Friday, August 12, 2011

என்னுடைய அடியார்கள் என்னிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன். அழைப்பவனின் அழைப்புக்கு பதில் கூறுகிறேன்,

1) என்னுடைய அடியார்கள் என்னிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன். அழைப்பவனின் அழைப்புக்கு பதில் கூறுகிறேன், அவர்கள் எனக்கு வழிப்படட்டும். இன் னும் என்னைக் கொண்டு நம் பிக்கை கொள்ளவும் அவர்கள் நேர்வழி பெறுவான் வேண்டி.
(அல்குர்ஆன் 2:186).
(2) என்னை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு பதில் கொடுக்கிறேன். எவர் தனது வழிபாட்டை விட்டும் பெருமை கொள்கி றார்களோ, அவர்கள் ஜஹன்னம் (நகரத்தில்) இழிவானவர்களாக நுழைவார்கள். (40:60)
(3) உங்களின் இரட்சகனை சாலைப் பாட்டுடனும் மறைவாகவும் அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்புக்கு மீறிய வர்களை (பயபக்தி இன்றியும் அதிக சப்தமிடுபவர்களையும்) நேசிக்க மாட்டான். (7:55)
(4) பிரார்த்தனையே வழிபாடாகும்.
(அல்ஹதீஸ்)
5) (துஆ) பிரார்த்தனையானது வணக்கத்திற்கு அசலாகும்.
(அல்ஹதீஸ்)
6) பிரார்த்தனையால்:
(1) அவனது பாவங்கள் மன்னிக்கப் படும்
(2) ஒரு நலவு அவனுக்கு உடன் கிடைக்கும்.
(3) ஒரு நலவு பிறவாழ்க்கையில் கிடைக்கும். ஆக இம்மூன்றில் ஒன்றையாவது பெற்றுக் கொள்வான். (அல்ஹதீஸ்)

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes