சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன.
இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார...