Wednesday, November 2, 2011

மண்ணறை வேதனை


இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது.. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை.

3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.

சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.

அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.


இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.
புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.

உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்.

திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர்.
அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.

பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான்.
அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?

ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே.. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.

அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்இது உண்மையாக இருக்குமா அல்லது பொய்யான தகவலா என்று ஆராய்வதும் அல்லது இதன் மூலம் தன் வாழ்க்கையைளிவுபடுத்திக்கொள்வதும் அவரவர் கைகளில் உள்ளது.மேற்சொல்லப்பட்ட செய்தி உண்மையானதா இல்லையா என்பதை அந்த பிரதேசத்து மக்கள் நன்கறிவர்.ஆனால் அது உண்மையாக நடந்தது என்பது நிச்சயமானாலும் இது கப்றுவேதனை என்பது மார்க்க அறிவில்லாததனால் வந்த நம்பிக்கையாகும்.

لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ (100) المؤمنون : 100

“அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது” ‘முஃமினூன்: 100’

இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.மேலுள்ள வசனம் மரணத்தின் பின் உள்ள வாழ்விற்கும் எமக்கும் திரையுள்ளது என்பதை சொல்லிக்காட்டுகிறது.ஒரு நல்லவரின் உடம்பு கூட பல காரணிகளால் இப்படியான பாதிப்புக்குள்ளாகலாம்.பாவியின் கப்று நெருக்கப்படும் முஃமினின் கப்று விசாலமாக்கப்படும் என்பதற்காய் அளந்து பார்த்தோம் சிறியதாகிவிட்டது. எனவே அளக்கப்பட்ட கப்ரு பாவியுடையதுதான் என முடிவு செய்வது எப்படி மடத்தனமோ அதே போன்றே இதுவும் உள்ளது. மார்க்க அறிஞர் குழு ஒன்று அவ்வாறு கூறியதாக தகவலில் குறிப்பிடப்பட்டது உண்மையாயின் அவர்கள் அல்குர்ஆன் ஸுன்னா அறிவில்லாதவர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது..http://adiraiputhiyavan.blogspot.com/2009/09/blog-post_26.htmlஇந்த இணையதளத்தில் படித்தது...

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes