Thursday, September 29, 2011

ஈமானே-உன் விலையென்ன?

  1. ஒரு மதம் மூன்று  முக்கிய மாற்றங்களினை ஏற்படுத்த வேண்டும்:
  2. மூடநம்பிக்கை என்ற திக்குத் தெரியாக்காட்டில் திண்டாடிக் கொண்டிருப்பவனை நேர் வழிகாட்டி நேர்மைப் படுத்த வேண்டும்.
  3. சமுதாயத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும்
    தனி மனித அடையாளத்திலிருந்து சர்வதேசம் என்ற விசாலமான உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும்.
     
            அந்த மூன்று தகுதிகளும் இஸ்லாத்திற்கு இருக்கிறதா என்று         பார்க்கலாம்.
    அஞ்ஞான அரபு உலகமான ‘அய்யாமே ஜாகிலியா’ என்ற இருண்ட சூழ்நிலையில் ஒளியேற்றி வைத்த என்பெருமானார் முகம்மது நபி ஸல்லல்லாஹ்   அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட வஹி மூலம் மனிதனை புனிதமாக்க  இறக்கப்பட்டது குர்ஆன் ஆகும். பல உருவங்களில் கடவுள் என்ற பெயரில் வழிபட்டும், நெறிகெட்டும்  இருந்தவர்களை ஏக இறை தத்துவத்தினை ஆணித்தரமாக எடுத்துறைத்தது இஸ்லாம். வானம்,பூமி,கடல்,அண்டத்திலுள்ள அத்தனை ரகசியங்களையும்-அவைகளின் மாற்றங்களையும் அறிந்தவன் எடுத்துரைத்து, அவனிடமே உங்கள் உதவியினை தேடுங்கள் என்று சொல்லி மூட நம்பிக்கைக்கு சாவு மணியடித்தது இஸ்லாம் என்பதை ஈமானுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.

    இரண்டாவது தனி மனித சுதந்திரத்திற்கு வித்திட்டது இஸ்லாம். ஆண்டான்-அடிமை என்ற வித்தியாசத்தினை களைந்தெடுத்து, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளுக்கு உரிமை ஸாசனம் அளித்தது இஸ்லாம் தானே. கறுப்பினராக இருந்தாலும் தொழுனைக்கு அழைக்கும் முன்னுரிமையினை ஹஸரத் பிலாலுக்கு வழங்கி கவுரவித்த பெருமை ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைச் சாரும். உலகத்தில் நாங்கள் தான் முதல் ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா கூட 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அடிமைகளுக்கு ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனால் சுதந்திரம் வழங்கப்பட்டது. பெண்சிசுக்களை பிறந்த உடனேயே உயிருடன் புதைக்கும் வழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பாலை-ஊமத்தழை சாரினை வாயில் ஊற்றி சாகடித்த பழக்கத்திற்கு பதிலாக பெண்குழந்தைகளை காப்பாற்றும் தொட்டில் குழந்தை திட்டம் 21ஆம் நூற்றாண்டில் தானே தமிழகத்தில் வந்தது. அத்தோடு இல்லாமல் ஒரு படி மேலாக பெண்களுக்கு சொத்தில் பங்கு என்றும் நிலைநாட்டியது.
    திருமணம் சாட்சிகளோடு நடக்க வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் பதிவும் செய்து பெண்களுக்கு உத்திரவாதமும் அளித்தது. அந்தச் சட்டம் தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் எவ்வளவு தொலை நோக்குப் பார்வை கொண்டுள்ளது என அறியலாம். இனப் படுகொலைகளை தடுத்து நிறுத்தி இன ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தது.
    மூன்றாவதாக தனி மனித நலனை விரட்டி பொது நலனுக்கும்-சர்வதேச நலனுக்கும் வித்திட்டது. ஈகைக்காகவே வறியவர்களுக்கு பொருளை ஜக்காத், சதக்கா என்று வாரி வழங்குவதிற்காக ஒரு ஈகைப் பெருநாளை ஏற்படுத்தித் தந்தது கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடமை தத்துவத்திற்கு முன்னோடி இஸ்லாம். ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் மக்காவில் மதீனாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் வராமல் மாறாக புன்னகையுடன் வரும்போது குரைசியர்களுடன் செய்து கொண்ட ஹ_தைபியா அமைதி உடன்பாடு 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் ஏற்பட்ட ஐ.நா. உடண்படிக்கைக்கு முன்னோடி என்றால் மிகையாகுமா? ஆனால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஏதோ ஒரு பொய் காரணத்திற்காக இராக்கினை சின்னா பின்னமாக்கியது போல் அப்போது நடந்ததுண்டா? சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கூட இராக் மீது அமெரிக்காவுடன் கைகோர்த்து இங்கிலாந்து முன்னால் பிரதமர் டோனி பிளேயர் இங்கிலாந்தினை இராக் போருக்குள் நுழைத்தது தவறு என்றும், ஜார்ஜ் புஷ் இராக் ஜனாதிபதி சதாம் ஹுசேன் மீது ஏற்பட்ட பயத்தில் அவர் போர் தொடுத்து விட்டார் என்றும் கூறுகிறார். செய்த தவறுகள் மீண்டும் நிலை நிறுத்த முடியுமா? யாராலும். ஆகவே தான் குர்ஆனுடைய போதனைகளும் சர்வத்திற்கும் பொருத்தமானதாகும் என்பது வெள்ளிடைமலை.


    மேற்கூறிய மூன்று தாரகை மந்திரங்களையும்-அதனை வஹி மூலம் ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் குர் ஆனாக இறக்கிய அல்லாவையும்-கடைசி நபி ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் என்று ஏற்றுக் கொண்டவர்கள் தான் உண்மையான முஸ்லிம் என சொல்லலாம். ஆனால் 28.12.09 ஆம் அன்று முகரம் பத்தாம் நாள் என்று அனைவரும் அறிவர். அன்று மாலை டி.வியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒருவர் கொடுத்த பேட்டி அதிர்ச்சியாக இருந்தது. சென்னை வாசிகளுக்கும், மற்றும் சில ஊர்களிலும் துன்பமான முகரத்தினை பெரும் திருவிழா போன்று தீ மிதித்தும், கோசாப் பெண்கள் மார்களில் கைகளால் அடித்துக் கதரியும், ஆண்கள் கூரிய கத்திகளால் உடலில் குருதியினை ஏற்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அறிந்ததே. அதே போன்ற நிகழ்ச்சியினை முதன் முதலாக நான் 1966 ஆம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது தான் பார்த்தேன். அப்போது அது எனக்கு எங்களூரில் இல்லாத நிகழ்ச்சியாக இருந்ததால் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இஸ்லாமியர்களா என்று கூட எனக்கு ஐயப்பாடு ஏற்பட்டது. ஆனால் 28.12.09 அன்று முகரம் விழாவினை திருவல்லிக்கேணியில் ஏற்பாடு செய்தவர் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, ‘அலி ரஸுலுல்லாஹ் அவர்கள் மகன்களான ஹசன் ž ஹுசைன் ஆகியோரை வழிபடுவதிற்காக கொண்டாடப்படும் பண்டிகை என சொன்னது என்னைத் தூக்கி வாரிப்போட்டது.
    எல்லா முஸ்லிம்களுக்கும் ரஸுலுல்லா என்பது நபிமார்களை குறிக்கும் என்பதினையும், ரலியல்லாஹ் என்றால் நபித்தோழர்களைக் குறிக்கும் என்பதினையும் அறிவர். அலி ரலியல்லாஹ்அன்கு அவர்கள் பெருமானார் அவர்களின் அருமை மகள் பாத்திமாவை மணந்து மருமகனாகவும்-வெற்றிக்கு பெயரெடுத்த வீரத்தளபதியாகவும் திகழ்ந்தவர் என்பதினை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அவருடைய மகன்கள் ஹசன்,ஹுசைன் ஆகியோர் பெருமானார் நெஞ்சில் ஏறிதவழ்ந்தவர்கள் என்பதினையும் அனைவரும் அறிந்ததே. ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் உயிருடன் இருந்தபோது தலை தூக்காத இனபோர்கள் அவர்கள் மறைந்த பின்பு தலைதூக்கியது. முவாவியாவின் வழித்தோன்றல் யசீதால் ஹசனும், ஹ_சைனும் அவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர் என்பது நெஞ்சில் நீங்கா வடுவாக உள்ளது. அல்லாஹ் இபுறாகிம் நபி அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வயதான காலத்திலும் இஸ்மாயில் அலைஹி வஸல்லம் என்ற மகனைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஈமானைச் சோதிப்பதிற்காக இஸ்மாயில் அலைஹி வஸல்லம் என்ற பாலகனை அறுத்துப் பலியிட ஆணையிட்டு அதற்கும் இபுறாகிம் நபி அலைஹி வஸல்லம் அவர்களையும் அவருடைய அருமை மகனார் அவர்களையும் வழிகெடுக்க சாத்தான் முற்பட்ட போதும் கூட மனந்தளராது அது இறைவன் கட்டளையென அறுக்க முற்படும் போது இறைவன் தன் வஹி மூலம் அவர்கள் ஈமானை சோதிப்பதிற்காகவே அந்த ஆணை பிறப்பித்ததாகவும்-இறைவன் சதையையோ, குருதி சிந்துவதையோ விரும்புவதில்லை என்று கூறி தடுத்து நிறுத்தினான் என்பது அல் குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மை.

          ஆனால் இன்று கூட ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி இறந்தார் என்பதிற்கு அடையாளமாக மெக்சிகோ-தாய்லாந்து போன்ற நாடுகளில் மனிதர்களை சிலுவையில் அடித்தும், தீ மிதித்தும் வழிபாடுகள் நடக்கின்றன. அதுபோன்ற செயல்களால் இறைவன் திருப்திபடுகிறானா? என்பதினை ஏன் சிந்திக்க மறுக்கிறார் முகரத்தினை திருவிழாவாகக் கொண்டாடுபவரகள்? அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதால் மாற்று மதத்தினர் கேலிப்பேச்சுக்கு இடம் முஸ்லிம்கள் கொடுக்கலாமா?

          அல்லாவிஹ்வின் இடைத்தரகர்கள் என்று சிலர் கிளம்பி அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை உங்களுடம் பகிர்ந்து கொண்டால் தவறில்லை. சில மாதங்களுக்கு முன்னர் ஐமான் இனைய தளத்தில் திண்டுக்கல்லைச் சார்ந்த சகோதரர் சபீயுல்லா எனபவர் ‘சிலோன் மவுலானா’ என்பவர் எப்படியெல்லாம் அவருடைய குடும்பத்தில் நுழைந்து குழப்பத்தினை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்-சகோதர யுத்தத்திற்கும் வழிவகுக்குகிறார் என்றும்- அவருடைய காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கவும் கொடுமை செய்திருக்கிறார் என்று அழாத குறையாக முறையிட்டு இருந்தார். அதபோன்ற என் நண்பர் சொன்ன இன்னொரு உண்மைச் சம்பவத்தினையும் உங்களுடன் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சென்னையில் குடியிருக்கும் கடற்கரையோர செல்வக் செழிப்பான முஸ்லிம் ஊரைச்சார்ந்த ஒரு குடும்பத்தில் பண்ருட்டியினைச்சார்ந்த வருங்காலத்தினை கணிக்கும் இமாம் என்ற போர்வையில் ஒரு மவுலான நுழைந்த தாயை வசியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடந்த சில நாட்களிலேயே தோசம் இருக்கிறது என்ற மகளையும் அவள் கணவனிடமிருந்து பிரித்ததோடு நில்லாமல்-அந்தப் புதுப்பெண்ணுக்கு ஆபாச செல்போன் எஸ்.எம்.எஸ் தொந்தரவும் கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

    நான் 1983 ஆம் ஆண்டு மலேசியா சென்ற போது எங்களுரைச்சார்ந்த ஒருவரை கோலாலம்பூர் மலேயா மேன்சனில் பார்க்கச் சென்றேன். அப்போது ஒரு வியாபாரி அறையில் கேரளாவினைச்சார்ந்த தங்கள் என்ற பெரியவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி அந்த வியாபாரி, ‘தங்கள் அருளால் தான் இந்த அளவு தொழில் முன்னேற்றம் அடைந்தேன் என்றும் அவரைக் கேட்காமல் காலையில் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்றும் அந்த தங்கள் மந்திரித்துக் கொடுத்த தாயத்தினை கையிலும், இடுப்பிலும் கட்டியிருப்பதாகவும’; சொல்லி அதனையும் காட்டினார். அந்த வியாபாரிக்கு தன்னுடைய உழைப்பில் நம்பிக்கையில்லாததும்-ஈமானில் பிடிப்பில்லாத பேச்சாக உங்களுக்கு தெரியவில்லையா?
    நான் புனையப்பட்ட வழக்கு ஒன்றில் இழுக்கப் பட்டு சிறை சென்று வந்ததினை கேள்விப்பட்டு எங்களுரைச்சார்ந்த ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அவர் என்னிடம் உங்களுக்கு நேர்ந்;த கொடுமைக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் சென்னை ஐஸ்ஹவுசில் வந்துள்ள பைஜி என்ற இமாமைப் பார்த்து அவர் துவா செய்தால் எல்லாத் துன்பங்களும் விலகும் என்று வற்புறுத்தி அழைத்தார். இவ்வளவிற்கும் அவர் படித்தவர்-மேல்நாட்டில் வேலை பார்ப்பவர். அவரிடம் நான் அதில் எனக்கு நம்பிக்கையில்லை என மறுத்துவிட்டேன். அவருக்கு ஈமானில் ஊசலாடல் இருப்பதினை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். 2..1..2010 ஆம் தேதி தினத்தந்திப் பத்திரிக்கையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நாகூர்  தர்காவிற்கு தொழுகை நடத்த வந்தவருக்கு டிரஸ்டி கலிபா பொன்னாடைப்போர்த்தி கவுரப்படுத்தினார் என்ற செய்தி படத்துடன் வெளியாகி இருந்தது. மாற்று மதத்தினர் நாகூர் தர்காவினையும் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் என்று நினைக்க மாட்டார்களா? ஆகவே ஏன் அவர்களுக்கு நாம் தவறான செய்திக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

    மறைந்த முன்னால் அமைச்சர் முகம்மது ஆசிப் அவர்கள் அமைச்சராக பதவியேற்றபோது அப்போதைய முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். நான் அந்த சமயத்தில் சென்னை சட்டம் ஒழுங்கு டி.சியாக பணியாற்றினேன். அவரிடம், ‘உங்களுக்கு 70 வயதிற்கு மேலாகிறது, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள், அத்துடன் ஒரு முஸ்லிம் ஏன் காலில் விழுந்தீர்கள்’ என்ற வினவினேன். அதற்கு அவர், ‘மற்ற அமைச்சர்கள் எல்லாம் காலில் விழும்போது நான் மட்டும் காலில் விழாமல் இருந்தால் முதல்வர் கோபித்துக் கொள்வார்கள்’ என்றார். நான் சொன்னேன், “மற்றவர்களில் கண்டதையெல்லாம்  கடவுள் என்று எண்ணி காலில் விழுவார்கள். ஆனால் முஸ்லிம் சஜ்தா செய்வது அல்லாஹ்வினைத் தொழும் போது தானே என்று நீங்கள் இருந்திருக்கலாமே’ என்றேன். நான் அதிகாரியாக இருந்ததால் அதற்குமேல் அவரிடம் வாதம் செய்யவும் அவர் பதில் கூறவும் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் அஹமது அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் குத்த விளக்கு ஏற்ற மறுத்து விட்டார்கள். அதற்காக வேற்று மதத்தினர் அவர் மீது ஏவுகணை தொடுத்தார்களா? இல்லையே! ஏனென்றால் படித்த மாற்று மதத்தினருக்கு அவருடைய இஸ்லாமிய மத வழிபாடுகளை தெரியாமலில்லை..

    சமீபத்தில் சென்னை கலைவானர் அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்போது ஒரு பெரிய பதவியில் இருக்கும் பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கும் மேதாவி கவிஞர் ஒருவர் அந்த உயர்ந்த பதவியினைப் பெருவதிற்காக புகழ்க்சியில் முக்கிய பிரமுகரை திளைக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பேசும் போது, ‘பிறை பிச்சைப் பாத்திர வடிவில் உங்களிடம் பிச்சை’ கேட்பதாகச் சொன்னதாகவும் அதற்காக சமுதாயம் கண்டனக்குரல் எழுப்பியதினையும் அறியலாம்.

    கவிஞர் அல்லாமா இக்பால் தன் கவிதையில், ‘இளம் பிறையே வருந்தாதே உன்னுடன் பூரணச்சந்திரன் மறைந்து இருக்கிறான்’ என்று அவர் கூறிய பூரணச்சந்திரன் வேறு யாருமில்லை. அகிலத்தினைப் படைத்து அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வதிற்கு வழிவகுக்கும் அல்லாஹ்வினைத்தானே அவ்வாறுக் குறிப்பிட்டார். பின் ஏன் ஆண்டவனிடம் படைப்புகளிடம் சில சலுகைகளை தட்டிக் கேட்பதிற்குப் பதிலாக ஏன் மண்டியிட வேண்டும்?

    சிலர் தவறான தகவல்களையும் சென்னையில் பரப்பி வருகின்றனர். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு வசதியுள்ள முஸ்லிமும் ஹஜ் செல்வது கடமையாகும். அதனைத் தெரிந்த சில வேடதாரிகள், “திருமுல்லை-சப்பைப் பட்டணம் தர்காக்கலுக்கும் சென்றால் ஹஜ் செய்வது வேண்டியதில்லை” என்றும் தவறான செய்தியினை பரப்பி வருகிறார்கள். சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட பழனி சென்று முருகனை வழிபட்டு-நாடிஜோசியம் பார்க்கவும் செல்கின்றனர். இவர்களின் சோரம் போன ஈமானைக் கண்டுதான் சில இமாம்கள்-மவுலானாக்கள்-தங்கள் போன்ற வேடதாரிகள் முரீது கொடுக்கிறேன் என்று அனாச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.இந்த வேதனையினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் என் கட்டுரையின் தலைப்பினை ஈமானே உன் விலை என்ன என்றேன்?

          மேலே சொன்ன செய்திகள் எல்லாம் புனையப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. தினந்தோறும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தானே. ஈமான் இழந்த சிலர் செய்யும் செயல்களால் படித்த இளைஞரகள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது. ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பும், ஜமாத்தும் இஸ்லாமிய மக்கள் அநாகரியங்கள், அநாச்சாரங்களில் தடம் புரளாது கண்ணை பாதுகாக்கும் இமையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.


கசாப்புத் தொழில் சிறந்தது....

அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும் சமமாகாது – நபி ( அறிவாளியின் இரவு உறக்கம் அறிவற்றவனின் இரவு வணக்கத்தை விட உயர்ந்தது)
யாரெல்லாம் நன்றாக படித்து நல்ல பதவியில் இருந்து கொண்டு ஐவேளை தொழுகைகளையும் ஜமாத்தோடு நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் உண்மையிலே பாக்கியவான்கள்..........
மேலே தொடருங்கள்
”யாருக்கு அல்லாஹ் நன்மையைச் செய்ய நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் அறிவாளியாக்கி விடுகிறான்” நபி மொழி
‘உலகிலேயே சிறந்த தொழில்கள் – கைத்தொழிலும் மோசடி செய்யாத வியாபாரமும்” நபிமொழி எல்லோரும் டாக்டர் ஆக இன்ஞினியர் ஆக தொழிலதிபராக விரும்புவோம். ஆனால் கசாப்புத் தொழில் சிறந்த்து என்று நான் சொல்கிறேன் ஏன்?
இது இஸ்லாமிய நாடு. நாற்புறங்களிலிருந்தல்ல நாற்பது புறங்களிலிருந்து வைகறைப் ஃபஜ்ர் தொழுகைக்காக இறையில்லங்களிலிருந்து அல்லாஹூ அக்பர் என்ற குரலொலிக்க செவியில் விழுந்தும் ஐப்பானிய ஓ ஜெனரல் ஒன்றரை டன் ஏசியின் சுகமாக குளிரில் கொரியன் யுனோ கம்பளியின் கதகதப்பில் நான் கிறங்கிப் போய் உறங்கியேப் போனேன் (எவன் தொழுகைக்காக தலையணையிலிருந்து தன் தலையை உயர்த்துகிறோனோ அவன் வெற்றியாளன். எவன் தன் தலையைத் தாழ்த்துகிறானோ அவன் தோல்வியாளன் நபி மொழி)
என்றைக்கெல்லாம் ஃபஜ்ர் தொழுகை தொழ முடியாமல் தூங்கிவிடுகிறேனோ அன்றெல்லாம் எனக்குத் தோன்றும் எண்ணம் இதுவே. ஏன் என நீங்கள் வினா எழுப்பலாம் புருவம் உயர்த்தலாம். விளக்கம் இதோ. (ஃபஜ்ர் தொழாதவன் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்) அமைதியாக குறைவான சம்பளத்தில் நிறைவாக வாழந்து கொண்டிருந்த எனக்கு அதிர்ஷ்டம் (?) என்ற பெயரில் துபாய் வாழ்க்கை வந்தது.
அந்தக் காலம் துபாய் வருவதற்கு முந்தையது. நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன........
1995க்கு முந்தைய சந்தோசமான காலங்கள் கிடைத்ததைக் கொண்டு உண்டு உறவுகளோடு சந்தோசித்த நேரங்கள் அவை.
துபாய் வரும் முன் வெறும் பாயாக அமிஞ்சிக்கரையில் அலைந்த நேரங்கள் அவ பணங்கள் சேராமல் மனங்கள் மட்டுமே சேர்ந்திருந்தக் காலமத என் நண்பர் தப்லீக்கில் இருந்தார் எனக்கு தப்லீகின் மீது மதிப்புண்டு. ஆனால் அவரைப் போல ஈடுபாட்டோடு களத்தில் இறங்கி மார்க்கப் பணியாற்ற மாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டு என் தொழுகை உண்டு என்று மீதி நேரத்தில் உணவு உண்டு கழித்த நேரமது.
தப்லீகில் இருந்த என் நண்பரோ ஐடியில் ஃபிட்டர் படிப்பு படித்தவர் கசாப்புக் கடை நடத்தி வந்தவர் என்னளவு மெத்தப் படித்தவரல்லர் மேன்மையான பதவியிலிருந்தவரல்லர் என்றாலும் இறைவனுக்கு நெருக்கமானவரென்று எண்ணுமளவுக்கு இபாதத் தப்லீகில் சேவை அவர் அதிகம் பேசமாட்டார் நாவடக்கம் அதிகம். புறம் பேசமாட்டர். நோன்பு காலங்களில் பள்ளிவாயிலில் நோன்பு திறக்க மாட்டார் கேட்டால் ஹராமான வழியில் சமபாதிப்பவர்கள் பலர் இந்தப் புனிதமாதத்தில் நோன்புக்கஞ்சி வடை சமோசா வழங்குகிறார்கள் கமால் என்பார்.......
நான் அவரிடம் “நீங்க ஐ டி ஃபிட்டர் படித்திருக்கிறீர்கள் ஏன் துபாய் போகக் கூடாது நன்றாக சம்பாதிக்கலாமே என்பேன் சிரிப்பார் அல்ஹம்துலில்லாஹ் இந்த தொழிலேப் போதுமென்பார் பிழைக்கத் தெரியாதவர் என்று புருவம் உயர்த்தினேன். எதுவரையென்றால் ஒரு நாள் அவரிடம்............... ”உங்களின் அன்றாட செயல்பாடுகள் என்ன என்றேன்”
இரவு இரண்டு மணியளவு எழுந்திருப்பேன். தஹஜ்ஜ்த் தொழுது (கவனிக்க ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜத்) (தஹஜ்ஜத் நேரத்தில் அல்லாஹ் முதல் வானத்திற்கு வருகி றான் கேட்பவரின துவாவை ஒப்புக்கொள்கிறான்) விட்டு சைக்கிளில் சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள மாநகராட்சி ஆடுதொட்டிக்கு சென்று அறுக்கப்பட்ட ஆடுகளை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வைத்து வெளியே கொண்டு வரும்போது ஃபஜ்ர் நேரம் வந்து விடும் ஃபஜ்ர் ஜமாத்துடன் தொழுதுவிடுவேன் (கவனிக்க ஒரு நாளும் ஃபஜ்ர் ஜமாத்துடன் தவறியதில்லை) பிறகு டீ கடையில் நண்பர்களுடன் டீ அருந்தி விட்டு வெளியே வரும் போது இஷ்ராக் நேரம் வர அதைத் தொழுவேன். பிறகு கடைக்கு வந்து வியாபாரத்தை ஆரம்பிப்பேன். 11 12 மணிக்குள் எல்லாம் விற்று தீர்ந்துவிடும். (அவருக்கு கையில உடனே காசு மக்களுக்கு வாயில கறி) (கிரெடிட் பீரியட் பேமண்ட் ஃபாலேர் அப் என்று எதுவுமில்லை)
(இந்த உலகம் ஒரு விந்தை.. (உடலுக்கு நன்மை செய்யக்கூடிய) மோரைக் கூவி கூவி விற்க வேண்டியிருக்கிறது (உடலுக்கு தீமை செய்யக்கூடிய) கள் உட்கார்ந்த் இடத்திலே விற்றுப்போகிறது....... என்றார் கபீர்தாசர்..... ஒரு சின்ன் மாற்றம் கறி உட்கார்ந்த இடத்திலே விற்றுப்போகிறது.
பிறகு வீட்டிற்கு சென்று குளித்து முடித்து பள்ளிக்குச் சென்று லுஹர் தொழுவேன் (கவனிக்க ஒரு நாளும் லுஹர் ஜமாத்துடன் தவறியதில்லை) பிறகு வீடு திரும்பி உணவு உண்டு சிறு உறக்கம் (மதியம் சிறிது நேரம் அஸருக்கு முன் உறங்குவது நபி வழி) அஸர் (கவனிக்க ஒரு நாளும் அஸர் ஜமாத்துடன் தவறியதில்லை) மக்ரிப் (கவனிக்க ஒரு நாளும் மக்ரிப் ஜமாத்துடன் தவறியதில்லை) இஷா (கவனிக்க ஒரு நாளும் இஷா ஜமாத்துடன் தவறியதில்லை) எல்லாம் நிறைவேற........ இஷா தொழுகை முடித்து உணவு உண்டு விரைவில் உறங்கப் போவேன (ஏனென்றல் நள்ளிரவு எழுந்திருக்க வேண்டுமல்லவா அடுத்த நாள் தொழிலுக்காக)
(இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின்னால் உறங்காமல் இருப்பதையும் நபி அவர்கள் தடுத்தார்கள்.) (ஆனால் எத்தனையோ பேர் இஷாவுக்குப் பின்னால் உடனே உறங்காமால் டிவியை 12 1 மணி வரை பார்த்து பின் ஃபஜ்ரை கோட்டை விட்டு ஷைத்தான் காதில் பெய்யும் சிறுநீரோடு 9 10 மணிக்கு காலையில் எழுந்திருக்கிறோம். இறைவனுக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்றார் ஈஸா (அலை) என்று படித்திருக்கிறேன
தொழுகை என்பது இறையச்சத்தின் ஒரு வெளிப்பாடு. அந்தத் தொழுகையை ஒரு மனிதன் தன் தொழிலோடு நிறைவேற்றக்கடியதாக இருந்தால் எவ்வளவு நன்மை இனிமை....இந்தப் பாக்கியம் மற்றத் தொழில்கள் வேலையை விட இந்த கசாப்புத் தொழிலில் இருப்பதாக நான் எண்ணுகிறேன். எண்ணிறந்த படித்த பதவியலுள்ள ஐவேளைத் தொழுகையை தவறாது நிறைவேற்றும் பாக்கியமுள்ளவர்கள் உண்டு. ஆனால் எல்லோருக்கும ஜமாத்துடன் தொழ இடையூறு இல்லாத வாய்ப்பு கிடைக்கும் என்று கூற முடியாது. ஐவேளைத் தொழுபவர்கள் கூட தஹஜ்ஜத் தொழுவார்கள் என்று கூற முடியாது அனுதினமும் ஒரு நாளில் ஐவேளை தொழுகைகளும் தவறுவதில்லை அதுவம் ஜமாத்துடன சுன்னத் நஃபில் வாஜிபு தவறுவதில்லை (போதுமான நேரம் கிடைக்கிறது)
இன்கிரிமென்ட் போனஸ் இன்சென்டிவ் புரமோஷன் அடுத்தவனைப பார்த்து பொறாமைப்படுத்தல் என்று எதுவுமில்லை குர் ஆன ஓத இஸ்லாத்திற்குப் பணியாற்ற போதுமான நேரம் கிடைக்கிறது. (மறுமையில் தொழுகையைப் பற்றித் தான் முதலில் கேட்கப்படும் அது சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்கும்) ஆனால் எனக்கு...... பல நேர ஜமாத் தொழுகைள் தவறுகின்றன. உபரி தொழுகைகளைத் தொழ சிரம்மாக உள்ளது வேலையின் நெருக்கடி நேரத்தின் நெருக்கடி காரணமாக. ஃபஜ்ர் தொழுகை தவறுகிறது. குதிரைக்குக் கூட கொம்பு முளைக்கலாம் ஆனால் நான் தஹஜ்ஜத் தொழுவது.............. நாளையே அலுவலுகம் அதிகாலை நாலு மணிக்கென்றால் எழுந்து போக நம்மால் முடிகிறது ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்கு நம்மால் எத்தனைப் பேருக்கு எழுந்து ஜமாதில் கலந்து கொள்ள முடிகிறது அல்லது வக்துக்குள் தொழ முடிகிறது.......கை சேதமே.
நான் அவரைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். என்னையும் என நண்பரையும் நான் நிறுத்துப் பார்க்கிறேன். மறுமையில் அவர் வெற்றியாளராக இருப்பா நான் வெற்றுஆளராக இருக்க்க்கூடாதே இரஹ்மானே........... என் கண்களிலிருந்து நீர் வழிகிறது. கையேந்துகிறேன்
இறைவனிடத்தில்..........இறைவா இஸ்லாத்தில் ஒன்றி என் நண்பரைப் போல் (ஈமானுள்ள) ஆக ஆசைப்படுகிறேன்............
Received by Email
(இறைவன் நம் அனைவரையும் வெற்றியாளர்களாக ஆக்குவானாக.. இம்மையிலும் மறுமையிலும்)

அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்)

அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.
எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.
2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ?
என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.
3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்?
அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.
4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்?
மலக்குகள்
5 . உனது நபியின் பெயர் என்ன?
எனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.
6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன?
எனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.
7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்?
'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.
8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு ?
எனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.
9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்?
நம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.
10 . உன் வேதத்தின் பெயர் என்ன?
என் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.
11. திருக் குர்ஆன் யாருக்கு யார் மூலம் அருளப்பட்டது?
திருக்குர்ஆன் இறைவனால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. (மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உலகப் பொதுமறையே திருக்குர்ஆன்)
12 . குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?
ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.
13. நாம் எதற்காக ரமழானில் நோன்பு வைக்கின்றோம் ?
நாம் ரமழானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் நோன்பு வைக்கின்றோம்.
14 . இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை. 1. கலிமா 2. தொழுகை 3. நோன்பு 4. ஜகாத் 5. ஹஜ்
15. மறுமையின் முதல் கேள்வி எதைப்பற்றியது?
மறுமையின் முதல் கேள்வி தொழுகையை பற்றிதாய் இருக்கும்.
16. கடமையான தொழுகைகள் எத்தனை? அவை யாவை?
அல்லாஹ் நமக்கு ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக்கி உள்ளான் . அவை. 1.ஃபஜர், (காலை நேரத் தொழுகை) 2. ளுஹர்(மதிய தொழுகை) 3. அஸர்(மாலை நேரத் தொழுகை) 4.மஹ்ரிப் (சூரியன் மறையும் நேரத் தொழுகை) 5. இஷா (இரவுத் தொழுகை)
17. தொழாமல் இருந்தால் என்ன கிடைக்கும்?
தொழாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை ஸகர் என்னும் நரகத் தீயில் எறிந்து விடுவான். தீ நம் தோல்களை சுட்டுக்;;;;;;;;கரித்து விடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து ஐவேளைதொழுது கொள்ள வேண்டும்.
18. நோன்பு என்றால் என்ன?
இறைவனுக்காக ரமழான் மாதத்தில் சுபுஹ் முதல் மஹ்ரிப் வரை உண்ணாமல், பருகாமல் எவ்வித தீய காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு நோன்பு எனப்படும்.
19 . ஜகாத் என்றால் என்ன?
ஜகாத் என்றால் செல்வந்தர்கள் தங்களது செல்வத்திலிருந்து 2.5 சதவிகிதம் தேவையுடையோருக்கு கொடுப்பதாகும். (பார்க்க : அல்குர்ஆன் 9:60)
20 . ஹஜ்; என்றால் என்ன?
செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காநகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ்; எனப்படும்.

21 . ஈமான் என்றால் என்ன?
அல்லாஹ்வை நம்புவது, அவன் படைத்த மலக்குகளை நம்புவது ரசூல்மார்களை நம்புவது, அவன் நமக்கு அளித்த வேதங்களையும் நம்பிக்கை கொள்வது மேலும் கியாமநாளை நம்புவது, நன்மை தீமையாவும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிக்கைக் கொள்வதற்கு ஈமான் எனப்படும்.
22 . முஸ்லிம் என்றால் யார்?
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் என்று ஏற்றுக் கொண்டு நடைமுறைபடுத்துபவருக்கு முஸ்லிம் என்று பெயர்.
23. மலக்குமார்கள் என்றால் யார்?
அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளை நிறை வேற்றுவதற்காகவும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்தான்.
24 . நபிமார்கள் என்பவர் யார்?
அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளையும், கட்டளைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், மனிதர்களை நேர்வழி படுத்துவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மனிதர்களுக்கு நபிமார்கள், ரசூல்மார்கள் என்று பெயர்.
25. முதல் மனிதரும் முதல் நபியும் யார்?
ஆதம் நபி (அலை)
26. ஆதம் நபி எதனால் படைக்கப் பட்டார்கள் ? ஆதம் நபியின் மனைவி பெயர் என்ன?
ஆதம் நபியை மண்ணால் அல்லாஹ் படைத்தான். ஆதம் நபியின் மனைவி பெயர் ஹவ்வா (அலை).
27. திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதங்கள் எத்தனை? ஆவை யாவை?
திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்ட வேதங்கள் மொத்தம் நான்கு ஆகும். அவை 1.தவ்ராத், 2. ஜபூர், 3.இன்ஜீல், 4.புர்கான் (திருக்குர்ஆன்).
28. வேதங்கள் யார் யாருக்கு எந்தெந்த பாஷைகளில் அருளப்பட்டது?
தவ்ராத்து வேதம் நபி முஸா(அலை) அவர்களுக்கு அப்ரானி பாஷையிலும்
ஜபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கு யுனானி பாஷையிலும்
இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி பாஷையிலும்
புர்கான்(குர்ஆன்)வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபிப் பாஷையிலும் வழங்கப்பட்டது.
29 . இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் எது?
இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன்.
30. குர்ஆனில் மொத்தம் எத்தனை பகுதிகளும், எத்தனை அத்தியாயங்களும் உள்ளன?
குர் ஆனில் மொத்தம் 30 பகுதிகளும் 114 அத்தியாயங்களும் உள்ளன.
31. குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நபிமார்கள் எத்தனை?
குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மொத்தம் 25 ஆகும்.
32. அல்லாஹ்வைப் பற்றி கூறு?
அல்லாஹ் ஒருவன், அவன் பரிசுத்தமானவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவனுக்கு உணவு, உறக்கம், மறதி, மயக்கம் நிச்சயமாக கிடையாது. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவு மில்லை. அவன் நித்திய ஜீவன். எந்த தேவையுமற்றவன் . அவனுக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமே இல்லை.
33. நபி (ஸல் ) அவர்களைப் பற்றி கூறுக?
நபி (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் மக்காவில் பிறந்து தனது 63-ம் வயதில் மதினாவில் மரண மடைந்தார்கள். தம் இளம் வயதிலேயே ஒழுக்கம், நேர்மை, உண்மை, அமைதி, கண்ணியம் போன்ற நல்லகுணங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களை அன்னாரின் 40-ம் வயதில் அல்லாஹ் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அன்னாரின் தாய் பெயர் ஆமினா, தந்தை பெயர் அப்துல்லாஹ்.
34. யாரிடம் நாம் பிராத்திக்க வேண்டும்?
எந்நேரமும், எந்த இடத்திலும் அல்லாஹ்வை நம்பி, அவனிடம் மட்டும்தான் பிரார்த்திக்க வேண்டும்.
35. அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய்?
அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் படைப்புகளான இரவு பகலைக் கொண்டும், சூரியன் சந்திரனைக் கொண்டும், வானம், பூமியைக் கொண்டும், அதற்கிடைப்பட்ட அவனது படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன்.
36. அல்லாஹ்வின் குணம் எத்தகையது?
அல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது. அவனுக்கு இணையாக எவரையாவது, எதையாவது வணங்கினால் மிகுந்த கோபமடைந்து நம்மை நிரந்தர நரகத்தில் எறிந்து விடுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)
37. அல்லாஹ் நம்மை கண்காணிப்பானா?
எப்பொழுதும், எந்த நொடியிலும், எங்கே இருந்தாலும் நம்மை கண்காணிப்பவன் அல்லாஹ். அதனால் எப்பொதும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்.
38. அல்லாஹ்வின் நேசர்கள் யார்?
அல்லாஹ்வின் நேசர்கள் அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள் நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள். எல்லா வகையான பாவங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். அனைத்து விதமான நல்ல அமல்களையும் செய்து வருவார்கள். திருமறைக் குர்ஆனையும், நபி (ஸல்)அவர்களின் சுன்னத் தான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவார்கள்.
39. ஈமானின் நிலையில் மாறுபாடு ஏதேனும் ஏற்பட சாத்தியம் உண்டா?
நாம் பேசக்கூடிய சில வார்த்தைகளாலும், செய்யக் கூடிய சில செயல்களாலும், நம் ஈமானின் நிலை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.
40. ஈமானின் கூடுதல், குறைவு என் பதன் பொருள் என்ன?
அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலமும் ஈமான் கூடுகிறது. பாவங்கள் மற்றும் தீய செயல்களால் ஈமான் குறைகிறது.

41 . இறுதி நாள் மீது நம்பிக்கைக் கொள்வது என்பதன் பொருள் என்ன?
இந்த உலகத்திற்கும், மற்ற அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணையை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். மண்ணறைகளிலிருந்து இறந்தவர்களை அவன் எழுப்புவான். மேலும் ஒவ்வொருவரையும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரிப்பான். இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பும் அந்த மறுமைநாளில் நற்கூலிகளையும், தண்டனைகளையும் பாரபட்சமின்றி மிகவும் நியாயமாக அல்லாஹ் வழங்குவான். மேலேகுறிப்பிட்ட அனைத்தையும் உறுதியாக நம்புவதுதான் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வது என்பதன் பொருளாகும்.
42 . முஹம்மது நபி (ஸல் ) அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதன் பொருள் என்ன?
இதன் பொருள் 'அவர்கள் எவற்றை கட்டளையிட்டார்களோ அவற்றை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதும், அவர்கள் எவற்றையெல்லாம் தடுத்தார்களோ அவற்றிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்வதும், அவர்கள் எதைப்பற்றியெல்லாம் அறிவித்தார்களோ அவற்றை அப்படியே நம்புவதும்' ஆகும்.
43. இறைவன் மன்னிக்காத மிகப் பெரும் பாவம் எது?
ஷிர்க் (இணைவைத்தல்) இறைவால் மன்னிக்கப்படாத மிகப் பெரும் பாவம் ஆகும்.
44. இணைவைக்கும் நிலையில் செய்யப்படும்நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்கப்படுமா?
இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைக் கீழ்காணும் திருமறையின் இரண்டு வசனங்கள் மூலம் அறியலாம்.
'அவர்கள் இணைவைத்தல் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழித்து விடும்' (காண்க அல்குர்ஆன் 6.88)
'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத வேறு பாவங்களை, தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (காண்க அல்குர்ஆன் 4.116)
45. அனைத்து முஸ்லீம்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் யாவை?
1. இவ்வுலகைப் படைத்து பாதுகாத்து, பரிபாலித்து வருபவனும், இந்த உலகின் எல்லா விதமான, நிகழ்வுகளுக்கும் காரணமானவனுமான தம் இரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
2. தம் மார்க்கத்தைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளுதல்.
3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
46. நமக்குத் தெரியாத மறைவான ஐந்து விஷயங்கள் யாவை?
1. இறுதி நாளின் வருகை (நேரம்) பற்றியது
2. மழை பொழியும் நேரம் பற்றியது
3. தாய் தன் கர்ப்பத்தில் சுமப்பவைகளைக் குறித்து
4. தினம் நாம் செய்வது (சம்பாதிப்பது) குறித்து
5. நாம் இறக்கப் போகும் பூமி பற்றியது
(மேலும் காண்க அல் குர்ஆன் 31:34)
47. நம்மை தவறு செய்ய தூண்டுவது யார்?
நம்மை தவறு செய்யத் தூண்டுவது ஷைத்தான். ஷைத்தானைப் பின்பற்றினால் நரகம் நிச்சயம்.
48. நரகம் என்றால் என்ன?
மிகமோசமான இருப்பிடம் இன்னும் எரியும் நெருப்பு.
49. தீமை செய்தால் என்ன கிடைக்கும் ?
இறைவனிடமிருந்து தண்டனை.
50. நன்மை செய்தால் என்ன கிடைக்கும்?
இறைவனிடமிருந்து சுவர்க்கம் கிடைக்கும்.
51. சுவர்க்கம் என்றால் என்ன?
மிகவும் நல்ல இடம். நாம் சுகமாக ஓய்வெடுக்கலாம். விரும்பியவைகள் அங்கே கிடைக்கும்.
52. உலகம் எப்பவும் இப்படியே இருக்குமா?
இல்லை. ஒரு நாள் உலகம் எல்லாமே அழிந்துவிடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.
53. ஹலால் என்றால் என்ன?
அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் அனுமதித்த அனைத்துக் காரியங்களும் ஹலால் ஆகும்.
54. ஹராம் என்றால் என்ன?
அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் தடை செய்த விஷயங்கள் அனைத்தும் ஹராம் ஆகும்.
55. கொலையைவிட கொடிய செயல் எது?
பித்னா (குழப்பம் - கலகம் உண்டாக்குதல்) (காண்க அல்குர்ஆன் 2:191ஃ 2:217)
56. பிறரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?
நாம் பிறரிடம் மிகவும் அன்பாகவும், பிறருக்கு உதவி செய்யும் முகமாக இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். சுடு சொல் பேசக்கூடாது. தவறான செயலும் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'எவர் ஒருவர் தன் சொல்லாலும் செயலாலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறாரோ அவர் தான் உண்மையான முஸ்லீமாவார்'.
57. நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்?
நல்ல குணம் உடையவர்களையும், இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து நடப்பவர்களையும் நாம் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளனின்) மேலான செயலாகும். (அறிவிப்பவர்: அபுதா (ரலி) நூல்:அபுதாவூத்)
58. மாற்று மதத்தவரின் உரிமைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் மதிப்பு தரப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹதீஸ் சான்று கூறு?
எவன் ஒருவன் முஸ்லிமல்லாத ஒருவனை அநியாயமாக கொலை செய்துவிடுகிறானோ அவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவுள்ளார்கள்.
(நூல்கள் புகாரி, அபு தாவூத்)
மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி மொழி. (நூல்:திர்மிதி)

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி!
Posted By நிர்வாகி On June 27, 2008 (5:40 pm) In இயேசு கிறிஸ்து, ஏன் முஸ்லிம் ஆனேன்?

கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு: - இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.

வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide
http://www.blogger.com/http://www.youtube.com/watch?
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன்.  அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட  இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில்  மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன்.  முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு  ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ஏன்?

அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.

ஏன்? - பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன.  இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

நீ என்ன சொல்ல வருகிறாய்? - பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

நீ என்ன சொல்ல வருகியாய்? - பாதிரியார்

அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச்  சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

கற்பா? கல்லூரியா?

ஓரிறையின் சாந்தியும் சமாதனாம் உண்டாவதாக
ஏகத்துவம்  இதழில் வெளியான கட்டுரை...
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன்: 66:6)
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப்படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள். பெரும்பாடுபடுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை.
குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறிகொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதை பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆட்டோ அல்லது வேன் பயணம்சிலர் தங்களது பருவடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோ அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தை களை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுகள்.
பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாய பெண்கள் வெளியே வருகின்றனர். வாசலில் ஆட்டோவுடன் காத்தி ருக்கின்றான் ஆட்டோ ஒட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமல் கலர் கலர் பேண்ட சர்ட் அணிந்து இன் செய்து சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங் களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகிறது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்றவரை ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான். மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பிள்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை.
மறுநாள் காலையில் அதே சொகுசு பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்த கல்லூரிப் படிப்பு தேவையா என்று!
ஆட்டோ, வேண் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டி ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப்புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்புக் கிடைக்காத என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தைகெட்ட நடத்துனர்களும், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டபடிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டி பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சி குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று.
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப்பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகை யிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்கு கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றொர்கள் சிந்திக்க வேண்டும்.
பாடமா? படமா? ஊயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்வி விட்டு, பாய் பிரண்ட்ஸ்வுடன் திரையரங்களுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின் றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக்களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதை காமகளியாட்டம் என்று வெறுக்கின்றர்களோ அதை தற்போதுள்ள சினிமாக் களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும். கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நிணைப்போம். இப்போது நிணைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?
பிற மதத்தவருடன் காதல் பயணம்கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத் துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பறிக்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வர்று கூறுகையில் நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடியப் பாவமாகும்.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.       (அல்குர்ஆன்: 2:217)
ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்
இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! நம்முடைய பிள்ளைகளை நரகபடு குழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

தமிழகத்தின் தென்பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஒடுவது சர்வசாதாரணமான ஒன்றாகி விட்டது.
பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர். பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்துக் கிடக்கின்றனர். பள்ளிப்படிப்புக்கே இந்த கதி என்றால் கல்லூரிப் படிப்புக்கு என்ன கதி?
ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாக செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பென்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜூகேஷன் முறையை கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?
பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாய பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும்; இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது வல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.
அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாய பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும்போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின் றனர். சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர். இது இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்பு கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.
நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்ற நாம் தப்ப முடியாது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒவ்வொரு வரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட் பட்டவைப் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்வித் தலைவரும் பொறுப்பாளரே! தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட் பட்டவை குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள், தள் எஜமானின் உடமைகளுக்கு பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் (நூல்: புகாரி 2409)
இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும்போது சாதகங்களை விட பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளை படிக்க வைக்க வேண்டுமானால்….
குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக்க வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
உள்ளுராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லுஸரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.
கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) தப்ரானி)
இந்த பெண்கள் ஆட்டோ அல்லது வேளில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர் களாக இருக்க வேண்டும்.
இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.
ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்புப் படித்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதை விட சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாகரத்தில் போய் முடிகின்றது.
எனவே, இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோhர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.
கற்பா? கல்லூரியா? என்ற இந்த தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களை பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கன் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கி விடக்கூடாது.இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்துக் கொண்டிருப்பவை.

உணரப் படாத தீமை சினிமா

நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா?
இல்லையெனில்…
மக்களைச் சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’
சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.
கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், “அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான். இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் certificates.
முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால் அதில் வட்டி, சினிமா, கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில் சினிமாவைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர்ஆன், ஹதீஸில் ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.
அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் ‘சினிமா’ என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலை அதல் பாதாளத்தில் உள்ள்து.

நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை,  தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள்,  ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள்,  சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்..  அப்பப்பா பட்டியல் நீள்கிறது!   இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.
‘விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. “விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?” என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.
‘கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம்.  காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம்.  இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ – ஹதீஸின் சுருக்கம்.
சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது?  குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.  முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள்,  வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு,  நேராக ஜும்ஆ தொழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?  சிலர் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்!  எதற்காக தொழுகக்காக அல்ல! தூங்குவதற்காக! 
‘நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.
சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான் பதில் சொல்லப் போகிறார்களோ!

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TV யில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள். வெட்கக்கேடு!
கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், “கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா’ என்ற காலம் போய், “பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?’ என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது.

கதையை நம்பி இருந்த காலம்போய், சதையை நம்பி இருக்கும் கலியுக காலம். “கருத்தம்மா’ என்று படமெடுத்தாலும், அதில், “செவத்தம்மாவை’ போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள் பதிலாக இருக்கும்.  அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? மனிதனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? நவூதுபில்லாஹ்.
எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, இஸ்லாத்துக்கு எதிராக உள்ளதோ அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையிலும் வாழ இறைவன் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.

ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!

இன்று மாறிவரும் உலகில் நம் சமுதாயங்களின் பிளவுகளை சொல்லி மாளாது தினம் ஒரு இயக்கம் உருவாகிகொண்டுதான் உள்ளன. எத்தனை ஜமாத்துக்கள்,கழகங்கள், லீகுகள். இது போன்ற சமுதாய(?)அமைப்புகள் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை தந்தாலும் சந்தர்ப்பு சூழ் நிலை காரணமாக ஆதரித்தும் விமர்ச்சித்தும் வருகிறோம்.
ஆனால் தற்பொழுது ''சத்தியமே ஜெயம்''என்ற பெயரில் சமீப காலமாக ஒரு இயக்கம் சிங்கப்பூரை தலைமையகமாக கொண்டு
செயற்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள். இறைவனால் தடுக்கப்பட்ட சூது,மது,மாது, விபச்சாரம் இவையனைத்தும் விதியின்படி தான் நடக்கிறது.அல்லாஹ் எனக்கு விதியாகியுள்ளான் நான் குடிப்பதற்கு இறைவன் நாடியுள்ளான் நான் குடிக்கிறேன் .. என இது போன்ற பதில்கள் தான் வருகிறது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது எந்த ஒரு செயலும் இறைவன் நாடினால் தான் நடக்கும் அது போல்தான் இதுவும் என்றார் கொள்கை பிடிப்புடன் இவ்வியக்கத்தின் முக்கிய நபர் சிங்கப்பூரில் வசிக்கும் முத்துப்பேட்டையை சார்ந்தவர் ஆவர் இவர் நடத்தும் மினிமார்ட்டில் மது போன்ற போதை வஸ்த்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன இவரை நண்பர் மூலம் தொடர்புகொண்டு இது விஷயமான சில சந்தேகங்களை கேட்ட பொழுது என்னை நேரில் வருமாறு அழைத்தார்.
எனது வேலை பளு காரணமாக நேரில் செல்ல இயலவில்லை. எனவே அன்பார்ந்த அருமை நண்பர்களே ... நாம் இயக்கங்களால் பிரிந்து கிடந்தாலும் இது போன்ற அபாயகரமான, அல்லாஹ் ரசூல் சொல்லித்தராத மிகவும் கேடுகெட்ட வழிகளில் செல்ல வேண்டாம் இது போன்ற இயக்கங்களின் பெயரை சொல்லி ஊருக்குள்
வந்தால் விரட்டியடிக்க தயாராக இருக்க வேண்டும் பல அப்பாவி இளையதலைமுறையினரை மூளை சலவை செய்யப்பட்டு இந்த பாவத்தின் பக்கம் ஈர்த்து வருகின்றனர்.

இவ்வலையில் விழுந்த பல இளைஞர்கள் தங்களுக்கு சாதகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இதனால் அவர்களை
நம்பி பல லட்சம் செலவு செய்து அங்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள் கவலையில் இருந்து வருவதும் இவர்களின் பார்வையில் இதுவும் ''விதி'' தான் என்று எண்ணிக்கொண்டு உள்ளனர் போலும் இவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில்
SJ சிம்பல் போட்டுவைத்துள்ளனர் .

எனவே அன்பு நண்பர்களே... இதுபோன்ற ஷிர்க்கான
இயக்கங்களை ஊருக்குள் ஊடுருவ விடாமல் காப்பது உலமாக்களுக்கும் நமக்கும் தலையாய கடமையாக உள்ளது. அல்லாஹ் அனைவரையும் காப்பாற்றி நேர்வழி காட்டுவானாக ஆமீன் .

 “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு,காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.
2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.
3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும். பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்? என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
4) இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம்? என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் - லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.
5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.
6) முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்கப்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள். பிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.
7) வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள். உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள். உங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயையை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.
இவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.
... எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)
எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13

தந்தைகளே! கவனியுங்கள்

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.
தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?
ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். ''என் டாடி சூப்பர்'' என்று சொல்லிக் கொண்டிருந்தவள், ''டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது'' என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.
என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.
''டாடி பிளீஸ்.... டாடி... வாங்கிக் கொடுங்க டாடி'' என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் ''டாட்.... எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?'' என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். ''நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்'' எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர ''அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது'' என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ''என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..'' என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, ''என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா....'' என புலம்பித் தள்ளாதீர்கள்.
இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.
நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். ''எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்'' எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!
மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ''அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது'' எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். ''அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை'' என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.
இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.
சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.
ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது ''அப்பா தான் உலகம்'' எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.
சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். ''ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்'' எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். ''என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்'' எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.
இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
கடைசியாக ஒன்று. ''என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்'' என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை.
- Received Via Email

வரலாறு புகட்டும் பாடம்

உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.
ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.
யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.
அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.
நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.
நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.
என்ன அது?
நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.
அவன்  கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.
இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.
“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?
“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.
ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்” என்றார்.


இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.
வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.
சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.
சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.


இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.
எவ்வாறு ?
சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.
குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.
எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.
தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.
இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.
எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.
சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.
இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?
“நிச்சயமாக இல்லை”
நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?
அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.
“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !
கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.

கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று  எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.
இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு  அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.
வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.
உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.
இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்……

அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா

[ ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?''
முஸ்லிம் கேட்டார்; 'உங்கள் நாட்டு எலிஸபெத் ரானியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''
அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ''அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே....!''
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.' எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.'']

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது கிறந்ததாகும்.'' (நூல்:- தபரானி)
மேற்கூறப்பட்ட நபி மொழியை உற்றுநோக்கும்போது முஸ்லிம் சமூகத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர் மார்க்கக் கட்டளையை புறக்கணித்து விட்டு மேல்நாட்டு கலாசாரங்களை பின்பற்றுகின்றனர்.
சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன்மகள், சகோரனின் மனைவி, சாச்சி, மாமி, போன்றோருடன் கைக்குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நாம் தவிர்ந்துகொள்வது நன்று. இது கையின் விபசாரங்களில் ஒன்றாகும்.
பின்வரும் ஹதிஸ்களை சற்று கவனித்தல் நன்று.
''இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. இரு கைகளும் விபசாரம் செய்கின்றன. இரு கால்களும் விபசாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபசாரம் செய்கிறது.'' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: ''நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாபஹா செய்ய கைகுலுக்க மாட்டேன்.'' (அறிவிப்பாளர்: உமைமா பிர்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னுமாஜா)
மேலும்: ''நிச்சயமாக நான் பெண்களின் கைகளைத் தொடமாட்டேன்.'' (நூல்: தபரானி)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட பொன்மொழிகள் ''நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிடுவேன் என மிரட்டும் கணவன்மார்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.
ஒரு ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அந்நிய ஆணுடனோ முஸபாஹாச் செய்வது ஹராமாகும். அது கை உறை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாபஹாச் செய்தாலும் சரியே!
As received via Email

கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்

இந்தத் தடவை short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு விமான சீட்டு (Emirates Airlines இல்) எடுத்தோம். விமான சீட்டு எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு (அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம் புறப்பட, மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம்.
எல்லா வேலையும் (Emigration, Baggage Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டைக் கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15 முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை (நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார்.
அவரும் ஸ்கேனரில் பார்த்து விட்டு ''இது என்ன?'' என்று வினவினார். நானும் என் நண்பரும் அதைப் பற்றி விளக்கி விட்ட பிறகு ''எத்தனை இருக்கிறது?'' என்று வினவினார். நாங்கள் ''15 முஸல்லா இருக்கிறது'' என்று கூறினோம். அப்போது ''இதற்கு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் பணம் கட்ட வேண்டும்'' என்று அந்த அதிகாரி கூறவே, எனக்கும் என் நண்பருக்கும் சரியான கோபம் வந்து விட்டது.
காரணம் இது வியாபார ரீதியாக எடுத்துச் செல்லவில்லை, இதைக் கொண்டு செல்வதற்கு தடையோ, கட்டுப்பாடோ இல்லை. நான் கடுமையான குரலில் ''இது முஸ்லீம்கள் பயன்படுத்தும் தொழுகை விரிப்பு, இதற்கு ஏன் நாங்கள் customs duty கட்ட வேண்டும்?'' என்று கேட்கவே, ''அது எப்படி இருக்கும் எனக்கு sample காட்டுங்கள்'' என்று கூறினார்.
எங்களிடம் தனியாக hand baggage இல் ஒரு முஸல்லா இருந்ததால் அதை எடுத்து காண்பிக்க முயற்சி செய்தோம். அப்போது அதைக் கண்டுக் கொள்ளாமல் ''எங்களுடைய கஸ்டம்ஸ் மூத்த அதிகாரியும் முஸ்லீம் தான், அவரிடம் காட்டுங்கள், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்'' என்று கூறினார்.
அப்போது அங்கு சென்ற கஸ்டம்ஸ் அதிகாரி, மூத்த முஸ்லீம் அதிகாரியிடம் விஷயத்தை கூறவே அதைச் சற்றும் சட்டை செய்யாத மூத்த அதிகாரி எங்களைப் போக சொன்னார். உடனே நாங்கள் மூவரும் எங்களுடைய தள்ளு வண்டிகளை  தள்ளிக் கொண்டு வண்டியில் வந்து அமர்ந்தோம்.
ஆக நாங்கள் அவரிடத்தில் ''சார் இதுக்கு எதுக்கு சார் கஸ்டம்ஸ் டூட்டி கட்டனும், விட்ருங்க சார்'' என்று பம்மியிருந்தால் ''நான் விட்டு விடுகிறேன், எனக்கு ஆயிரம், இரண்டாயிரம் கொடுங்கள்'' என்று கூறியிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி கூறாது அவரிடத்தில் தைரியமாக பேசியதால் எங்களை விட்டுவிட்டார்.
ஆகவே உங்களிடத்தில் தவறு இல்லேயன்றால் அழகான முறையில் ஆனால் கெஞ்சாமல்/ பயப்படாமல் விஷயத்தை எடுத்து சொல்லுங்கள். நாம் பயப்படுவது போல் நடித்தாலும், அல்லது பெட்டியைப் பிரித்து காட்டு என்று சொன்னால் மறுபடியும் கட்ட வேண்டும் என்று பயப்படுவதாலும் தான் அந்த பலகீனத்தைப் பயன்படுத்தி காசு பார்த்துவிடுகின்றனர் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள். பெட்டியைப் பிரித்து காட்ட சொன்னால், தயங்காதீர்கள், ''காட்டுகிறேன், ஆனால் திரும்பவும் பெட்டியை கட்டிக் கொடுக்க வேண்டும்'' என்று சொல்லுங்கள்; தைரியமாக பேசுங்கள்; ''இவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான், இவனை ஈசியாக ஏமாற்றி விடலாம்'' என்று நினைப்பவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்குங்கள்.
இதைப் போல் என் நண்பனின் மச்சான் (அக்கா மாப்பிள்ளை) இந்த முறை அமீரகத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் போது Panasonic LCD TV (32”) கொண்டு சென்றார். சாதாரண மாடல்களில் 32” வரை கொண்டு செல்லலாம். ஆனால் புதிதாக வந்துள்ள மாடல்களில் Sony Bravia வில் சில series மாடல்கள் மற்றும் புதிதாக வந்துள்ள மாடல்களுக்கு மட்டும் customs duty கட்ட வேண்டும். இவர் கொண்டு சென்றதோ பழைய மாடல் LCD TV. முழுவதுமாக கவர் செய்யப்பட்டதால் டிவியின் பெயரும், மாடலும் தெரியவில்லை.
அவரை வழிமறித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ''இது எத்தனை இன்ச் டி.வி.'' என்று கேட்க, அவர் ''32 இன்ச்'' என்று சொல்லியிருக்கிறார். அதை மறுத்த கஸ்டம்ஸ் அதிகாரி ''இல்லை, இது 42” மாதிரி தெரிகிறது'' என்று கூறியவுடன் டிவி வாங்கிய பில்லைக் காண்பித்து இருக்கிறார். அப்போதும் அதை மறுத்த அதிகாரியிடம், ''சார் உங்களுக்கு 32 இன்ச் டிவிக்கும், 42 இன்ச் டிவிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?'' என்று அதட்டலுடன் கேட்டவுடனே இவரை மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி விட்டார். அவர் கொஞ்சம் அசந்தாலும் அவரிடத்திலும் காசு பார்த்திருப்பார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.
ஆக நாம் அமைதியாக ஜெண்டிலாக, சாஃப்டாக சொன்னால் வேலை நடக்காது என்னும் இடத்தில் இப்படி பேசினால் தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் நம்மை இலகுவாக ஏமாற்ற ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
உஷார் தோழர்களே! விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் எப்போதும் பயப்படாமல், நேரடியாகத் தெளிவாகப் பேசுங்கள். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நம் தலையில் அவர்கள் மிளகரைப்பது உறுதி!
http://www.inneram.com/2011010512873/be-caution-in-airport-customs

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes