.
- ஆர். பிரபா, திருநெல்வேலி.
அடை மீந்துவிட்டால் ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறியதும் உதிர்த்து பொரியல்களுக்குத் தூவலாம். வித்தியாசமான உசிலி பொரியல் தயார்.வெண்டைக்காய் பொரியல் உதிர் உதிராக இருக்க வேண்டுமா? வெண்டைக்காய் வதக்கலை இறக்கும்போது சிறிது பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து விடுங்கள்.
துருவிய கொப்பரை தேங்காய், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றை வாணலியில்...