Thursday, December 13, 2012

டிப்ஸ்

கொசுக்களை விரட்ட விளக்கெண்ணெய்! தினமும் காலை 50 மிலி முள்ளங்கி சாறு குடித்து வர சிறுநீர் தொடர்பான வியாதிகள் குணமடையும். பாகல் இலை சாறுடன் மோர் கலந்து குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.கத்தரி பிஞ்சுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது.நாரத்தை சாறுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உமிழ் நீர் அதிகம் ஊறுவது குறையும்.   - ஆர். பிரபா, திருநெல்வேலி. அடை மீந்துவிட்டால் ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறியதும் உதிர்த்து பொரியல்களுக்குத் தூவலாம். வித்தியாசமான உசிலி பொரியல் தயார்.வெண்டைக்காய் பொரியல் உதிர் உதிராக இருக்க வேண்டுமா? வெண்டைக்காய் வதக்கலை இறக்கும்போது சிறிது பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து விடுங்கள். துருவிய கொப்பரை தேங்காய், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றை வாணலியில்...

Wednesday, December 12, 2012

எதை எப்படி சாப்பிடலாம்? சுவையுங்கள்!

1. வெஜிடேரியன்களை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். லாக்டோ ஓவோ வெஜிடேரியன்கள் (Lacto-ovo-vegetarian)... இவர்கள் சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட மாட்டார்கள். ஆனால்... முட்டையும் பாலும் சேர்த்துக் கொள்வார்கள். லாக்டோ வெஜிடேரியன்கள் (Lacto vegetarian)... இவர்கள் இறைச்சிக்கும் முட்டைக்கும் நோ சொல்வார்கள். ஆனால், பால் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். வேகன்ஸ் (Vegans)... இவர்கள் அக்மார்க் வெஜிடேரியன்கள். 2. வெஜிடேரியன்களின் உணவு, முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், விதைகள், உலர் பருப்புகள் (Nuts) எனும் வரிசையில் இருக்க வேண்டும். அதாவது தானியம் அதிகம், நட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி எனும் வரிசையில். 3. லெகூம்ஸ் (Legumes) சாப்பிடலாம். 'அதென்னடா லெகூம்ஸ்?' என குழம்ப வேண்டாம். உலர்ந்த பீன்ஸ் பருப்புகளைத்தான் அப்படி அழைக்கிறார்கள். மிகவும்...

Thursday, December 6, 2012

புதினா (Mentha spicata)

ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.   புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர். புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும்...

Page 1 of 7212345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes