Assalamualaikum Warahmatullahi Wabarakatuh
May the peace, mercy, and blessings of Allah be with you.
Lā 'ilāha 'illā Allāh, `Muhammad rasūl Allāh
There is no god except Allah, Muhammad is the messenger of Allah.
Ashahado An Laa ilaaha illal Laho Wahtha Ho La Shareekala Hoo Wa Ash Hado Anna Mohammadan Abdo Hoo Wa Rasoolohoo
I testify that (there is) no partner for Him. And I testify that certainly Muhammad (is) His worshipper and His Messenger.
Subhanallahe Wal Hamdulillahe Wa Laa ilaha illal Laho Wallahooakbar. Wala Haola Wala Quwwata illa billahil AliYil Azeem.
Glory (is for) Allah. And all praises for Allah. And (there is) none worthy of worship except Allah. And Allah is the Greatest. And (there is) no power and no strength except from Allah, the Most High, the Most Great
Laa ilaha illal Lahoo Wahdahoo Laa Shareekalahoo Lahul Mulko Walahul Hamdo Yuhee Wa Yumeeto Wa Hoa Haiy Yul La Yamooto Abadan Abada Zul Jalal Lay Wal Ikraam Beyadihil Khair. Wa hoa Ala Kulli Shai In Qadeer.
(There is) none worthy of worship except Allah. He is only One. (There is) no partners for Him. For Him (is) the Kingdom. And for Him (is) the Praise. He gives life and acuses death. And He (is) Alive. He will not die, never, ever. Possessor of Majesty and Reverence. In His hand (is) the goodness. And He (is) the goodness. And He (is) on everything powerful.
Astaghfirullah Rabbi Min Kullay Zambin Aznabtuho Amadan Ao Khat An Sirran Ao Alaniatan Wa Atoobo ilaihe Minaz Zambil Lazee Aalamo Wa Minaz Zambil Lazee La Aalamo innaka Anta Allamul Ghuyoobi Wa Sattaarul Oyobi Wa Ghaffaruz Zunoobi Wala Haola Wala Quwwata illa billahil AliYil Azeem.
I seek forgiveness from , my Lord, from every sin I committed knowingly or unknowingly, secretly or openly, and I turn towards Him from the sin that I know and from the sin that I do not know. Certainly You, You (are) the knower of the hidden things and the Concealer (of) the mistakes and the Forgiver (of) the sins. And (there is) no power and no strength except from Allah, the Most High, the Most Great.
Allah Humma inni Aaoozubika Min An Oshrika Beka Shai Aown Wa Anaa Aalamo Behi Wasthaghfiruka Lima La Aalamu Behi Tubtu Anho Wa Tabarrato Minal Kufri Washshirki Wal Kizbi Wal Jheebati Wal Bidaati Wan Nameemati Wal Fawahishi Wal Bohtani Wal Maasi Kulliha Wa Aslamtoo Wa Aamantoo Wa Aqoolo Laa ilaaha illal Lahoo Mohammadur Rasool Ullah.
O Allah! Certainly I seek protection with You from, that I associate partner with You anything and I know it. And I seek forgiveness from You for that I do not know it. I repended from it and I made myself free from disbelief and polytheism and the falsehood and the back-biting and the innovation and the tell-tales and the bad deeds and the blame and the disobedience, all of them. And I submit and I say (there is) none worthy of worship except Allah, Muhammad is the Messenger of ALLAH.
Tuesday, August 23, 2011
அகீகா கொடுக்கும் முறை பற்றி விளக்கம்
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்காகவும், மார்க்க ரீதியாக நிறைவேற்ற வேண்டிய செயலைச் சார்ந்தது ''அகீகா'' என்பதாகும். குழந்தை பிறந்த ஏழாம் நாளில், அந்தக் குழந்தைக்காக ஓர் ஆடு அறுக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட வேண்டும். அன்றே குழந்தைக்குப் பெயரிட வேண்டும். இதுதான் அகீகா கொடுப்பதின் முறை!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பையன் (பிறந்த) உடன் 'அகீகா' (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) 'குர்பானி' கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர் சல்மான் இப்னு ஆமிர் (ரலி) (நூல்கள்: புகாரி 5472. நஸயீ, அபூதாவுத், இப்னுமாஜா)
குழந்தைகள் அகீகாவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளார்கள். ஏழாம் நாள் (பிராணி) அறுக்கப்பட வேண்டும். பெயரிடப்பட வேண்டும். தலை மழிக்கப்பட வேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஸமுரா (ரலி) (நூல் - திர்மிதீ 1559)
அகீகாவுக்கென அறுத்து பலியிடும் ஆட்டின் இறைச்சியை பங்கிடுவது குர்பானிச் சட்டம் போன்றதாகும். குர்பானி இறைச்சியின் சட்டம் அறிய,
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 22:28, 36)
குர்பானி இறைச்சியை உண்ணலாம், தர்மமும் செய்யலாம்!
ஏழாம் நாள் பெயரிடப்பட வேண்டும் என்று நபிமொழியிலிருந்து அறிந்தாலும், பிறந்த அன்றும் குழந்தைக்குப் பெயர் சூட்டலாம். மர்யம் (அலை) பிறந்த அன்று அவரது தயார் அவருக்கு மர்யம் என்று பெயரிட்டதாக குர்ஆன் வசனம் கூறுகிறது.
அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்தபோது ''என் இறைவனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்து விட்டேன்'' என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும் ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)ருந்து நிச்சயமாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன் (என்றார்) (அல்குர்ஆன் 3:36)
ஆண் குழந்தை சார்பில் சமவயதுடைய இரண்டு ஆடுகளும், பெண் குழந்தை சார்பில் ஓர் ஆடும் (அறுக்க வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: திர்மிதீ 1549, இப்னுமாஜா)
ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சார்பாக (ஒவ்வொருவருக்கும்) ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: அபூதாவூத்)
அறியாமை காலத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டை அறுத்து குழந்தையின் தலை முடியை நீக்கி ஆட்டின் இரத்தத்தைத் தலையில் தடவுவோம். (அல்லாஹ் எங்களுக்கு) இஸ்லாத்தைத் தந்தபோது ஓர் ஆட்டை அறுப்போம். குழந்தையின் தலை முடியை நீக்கி, தலையில் குங்குமப் பூவைப் பூசுவோம். அறிவிப்பவர்: புரைதா (ரலி) (நூல்கள்: நஸயீ, அஹ்மத்)
ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றும் அறிவிப்புகள் உள்ளது போல், ஆண் குழந்தைக்கு ஓர் ஆட்டை அகீகா கொடுத்ததாவும் அறிவிப்புகள் உள்ளன. இரு விதமாகவும் செய்து கொள்ளலாம்.
ஏழாம் நாள் அகீகா கொடுப்பது சம்பந்தமாக வரும் அறிவிப்புகள் தவிர, 14, 21ம் நாள் அகீகா கொடுக்கலாம் என வரும் அறிவிப்புகளும், குழந்தையின் தலை முடி இறக்கி, முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்யவேண்டும் என்று வரும் அறிவிப்புகளும் பலவீனமானவை!
(இறைவன் மிக்க அறிந்தவன்)
Monday, August 22, 2011
கர்பலா நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்வது..?
கர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்? மாற்று மத சகோதரர்களின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும். --ஹஸன் கமருதீன்
வஅலைக்குமுஸ்ஸலாம்.
முஸ்லிம் உம்மத்தில் நடந்த வரலாற்று சோகங்களில் ஒன்று கர்பலா என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நடந்த போர். இந்த போர் மற்றும் போரின் விளைவு குறித்து அன்றிலிருந்து இன்றுவரை உலகலாவிய முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான கருத்து மோதல்கள் நடந்து வந்தாலும் "கர்பலா நிகழ்வை ஒரு அரசியல் நிகழ்வாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பது நமது நிலைப்பாடாகும்.
நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா (July 23, 645 - 683) என்பவரால் நடத்தப்படுகின்றது. யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை. அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார். அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள். (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)
ஒரு அரசியல் நிகழ்வாக நடந்து முடிந்த இந்த சம்பவத்திற்கு ஷியாக்கள் வேறு வடிவம் கொடுத்து வளர்த்து விட்டார்கள். இன்றுவரை அந்த அரசியல் நிகழ்வை இஸ்லாமிய நிகழ்வாகவே காட்டி வருகிறார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் உலக முஸ்லிம்களின் இரண்டாம் தலைவராக ஆட்சிப்புரிந்து வந்த உமர்(ரலி) அவர்கள் ஒரு மடையனால் (அவன் முஸ்லிம் அல்ல) கொலை செய்யப்பட்டபோது உமர்(ரலி) அவர்களின் இடத்தை நிரப்ப (அதாவது முஸ்லிம் உம்மத்திற்கு தலைமை பொறுப்பேற்க) அலி(ரலி) அவர்களே அன்றைய ஆலோசனைக் குழுவினரால் முன்மொழியப்பட்டார்கள். அலி (ரலி) அந்த பொறுப்பை ஏற்க மறுத்தவுடன் பொறுப்பு உஸ்மான்(ரலி) அவர்களிடம் செல்கின்றது. (இந்த சம்பவம் புகாரியில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது) அந்த சம்பவத்தின் முக்கிய இடத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3699
அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்' என்று கூறினார்ள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலி அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். பிறகு தல்ஹா(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்' என்று கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்முhன் - ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்' என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)' என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்' என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்' என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.
முதலில் ஆட்சிப் பொறுப்பு அலி (ரலி) அவர்களிடமே கோரப்படுகின்றது. பிறகே உஸ்மான் (ரலி) அவர்களிடம் செல்கின்றது. ஆட்சிப் பொறுப்பை முன் மொழிந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களையடுத்து தனது முதல் ஒப்புதலை( இன்றைய ஓட்டெடுப்பு முறை) ஜனநாயக முறையில் அலி (ரலி) அவர்களே செலுத்துகிறார்கள். ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்கெடுப்பிலும் கருத்து வேறுபாடின்றி உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி அமைகின்றது. உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிரான கருத்தோட்டங்கள் துவங்கி வலுபெற்று கடைசியில் உஸ்மான்(ரலி) அவர்களின் கொலையில் அது முடிகின்றது. அவர்களின் இடத்தை அலி(ரலி) நிரப்புகிறார்கள்.
ஒரு ஜனாதிபதியின் கொலை, அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியின் பதவிஏற்பு என்று சூழ்நிலையின் கடினம் மக்களை பலவிதமாக சிந்திக்க வைத்து அவை முஸ்லிம் உம்மத்தின் பிரிவினையாக உருவெடுக்க வைத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக நடந்ததே கர்பலாவாகும். வரலாற்று சம்பவங்களை ஊன்றி படிப்பவர்களுக்கு, அந்த வரலாறு குறித்து சிந்திப்பவர்களுக்கு "கர்பலா என்பது ஒரு அரசியல் நிகழ்வு" என்பது தெளிவாக விளங்கும்.
அதை ஒரு அரசியல் நிகழ்வாகவே சில முக்கிய நபித்தோழர்களும் பார்த்தார்கள். அதனால் தான் யஸீத் பின் முஆவியாவின் ஆளுமைக்கு எதிரான கிளர்ச்சி துவங்குவதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆட்சியாளராக இருந்த யஜீதையே அவர்கள் ஆதரித்தார்கள். இதற்கான சான்றை பார்த்து விட்டு தொடர்வோம்.
பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7111
நாபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
மதீனாவாசிகள் யஸீத் இப்னு முஆவியாவுக்க அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக் கொண்டபோது, இப்னு உமர்(ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்று திரட்டி, 'மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவருக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டு காட்டுவதற்காக வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமைநாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவரின் தூதர் வழிமுறைப்படி நாம் மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப்பிரமாணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போரிடுவதை விடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்து கொடுத்த விசுவாசப் பிராமணத்தை விலக்கிக் கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக் கூடியதாக இருக்கும்' என்றார்கள்.
யஜீதின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தவர்கள் அவரது ஆட்சிக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி நடக்கத் துவங்கிய போது மிக சிறந்த நபித்தோழரான இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மிக வன்மையாக கண்டித்துள்ளார்கள் என்பதும், யஸீதின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்வது நயவஞ்சகத்தனத்தின் அடையாளம் என்று கூறி அதற்கு சான்றாக நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை சமர்பித்ததுத் இங்கு ஊன்றி கவனிக்கத்தக்கதாகும்.
ஒரு ஆட்சியாளரின் ஆட்சிக்கு கீழ் மக்கள் ஒன்றுபட்டிருக்கும் போது அங்கு வேறு ஆட்சியாளரை கொண்டு வர முயற்சிப்பது, உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்றவை இறையாண்மைக்கு எதிரானது என்று இஸ்லாம் சொல்கின்றது.
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلو
ஆய்வுக்கு
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக குழப்பம் விளைவிப்பவர்கள் முஸ்லிமா அல்லது பிறரா என்று பார்க்கப்படமாட்டார்கள். ஆட்சியாளர்கள் அவர்களை குழப்பக்காரர்களாகவே பார்ப்பார்கள். அத்தகைய குழப்பம் விளைவதை இப்னு உமர் (ரலி) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் யஜீத் பின் முஆவியாவை யஜீத் என்ற தனிமனிதனாகப் பார்க்கவில்லை. அவர் ஒரு ஆட்சித்தலைவர் என்றே பார்க்கிறார்கள். நமது நிலைப்பாடும் அதுதான்.
ஷியாக்களால் வன்மையாக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பக்கங்களை கருத்தில் கொள்பவர்கள்தான் கர்பலாவை உலகலாவிய துக்க இடமாகவும், துக்க தினமாகவும் பார்ப்பார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்
Saturday, August 20, 2011
நல்ல உடைகளே நல்ல கலாச்சாரம்
ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை அல்ல, மாறாக சுயவிருப்பின் பேரில் அணியும் உடையென முஸ்லிம்களில் சிலர் வாதிக்கின்றனர். பெண் கண்ணியத்தை பேணும் வகையில் இருக்குமேயானால் எவ்வித உடையையும் அணியலாம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உதாரணமாக இஸ்லாம் குறித்த பல புத்தகங்களின் ஆசிரியரும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் (அல் இஹ்வானுல் முஸ்லிமூன்) ஸ்தாபகரின் சகோதரருமான எகிப்திய நாட்டைச் சார்ந்த கம்மல் பன்னா ''தலையை மறைத்தல் ஒரு கடமை அல்ல. இது குர்ஆன் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவாகும். ஹிஜாப் அணிவதோ அல்லது சிறு பாவாடை அணிவதோ தன் சுயவிருப்பத்திற்கேற்ப எடுக்கும் சுயமான முடிவே"" எனக் கூறுகிறார். மேலும் தனது விருப்பிற்கேற்ப உடை அணியும் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாலேயே அத்தகைய ஹிஜாப்-எதிர்ப்புச் சட்டங்களை நான் ஆதரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.
.அண்மைக் காலங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பிற்கு உள்ளானோரால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய வழிதவறிய கருத்துக்கள் கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்திருக்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளும், விலக்கல்களும், குர்ஆனிலும் சுன்னாவிலும் பதியப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே நாம் பெற முடியும். இவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை யாதென அறியலாம். மகரம் அல்லாத வேறு ஆடவர் முன்னிலையில் 'ஹிஜாப்" அல்லது 'ஹிமார்" உதவியுடன் தலைமுடியை மறைப்பது கட்டாயம் என்பது இஸ்லாத்தில் விளக்கப்பட்டுள்ளது.அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
அவர்கள் தங்கள் முந்தானையால்(குமுர்) தங்கள் கழுத்தையும் மார்பையும் மறைத்துக்கொள்ளட்டும்.(24-31)
குமுர் என்பது முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும் வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம் வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் தலையுடன் சேர்த்து மறைக்குமாறு கட்டளையிடுகிறது.
ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
அஸ்மா-பின்-அபுபக்கர் அவர்கள் மெல்லிய ஆடை அணிந்தவராக நபிகளார்(ஸல்) அவர்கள் முன் வந்தபோது, நபிகளார்(ஸல்) முகத்தை அப்பாற் திருப்பியவாறு 'ஏ அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் இதையும் இதையும் தவிர ஏனையவற்றை காண்பித்தல் ஆகுமானதல்ல" எனக்கூறி முகத்தையும் மணிக்கட்டையும் காண்பித்தார்கள்.
அதிர்ஷ்ட வசமாக பல முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஒரு கடமை என அறிந்திருந்தாலும்கூட அடிக்கடி குழப்பத்திற்கும் தவறான கருத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய உடைநெறி யாதென விளங்காத நிலையில் காணப்படுகின்றனர். ‘துப்பட்டா’ என அழைக்கப்படும் மிக மெல்லிய துணி மூலம் தலைமுடியையும் கழுத்தையும் மறைப்பதே போதும் என எண்ணுகின்றனர். அத்துணியின் ஊடாக அப்பகுதிகள் தெupந்தாலும் தவறல்ல எனக் கருதுகின்றனர். வேறு சிலர் தலைமுடியின் ஒருபகுதி தெரியுமாறு தலைமுக்காடை தளர்த்தி அணிவது போதுமென எண்ணுகின்றனர். சிலரோ தலைமுடி, காது, கழுத்துப்பகுதி தெரியுமாறு 'பந்தனா" அணிகிறார்கள். ஒருசாரரோ தலைப்பகுதியை சரியாக மறைத்துப் பின்னர் உடலின் வடிவம் தெரியுமாறு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அல்லது கணுக்காலுக்கு மேலான பாவாடையை கை கால் தெரியுமாறு அணிகின்றனர்.
பொது இடமானாலும் சரி தனிமையானாலும் சரி உடை சம்மந்தமான இஸ்லாமிய கட்டளைகள் சுயவிருப்பு, சுயகருத்து அல்லது கண்ணியம்பேணல் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. மாறாக அது அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாகும். அல்லாஹ்(சுபு) தொழுகையை கடைமையாக்கிய பின்னர் தொழும் முறையை அவரவர் விருப்பிற்கேற்ப விட்டுவைக்கவில்லை. தொழும் முறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதைப்போன்றே உடலை மறைக்கும் உடை விசயத்திலும் அதைப்பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொழுகையைப் போன்றே உடை விவகாரத்திலும் இறைவனின் கட்டளைப்படி நடப்பது அவசியமாகும். சுயசிந்தனையோ அல்லது சுயவிருப்போ எவ்வாறு தொழுகையில் ஆதிக்கம் செலுத்தவில்லையோ அதைப்போல உடை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
“ உம் இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை தீர்ப்பளிப்பவராக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்புச்செய்தது பற்றி எவ்வித அதிருப்தியையும் தங்கள் மனதில் கொள்ளாது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகள் ஆகமாட்டார்கள்.”(4:65)
அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் 'அவ்ரா" ஆகும் (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).
சூரா அந்நு}ரில் அல்லாஹ்(சுபு) விவரிக்கின்றான்
“ முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)
இப்ன் அப்பாஸ் அவர்கள் 'வெளியில் தெரியக்கூடியவை" என்பதற்கு மணிக்கட்டு வரையிலான கைப் பகுதி மற்றும் முகம் என விளக்கமளித்துள்ளார்கள்.
மேலும் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கிமாரையும் (தலை, கழுத்து, மார்புப் பகுதிகளை மறைக்கும் துணி) ஜில்பாபையும் (கழுத்திற்கு கீழ் உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் மறைத்து மேலிருந்து நிலத்தை நோக்கி தொங்கும் ஒரு தனி ஆடை) அணியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அதாவது கிமாருடன் சட்டையும் பாவாடையுமோ அல்லது முழுக்கால் சட்டையுமோ அணிவது ஆகுமானதல்ல.
அல்லமா இப்ன்-அல்-ஹசாம் எழுதுகிறார்கள் ''நபி அவர்கள் காலத்திலிருந்த அரபிமொழியில் ஜில்பாப் என்பது முழு உடம்பையும் மறைக்குமாறு அமைந்திருக்கும் தனி உடையாகும். முழு உடம்பையும் மறைக்க முடியாத உடையை ஜில்பாப் எனக் கூறமுடியாது."" (அல்-முஹல்லா தொகுதி 3)
பெண்கள் இவ்விரு உடையையும் அல்லாமல் வேறு உடையணிந்து வெளியில் நடமாடுவார்களாயின் அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு மாறிழைத்து பாவத்திற்கு ஆளாவார்கள்.
ஜில்பாபுக்கான ஆதாரங்களை அல்லாஹ்(சுபு) சூரா "அல்-அஹ்சாப்" யில் கூறுகிறான்.
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் வெளி ஆடைகளால்(ஜிலாபீப்) முழு உடலையும் பாதுகாக்குமாறு கூறுவீராக.”(33:59)
மேலும் உம்மு அதியா(ரலி) கூறுகிறார்கள்
“அல்லாஹ்வின் து}தர் ஈத் பெருநாள் தினத்தன்று, இளம் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மற்றும் மறைப்பு அணிந்த பெண்கள் ஆகியோரை அழைத்து வர ஆணையிட்டார்கள். மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்திற்கு அப்பாலிருந்து பிரசங்கத்தை கேட்குமாறு அமரவைக்கப்பட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே ஜில்பாப் இல்லாத பெண்களின் நிலை என்ன" என வினவியதற்கு அவர்கள் கூறுகிறார்கள் 'ஏனைய சகோதரியிடம் ஒரு ஜில்பாபை இரவல் வாங்கி அணியட்டும்." என பதிலளித்தார்கள்.
ஆகவே நபி அவர்கள் ஜில்பாப் இல்லாவிட்டால் இரவல் வாங்கியேனும் அணியுமாறு கூறியுள்ளார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதல்லவா.
ஒரு முஸ்லிம் பெண் மேற்கத்திய பெண்களை ஒப்பாக்கி தாம் எதை அணியவேண்டும் என சுயமாக முடிவெடுத்தல் கூடாது. பனி-தமீம் இனத்தைச் சார்ந்த சில பெண்கள் மெல்லிய துணிகளை அணிந்து ஆயிஷா அவர்களை சந்தித்தபோது 'இது முஃமீனான பெண்ணிற்கு தகுந்த உடையல்ல. நீங்கள் முஃமீன்கள் இல்லாவிடில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்." என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.
இன்றைய முஸ்லிம் பெண்கள் நபி (ஸல்) அவர்களின் மதிப்பிற்கும் அல்லாஹ்(சுபு)வின் பொருத்தத்திற்கும் ஆளான அன்றைய முஸ்லிம் பெண்களின் முன்மாதிரியை பின்பற்றி நடத்தல் அவசியம். அன்றைய நாளில் உடை சம்பந்தமான குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட போது அப்பெண்கள் ஒரு நிமிடமேனும் தாமதிக்காது கிடைத்தவற்றைக் கொண்டு அவ்ராவை மறைத்துக் கொண்டார்கள்.
சய்பாவின் மகளான சஃபீயா கூறியதாவது,
“ஆயிஷா(ரலி) அவர்கள் அன்சார் பெண்களை புகழ்ந்து நல்வார்த்தை கூறினார்கள். பின்னர் 'சூரா அந்நு}ர் வசனங்கள் இறங்கிய பொழுது அவர்கள் வீட்டிலுள்ள திரைகளை கிழித்து அதனை தலைமறைப்பாக்கிக் கொண்டார்கள்" எனக் கூறினார்கள். (சுனன் அபுதாவூத்)
ஆகவே ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!
லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்து ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் அவர்கள்,
ரமழானில் மூன்று பகுதிகளில் அதாவது ரஹ்மத் மற்றும் மஃபிரத் எனும் பிரிவுகளை நிறைவு செய்துவிட்டு இதுகும்மினன் நார் எனும் நரக விடுதலையை பெற்றுத்தரக்கூடிய கடைசிப் பத்தில் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
இவ் இரவின் சிறப்பைப் பற்றி வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகின்றான். “லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” என்று கூறுகின்றான்.
இப்புனித இரவை பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறினார்கள்,
“உங்களிடம் ரமழான் மாதம் வந்துள்ளது. அதில் 1000 மாதங்களை விட சிறந்ததோர் இரவு உண்டு. எவர் அவ்விரவில் வழங்கப்படும் நன்மையை இழக்கிறாரோ அவர் எல்லா நன்மைகளையும் இழந்து விடுகின்றார்” என்று குறிப்பிட்டார்கள். எனவே மேற்கூறப்பட்ட இரண்டு பொன் மொழிகளும் இவ்விரவின் சிறப்பை எடுத்துக் காட்டுக்கின்றன.
இவ் இரவிலே ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) தலைமையில் அல்லாஹ்வின் அருளும் ரஹ்மத்தும் பொருந்திய மாலாயிக்காமார்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் கடைசி பத்திலே எந்த இரவில் லைலத்துல் கத்ர் இருக்கிறது என்பதை ரமழானின் கடைசிப் பத்து ஒற்றைப்படை நாட்களில் தேடிக் கொள்ளுமாறு ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் கூறியிருக்கிறார்கள்.
அதாவது ஒரு சமயம் லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்து ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் ரமழான் மாத முற்பகுதியில் தரித்திருந்தார்கள்.
அவ்விரவுகளில் அந்நாளை அடையவில்லை. பின் இரண்டாம் பகுதியில் பள்ளியின் உட்பக்கம் குப்பத்துன் துர்க்கியா என்ற கூடாரத்தில் இஃதிகாப் இருக்கையில் தங்கள் தலையை குப்பாவின் வெளியே வைத்து பின்வருமாறு சொன்னார்கள். ரமழான் மாதம் முதல் 10 நாட்கள் பள்ளியில் தரித்திருந்து லைத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்தேன்.
ஆனால் பெறவில்லை. பின் நடுப் பகுதியில் எதிர்பார்த்தேன் ஆனால் பெறவில்லை. ஆனால் லைலத்துல் கத்ர் இரவு கடைசிப்பத்து ஒற்றைப்படை நாட்களில் உண்டு எனச் சொல்லப்பட்டது.
அவ் இரவை எவர் அடைந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் ரமழான் மாதம் கடைசிப் பத்தில் பள்ளியில் தரித்திருந்து நல்லமல்களில் ஈடுபட்டு அவ் இரவை அடைந்து கொள்ளட்டும் என நாயகம் ஸல்லல் லாஹ அலைஹிவஸல்லம் கூறினார்கள்.
அதேபோல் இப்புனித லைலத்துல் கத்ர் இரவின் அடையாளங்கள் எவ்வாறு உள்ளது என்பது சம்பந்தமாக பார்க்கையில் நாயகம் ஸல்லல்லாஹ (அலை) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ர் இரவை சந்திப்பதற்கான பகல் நேர சில அடையாளங்கள்.
அன்றைய பகல் சூரியன் இரவின் சந்திரனை போன்று மிகவும் தெளிவாக இருக்கும். அன்று சூரியனில் சூடோ குளிரோ இருக்காது. சமமாயிருக்கும், அன்று காலை சூரியன் உதிக்கும் போது அதின் கதிர்கள் இருக்காது, ஆக அந்நாளில் இவ் அடையாளங்களை பகல் நேரத்தில் அவதானிக்கலாம்.
“ஸெய்யதினா ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் அநேக மலக்குகள் அவ் இரவில் பூமிக்கு வருகின்றனர். இதனை இமாம் ராஸி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
லைலத்துல் கத்ர் காலையானதும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மலக்குமார்கள் கூட்டத்தை நோக்கி மலக்குகளே பயணமாக ஆயத்தமாகுங்கள். என்று அழைப்பர். அப்போது மலக்குகள் நாயகம் ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தினரை என்ன செய்யப் போகின்aர்? என்று கேட்பார்கள்.
அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் இம்மகத்தான இரவில் அவனது அருளான பார்வை அவர் மீது செலுத்தி அவர்களுடைய பிளைகளை பொறுக்கிறான்.
அவர்களை மன்னித்து விடுகிறான். என்று கூறுவார்கள். ஆயினும் (04) பேருடைய பிழைகளை பொறுக்கவேமாட்டான். அவர்கள் யார் என்று கேட்க அவர்கள் 1. தொடர்ந்து மதுபானம் அருந்தியவன் 2. பெற்றோரை நோவிப்பவன். 3. தனது குடும்பத்தினரை விலக்கி நடப்பவன். 4. மூன்று நாட்களுக்கு மேல் தனது முஸ்லிம் சகோதரர்களுடன் பேசாமலிருப்பவர் என்று கூறினார்கள்.
னவே மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் மற்றும் நபி மொழிகள் என்பவற்றை உற்றுநோக்கும் போது லைலத்துல் கத்ர் இரவின் மகிமையை எடுத்துக் காட்டுகின்றன.
எனவே அவ் ஒற்றைப்படை நாட்களை அமல்களை கொண்டு சிறப்பித்து ரமழானுடைய கடைசிப் பத்தில் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் எதை அதிகம் (துஆக்களை) ஓதுமாறு சொன்னார்களோ அவற்றை அதிகம் அதிகம் ஓதி இப்பாக்கியம் கிடைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
எனவே லைலத்துல் கத்ர் இரவின் பூரண நன்மை கிடைப்பதற்கும் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் ரையான் எனும் சுவர்க்கம் செல்வதற்கும் ஒவ்வொரு ஆண், பெண் இருபாலாருக்கும் கிடைப்பதற்கு வல்ல ரஹ்மான் அருள்பாலிப்பானாக! ஆமீன்.
Saturday, August 13, 2011
புறம் பேசுவதன் விபரீதங்கள்!
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.
புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.
இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.
மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.
நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.
நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனி
புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.
புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.
இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.
மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.
நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.
நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
ஜகாத் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமா... அல்லது ஒருமுறை கொடுத்தால் போதுமா... விரிவான விளக்கம் தரவும்
ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு நேரடியாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை அழுத்தமாக சொல்லிக் கொண்டு மேற்கொண்டு உள்ளே நுழைவோம்.
மறுப்பாளர்
நாம்.
ஒரு கட்டளை காலாகாலமாக எப்படி புரிந்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதை ஆய்வு செய்யாமல் வெறும் உதாரணங்கள் மூலம் தங்கள் வாதத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளார்கள். ஆண்டுதோறும் நோன்பு வைக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்த தோழர்கள், ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்த தோழர்கள் 'ஹஜ்ஜையும்' அப்படித்தான் புரிந்துக் கொள்ள வேண்டுமா.. என்ற சந்தேகத்தில் தான் நபி(ஸல்) அவர்களிடம் 'ஆண்டுதோறும் ஹஜ்ஜா' என்று கேள்வி கேட்கிறார்கள். நபி(ஸல்) ஹஜ் மற்றதை போன்றதல்ல. அது ஒருமுறைதான் என்று விளக்கி விடுகிறார்கள்.
அன்றைய மக்களிடம் இருந்த ஒரு பழக்கம் மாற்றப்படும் போது அது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டு விடும். தெளிவாக சுட்டிக்காட்டப்படாத ஒன்று அன்றைய நடைமுறையில் எப்படி இருந்ததோ அதை தழுவியதாகவே அங்கிகரிக்கப்பட்டு விட்டது என்று பொருள். பால்யவிவாகம் ஆரம்பத்தில் அங்கீகரித்து மாற்றப்பட்டது - பலதாரமணம் அங்கீகரித்து பின்னர் வரையறை விதிக்கப்பட்டது போன்றவற்றை இதற்கு உதாரணமாக்கலாம். 'திருமணத்தை உறுதியான உடன்படிக்கை' என்று சொல்லப்படவில்லை என்றால் இன்றைக்கும் பால்ய விவாகம் கூடும் என்றுதான் நாம் விளங்கி இருப்போம். ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு இல்லாதவரை அந்த மக்கள் எப்படி புரிந்துக் கொண்டார்களோ அதுவே நிலைப் பெற்றுள்ளது என்பதுதான் அதன் பொருள். (அந்த மக்கள் அப்படித்தான் விளங்கி இருந்தார்களா என்பதை கடைசியில் விளக்குவோம்)
மறுப்பாளர்.
2 - ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்பதால் தான் செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்க மறுக்கிறார்கள். ஏற்கனவே கொடுக்காமல் இருந்து விட்டோம். பாவத்துடன் பாவம் வந்து சேரட்டும் என்று இருந்து விடுகிறார்கள். 'ஒரு முறைக் கொடுத்தால் போதும்' என்று சொல்லிப் பாருங்கள். ஒரு முறைத்தானே கொடுத்து விடலாம் என்று கொடுக்கத்துவங்கி விடுவார்கள். (முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் தர்க்க ரீதியாக எடுத்து வைக்கப்பட்ட வாதம் இது)
நாம்.
ஒரு தெளிவான ஆதாரத்தை மேலும் விளக்க - புரிய வைக்க தர்க்க ரீதியான வாதங்களை முன்னெடுக்கலாம்.
ஆனால்,
தெளிவான ஆதாரம் முன் வைக்கப்படாத ஒரு கட்டளையை விளக்ககுவதற்கு இத்தகைய தர்க்க வாதங்களை முதன்மைப்படுத்தவும் கூடாது. ஒரு வாதமாக வைக்கவும் கூடாது. ஏனெனில் ஆதாரத்தை விட ருசியான தர்க்க வாதங்களை ரசிப்பவர்கள் அதையே பின்பற்றும் நிலை உருவானால் அதன் கெடுதி (குறிப்பாக ஜகாத் விஷயத்தில்) பல பணக்காரர்களையும் கெடுக்கும், அவர்களால் பயன்பெறும் பல ஏழைகளையும் பாழ்படுத்தி விடும்.
இறைக் கட்டளைகள் என்பது இறைநம்பிக்கையாளனுக்கு உரியதாகும். ஒரு இறை நம்பிக்கையாளன் தான் கொண்ட இறை நம்பிக்கையில் எந்த அளவிற்கு உறுதியுடன் இருக்கிறான் என்பதை பொருத்தே அவனது அடிபணிதல் அமையும். வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் (அதுதான் சட்டம்) என்றாலும் ஆழமான இறை நம்பிக்கைக் கொண்டவன் அதை செயல்படுத்தியே தீருவான். ஏனெனில் இங்கு குறுகிய காலகட்டம், குறைந்துப் போகும் பொருளாதாரம் என்ற சிந்தனையெல்லாம் அவனுக்கு எட்டுவதற்கு பதிலாக 'இது இறைவனின் கட்டளை' என்ற எண்ணமே அவனிடம் மேலோங்கி நிற்கும்.
ஐந்து வேளை தொழுகை என்பது கூட (குறிப்பாக இன்றைய அவசர உலகில்) பலருக்கு சுமைதான். ஆனாலும் தவறாமல் தொழுகிறார்கள் என்றால் அவசர உலகம் - நேரமின்மை என்பதையெல்லாம் விட இது இறைக் கட்டளை என்ற எண்ணமே மற்ற எல்லாவற்றையும் மறுபுறம் ஒதுக்கித் தள்ளுகிறது.
நாத்திகர்கள் சரிகாணும் ஒரு வாதத்தை இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் முன்மொழியப்படுகிறது.
ஒரு பொருளுக்கு ஒருமுறைக் கொடுத்தால் போதும் என்று தீர்ப்பளித்து விட்டால் மட்டும் செல்வந்தர்கள் அனைவரும் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடுவார்களா..? அதற்கு யாராவது உத்திவாதம் கொடுக்க முடியுமா?
ஆண்டுதோரும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் செல்வந்தர்கள் அனைவரும் ஜகாத் கொடுக்காமல் பின்வாங்கி விடுவார்களா.. அதையாவது இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா..
இறை நம்பிக்கையை வலுபடுத்த பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் 'ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதால் தான் நிறைய பேர் ஜகாத் கொடுப்பதில்லை' என்று பேசுவது வேதனையான ஒன்றாகும்.
மறுப்பாளர்.
3 - ஜகாத் கொடுப்பதன் மூலம் ஏழ்மையை குறைப்பது - வறுமையைப் போக்குவது - கடனிலிருந்து விடுபட செய்வதுதான். வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது மூலம் ஜகாத் கொடுப்பவனையே ஒரு நேரத்தில் இவர்கள் ஜகாத் வாங்க வைத்து விடுவார்கள். கொடுத்தவற்றிற்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பதன் மூலம் அவன் பொருளாதாரம் கரைய துவங்கி கடைசியில் ஒன்றுமில்லாமல் அவன் பிறரிடம் ஜகாத்தை எதிர்பார்க்கும் சூழ்நிலைத்தான் உருவாகும். (இதே கருத்து இன்னும் விரிவாக... முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் தர்க்க ரீதியாக எடுத்து வைக்கப்படும் வாதங்களில் இதுவும் ஒன்று)
இறைவனின் பாதையில் செலவு செய்வதால் செல்வம் குறைந்து வறுமை உண்டாகும் என்பது ஷெய்த்தான் எடுத்து வைத்து பயமுறுத்தும் வாதமாகும்.
வருடந்தோறும் இறைவன் பாதையில் செலவு செய்வதால் வறுமை வரும், கடனாளியாக வேண்டி வரும் என்று ஒரு நல்லறிஞர் சொல்வதை எந்த கோணத்தில் புரிந்துக் கொள்வதென்றே தெரியவில்லை.
தமீம் குலத்தை சேர்ந்த மனிதர் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வமும், பெரிய குடும்பமும், பெரும் சொத்துக்களும் இருக்கின்றன. நான் என் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என் செல்வத்தை எப்படி செலவு செய்வது என்று எனக்கு அறிவியுங்கள் என்றார். அதற்கு இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உமது செல்வத்திலிருந்து ஜகாத்தை கொடுங்கள் ஜகாத் தூய்மைப்படுத்தும் என்பதால் அது உம்மைத் தூய்மைப்படுத்தும். (அனஸ் பின் மாலிக்(ரலி) அஹ்மத் 11945)
நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒருகிராமவாசி, 'யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்கள்... என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி), 'அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக 'ஸகாத்தை' அல்லாஹ் ஆக்கிவிட்டான்' என்றனர்.
Friday, August 12, 2011
என்னுடைய அடியார்கள் என்னிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன். அழைப்பவனின் அழைப்புக்கு பதில் கூறுகிறேன்,
(அல்குர்ஆன் 2:186).
(2) என்னை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு பதில் கொடுக்கிறேன். எவர் தனது வழிபாட்டை விட்டும் பெருமை கொள்கி றார்களோ, அவர்கள் ஜஹன்னம் (நகரத்தில்) இழிவானவர்களாக நுழைவார்கள். (40:60)
(3) உங்களின் இரட்சகனை சாலைப் பாட்டுடனும் மறைவாகவும் அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்புக்கு மீறிய வர்களை (பயபக்தி இன்றியும் அதிக சப்தமிடுபவர்களையும்) நேசிக்க மாட்டான். (7:55)
(4) பிரார்த்தனையே வழிபாடாகும்.
(அல்ஹதீஸ்)
5) (துஆ) பிரார்த்தனையானது வணக்கத்திற்கு அசலாகும்.
(அல்ஹதீஸ்)
6) பிரார்த்தனையால்:
(1) அவனது பாவங்கள் மன்னிக்கப் படும்
(2) ஒரு நலவு அவனுக்கு உடன் கிடைக்கும்.
(3) ஒரு நலவு பிறவாழ்க்கையில் கிடைக்கும். ஆக இம்மூன்றில் ஒன்றையாவது பெற்றுக் கொள்வான். (அல்ஹதீஸ்)
நாம் கேட்கக் கூடிய துஆக்கள் ஏற்கப்படாதது ஏன்
“என்னை அழையுங்கள், நான் உங்களுக்கு விடையளிக்கிறேன் எனக் கூறுகிறான், நாங்கள் அவனை அழைக்கிறோம். ஆனால், அவன் எங்களின் அழைப்புகளுக்கு (துஆக்களுக்கு) விடையளிக்கவில்லையே!” அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள். உங்கள் உள்ளங்கள் பத்து விடயங்களினால் இறந்துவிட்டன என்று கூறிவிட்டு பின்வருமாறு எடுத்தியம்பினார்கள்.
1. நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்கிaர்கள், ஆனால், அவனுக்குரிய கடமைகளை உதாசீனம் செய்து நிறைவேற்றுவதில்லை.
2. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆன் ஷரீபை ஓதுகிaர்கள். அதில் கூறியுள்ளவாறு நடக்கிaர்கள், ஆனால் செயற்படுத்துவதில்லை.
3. ஷைத்தான் உங்களுடைய கடும்பகைவன் என்று வாதிக்கின்aர்கள். ஆனால், அவனைத்தான் பின்பற்றுகிaர்கள்.
4. கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பு இருக்கின்றது என்று மார்பு தட்டியவர்களாக வாதிக்கிaர்கள். ஆனால், அவர்களின் ஸ¤ன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி நடப்பதில்லை.
5. சுவர்க்கத்தை நேசிப்பதாக வாதிக்கிaர்கள். ஆனால், அதற்காக எந்த ஆயத்தமும் செய்வதில்லை.
6. நரகத்தை அஞ்சுவதாக வாதிக்கிaர்கள், ஆனால் பாவத்தை விட்டும் விலகிவிட மறுக்கிaர்கள்.
7. மரணம் எப்பொழுதாவது வந்து சேரும் என நம்பிக்கை வைத்துள்Zர்கள். ஆனால் அதற்குரிய முன்னாயத்தங்களை செய்யாமல் உலக ஆசையில் திளைத்திருக்கிaர்கள்.
8. பிறர்களின் குறைகளை துருவித்துருவி ஆராய்கிaர்கள். உங்களின் குறைகளை விட்டு விடுகிaர்கள்.
9. அல்லாஹுத் தஆலா நாயன் தந்த உணவை சாப்பிடுகிaர்கள். அவனுக்கு நன்றி கெட்டவர்களாக வாழ்கிaர்கள். உங்களில். மெளத்தானவர்களை அடக்கம் செய்கிaர்கள். ஆனால், அவர்களின் மூலமாக படிப்பினை பெறுகிaர்கள் இல்லை; என இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்.
Thursday, August 11, 2011
வெற்றியில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, தோல்வியில் பொறுமையைக் கடைபிடித்து வாழ்பவன் முஃமின்
முஃமின் கழாஃ, கதரை விசுவாசித்தவன். வெற்றி, தோல்வி கழாஃ, கதரிலுள்ள படி தான் தனக்கு கிடைக்கின்றது என உறுதியாக நம்ப வேண்டும். கிடைத்தது, கிடைக்காது போனது எல்லாமே அல்லாஹ்வின் எழுத்து தான் என உறுதியாக நம்பி வாழ வேண்டும். இதனைத் தான் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
“உமக்கு கிடைத்தது உமக்கு தவறுவதற்கிருக்கவில்லை. இன்னும் உமக்கு தவறியது உமக்கு கிடைப்பதற்கிருக்கவில்லை என்பதை நீர் அறிந்து கொள்க!” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
ஒரு விசுவாசியைப் பொறுத்த மட்டில் அவனின் எத்தனங்கள் வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி இரு சந்தர்ப்பங்களையும் சரி நிகர் சமானமாக ஏற்றுக் கொள்கின்ற மனப் பக்குவமுள்ளவன். வெற்றியின் நிமித்தம் வரம்பு மீறி களிப்படையவோ, தோல்வியைக் கண்டு துவண்டுபோகவோ மாட்டான். வல்லவன் அல்லாஹ் வான்மறையில் “உங்களுக்கு தவறிப் போனதையிட்டு நீங்கள் கவலைப்படாதிருக்கவும், அவன் (அல்லாஹ்) உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் எக்களிக்காதிருக்கவும்…” (57:23) என இயம்புகிறான்.
நம் முயற்சிகள் கைகூட அல்லாஹ்வின் அருள் இன்றியமையாதது. எமது அறிவு, விவேகம், புலமை, ஆற்றல், அனுபவம், செல்வாக்கு, பலம் என்பன காரியசித்தியளிப்பதில்லை. ஆகவே காரியசித்தியின் போது, வெற்றியீட்டும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்து, துதித்திட வேண்டும். எமது எத்தனங்களில் தப்புத் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடவும் வேண்டும். அல்-குர் ஆனின் அல்-நஸர் அத்தியாயத்தில் இவ்வழிகாட்டலைக் காணலாம்.
“அல்லாஹ்வின் உதவி மற்றும் வெற்றி வந்து மேலும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீர் கண்டால் உமது இரட்சகனைப் புகழ்வதுடன் துதிப்பீராக! இன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்பை மிகவும் ஏற்பவனாக இருக்கிறான்” (110:01 –03)
வெற்றி வாகை சூடும் சமயம் பணிவைக் கைக்கொள்ள வேண்டும். ஷைத்தானிய தூண்டுதல்கள் மண்டைக்கனத்தைக் கொண்டு வரும். ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். ரஸ¤ல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புனித மக்காவை வெற்றிகொண்டு உட்பிரவேசிக்கும் போது பணிவின் காரணமாக தலையைக் குனிந்திருந்த அவர்களின் தாடி சேணத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது.
வெற்றிக் கழிபேருவகை அடுத்தவரின் உரிமை, உயிர், உடல், உடைமை என்பவற்றுக்கு ஊறு விளைவிக்கவோ, அவரின் உணர்வைப் புண்படுத்தவோ, அவரை மானப்பங்கப்படுத்தவோ இட்டுச் செல்லலாகாது. தனது உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்ட வேளை மக்காவாசிகள் அனைவரையும் மிகவும் கண்ணியமாக நடத்தினார்கள். அவர்கள், அவர்களின் கடந்த கால பிழைகள், தன்னை வெளியேற்றியமை பற்றி எந்தக் குறையும் சொல்லவில்லை.
தோல்வியை சந்தித்தவர் அங்கலாய்த்தல், அழுது புலம்பலாகாது. மாறாக அதனை ஒரு தற்காலிக பின்னடைவாக பார்த்தல் வேண்டும். மனந் தளர்ந்து நிராசை கொண்டு விடாது அல்லாஹ்வின் பேரருளால் இன்றில்லாவிடினும் நாளையாவது வெற்றி நிச்சயம் என உறுதியுடன் மீண்டும் எத்தணிக்க வேண்டும். வெற்றி, தோல்வி இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை சதா வெற்றியே குவிந்து கொண்டிருந்தால் வெற்றியைச் சரியாக அனுபவிக்க, சுவைக்க தெரியாது போகும்.
தோல்வியும் இடைக்கிடையே வர வேண்டும். அப்போது தான் வெற்றியின் அருமை, பெருமை நன்கு புரியும், அதனை உள்ளபடி அனுபவிக்க முடியும். இரவை அனுபவித்து உணரும் போது பகலையும், சூட்டை அனுபவித்து விளங்கும் போது குளிரையும், இருளை அனுபவித்து புரியும் போது வெளிச்சத்தையும் நன்கு விளங்க முடிகிறதல்லவா! “பொருட்கள், விடயங்கள் அவற்றின் எதிர்மறைகளைக் கொண்டுதான் வேறுபடுகின்றன” என்பர் அரபிகள்.
அதேவேளை தன் முயற்சி தோல்வியைத் தழுவியதற்கான காரணத்தையும் தேடிப் பார்த்தல் அதி முக்கியம். சென்ற வழிகள், கையாண்ட பொறிமுறைகள், துணைக்கு சேர்த்துக் கொண்ட ஆட்கள் பற்றியெல்லாம் மீள்பார்வை செய்து, செப்பனிட்டு, செவ்வைப்படுத்தி, செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கூட இருந்து குழிபறிக்கும், கழுத்தறுக்கும் புல்லுருவிகளை, காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களை இனங்கண்டு களைபிடுங்க வேண்டும்.
“நமது பெரும் புகழ் ஒரு போதும் விழாதிருப்பதில் இல்லை. என்றாலும் விழும் போதெல்லாம் எழுந்து நிற்பதில் தான் உள்ளது” என்ற கொன்பியுஸியஸின் கருத்து கவனத்திற்குரியது.
வெற்றியைக் கண்டு அளவு கடந்து குதூகலிக்கவோ, தோல்வியைக் கண்டு துயருறவோ இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை.
வெற்றியில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, தோல்வியில் பொறுமையைக் கடைபிடித்து வாழ்பவன் முஃமின்.
ஒரு மனிதனின் நற்பண்புகளும் நற்குணமும் தனது மனைவியிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் தங்கியுள்ளது. அதுவே கணவன்- மனைவி உறவின் அளவுகோளாகும். புனித அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
ஒரு மனிதனின் நற்பண்புகளும் நற்குணமும் தனது மனைவியிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் தங்கியுள்ளது. அதுவே கணவன்- மனைவி உறவின் அளவுகோளாகும். புனித அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
விசுவாசம் கொண்டோரே! பெண்களை (இறந்தவருடைய சொத்தாக மதித்து அவர்களை)ப் பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும் பகிரங்கமாக யாதொருமானக் கேடான காரியத்தை அவர்கள் செய்தாலன்றி, (உங்கள்) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றைக் (எடுத்துக்) கொண்டு போவதற்காக அவர்களை நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள், மேலும் அவர்களுடன் அழகான முறையில் நடந்துகொள்ளுங்கள்.
அவர்களை நீங்கள் வெறுத்துவிடுவீர்களானால் நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும். (அவ்வாறு வெறுக்கக் கூடிய) அதில் அல்லாஹ் அநேக நன்மைகளை ஆக்கக்கூடும். (அல்குர்ஆன், ஸ¤ரதுந்நிஸா:19)
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘முஃமின்களில் ஈமானில் பூரணமானவர் அவர்களில் அழகிய குணமுடையவரே உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே’ இல்லற வாழ்வு அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் என்பதை இஸ்லாம் விரும்புகின்றது. புனித அல்குர்ஆன் மேலும் கூறுகின்றது.
(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்ததும் உங்களுக்கிடையில், அன்பையும் கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன’. (அல்குர்ஆன் 30:21)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘உலக வாழ்வு சிற்றின்பமாகும். இச்சிற்றின்பத்தில் மிகவும் சிறந்தது நற்குணமுள்ள மனைவியாகும்’. (முஸ்லிம்)
மேலும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘ஒரு முஃமினான ஆண் ஒரு முஃமினான பெண்ணை (வெறுத்து)கோபித்திருக்க வேண்டாம். ஏனெனில், அவன் அவளின் ஒரு பண்பை வெறுத்தால் அவன் விரும்பும் ஒரு பண்பும் அவளில் இருக்கக்கூடும்.’ (முஸ்லிம்)
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
“குறைஷிக் குலத்தைச் சேர்ந்த நாங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தோம். நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அந்நகரப் பெண்கள் ஆண்களின் மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தார்கள்.
எங்களது பெண்கள் அப்பெண்களிடம் பாடம் கற்றுக்கொண்டார்கள். நான் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உமையா இப்னு ஸைத் கோத்திரத்துடன் வசித்து வந்தேன். ஒரு நாள் என் மனைவி என்மீது கோபப்பட்டு என்னை எதிர்த்துப் பேசியது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அதற்கவள், ‘நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் என்னை வெறுக்கின்aர்களா? அல்லாஹ் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர் கூட நபியவர்களின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசத்தான் செய்தார்கள்.
சிலர் நபி (ஸல்) அவர்களுடன் பகலிலிருந்து இரவு வரை பேசுவதில்லை’ என்று கூறினார். பின்பு நான் எனது மகள் உறப்ஸாவிடம் சென்றேன்’ ஹப்ஸாவே! நீ நபியவர்களை எதிர்த்துப் பேசுகின்றாயா! என்று கேட்டேன். ‘ஆம்’ என்றார், ‘உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலிருந்து இரவு வரை கோபமாக இருக்கிறார்களா?’ என்று கேட்டேன்.
அதற்கு ஹப்ஸா, ஆம், என்றார் நான் கூறினேன். உங்களில் எவரேனும் அவ்வாறு செய்தால் நஷ்டமும் தோல்வியும் அடைந்துவிடுவார். உங்களில் ஒருவர் மீது இறை தூதருக்கு கோபமேற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து அழிந்து விடுவோம் என்ற அச்சம் அவருக்கில்லையா? நீ இறை தூதரிடம் எதிர்த்துப் பேசாதே; அவர்களிடம் எதையும் கேட்காதே! உனக்குத் தேவையானதை என்னிடமே கேள் என்று கூறினேன். பிறகு உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து தனக்கும் தனது மகளுக்குமிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறியபோது நபியவர்கள் புன்னகைத்தார்கள்.
Wednesday, August 10, 2011
கனவு இல்லம் - சில ஆலோசனைகள்
மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் கனவிலும், நினைவிலும் தவழ்வது ஒரு அழகான வீடு.
தனக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது அவனது லட்சியமாகின்றது. அதற்காக முயற்சிக்கிறான். வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை செய்துப் பார் என்று தமிழில் ஒரு வழக்கு வாக்கியம் உண்டு. இரண்டும் கஷ்டமானது என்பதை மட்டும் இந்த வாக்கியம் உணர்த்தவில்லை. இந்த இரண்டிற்கான முயற்சியிலும் அதிக கவனம் தேவை என்பதையும் உணர்த்துகின்றது.
நமக்கென்று ஒரு சொந்த வீட்டுக்கான லட்சியத்தின் முன்னேற்றமாக நாம் வீடு கட்ட துவங்கும் போது நமது லட்சிய வீட்டிற்கு பல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீடு கட்ட துவங்கும் முன்,
1) கூட்டு ஆலோசனை.
கூட்டு ஆலோசனை என்பது வாழ்வின் எல்லா நிலையிலும் பலனளிக்கக் கூடியதாகும் என்பதால் நம் வீட்டிற்காக அவ்வப்போது கூட்டு ஆலோசனையை நாம் நடத்திக் கொள்ள வேண்டும். இதில் நம் குடும்பத்தின் முக்கிய நபர்கள், மனைவிப் போன்ற குடும்பத்தலைவிகள், நண்பர்கள், குறிப்பாக நம் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் அக்கறையுள்ளவர்கள் இவர்களோடு ஆலோசனையில் ஈடுபடுதல். இந்த ஆலோசனை நம் வீட்டில் நமக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் பற்றி இருக்க வேண்டும்.
2) விசாரணை.
நாம் வீட்டு வேலையைத் துவங்குமுன் முடிந்த அளவு இடம் உட்பட, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் - அதன் விலைகள், வீடுகட்ட பொறுப்பேற்கும் நபர்கள் பற்றி விசாரணையில் ஈடுபடுவது முக்கியமாகும்.
3) முன்னேற்பாடு.
வீடு கட்டத் துவங்கு முன் தேவையான முன்னேற்பாடுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இதர தகவல்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
1) இடத்திற்கான வரைப்படம்.
இடம் வாங்கும் போது அந்த இடத்திற்கான வரைப்படம் மிக முக்கியமாகும். அந்த இடத்தின் முழுஅமைப்பையும், நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் அளவையும், உங்கள் இடத்திற்கு முன், பின், இட, வலப் புறங்களின் நிலவரத்தையும், அகல நீளங்களையும் உங்கள் பார்வைக்கு வைப்பது அந்த இடத்தின் லேஅவுட் என்று சொல்லப்படும் இடத்தின் வரைப்படமாகும்.
சாலை வசதி, மின்சாரம், தண்ணீர் வசதி, மருத்துவமனை, விளையாட்டுத் திடல், பள்ளிவாசல், அருகில் உள்ள - வரவிருக்கின்ற தொழிற்சாலைகள் போன்றவைக் குறித்து விபரம் அறிதல். இவை வரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கின்றதா என்று அறிதல்.
நாம் வாங்கும் இடம் பற்றிய அறிவு மிக முக்கியம். நம் இடம் தாழ்வான பகுதியில் இருக்கின்றதா... மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குமா என்று அறிதலும் அவசியம்.
இந்த இடத்திற்கான அரசாங்க அனுமதி (விற்க - வாங்க) பெறப்பட்டுள்ளதா என்று பார்ப்பதும் நம் இடத்திற்கான சாலை வசதி (வீடு சாலையை ஒட்டி இருக்கின்றதா - தூரமா) எப்படியுள்ளது என்று கவனிப்பதும் அவசியமாகும்.
தண்ணீர் வசதி நம் இடத்தில் இருந்தாலும் அரசாங்கம் வழங்கும் தண்ணீர் வசதி இருக்கின்றதா... இல்லையென்றால் அது கிடைக்கும் வாய்ப்புள்ளதா.. என்று அறிதல்.
லீகல் ஒப்பீனியன்.
வழக்குறைஞர் மூலம் பெறப்படும் தகவல் (நாம் வாங்கும் இடம் விற்பவரின் சொந்த சொத்தா என்று அறிதல்).
அரசாங்கத்திலிருந்து பெறப்படவேண்டியத் தகவல் (அரசின் எதிர்காலத்திட்டங்களில் நம் இடம் இடம்பெறுகின்றதா..? உதாரணமாக அரசின் சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் நம் இடமும் அடங்குமா என்றத் தகவல்)
வீடு கட்டுதல்.
வீடு கட்டத்துவங்கும் முன் நம் குடும்பத்தாருடன் ஆலோசனையில் ஈடுபடுதல். இது மிக முக்கியமாகும். இந்த ஆலோசனை நம் பொருளாதார சக்திகுறித்தும் அதற்கேற்ப நம் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துக் கொள்வது என்பது குறித்தும் இருக்க வேண்டும். கட்டிடத்தின் அளவு தேவையானதாகவும் போதுமானதாகவும் இருக்க வேண்டும். தேவைக்கதிகமாக கட்டிடத்தைக் கட்டி உபயோகமில்லாமல் போட்டு வைப்பதென்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அதிகப்படியான கட்டுமானத்தில் முடங்கும் நம் பொருளாதாரம் பற்றி நாம் அக்கறைக் கொள்ள வேண்டும்.
தேவைக்கதிகமாக கட்டப்படும் கட்டிடங்களை பராமரிக்க ஒரு பெரும் தொகை ஒதுக்கும் நிலை ஏற்படும். அல்லது பராமரிக்கப்படாமல் அவை பொலிவிழந்து போகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிபுணர்களின் ஆலோசனை.
நம் வீட்டுக்குத் தேவையான கட்டுமான இதர பொருட்களை வாங்குமுன் அன்றைய மார்க்கட் நிலவரம் என்னவென்பதை அறிவதும் அதற்கு அத்துறையின் நிபுணர்களை அனுகுவதும் முக்கியமாகும். வீட்டில் நமக்கு தேவை என்னவென்பதையும் நமது பொருளாதார நிலைமையையும் மறைக்காமல் நிபுணர்களிடம் சொல்ல வேண்டும். அது பலவகையில் நமக்கு உதவியாக இருக்கும். தாழ்வான பகுதி என்றால் வீட்டை உயர்த்திக் கட்டும் நிபுணரின் ஆலோசனையை ஏற்க வேண்டும். அது நம் வீட்டுக்கு தக்கப் பாதுகாப்பை ஏற்படுத்தும். அவர்களின் ஆலோசனையில் முறையான திட்டங்கள், வீட்டு அமைப்புப்பற்றிய விபரமான வரைப்படம் ஆகியவற்றை வேலையைத் துவங்குமுன் தயாரித்துக் கொள்வது சிறந்தது.
கவனிக்க வேண்டியவை.
கட்டிட வேலைத்துவங்கியப் பிறகு 'பிளானை' மாற்றக் கூடாது. அப்படி மாற்றிக் கொண்டிருந்தால் அது நமது பொருளாதாரத்தையும் பொழுதையும் ஏராளமாக வீண்விரயம் செய்து விடும்.
கட்டிட வேலையைத் துவங்குதல்.
அடித்தளத்திற்காக திட்டமிடுதலும் தேவையான -போதுமான அளவு மட்டும் இரும்பை பயன்படுத்துதலும் முக்கியம். ஒவ்வொரு கட்டத்திலும் ஆலோசனைகள் முக்கியம் அது நம் தேவைக்கதிகமான செலவுகளை குறைக்கும்.
பொருட்கள் வாங்குதல்.
சிமண்ட் - ஸ்டில் போன்றவற்றை தரம் பார்த்து ஐஎஸ்ஐ முத்திரையுடன் வாங்க வேண்டும். ஒன்றுக்கு நான்கு இடங்களில் விலைப்பட்டியல் வாங்கி விலைகளை சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம். மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட - நல்லப் பெயருடன் விற்பனை செய்யும் டீலர்களிடம் தான் பொருட்களை வாங்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் சிமெண்ட்டை ஸ்டோர் பண்ணக் கூடாது. அதிகப்பட்சமாக நாம் வாங்கும் சிமண்ட் மூட்டைகளை தொண்ணூறு நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். இந்த அவகாசத்தை கடந்தால் அதன் இறுக்கம் குறைந்து விடும்.
எல்லா சிமெண்ட்களுக்கும் நல்லவைதான் முறையான கலவை கலந்து பயன்படுத்தும் போது.
ஸ்டில்.
தேவையான அளவுகளை குறித்துக் கொண்டு அந்த அளவுக்கு மட்டுமே ஸ்டில் வாங்க வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைக்கதிகமாக நாமாக வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது.
மரம்.
உலர்ந்த மரமாக பார்த்து - சிறந்த மரத்தை தேர்வு செய்து தேவையான அளவுகளில் வேலைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.
செங்கற்கள்.
பெரிய அளவாகவும், அழுத்தமான கல்லாகவும் பார்த்து வாங்குதல் முக்கியம். இவ்வாறான கற்கள் செங்கற்களின் எண்ணிக்கையையும், சிமெண்டையும், கட்டுமான கூலியையும், நம் நேரத்தையும் கனிசமான அளவு மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஒயர்.
ஐஎஸ்ஐ முத்திரை கவனித்து வாங்க வேண்டும்.
கட்டிடம் கட்ட நாடுபவர்கள் கவனத்திற்கு.
நேர்மையான, அனுபவமுள்ள, தான் செய்யும் தொழிலில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் பண்புள்ள, ஆர்வத்துடனும் எல்லாத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த லேபர் ஒப்பந்தக்காரர்களை தேர்வு செய்வது மிக முக்கியம். நீங்கள் எவ்வளவு சிறந்த பொருட்களை வாங்கினாலும் அதை முறையாக பயன்படுத்தினால் தான் அதன் பயன்பாடு சிறப்பாக இருக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
விரயமும் - சேமிப்பும்.
எந்தப் பொருளையும் தேவைக்கு மட்டும் வாங்குவதும், வாங்கும் பொருட்களை அந்தந்த நேரத்தில் முறையாக பயன்படுத்துவதும், ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்துவதும் நமது மொத்த செலவீனங்களிலிருந்து ஐந்து சதவிகிதத்தை மிச்சப்படுத்தி நமக்கு கொடுக்கும் என்பதை இறுதியாக கூறிக் கொள்கிறோம்.
وَاللّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا
அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளில் அமைதியை ஏற்படுத்தியுள்ளான் (அல்குர்ஆன் - 16:80
Thursday, August 4, 2011
'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும்.
பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்?
அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.
பதிவிற்குள் செல்லும்முன், நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.
பெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.
பதிவிற்குள் செல்வோம்.
திருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர்.
அந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது.
பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்!!!! சுப்ஹானல்லாஹ்(1).
நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது.
---------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.
எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது,
'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்'
என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.
திருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத்(2) மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள மாப்பிள்ளை அவ்வளவாக இல்லாததும், நெடுதூர சம்பந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனதற்கு மேலும் சில காரணங்கள்).
இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்(?) மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.
ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு,
'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன்.
என் கொள்கையை ஒத்த கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்தது.
பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)
அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்!
(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :)
அல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!
என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும்.
'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது'
என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள்.
மேலும்,
'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட வரக்கூடாது'
என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள்.
ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன.
சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது.
என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!
'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேச இயலாமல், வேறு வழியின்றி என் பெற்றோர் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.
'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை.
பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :)
குறிப்பு:
மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள்.
(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன்.
மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)
மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற யாருக்காவது, பயன்படலாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.
என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக முடியுமோ அந்தளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.
மஅஸ்ஸலாமா!(9)
அன்பு சகோதரி.
--------------------------
அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள்.
•பெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு (??) வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும்,
•தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,
•இவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும்,
இந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...
இறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன்.
Please Note:
ஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார்.
அதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர்.
இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு.
பின்வருவது தான் அந்த பின்னணி.
நாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள்.
ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்,
வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
2. தவ்ஹீத் - ஓரிறை கொள்கை. இங்கே, நபிவழியில் உறுதிப்பாடோடு இருப்பவர்களை குறிக்கின்றது.
3. துஆ - பிரார்த்தனை.
4. மஹர் - மணமகனால் மணமகளுக்கு கொடுக்கப்படும் மணக்கொடை.
5. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.
6. வலிமா - திருமண விருந்து.
7. இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்.
8. நிய்யத் - நோக்கம்/எண்ணம்.
9. மஅஸ்ஸலாமா - பிரியும் போது முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை (ஆங்கிலத்தில் 'bye' என்று சொல்வதுபோல). இதற்கு "அமைதியுடன் (with peace)" என்று பொருள்.