Saturday, June 9, 2012

சடை குப்பி

Medicinal Benefits Dill Plant Aid0174
நம் வீட்டருகிலேயே வளரும் தாவரங்கள் பலவும் ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகைகளாக பயன்படுத்தப்படுகின்றன. சடைகுப்பி எனப்படும் மணமுள்ள தாவரம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயிரிடப்படுகிறது. தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, ஐரோப்பா, ஆகிய நிலப்பரப்பில் இது அதிக அளவில் காணப்படுகிறது. இத்தாவரம் மஞ்சள் வண்ண மலர்களைக் கொண்டவை. கனிகள் கிளர்ச்சியூட்டும் மணம் நிறைந்தவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

விதை மற்றும் கனிகளில் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்களான கரோவோவன், ஏபியால், தில்-ஏபியால், ஆரியவையும், பிளோவோனாய்டுகள், கௌமெரின்கள், ஸான்தோன்கள் மற்றும் டிரைடெர்பின்களும் காணப்படுகின்றன.

ஆயுர்வேத மருந்து

இந்தியாவின் ஆயுர்வேதத்தில் 'ஸடபுஷ்பா' என்று அழைக்கப்பட்டு காய்ச்சல், வயிற்றுவலி, குடல்புண் போன்றவற்றினை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்தப்பட்டது.

பண்டைய காலத்தில் கிரேக்கர்களும், எகிப்தியர்களும் இத்தாவரத்தின் பயன்களை அறிந்திருந்தனர். கிரேக்கர்கள் தங்களின் கண்கள் மீது இதன் இலைகளை வைத்து தூக்க மருந்தாக பயன்படுத்தினர். எகிப்தியர்கள் வலி குறைக்கும் மருந்துகளில் இதனை பயன்படுத்தினர்.
குழந்தைகளுக்கு மருந்து
இலைகள்,கனிகள் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. கனி - விதைகளில் காணப்படும் ஆவியாகக்கூடிய எண்ணெய் குழந்தைகளின் வயிற்றுவலி, உப்புசம் நீக்க உதவுகிறது. குழந்தைகளுக்கான கிரைப் வாட்டர் தயாரித்தலில் பயன்படுகிறது. ஜீரணம், சிறுநீர்போக்கு தூண்டுவியாக பயன்படுகிறது.

தாய்ப் பால் சுரத்தலை அதிகரிக்கும்

குழந்தை பெற்ற தாய்மார்களின் ரத்தப்போக்கை ஒழுங்குபடுத்துகிறது. தாய்ப் பால் சுரத்தலை அதிகரிக்கிறது. இதன் இலைகள் இளஞ்சூடான எண்ணெயில் தோய்த்தெடுக்கப்பட்டு தோல்மீது ஏற்படும் கட்டிகளை இளகச் செய்வதற்கு பயன்படுகிறது

நந்தியா வட்டை

Medicinal Benifits East Indian Rose Aid0174
'காசம் படலங் கரும்பாவைத் தோஷமெனப்
பேசுவிழி நோய்கடமைப் பேர்ப்பதன்றி-யோசைதரு
தந்திபோ லேதெறிந்துச் சாறு மண்டை நோயகற்று
நந்தியா வட்டப் பூ நன்று.'

என்று சங்க இலக்கியத்தில் நந்தியாவட்டை பற்றி பாடப்பெற்றுள்ளது.
அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியாவட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை,மலர்,வேர்,வேர்பட்டை, கட்டை,போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

அமினோ அமிலங்கள்,கரிம அமிலங்கள்,அதிக அளவில் காணப்படுகின்றன.சிட்ரிக், ஒலியிக்அமிலங்கள்,டேபர்னோடோன்டைன்,பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.

பார்வை கோளாறு குணமடையும்

இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது.நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும்.இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்

நந்தியாவட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும்.

மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது.இதை நிறதிற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.

நந்தியாவட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் உறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டி வரப் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

பல் வலி நீக்கும் நந்தியாவட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி,கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.




 

களாக்காய்

Health Benefits Carissa Carandas Aid0174

எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்" என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

தடிப்பான பச்சை இலைகளையுடையது. வெண்மையான பூக்களையும்,சிவப்பு நிறக்காய்களையும், கறுப்புப்பழங்களையும் கொண்டது. பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

ஆரோக்கியம் தரும் காய்

களக்காய் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட பழமாகும். இதில் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழங்களில் இரும்பு, தாது சத்துக்கள் அதிகமிருப்பதால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் குறைக்க பயன்படுகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்துபித்தத்தை கட்டுப்படுத்தும். இதுதவிர, கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக ஊறுகாய் போட்டு களாக்காயை பயன்படுத்துகின்றனர். மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு களாக்காய் நல்லது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இலைகளில் காரிசிக் அமிலம், காரினால் போன்றவை உள்ளன. கனிகளில் அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டசத்துமிக்க களாக்காய்

இலைகள், கனி மற்றும் பட்டை போன்றவை மருத்துவ பயன் உடையவை. இலைகளின் கசாயம், விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு மருந்தாகும். முதிராக்கனிகள் சத்து மிக்கவை. ஊட்டத்திற்கு உகந்தவை. வேர் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. கசப்பானது. வயிற்றுப்போக்கு தூண்டுவது. சொறி சிரங்கு போக்கவும் பயன்படுகிறது.

கண்நோய் தீரும்

தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டுவரக் கண்களிலுள்ள வெண்படலம்,கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.ஜீரணம் தரும் களாக்காய்
காய், பழம், ஆகியவை பசியை தூண்டும். காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும். களாப்பழத்தைஉணவுண்டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.

களாப்பழம் உடல் சூட்டைத் தணிக்கும். சூடு காரணமாக தொண்டையில் வலி உள்ளவர்கள் இரண்டு வேளை மட்டும் களாப்பழத்தை உண்டால் தொண்டை வலி குணமாகும்.

கருப்பை அழுக்கு தீரும்

வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும். சளியகற்றும்,மாத விலக்கைத் தூண்டும். வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக் கலந்து தினமும் 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப் பித்தம், சுவையின்மை, தாகம், அதிக வியர்வை தீரும்.

பிரசவமான பெண்களுக்கு 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு சுண்டக்காச்சி வடிகட்டி காலை,மாலை இருவேளை கொடுத்து வர மகப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்


செண்பக பூக்கள்

Medicinal Uses Michelia Champaca Aid0091
வாத பித்த அத்திசுரம் மாமேகம் சுத்தம் சுரந்
தாதுநட்டங் கண்ணழற்சி தங்காவே-மாதே கேள்
திண்புறு மனக்களிப் பாந் திவ்யமனம் உட்டினஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்

என்று செண்பகப் பூக்களின் மகத்துவம் பற்றி சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செண்பக மரம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது.

மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
செண்பகத்தின் மலர்கள், இலை மற்றும் கனி உறைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் மானோ மற்றும் செஸ்குயிட்டர் பென்ஸ் உள்ளன. மைக்கிலியோலைடு, லிரியோடினைன், மேசிலைன் போன்ற வேதிப்பொருட்களும் இதில் காணப்படுகின்றன.

விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. செண்பக மரத்தின் மலர்கள், விதைகள், வேர் பகுதி மருத்துவ குணம் கொண்டவை.

கண்களில் ஒளியேற்றும் செண்பகப் பூக்கள்

செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன.

கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா" எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள்.

செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க

செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

பித்தம் குறைக்கும் பூ
பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஆகியவை உண்டாகும். செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும்

செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

காய்ச்சல் குணமாகும்

வைரஸ், பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

வாசனை திரவியங்கள்

பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் சம்ப்பா எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் தலைவலி, கண்நோய்கள் குணமாகும். மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை போக்கும்.
வேர்களும், கனிகளும்
உலர்த்தப்பட்ட வேர், வேர்பட்டை மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் தொல்லைகள் போக்க வல்லது. கனிகள் சிறுநீர் மண்டல நோய்களில் உதவுகிறது. விதைகளின் எண்ணெய் வயிற்று உப்புசம் போக்கும் பாதங்களில் வெடிப்பு போக்கவும் உதவுகிறது.



கண்டங்கத்திரி

14 Herbal Medicine Asthama Digestive Aid0090
கண்டங்கத்திரி செடி நன்கு படர்ந்து தரையை ஒட்டி வளரும் குறுஞ்செடியாகும். இந்த தாவரம் முழுவதும் முட்கள் காணப்படும். நீல நிறத்தில் மலர்கள் கொத்து கொத்தாகக் காணப்படும். இந்த செடியின் இலைகள், தண்டு, மலர், கனி, விதை ஆகிய முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டவை. அர்வாதி என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து பலவிதமான கரிம அமிலங்கள் மற்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டயோஸ்ஜெனின், சொலசோடைன், சொலனோகார்பைன், அரகிடிக்,லினோலியிக், ஒலியிக், பால்மிடிக், அமிலங்கள் காணப்படுகின்றன
ஆஸ்துமா நீக்கும் வேர்
கண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. விதைகளை எரித்த புகை ஆஸ்துமா நோயில் சளி அகற்றுவியாக உதவுகிறது. பல்வலி போக்குகிறது.

இலைகளின் சாறு மிளகுடன் சேர்த்து மூட்டு வலிகளுக்கு மருந்தாகிறது. வாந்தி நிறுத்தக்கூடியது. சிறுநீர் போக்கு தூண்டுவி. மார்பு வலி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகும். தசமூலா என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.

குழந்தைகளின் இருமல் நீக்கும்

கனிகளின் சாறு தொண்டை வலியை போக்க வல்லது. குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு இதன் பொடி தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.

முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. உடல்நலம் தேற்றக்கூடியது. மூச்சுக்குழல் அலர்ஜி, இருமல், மலச்சிக்கல், ஆகியவற்றினை போக்க உதவும். இதன் கசாயம் பால்வினை நோய்களுக்கு மருந்தாவதுடன் கருத்தரிக்கவும் ஊக்குவிக்கிறது

மேரி கியூரி அம்மையார் (அறிவியல் மேதை)

1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றுவரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரியும் அறிஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. அதன் நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.


சமவாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்த அவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7- ஆம் நாள் போலந்தின் வார்ஷாவ் நகரில் ஏழ்மையில் பிறந்தார்  Maria Salomea Skłodowska என்ற மேரி கியூரி. மரியாவின் தந்தை ஓர் அறிவியல் ஆசிரியர். அதனாலயே அவருக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய மரியா சிறு வயதிலிருந்தே ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பினார். அந்தக்காலத்து பெண்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒன்று அது. ஆனால் தன் கனவை நனவாக்க முடியும் என்று நம்பினார் மரியா. ஏழ்மையைப் போக்கவும், கல்வி கட்டனத்திற்காகவும் அவர் பகுதிநேர துணைப்பாட ஆசிரியராக பணியாற்ற வேண்டியிருந்தது.

தனது 24 ஆவது வயதில் மேல் கல்விக்காக பாரிஸுக்கு வந்த அவர் ஸாபான் என்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இயற்பியலில் மிகச்சிறப்பாக தேர்ச்சிப்பெற்று பட்டமும் பெற்றார். அந்தக்கால கட்டத்தில் அவர் Pierre Curie என்ற இளையரைச் சந்தித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொண்ட மரியா மேரி கியூரி ஆனார். கணவன், மனைவி இருவருமே இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சி செய்ய விரும்பினர். 1897-ல் முனைவர் பட்டத்துக்காக யுரேனியம் என்ற தனிமத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார் மேரி கியூரி. கணவர் பியரி கியூரியும் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல்வேறு தனிமங்களை அவர்கள் ஆராய்ந்தனர். தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக இரண்டு புதிய தனிமங்கள் உலகுக்குக் கிடைத்தன.

முதலாவது தனிமத்திற்கு, தான் பிறந்த போலந்தின் நினைவாக “பொலேனியம்” என்று பெயரிட்டார் மேரி கியூரி. இரண்டாவது தனிமம்தான் புற்றுநோய்க்கு சிகிச்சைக்குப் பயன்படும் “ரேடியம்”. ஆராய்ச்சியில் அளவிட முடியாத ஆர்வம் காட்டிய அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக கல்லூரிகளில் கற்பிக்க வேண்டியிருந்தது. ஓர் ஒழுங்கான ஆய்வுக்கூடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூட வசதியில்லை. ஒழுகும் கூரையும், போதிய மின்வசதியும் இல்லாத ஓர் அறைதான் அவர்களுக்கு ஆய்வுக்கூடமாக இருந்தது. அந்த ஆய்வுக்கூடத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓர் சக விஞ்ஞானி அது ஒரு மாட்டுத்தொழுவம் போல் இருந்தது என்று கூறினார். குளிர்காலத்தில் 6 டிகிரி வரை தட்ப நிலை குறையும். அந்தச் சூழ்நிலையிலும் அயராது ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் அந்த அறிவியல் தம்பதியர். அவர்களுக்கு பண உதவியோ, பொருள் உதவியோ செய்ய எவரும் முன்வரவில்லை.

ரேடியத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் வற்புறுத்தியும் அதனைச் செய்ய மறுத்து விட்டனர் அந்தத் தம்பதியினர். அதற்கு என்ன காரணம் தெரியுமா? கதிரியக்கம் பற்றி உலகின் எல்லா விஞ்ஞானிகளும் இன்னும் அதிகமாக ஆராய்ந்து புதிய பலன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் அதனால் மனுகுலம் நன்மை பெற வேண்டும் என்ற ஒரே காரணம்தான். எதற்குமே உரிமை கொண்டாட விரும்பும் இந்த சுயநல உலகில் இந்த பிரபஞ்சமே நன்மை பெற வேண்டும் என்று சிந்தித்த அந்த அதிசய தம்பதியரை வரலாறு மட்டுமல்ல நாமும் கைகூப்பி வணங்க வேண்டும். ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதன் பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை “கியூரி தெரபி” என்று அழைத்தனர்.

ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக கியூரி தம்பதிகளுக்கு 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. 1906 ஆம் ஆண்டு கதிரியக்கத்தின் தாக்கத்தாலும், கடும் உழைப்பாலும் நலிவுற்றிருந்த பியரி கியூரியை எதிர்பார விதமாக ஒரு குதிரை வண்டி மோதித் தள்ளியதில் அவர் காலமானார். தனது ஆராய்ச்சியை தனியாக தொடரும் நிலையும், இரண்டு பிள்ளைகளை தனியாக வளர்த்தெடுக்கும் பொறுப்பும் மேரி கியூரிக்கு ஏற்பட்டது. கணவர் இறந்ததும் அவர் வகித்து வந்த பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை வகித்த முதல் பெண்மணி அவர்.

முதல் நோபல் பரிசை வென்ற எட்டே ஆண்டுகளில் அதாவது 1911 ஆம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசை வழங்கி கெளரவித்தது நோபல் குழு. இம்முறை ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறையில் விருது வழங்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு பாரிஸில் அவர் ரேடியக்கழகத்தை நிறுவினார். அதே ஆண்டு முதலாம் உலகப்போர் மூண்டது. X-கதிர்கள் மூலம் உடலின் எந்தப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பினார் கியூரி. அதே நேரத்தில் காயம் அடைந்தவர்களை நகர்த்தக்கூடாது என்பதற்காக எக்ஸ்-ரே வாகனத்தை உருவாக்கி சுமார் 150 தாதியர்களுக்கு பயிற்சியும் அளித்தார். ரேடியத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இன்னும் கண்டறிய வேண்டும் என்று விரும்பிய மேரி கியூரி தனது மகள் ஐரினையும்(Irene) ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமூட்டினார்.

மேரி கியூரியின் கண்டுபிடிப்புகளால்தான் புற்று நோய்க்கு சிகிச்சை பிறந்தது. ஆனால் எந்த கண்டுபிடிப்பு பல புற்று நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டுத்தர உதவியதோ அதே கண்டுபிடிப்பு அவரது வாழ்க்கைக்கே உலை வைத்ததுதான் மிகப் பெரிய அறிவியல் சோகங்களுள் ஒன்று. பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் அவருக்கு கடும் கதிரியக்க தாக்கம் ஏற்பட்டது. மனுகுல மேன்மைக்காக பாடுபட்ட அந்த உன்னத விஞ்ஞானியின் உடலை "லுக்கிமீயா" என்ற புற்றுநோய் அரித்தது. கிட்டதட்ட தனது விரல்களையும், கண் பார்வையையும் கதிரியக்கத்திற்கு காவு கொடுத்த நிலையில் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 67 ஆவது அகவையில் மரணத்தைத் தழுவினார் மேரி கியூரி அம்மையார்.

தனது தாயின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்த ஐரின் பின்னாளில் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார். தாயும், தந்தையும், மகளும் நோபல் பரிசு பெற்றது வரலாற்றில் கியூரி குடும்பத்திற்கு மட்டுமே கிடைத்த தனிப்பெருமையாகும். கியூரி தம்பதிகளின் அஸ்தி பாரிஸின் புகழ் பெற்ற 'பாந்தியன்' (Pantheon) அரங்கில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை அது. ரேடியம் என்ற அரிய தனிமத்தை வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தால் அதனை வைத்து பெரும் பணம் சம்பாதிக்க எண்ணியிருக்கக்கூடும். ஆனால் வறுமையில் உழன்ற போதும் தனது கண்டுபிடிப்பை பணமாக்க எண்ணாத ஓர் உத்தம விஞ்ஞானிதான் மேரி கியூரி அம்மையார். பல புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே பரிசாகத் தந்த அந்த அதிசய அம்மையாரின் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்திகள் எளிதானதுதான்.

முதலாவது பிற்போக்கான சமுதாய எண்ணங்களை உதறித் தள்ளும் தன்னம்பிக்கை, இரண்டாவது வறுமையிலும் பிறர் நலம் நாடும் உயரிய சிந்தனை, மூன்றாவது இன்னல்களை தவிடு பொடியாக்கும் கடின உழைப்பு, நான்காவது சுயநலத்தைத் துறந்து பொதுநலத்திற்காக பாடுபடும் பண்பாடு. இந்த நற்பண்புகளை கடைபிடித்து விடாமுயற்சியோடு போரடியதால்தான் அவர் கனவு கண்டது போலவே அறிவியல் என்ற வானம் வசப்பட்டது. மேரி கியூரி அம்மையாரிடம் இருந்த இந்த நான்கு பண்புகளுமே நமக்கு ஒருசேர இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நான்கில் எதாவது ஒரு பண்பை கடைப்பிடித்து விடாமுயற்சியோடு போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

மேக நோய்களை குணமாக்கும் சீந்திற்கிழங்குகள்

02 Medicinal Benefits Seenthil Kizhang Aid0174
மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கில் மகத்துவம் தரும் மருத்துவ குணம் உண்டு. சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சீந்திற்கிழங்கு உயிர் சத்து மிக்கது. கொடி வகையைச் சேர்ந்த இந்த கிழங்கு, சீந்தில், பேய்ச்சீந்தில், பொற்சீந்தில் என பலவகையை கொண்டுள்ளது. இந்த கிழங்கு பல்வேறு நோய்களை போக்குவதால் அமிர்தக்கொடி, அமிர்தவல்லி, சோமவல்லி, குண்டலி எனவும் இதனை அழைக்கின்றனர்.

மேகநோய்களை நீக்கும்

சீந்திற்கிழங்கு அஜீரணத்தைப் போக்கி பசியை தூண்டவல்லது. இது 21 வகையான மேகநோய்களையும் நீக்க வல்லது என்று மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும். பித்தம் அதிகரிப்பதினால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். ரத்த பித்தத்தைப் போக்கும். 
பேய்ச்சீந்தில் எண்ணெய்
பேய்ச்சீந்திலை ஆகாசகருடன், என்று கூறுவர். இக்கிழங்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அனைத்துவகை சருமநோய்களையும் போக்க வல்லது. இதனை மேல்பூச்சாக பூச குழிப்புண்களையும் ஆற்றும். இந்த எண்ணெய் கால்நடைகளின் கழுத்தில் ஏற்படும் புண்கள், கழலைகளை குணமாக்கும்.

குடல்நோய் குணமடையும்

பேய்ச்சீந்திற்கிழங்கின் மேல் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி நிழலில் நன்கு உலர்த்த வேண்டும். பின்பு பொடியாக்கி துணியில் சலித்து எடுத்துக்கொண்டு மருந்தாக பயன்படுத்தலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். குடல் தொடர்புடைய நோய்கள் குணமாகும். காமாலை நோய் பித்தபாண்டு ஆகியவற்றைப்போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இது கழுத்தில் வரும் கழலைக்கட்டிகளை ஆற்றும். நாள்பட்ட தோல்நோய்களை குணமாக்கும்.

பொற்சீந்தில் வற்றல்

பொற்சீந்தில் பித்தம் தொடர்புடைய காய்ச்சல், வாந்தி போன்றவற்றை நீக்கும். காசநோய், நீரிழிவு போன்ற நோயால் சிரமப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாகும். இக்கிழங்கை வற்றலாக காயவைத்து உட்கொண்டால் உடலின் நச்சுத்தன்மை நீங்கும். நீரிழிவு மற்றும் காசநோய் குணமாகும்


 

ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் அருமருந்து - துத்திப்பூ

துத்திப்பூக்களைச் சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.துத்திப்பூக்களைச் சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.29 Medicinal Benefits Tutti Flower Aid0174

மூலநோய் கட்டுப்படும்

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும்.

ரத்தவாத்தி நீங்கும்

அரைக் கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.
துத்திப்பூக்களைச் சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.

மூலநோய் கட்டுப்படும்

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும்.

ரத்தவாத்தி நீங்கும்

அரைக் கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.
மூலநோய் கட்டுப்படும்

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும்.

ரத்தவாத்தி நீங்கும்

அரைக் கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.பட்டாம்பூச்சிகள் பறந்து அமரும் துத்திப்பூக்கள் காணும் இடமெங்கும் கண்ணுக்கு இதமாய் மலர்ந்து சிரிக்கும். குப்பை மேடுகள், சாலையோரங்கள் என பல இடங்களிலும் வளர்ந்துள்ள துத்திச் செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணமுடையவை. ரத்தம் தொடர்புடைய நோய்களை போக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.

ஆண்மை பெருகும்

துத்திப்பூக்களைச் சேகரித்து துவரம்பருப்புடன் கூட்டாகச் சமைத்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் ரத்தம், சிறுநீரில் ரத்தம் எதுவாயினும் குணமாகும். ஆண்மை பெருகும்.

இரைப்பு நோய்துத்திப்பூக்களைச் சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.

மூலநோய் கட்டுப்படும்
ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும்.

ரத்தவாத்தி நீங்கும்
அரைக் கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

ஆவாரம் பூ

30 Medicinal Benefits Tanners Cassia Aid0174
தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரையின் அழகில் மயங்காத கவிஞர்களே இல்லை. மிக்க்கொடிய வறட்சியையும் தாங்கி தன்னிச்சையாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

சகல நோய் நிவாரணி

ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு மேஜைக்கரண்டியளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் பருகிவர சர்க்கரை நோய் உடல் சோர்வு, நாவறட்சி, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல்,காந்தல் நீங்கும்.
துர்நாற்றம் நீக்கும்
'ஆவாரைப் பூத்திருக்க சாவரைக் கண்டதுண்டோ?" என்ற பழமொழியில் இருந்து ஆவரம்பூவின் மருத்துவ குணங்களை அறியலாம். சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் கற்றாழை நாற்றம் நீங்கும். உடல் பொன்நிறமாகும். ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும்

உடல்சூடு குறைய

உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும். ஆவாரம் பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து அருந்த நாவறட்சி நீங்கும்.

கண் எரிச்சல் நீங்கும்

உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து நீர் விட்டு அரைத்துக் குழப்பி படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட சிவப்பு மாறும்.

நீரிழிவு நோய் கட்டுப்படும்ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக குடியும்.

ஆவாரம் பூக்களை சேகரித்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

மூலம் குணமடையும்
ஆவரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் போட்டு வைக்கவும். தினமும் காலை, மாலை, அரைத்தேக்கரண்டியளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்

பூவரசம் பூ

19 Medicinal Benefits Portia Tree Flower Aid0174இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம்பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சொறி, சிரங்கு

சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும்.
விஷக்கடி குணமாகும்
பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்றுநாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும். இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது.

மூட்டு வீக்கம்

வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி,மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்

தூதுவளைப் பூ

கணீரென்ற குரல் வேண்டுமென்றால் தூதுவளை தாவரத்தை பறித்து கசாயம் செய்து உட்கொள்வர். அதற்கு மாற்றாக இப்பொழுது தூதுவளை சாக்லேட் விற்பனைக்கு வந்து விட்டது. இருந்தாலும் இயற்கைக்கு ஈடாகுமா? தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். சித்தமருத்துவத்தில் தூதுவளையின் பங்கு முக்கியமானது. இது காயகல்ப மருந்து என்று அழைக்கப்படுகிறது.


இளமையை தக்க வைக்க

வயதானலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும்.

தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி லிட்டர் நீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப் பருகினால் முக அழகு கிடைக்கும்.

உடல் வலுவடையும்

தூதுவளைப்பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல செய்து சாப்பிட ருசியாக இருக்கும், உடல் வலுவடையும். தூதுவளைப் பூக்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து இரவில் ஒருவேளை மட்டும் அருந்தவும். இதனால் நரம்புகள் இறுகும். உடல் உறுதி பெறும். ஆண்மை பெருகும்.

செங்காந்தள் மலர்கள்


மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும்.

இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமான ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.

நிறம் மாறும் பூக்கள்

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கலப்பைக் கிழங்கு

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் கண்வலிக்கிழங்கு அல்லது இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.விஷக்கடிக்கு மருந்து செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை, அரணை, ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர்இ குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.

சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி, இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்ட, வெள்ளருகு, மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை, மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.

செங்காந்தள் வேர் தைலத்தை, வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை, சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடைஇசொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

விதைகள் கிழங்குகள்

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

பாம்பு விஷம் முறிக்கும்

கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும். உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமியத்தில் மூன்று நாட்கள் ஊறவைத்து மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும். தவிர தலைவலி, கழுத்துவலி, குட்டம்,வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்.

பிரசவ வேதனை தீரும்

வாதம்இ மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி,பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும் உள்ளது. பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இறங்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறுஇ உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்து இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் , சிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும். இது சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

ஏற்றுமதியாகும் விதைகள்

கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின்(Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine)ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள்,வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.

அண்மையில் விதையிலிருந்து ‘கோல்ச்சின்’ மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

உறவை பலப்படுத்த உதவும் மதனகாமப்பூ

11 Medicinal Benefits Of Flowers Aid0174இயற்கையானது உண்ண உணவும் பாதுகாப்பான இருப்பிடத்தையும் அளித்துள்ளது. பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு எத்தகைய சத்துக்களை தருகின்றனவோ அதுபோல பூக்களும் அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பூக்களின் அரியவகை மருத்துவக் குணங்களை காணலாம்

தும்பைப் பூ

ஒரு பலம் தும்பைப் பூவை சேகரித்து கால்படி நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகினால் தலை தொடர்பான நோய்கள் குணமடையும்

மூக்கில் நீர் வடிதல் குணமடையும், தலையில் ஏற்படும் பீணிச நோய் சரியாகும். மூளை சுறுசுறுப்படையும்.

எருக்கம் பூ

எருக்கலைப் பூ, கிராம்பு, மிளகு இவற்றை அரைத்து தினமும் சிறிதளவு மாத்திரை வடிவில் உட்கொள்ள வேண்டும்

இதனால் கடுமையான இரைப்பு குணமாகும். இருமல் நோய் தீரும்

வேப்பம் பூவேப்பம்பூ, இலுப்பைபூ, சிவனார் வேம்பின் பூ இவற்றை சம அளவு எடுத்து அரைத்து கசாயமாக்கி தினசரி இருவேளை குடித்து வர பித்த பைத்தியம் குணமாகும். அறிவு விருத்தியாகும்.

முல்லைப் பூ
முல்லைப்பூவை தலையில் சூடுவது மட்டுமல்ல அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதி குணமடையும். மனத்தெளிவு உண்டாகும். முல்லைப்பூவின் சாறு பிழிந்து அதன்சாறு மூன்று துளி மூக்கில் விட தலைவலி குணமடையும்.

முல்லைப் பூவை அரைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் உடலில் பூசி குளிக்க சொரி, சிரங்கு போன்றவை குணமடையும். முல்லைப்பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் கருப்பை நோய்களை குணமாக்கும்.

மதனகாமப்பூ
மதனகாமப் பூ, குங்குமப் பூ, மராட்டி மொக்கு இவற்றை சம எடை எடுத்து முருங்கை பூச்சாற்றினால் அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரையாக்கி நிழலில் உலர்த்தி, காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் பசுவின் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் உடல் பலம் உண்டாகும். உறவின் போது விந்து விரைவில் வெளிப்படாது.

எள் பூ
எள்ளின் பூவை பறித்து பல்லில் படாமல் விழுங்கிவிட கண்பார்வை குணமாகும். எத்தனை பூக்களை சாப்பிடுகிறோமோ அத்தனை ஆண்டுகள் கண் வலி வராது. இதனால் கண் ஒளி அதிகரிக்கும். கண்ணில் பூ விழாது

 

Thursday, June 7, 2012

மேரி கியூரி அம்மையார் (அறிவியல் மேதை)

1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றுவரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரியும் அறிஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. அதன் நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

சமவாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்த அவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7- ஆம் நாள் போலந்தின் வார்ஷாவ் நகரில் ஏழ்மையில் பிறந்தார்  Maria Salomea Skłodowska என்ற மேரி கியூரி. மரியாவின் தந்தை ஓர் அறிவியல் ஆசிரியர். அதனாலயே அவருக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய மரியா சிறு வயதிலிருந்தே ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பினார். அந்தக்காலத்து பெண்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒன்று அது. ஆனால் தன் கனவை நனவாக்க முடியும் என்று நம்பினார் மரியா. ஏழ்மையைப் போக்கவும், கல்வி கட்டனத்திற்காகவும் அவர் பகுதிநேர துணைப்பாட ஆசிரியராக பணியாற்ற வேண்டியிருந்தது.

தனது 24 ஆவது வயதில் மேல் கல்விக்காக பாரிஸுக்கு வந்த அவர் ஸாபான் என்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இயற்பியலில் மிகச்சிறப்பாக தேர்ச்சிப்பெற்று பட்டமும் பெற்றார். அந்தக்கால கட்டத்தில் அவர் Pierre Curie என்ற இளையரைச் சந்தித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொண்ட மரியா மேரி கியூரி ஆனார். கணவன், மனைவி இருவருமே இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சி செய்ய விரும்பினர். 1897-ல் முனைவர் பட்டத்துக்காக யுரேனியம் என்ற தனிமத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார் மேரி கியூரி. கணவர் பியரி கியூரியும் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல்வேறு தனிமங்களை அவர்கள் ஆராய்ந்தனர். தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக இரண்டு புதிய தனிமங்கள் உலகுக்குக் கிடைத்தன.

முதலாவது தனிமத்திற்கு, தான் பிறந்த போலந்தின் நினைவாக “பொலேனியம்” என்று பெயரிட்டார் மேரி கியூரி. இரண்டாவது தனிமம்தான் புற்றுநோய்க்கு சிகிச்சைக்குப் பயன்படும் “ரேடியம்”. ஆராய்ச்சியில் அளவிட முடியாத ஆர்வம் காட்டிய அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக கல்லூரிகளில் கற்பிக்க வேண்டியிருந்தது. ஓர் ஒழுங்கான ஆய்வுக்கூடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூட வசதியில்லை. ஒழுகும் கூரையும், போதிய மின்வசதியும் இல்லாத ஓர் அறைதான் அவர்களுக்கு ஆய்வுக்கூடமாக இருந்தது. அந்த ஆய்வுக்கூடத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓர் சக விஞ்ஞானி அது ஒரு மாட்டுத்தொழுவம் போல் இருந்தது என்று கூறினார். குளிர்காலத்தில் 6 டிகிரி வரை தட்ப நிலை குறையும். அந்தச் சூழ்நிலையிலும் அயராது ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் அந்த அறிவியல் தம்பதியர். அவர்களுக்கு பண உதவியோ, பொருள் உதவியோ செய்ய எவரும் முன்வரவில்லை.

ரேடியத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் வற்புறுத்தியும் அதனைச் செய்ய மறுத்து விட்டனர் அந்தத் தம்பதியினர். அதற்கு என்ன காரணம் தெரியுமா? கதிரியக்கம் பற்றி உலகின் எல்லா விஞ்ஞானிகளும் இன்னும் அதிகமாக ஆராய்ந்து புதிய பலன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் அதனால் மனுகுலம் நன்மை பெற வேண்டும் என்ற ஒரே காரணம்தான். எதற்குமே உரிமை கொண்டாட விரும்பும் இந்த சுயநல உலகில் இந்த பிரபஞ்சமே நன்மை பெற வேண்டும் என்று சிந்தித்த அந்த அதிசய தம்பதியரை வரலாறு மட்டுமல்ல நாமும் கைகூப்பி வணங்க வேண்டும். ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதன் பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை “கியூரி தெரபி” என்று அழைத்தனர்.

ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக கியூரி தம்பதிகளுக்கு 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. 1906 ஆம் ஆண்டு கதிரியக்கத்தின் தாக்கத்தாலும், கடும் உழைப்பாலும் நலிவுற்றிருந்த பியரி கியூரியை எதிர்பார விதமாக ஒரு குதிரை வண்டி மோதித் தள்ளியதில் அவர் காலமானார். தனது ஆராய்ச்சியை தனியாக தொடரும் நிலையும், இரண்டு பிள்ளைகளை தனியாக வளர்த்தெடுக்கும் பொறுப்பும் மேரி கியூரிக்கு ஏற்பட்டது. கணவர் இறந்ததும் அவர் வகித்து வந்த பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை வகித்த முதல் பெண்மணி அவர்.

முதல் நோபல் பரிசை வென்ற எட்டே ஆண்டுகளில் அதாவது 1911 ஆம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசை வழங்கி கெளரவித்தது நோபல் குழு. இம்முறை ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறையில் விருது வழங்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு பாரிஸில் அவர் ரேடியக்கழகத்தை நிறுவினார். அதே ஆண்டு முதலாம் உலகப்போர் மூண்டது. X-கதிர்கள் மூலம் உடலின் எந்தப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பினார் கியூரி. அதே நேரத்தில் காயம் அடைந்தவர்களை நகர்த்தக்கூடாது என்பதற்காக எக்ஸ்-ரே வாகனத்தை உருவாக்கி சுமார் 150 தாதியர்களுக்கு பயிற்சியும் அளித்தார். ரேடியத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இன்னும் கண்டறிய வேண்டும் என்று விரும்பிய மேரி கியூரி தனது மகள் ஐரினையும்(Irene) ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமூட்டினார்.

மேரி கியூரியின் கண்டுபிடிப்புகளால்தான் புற்று நோய்க்கு சிகிச்சை பிறந்தது. ஆனால் எந்த கண்டுபிடிப்பு பல புற்று நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டுத்தர உதவியதோ அதே கண்டுபிடிப்பு அவரது வாழ்க்கைக்கே உலை வைத்ததுதான் மிகப் பெரிய அறிவியல் சோகங்களுள் ஒன்று. பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் அவருக்கு கடும் கதிரியக்க தாக்கம் ஏற்பட்டது. மனுகுல மேன்மைக்காக பாடுபட்ட அந்த உன்னத விஞ்ஞானியின் உடலை "லுக்கிமீயா" என்ற புற்றுநோய் அரித்தது. கிட்டதட்ட தனது விரல்களையும், கண் பார்வையையும் கதிரியக்கத்திற்கு காவு கொடுத்த நிலையில் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 67 ஆவது அகவையில் மரணத்தைத் தழுவினார் மேரி கியூரி அம்மையார்.

தனது தாயின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்த ஐரின் பின்னாளில் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார். தாயும், தந்தையும், மகளும் நோபல் பரிசு பெற்றது வரலாற்றில் கியூரி குடும்பத்திற்கு மட்டுமே கிடைத்த தனிப்பெருமையாகும். கியூரி தம்பதிகளின் அஸ்தி பாரிஸின் புகழ் பெற்ற 'பாந்தியன்' (Pantheon) அரங்கில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை அது. ரேடியம் என்ற அரிய தனிமத்தை வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தால் அதனை வைத்து பெரும் பணம் சம்பாதிக்க எண்ணியிருக்கக்கூடும். ஆனால் வறுமையில் உழன்ற போதும் தனது கண்டுபிடிப்பை பணமாக்க எண்ணாத ஓர் உத்தம விஞ்ஞானிதான் மேரி கியூரி அம்மையார். பல புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே பரிசாகத் தந்த அந்த அதிசய அம்மையாரின் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்திகள் எளிதானதுதான்.

முதலாவது பிற்போக்கான சமுதாய எண்ணங்களை உதறித் தள்ளும் தன்னம்பிக்கை, இரண்டாவது வறுமையிலும் பிறர் நலம் நாடும் உயரிய சிந்தனை, மூன்றாவது இன்னல்களை தவிடு பொடியாக்கும் கடின உழைப்பு, நான்காவது சுயநலத்தைத் துறந்து பொதுநலத்திற்காக பாடுபடும் பண்பாடு. இந்த நற்பண்புகளை கடைபிடித்து விடாமுயற்சியோடு போரடியதால்தான் அவர் கனவு கண்டது போலவே அறிவியல் என்ற வானம் வசப்பட்டது. மேரி கியூரி அம்மையாரிடம் இருந்த இந்த நான்கு பண்புகளுமே நமக்கு ஒருசேர இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நான்கில் எதாவது ஒரு பண்பை கடைப்பிடித்து விடாமுயற்சியோடு போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

மைக்கேல் ஃபாரடே-மின்சக்தி

 
இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.



1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி இங்கிலாந்தில் ஒரு கருங்கொல்லருக்கும், இல்லப் பணிபெண்ணுக்கும் மகனாக பிறந்தார் மைக்கேல் ஃபாரடே. நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடியது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்கூட சிரமம். ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரு ரொட்டியைத் தருவார். அந்த ரொட்டிதான் மைக்கேலின் ஒருவார உணவு அந்த ரொட்டியை பதினான்கு துண்டுகளாக பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார் மைக்கேல். அப்படிப்பட்ட ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் புத்தகங்கள் வாசிப்பதில் மைக்கேலுக்கு அளவுகடந்த பிரியம் இருந்தது. லண்டனில் புகழ்பெற்ற ச்சேரிங் க்ராஸ் என்ற பகுதியில் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். அங்கெல்லாம் சென்று அவசர அவசரமாக அவற்றை புரட்டிப்பார்த்து படிப்பார் மைக்கேல். ஆனால் காசு கொடுத்து வாங்க முடியாததால் அவரைக் கண்டவுடனேயே எல்லாக் கடைக்காரர்களும் விரட்ட ஆரம்பித்தனர். ஜார்ஜ் ரீபார்க் என்ற ஒரு கடைக்காரர் மட்டும் மைக்கேல் இரக்கப்பட்டு தன் கடையில் இருந்த புத்தகங்களைப் படிக்க அனுமதி தந்தார். மணிக்கணக்கில் மைக்கேல் புத்தகங்களை படிப்பதைப் பார்த்து வியந்த அவர் மைக்கேலின் குடும்ப நிலையை தெரிந்துகொண்டு ஒரு வேலையையும் தந்தார். வாரம் மூன்று சிலிங்குகள் சம்பளம். மைக்கேலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

லண்டன் முழுவதும் புத்தகங்களை கொண்டு சென்று கொடுப்பதும், அவற்றை வாங்கி வருவதும்தான் மைக்கேலின் முதல் வேலை.  அதில் மைக்கேல் சிறப்பாகச் செய்யவே புத்தகங்களுக்கு பைண்டிங்க் செய்யும் வேலையைத் தந்தார் அந்த முதலாளி. பைண்டிங்க் பணிக்காக வரும் புத்தகங்களில் விஞ்ஞானம் சம்பந்தபட்டவையும் நிறைய இருக்கும். அவற்றை பைண்ட் செய்யும் அதேவேளையில் அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் மைக்கேல் அவற்றில் உள்ள பல விசயங்கள் அவருக்கு புரியாது. நம்மில் பலருக்கு புரியாத விசயங்கள் என்று வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? அந்த புத்தகங்களை பைண்ட் செய்த பிறகு அவற்றை உரியவர்களிடம் கொடுக்கும்போது தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வார். அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் புரியாதவற்றுக்கு விளக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அந்த முனைப்புதான் பிற்காலத்தில் அவரை பார்போற்றும் விஞ்ஞானியாக உயர்த்தியது.

லண்டனில் அந்தக்கால கட்டத்தில் விஞ்ஞான விரிவுரைகள் நடைபெறும் அதற்கு கட்டணம் உண்டு. அந்த விரிவுரைகளை கேட்க வேண்டுமென்று மைக்கேலுக்கு ஆசை. அவரது ஆசையை உணர்ந்த அந்த முதலாளி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் விரிவுரைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்து மைக்கேலை அனுப்பி வைத்தார். அந்த விரிவுரைதான் மைக்கேலின் வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த விரிவுரையை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி. மின்சாரம் பற்றியும், வேதியியல் பற்றியும் அவர் பேசியதை மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? சர் ஹம்ப்ரி டேவி கூறியதை ஒன்றுவிடாமல் அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். விரிவுரை முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் அழகாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை பைண்ட் செய்து ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். இரண்டுநாள் கழித்து அதனைப் பெற்ற ஹம்ப்ரி டேவி மலைத்துப்போனார். தனது விரிவுரை அப்படியே அழகாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அவர் மைக்கேலிடம் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து அவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அகமகிழ்ந்துபோன மைக்கேல் சர் ஹம்ப்ரி டேவியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவரது ஆராய்ட்ச்சிகளிலெல்லாம் உதவி புரிந்தார்.

முதலில் உதவியாளராக மைக்கேலைப் பார்த்த ஹம்ப்ரி டேவி பிறகு அவரை சக விஞ்ஞானி அளவுக்குப் பார்க்கத் தொடங்கினார். 30 ஆவது வயதில் செரா பர்னாட் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். எந்த நேரமும் எதாவது ஆராய்ட்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் மைக்கேல் அதற்கு சராவும் உதவி புரிந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆராய்ட்ச்சிகளை இங்கிலாந்து மெச்சத் தொடங்கியது. மைக்கேலுக்கு 40 வயதானபோது காந்தத்தினால் மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலன் மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் ட்ரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்த இரண்டு கண்டுபிடிப்புகள் நிகழாதிருந்திருந்தால் நவீன கருவிகளை உலகம் சந்தித்திருக்க முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் கருவிகள் என எல்லா மின்கருவிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது மைக்கேல் கண்டுபிடித்த டைனமோதான். இப்போது புரிகிறதா அந்தக் கண்டுபிடிப்பின் மகிமை.

பணம் சேர்த்து வைப்பதை பாவமாக கருதிய 'சேண்டிமேனியன்' என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மைக்கேல் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றால் பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மனுக்குலச் சேவைக்காகவே அன்றி தான் செல்வந்தன் ஆவதற்கு அல்ல என்ற மனப்பான்மை அவருடையது. தன் சிரமமான பிள்ளைப்பருவத்தை மறக்காத மைக்கேல் தன்னைப்போன்ற ஏழைச்சிறுவர்களும் அறிவியலின் அற்புதங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக லண்டன் ராயல் கழகத்தில் 'கிறிஸ்துமஸ் விரிவுரைகள்' என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது ஃபாரடே விரிவுரைகள் என்று இன்றும் ஆண்டுதோறும் தொடர்கிறது. பல்லாயிரம் மாணவர்கள் அந்த விரிவுரையால் பலன் அடைகிறார்கள். மின்சாரப் பயன்பாட்டில் புரட்சியைக்கொண்டு வந்த அந்த மகத்தான விஞ்ஞானியைத் தேடி சர் பட்டமும், ராயல் கழகத்தின் தலைவர் பதவியும் வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன் என்றுகூறி இரண்டையுமே மறுத்துவிட்டார் அந்த அதிசய விஞ்ஞானி.

இறுதிவரை எளிமையையே விரும்பி எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்த மைக்கேல் ஃபாரடே 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். பல புகழ்பெற்ற அறிஞர்களைப்போலவே அவரது நல்லுடலும் 'Westminster Abbey' யில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் விரும்பியபடியே ஒரு சாதரண இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. "ஒருமுறை சர் ஹம்ப்ரி டேவிடம் உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது? என்று கேட்கப்பட்டது" அதற்கு அவர் சட்டென்று சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே. ஒரு மேதையின் வாயாலேயே மேதை என்று புகழப்பட்ட மைக்கேல் ஃபாரடேயின் வாழ்க்கை நமக்குக்கூறும் உண்மை மிக மிக எளிதானது. உலகைக்கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நிறைய கேள்வி கேட்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு ரொட்டித்துண்டுதான் என்றாலும் நம்பிக்கையோடு போராட வேண்டும். மைக்கேலைப் போலவே வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடும் எவருக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கு வசப்பட்ட அதே வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.


(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

ரோலண்ட் ஹில்-அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர்

ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.

ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ் நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்தின் தாள்களின் எண்ணிக்கைக்கும் ஏற்பவே கட்டணம் அறவிடப்பட்டது. ரோலண்ட் ஹில்லின் ஆலோசனைப்படி, ஒரு பென்னி கட்டணம், குறிப்பிட்ட நிறைக்கு உட்பட்ட கடிதமொன்றை நாட்டின் எந்தமூலைக்கும் அனுப்ப முடிந்தது. முன்னர் தபால் கட்டணம் 4d க்கும் கூடுதலாகவே இருந்தது.

எனினும் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்துவது அனுப்புனரா, பெறுனரா என்ற பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் விருப்பத்துக்குரியதாகவே இருந்துவந்தது. தபாலதிபர் நாயகமாக (Postamaster general ) இருந்து ரோலண்ட் ஹில் எடுத்த முயற்சிகள் பல ஆண்டுகள் பலனளிக்காமலேயிருந்தது.

குறைந்த கட்டணம், எழுத வாசிக்கத்தெரிந்த கூடுதலானவர்கள் தபால் சேவையைப் பயன்படுத்த வழி செய்தது. 1840 மே 6ஆம் திகதி முதலாவது தபால்தலை வெளியிடப்படுவதற்கு முன்னரே, அதே ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி, முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ரேனால்டு ஜான்சன் -கணினி துறை

ரேனால்டு ஜான்சன் உருவாக்கி வளர்ச்சியுற்ற அண்மைக்காலத்து ஐபிஎம் வன்தட்டு நிலைசேமிப்பகம்

ரேனால்டு 'பி. ஜான்சன் (Reynold B. Johnson) (1906-1998) என்னும் அமெரிக்கர் கணினி துறையில் பல புது கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்கள் செய்தவர். குறிப்பாக கணினிகளில் தரவுகளையும், கோப்புகளையும் சேமித்து வைக்கும் வன்தட்டு நினைவகம் (hard disk) எனப்படும் நிலைசேமிப்பகத்தை இவர் உருவாகினார். இவரை வன்தட்டு இயக்கியின் தந்தை எனப் போற்றுவர்.

ரேனால்டு ஜான்சன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா என்னும் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் நெடுங்காலம் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் 1930களில் பென்சிலால் (கரிக்குச்சி எழுதுகோலால்) கீறப்பட்ட இடத்தை உணரும் வகையான ஒரு புதிய எந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையிலேயே ஐபிஎம் நிறுவனமானது ஐபிஎம் 805 தேர்வு செய்யும் எந்திரம் (IBM 805 Test Scoring Machine) என்னும் ஓர் எந்திரத்தை 1937 முதல் விற்கத் தொடங்கியது். ஒளிப்பதிவு நாடா செய்வதிலும் இவர் புத்தாக்கங்கள் செய்துள்ளார். இவர் 1971ல் ஐபிஎம் இல் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 90 க்கும் அதிகமான புத்தாக்க உரிமங்களை (பேட்டண்ட் Patent) பெற்றுள்ளார். நிலைசேமிப்பகம் உருவாக்கி 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய தொழிவளர்ச்சி ஏற்படுதிய முன்னோடி என்பதால் இவருக்கு ஐக்கிய அமெரிக்கத் முதல்வர் (பிரெசிடெண்ட்) ரோனால்டு ரேகன் அவர்கள் 1986ல் நாட்டின் தொழிநுட்பப் பதக்கம் என்னும் தலையாய பரிசை அளித்து பெருமை செய்தார்

மார்க்கோனி-"வானொலியின் தந்தை"







மார்க்கோனி (ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.

வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான். அந்த வானொலியை உலகுக்குத் தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த ஒருவரைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.  

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த அவர்தான் 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் மார்க்கோனி. 1874-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார் குலீல்மோ மார்க்கோனி. தந்தை வசதி வாய்ந்த தொழிலபதிர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது. வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்திலிருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் பிள்ளைப்பருவ பொழுதுபோக்கு. சிறு வயதிலேயே அவருக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது. அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான  Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துகளையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார்.


மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி  Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகள் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராப் ("wireless telegraphy") அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா? என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார். பல சோதனைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அப்போது அவரது சோதனைகளைக் கண்டு நகைத்த கூட்டம்தான் அதிகம். ஆனால் ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனை உணர்ந்ததாலோ என்னவோ தனது சோதனைகளை தொய்வின்றித் தொடர்ந்தார் மார்க்கோனி.


1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார். 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 1901-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பனிரெண்டாம் நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி. 

வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்பதால் கூடப் போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால் உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி. அன்றைய தினம் Newfoundland-ன் St. John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.


தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.


வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் தமது 63-ஆவது அகவையில் ரோம் நகரில் காலமானார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி. வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

மார்க்கோனியின் விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன் பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது. வான் அலைகளுக்கு உயிரூட்டிய மார்க்கோனியின் கதை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான் தொலைநோக்கும் விடாமுயற்சியுடன் சேர்ந்த கடின உழைப்பும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இதே பண்புகளை பின்பற்றும் எவருக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

வில்லியம் பிராட்ஃபோர்ட் சொக்லி







வில்லியம் பிராட்ஃபோர்ட் சொக்லி (William Bradford Shockley, பெப்ரவரி 13, 1910 - ஆகஸ்ட் 12, 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரைட் சகோதரர்கள் -விமானம்

ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003] !!!

'ரைட் சகோதர்கள் நுணுக்க அறிவாளிகள். துல்லிய யந்திரத் திறமைசாலிகள். மூலக் காரணங்களை ஆழ்ந்து ஆராயும் கூரியச் சிந்தனையாளர்கள். விடா முயற்சி மிக்க கடின உழைப்பாளிகள். ஈடிணையற்ற சோதனையாளர்கள். தொழில் நுணுக்க மேதைகள். பறக்கும் ஊர்தியைப் படைத்து இந்தப் பூமியின் வரலாற்றையே மாற்றி விட்டவர்கள் '.

சார்லஸ் டால்ஃபஸ், ஃபிரென்ச் விமானச் சரித்திரவாதி [Charles Dollfus, French Aviation Historian]

முன்னுரை:
2003 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்கவின் வட கரோலினா கிட்டி ஹாக்கில் உள்ள கில் டெவில் கில் [Kill Devil Kill, Kitty Hawk, North Carolina] கடல்மேட்டுக் கரையில், நூறாண்டுகளுக்கு முன்பு 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் [Orville Wright] முதன்முதலில் பனிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து நிரூபித்த நிகழ்ச்சியை மறுமுறை அதேபோல் ஒரு மாடலைத் தயாரித்துப் பார்வையாளர்களுக்குச் செய்து காட்ட முயன்றார்கள்! அது ரைட் சகோதரர் கனவை, ஆழ்ந்த அந்தரங்க வேட்கையை மெய்ப்பித்த நிகழ்ச்சியை நினைவூட்டியதோடு, அமெரிக்க விடுதலைப் புத்துணர்ச்சியைப் புலப்படுத்துவதாகவும் தோன்றியது! சரித்திரப் புகழ்பெற்ற அந்தப் பனிரெண்டு வினாடிகள் உலக ஆகாயப் போக்குவரத்திலும், அண்டவெளிப் பயணத்திலும் மாபெரும் புரட்சியை உண்டாக்கி விட்டது! விண்வெளிப் பயணத்துக்கு விதையிட்ட சரித்திரத் தீரர்கள் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்களின் நினைவாக கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் 1932 ஆம் ஆண்டு 60 அடி உயரமுள்ள கற்கோபுரம் ஒன்று 90 அடி மலை உச்சியில் கம்பீரமாக நிறுத்தப் பட்டுள்ளது.

பறக்கும் யுகத்தைத் திறந்து வைத்த படைப்பு மேதைகள்!

படைப்புக்குத் தேவை, ஆக்க உணர்வு ஒரு சதவீதம், வேர்வை சொட்டும் விடா முயற்சி தொன்னூற்றி ஒன்பது சதவீதம் என்று உலக ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிஸன் கூறுகிறார்! படிக்காத, பட்டம் பெறாத தாமஸ் ஆல்வா எடிஸனைப் போன்ற நிபுணத்துவ உழைப்பாளிகளின் அணியில் வருபவர் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்கள். எடிஸனைப் போல் நூற்றுக் கணக்கான நூதனச் சாதனங்களைக் கண்டுபிடிக்கா வித்தாலும், பறக்கும் ஊர்தியை மட்டும் படைத்த ரைட் சகோதரரின் ஆக்கம் தரத்தில் எடிஸனின் படைப்புகளுக்கு நிகரானது! 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆகாயத்தில் பறந்த ரைட் சகோதரர்களின் ஆரம்ப வெற்றி நிகழ்ச்சியே, அறுபத்தி ஆறு ஆண்டுகள் கடந்து 1969 இல் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் அண்டவெளியில் பறந்து சந்திர மண்டலத்தில் தடம்பதிக்க அடிகோலியது! ஆர்வில், வில்பர் இருவரும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காமல், படிப்பை விட்டுத்தள்ளிச் சைக்கிள் மெக்கானிக்காகப் பணி புரிந்து வந்தவர்கள்!

முதன்முதலில் பறந்த கிட்டி ஹாக்கில் நூற்றாண்டுப் பாராட்டு விழா

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கிட்டி ஹாக், கில் டெவில் கில்லில் சுமார் 35,000 பேர் நூறாண்டுப் பாராட்டு விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தனர். 'ரைட் சகோதரர்களின் பறக்கும் விமானப் படைப்பு பரந்த இந்த உலகுக்குச் சொந்தமானது! ஆனால் அவர்கள் இருவரும் அமெரிக்காவுக்குச் சொந்தமானவர்கள் ' என்று ஆர்வில், வில்பர் ஆகியோரைப் புகழ்ந்து, கடல்கரைத் திடல் நூறாண்டு நினைவு விழாவில் உரையாற்றினார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். விமானியும், நியூயார்க் ராச்செஸ்டர் பொறியியற் பேராசிரியருமான கெல்வின் கோசெஸ்பெர்கர் 1903 இல் ரைட் சகோதரர் செய்த ஒற்றை எஞ்சின் இரட்டைச் சுழலி ஊர்தியின் மாடலை அக்காலப் பொருட்களில் அமைத்து, அவர்கள் முதலில் பறந்து பயின்ற முறைகளை மீண்டும் நிகழ்த்திக் காட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அம்மாடலை ஓட்டிக் காட்டுகையில் பெருமழை உண்டாகி ஏதோ பழுதுகள் ஏற்பட்டு, ஊர்தி தரை விட்டு எழுந்து பறக்க முடியாமல் முடங்கிக் கொண்டது! முதல் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அனைவருக்கும், அத்தோல்வி ஏமாற்றத்தை உண்டாக்கியது. அடுத்து இரண்டாம் முறையாக மறுபடியும் அப்பணியை முயல்வதாகத் திட்டம் இருந்தது.

அடுத்து சந்திரனில் கால்வைத்த இரண்டாவது விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் [Buzz Aldrin], சினிமா நடிகர் ஜான் டிரவோல்டா [John Travolta] ஆகியோர் இருவரும் பேசினார்கள். ஜனாதிபதி புஷ் அடுத்து நாசா திட்டமிடும் புதிய சந்திரப் பயணத்தை, அக்கூட்டத்தில் அறிவிக்கப் போவதாக எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் புஷ் அன்று ஏனோ அதை வெளியிட விரும்பவில்லை!

1903 டிசம்பர் 17 ஆம் தேதி முதலாக ஆர்வில் ரைட் எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறக்க முடிந்தது! அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஊர்தி 59 வினாடிகள் பறந்து 852 அடி தூரம் சென்றது! அம்மூன்று முதல் முயற்சிகளும் இருபதாம் நூற்றாண்டின் புதிய படைப்புச் சாதனையாக சரித்திரத்தில் இடம் பெறுகின்றன.

வானில் பறக்க முயன்ற முன்னோடி வல்லுநர்கள்

1783-1785 ஆண்டுகளில் பிளான்ச்சார்டு [Blanchard] போன்ற பிரென்ச் நிபுணர்கள் வாயு பலூன்களில் பறந்து காட்டினர்! 1804-1848 ஆண்டுகளில் ஜியார்ஜ் கேய்லி [George Cayley], 1842 இல் ஸாமுவெல் ஹென்ஸன் [Samuel Henson], 1894 இல் பிரிட்டிஷ் நிபுணர் ஹிராம் மாக்ஸின் [Hiram Maxin] ஆகியோரும் எஞ்சின் ஊர்தியை அமைக்க முன்னோடியாக முயன்றவர்கள். 1898 ஆம் ஆண்டு பிரேஸில் வல்லுநர் ஆல்பர்ட் ஸன்டாஸ் துமான்ட் [Alberto Santos-Dumont] எஞ்சின் இணைத்த வாயுக்கப்பலில் [Powered Airship] பறந்து சென்று பாரிஸ் ஐஃபெல் கோபுரத்தை நான்கு தடவைகள் சுற்றிக் காட்டினார்!

ஆனால் 1891 ஆம் ஆண்டில் ஜெர்மெனியின் ஆட்டோ லிலியென்தால் [Otto Lilienthal] பறவையைப் போல இறக்கைகளைக் கொண்ட ஊர்திகளில் 2000 தடவை வெற்றிகரமாகப் பறந்ததாக அறியப்படுகிறது! ஆனால் 1896 இல் விமானக் கட்டுப்பாடு சீர்குலைந்து, ஊர்தி தரையில் விழுந்து லிலியென்தால் மாண்டு விட்டார்! பிரென்ச் அமெரிக்கரான ஆக்டேவ் சனூட் [Octave Chanute] ரைட் சகோதரர் காலத்தில் (1896-1901) பறக்கும் ஊர்திகளைப் பற்றி எழுதியும், முயன்று கொண்டும் இருந்தார். ஆக்டேவ் சனூட் எழுதிய 'பறக்கும் யந்திரங்களின் வளர்ச்சி ' [Progress of Flying Machines] நூலே ரைட் சகோதரர்களுக்கு ஆரம்ப கால உதவிப் புத்தகமாக அமைந்தது. அவர்கள் சனூட்டுடன் தமது பறப்பியல் அனுபவ நுணுக்கங்களை அடிக்கடிப் பகிர்ந்து தொடர்பு கொண்டிருந்தனர்.

ஆட்டோ லிலியென்தால்தான் ரைட் சகோதரர்களின் முதற் குரு! அவர்களது விமான வேட்கைக்கு முக்கிய காரணமானவர். ஆட்டோ லிலியென்தால் எழுதிய 'பறப்பியல் பிரச்சனை, பறப்பியல் உந்து சோதனைகள் ' [The Problem of Flying & Practical Experiments in Soaring] என்னும் நூலும், ஸாமுவெல் லாங்கிலி எழுதிய [Samuel Langley] 'பறப்பியல் யந்திரவியல் சோதனைகள், வாயு வளைபோக்கு ' [Experiments in Mechanical Flight & Aerodynamics] என்னும் நூலும், அவர்கள் 200 வித இறக்கைகளைச் சோதிக்க செய்த 'புயல் குகைச் ' [Wind Tunnel] சோதனைகளுக்கு உதவின.

வான மண்டலத்தில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல மேதைகள் தோல்வி யுற்ற போது, ரைட் சகோதரர்கள் மட்டும் முதலில் வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன! முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் 'முன்னுந்தல் ' [Thrust], 'மேலெழுச்சி ' [Lift], 'திசைதிருப்பி ' [Rudder] எனப்படும் 'முப்புற உந்தல் கட்டுப்பாடு ' நுணுக்கத்தைக் கையாண்டவர்கள், ரைட் சகோதரர்கள். இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு ஆயில் எஞ்சினைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில், வில்பர் இருவரும் 'புயல் குகை ' [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான வாயு வளைபோக்குள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் 12 H.P. ஆற்றல் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் 30 mph வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தார்! 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது!

நவீன உலகில் விமானப் போக்குவரத்துகள் விருத்தியும் பெருக்கமும்

1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டு, 1908 இல் அமெரிக்க ஈரோப்பிய விமானப் போக்குவரத்துகள் சீராக ஆரம்பமாயின. முதல் உலகப் போரில் [1914-1918] வானிலிருந்து குண்டு போட முதன்முதல் விமானங்கள் பயன்படுத்தப் பட்டன! 1939 முதல் சுழற்தட்டு எஞ்சின்கள் நீக்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றல் மிஞ்சிய ஜெட் எஞ்சின்கள் விமானங்களைத் இழுத்துச் செல்கின்றன! 1903 இல் ரைட் சகோதரர் ஊர்தி 600 பவுண்டு எடை கொண்டிருந்தது! தற்கால பூதவுருப் புறாவான 747 போயிங் ஜம்போ ஜெட் விமானம் 500 நபர்களை ஏற்றிக் கொண்டு, 350 டன் எடையைத் ஏந்திக் கொண்டு, மணிக்கு 580 மைல் வேகத்தில் பறந்து செல்கிறது!

ஒவ்வொரு நாளும் சுமார் 3 மில்லியன் பயணிகள் ஆகாய விமானத்தில் பறந்து செல்கிறார்கள்! 2002 ஆண்டில் மட்டும் 1.3 பில்லியன் நபர்கள் விமானங்களில் பயணம் செய்துள்ளதாகத் தெரிகிறது! அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 4% வீதம் இப்போது மிகையாகி வருகிறது! விமானப் பயணத்தின் சிறப்பு பெருகி வரும் சமயத்தில், சென்ற 100 ஆண்டுகளில் விமானங்கள் பழுதாகி விழுந்து தகர்ந்து போய் 46,000 பேருக்கு மேற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்! ஆயினும் மக்கள் விமானப் பயணத்திற்குப் பயந்தது போய் அவற்றைப் புறக்கணிதாகவும் தெரியவில்லை!

கடந்த பல வருடங்களாக மணிக்கு 185 டன் எடையுடன் 1200 மைல் வேகத்தில், 140 பேர் பயணம் செய்யும் 'ஒலிமீறிய ஜெட் ' [Supersonic Jet] விமானங்களைப் பிரிட்டனும், பிரான்சும் ஈரோப்புக்கும் அமெரிக்கவுக்கும் இடையே அனுப்பி வந்தன. அவற்றில் பிரச்சனைகள், விபத்துகள் ஏற்பட்டுத் தற்போது நிரந்தரமாக நிறுத்தப் பட்டு விட்டன. 1965 இல் தயாரான அமெரிக்காவின் புதிய X-15 விமானம் பூமிக்கு மேல் 60 மைல் உயரத்தில், ஆறு மடங்கு ஒலி வேகத்தில் [Six times the Speed of Sound (Mach:6) (4380 mph)] பறந்து செல்கிறது! எதிர்காலத்தில் வரவிருக்கும் நாசாவின் ஸ்கிராம்ஜெட் விமானம் [NASA 's X-43C ScramJet Plane] 7 மடங்கு ஒலி வேகத்தில் [4800 mph] பாய்ந்து செல்லும் என்று அறியப்படுகிறது!

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் ஒரு சாதனையாக வரலாற்றில் இடம்பெறும், சந்திர மண்டல மனிதப் பயணத்துக்கு அடிகோலியவர் ரைட் சகோதரர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது, எல்லையிலா மகிழ்ச்சி உண்டாகிறது!

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes